பழைய ஏற்பாடு 2022
ஆகஸ்டு 22–28. சங்கீதம் 102–103; 110; 116–119; 127–128; 135–139; 146–150: “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக”


“ஆகஸ்டு 22–28. சங்கீதம் 102–103; 110; 116–119; 127–128; 135–139; 146–150: ‘சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“ஆகஸ்டு 22–28. சங்கீதம் 102–103; 110; 116–119; 127–128; 135–139; 146–150,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
மண்டியிட்ட மக்களால் சூழப்பட்டு சிவப்பு அங்கியில் கிறிஸ்து

முழங்கால்கள் யாவும் முடங்கும்–ஜே. கிர்க் ரிச்சர்ட்ஸ்

ஆகஸ்டு 22–28

சங்கீதம் 102–103; 110; 116–119; 127–128; 135–139; 146–150

“சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக”

சங்கீதம் 119: 105 தேவனுடைய வார்த்தை “[உனது] பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது” என்று போதிக்கிறது. நீங்கள் சங்கீதங்களைப் படிக்கும்போது, பரலோக பிதாவிடத்துக்கான உங்கள் பாதையை வெளிச்சமாக்க உதவுகிற, உங்களுக்கு உணர்த்தும் சொற்றொடர்களையும் யோசனைகளையும் பதிவுசெய்யவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

சங்கீத புத்தகத்திற்கான பாரம்பரிய யூத பெயர் , “ஸ்தோத்திரம்” என்னும் எபிரேய வார்த்தையாகும். டெஹில்லியம், என்ற வார்த்தை “அல்லேலுயா” என்ற வியப்புடன் தொடர்புடையது (“யேகோவாவுக்கு ஸ்தோத்திரம்” அல்லது “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்பது அதன் அர்த்தமாகும்). சங்கீதத்தின் முக்கிய செய்தியைச் சுருக்க நீங்கள் ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தால், “ஸ்தோத்திரம்” என்பது ஒரு நல்ல தேர்ந்தெடுப்பாக இருக்கும். சில சங்கீதங்களில் “கர்த்தரைத் துதியுங்கள்” (குறிப்பாக சங்கீதம் 146–50 பார்க்கவும்) நேரடி அழைப்பைக் கொண்டுள்ளது, மேலும் அவை அனைத்தும் ஆராதனை மற்றும் ஸ்தோத்திரத்தை உணர்த்தலாம். கர்த்தருடைய வல்லமையையும், அவருடைய இரக்கத்தையும், அவர் செய்த பெரிய காரியங்களையும்பற்றி சிந்திக்க சங்கீதம் நம்மை அழைக்கிறது. இதற்காக நாம் ஒருபோதும் எதையும் அவருக்கு திருப்பிச் செலுத்த முடியாது, ஆனால் அதற்காக அவரை நாம் ஸ்தோத்தரிக்கலாம். அந்த ஸ்தோத்திரம் வெவ்வேறு ஜனங்களுக்கு வெவ்வேறு வடிவங்களை கொடுக்கக்கூடும், அதில் பாடுவது, பிரார்த்தனை செய்வது அல்லது சாட்சியம் அளிப்பது ஆகியவை அடங்கும். இது பெரும்பாலும் கர்த்தரிடம் ஆழ்ந்த அர்ப்பணிப்புக்கும் அவருடைய போதனைகளைப் பின்பற்றுவதற்கும் வழிவகுக்கிறது. உங்கள் வாழ்க்கையில் “கர்த்தரைத் துதியுங்கள்” என்பது எதைக் குறிக்கிறது என்றாலும், நீங்கள் சங்கீதங்களைப் படித்து சிந்திக்கும்போது அதைச் செய்ய அதிக உணர்த்துதல் காணலாம்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

சங்கீதங்கள் 102–3; 116

என் துன்பத்தில் கர்த்தர் என்னை ஆறுதல்படுத்த முடியும்.

சங்கீதம் 102: 1–11 துன்பங்கள் மற்றும் தனிமை உணர்வுகளை எவ்வாறு விவரிக்கிறது என்பதைக் கவனியுங்கள். ஒருவேளை நீங்கள் அத்தகைய உணர்வுகளை அனுபவித்திருக்கலாம், மேலும் இந்த விளக்கங்கள் உங்கள் அனுபவங்களை நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. அல்லது துன்பப்படும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள இந்த வசனங்கள் உங்களுக்கு உதவக்கூடும்.

சங்கீதம் 102:12–28; 103116, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் சோதனைகளில் “கர்த்தருடைய நாமத்தை அழைக்க” முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் சொற்றொடர்களைத் தேடுங்கள் (சங்கீதம் 116: 13 ). நீங்கள் அவரில் நம்பிக்கையைத் தரும் சொற்றொடர்களைக் குறிக்க, மனப்பாடம் செய்ய அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பலாம்.

ஏசாயா 25:8; 2 கொரிந்தியர் 1:3–7; எபிரெயர் 2:17–18; ஆல்மா 7:11–13; Evan A. Schmutz, “God Shall Wipe Away All Tears,” Liahona, Nov. 2016, 116–18ஐயும் பார்க்கவும்.

படம்
இயேசு குணமாக்குதல்

குணமாக்குதல்–ஜே. கிர்க் ரிச்சர்ட்ஸ்

சங்கீதம் 110; 118

சங்கீதம் எனக்கு இரட்சகரை சுட்டிக்காட்ட முடியும்.

சங்கீதம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் குறிக்கும் பாகங்களைக் கொண்டுள்ளது. சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

இந்த வசனங்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி உங்களுக்கு என்ன உண்மைகளை கற்பிக்கின்றன? இந்த உண்மைகளை அறிவது உங்களை எவ்வாறு ஆசீர்வதிக்கிறது?

இந்த வாரம் நீங்கள் சங்கீதம் வாசிக்கும்போது, இரட்சகரைப்பற்றி உங்களுக்குக் கற்பிக்கும் பிற பாகங்களைத் தொடர்ந்து குறிப்பிடுங்கள். அவரைப்பற்றி சிந்திக்க உதவும், உங்களுக்கு பிடித்த சில பாடல்களை நீங்கள் வாசிக்கலாம் அல்லது கேட்கலாம்.

சங்கீதம் 119

தேவனின் வார்த்தை என்னை அவருடைய பாதையில் வைத்திருக்கும்.

இந்த சங்கீதத்தில் பல சொற்றொடர்கள் உள்ளன, அவை நம் வாழ்க்கையை பரலோக பிதாவிடம் செல்லும் பயணத்துடன் ஒப்பிடுகின்றன. நீங்கள் வாசிக்கும்போது நட, பாதை, வழி, பாதங்கள், மற்றும் அலைந்து திரிதல், போன்ற வார்த்தைகளைத் தேடவும். உங்கள் சொந்த வாழ்க்கைப் பயணத்தை யோசித்துப் பாருங்கள், நீங்கள் எங்கிருந்தீர்கள், இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எந்த திசையில் செல்கிறீர்கள். வீடு திரும்பும் பயணத்தைப்பற்றி இந்த சங்கீதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இந்த சங்கீதத்தின்படி, சரியான பாதையில் செல்ல உங்களுக்கு தேவன் என்ன வழங்கியுள்ளார்?

அசல் எபிரேய மொழியில், சங்கீதம் 119ல் உள்ள முதல் எட்டு வசனங்கள் எபிரேய எழுத்துக்களில் முதல் எழுத்துடன் தொடங்குகின்றன என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருக்கலாம். அடுத்த எட்டு வசனங்கள் அடுத்த எழுத்துடன் தொடங்குகின்றன, அதுபோல எழுத்துக்களின் முடிவுவரை.

ஏசாயா 42:16; 2 நேபி 31:17–21; ஆல்மா 7:19–20ஐயும் பார்க்கவும்.

சங்கீதம் 134–36

எந்த விக்கிரகத்தையும் விட கர்த்தர் வல்லமையானவர்.

பொய்யான தெய்வங்களை நம்புவது ஏன் முட்டாள்தனம் என்பதைப்பற்றி சங்கீதம் 135: 15–18 ல் கொடுக்கப்பட்டுள்ள காரணங்களைக் கவனியுங்கள். இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள விக்கிரகங்களுக்கு ஒத்ததாக இருப்பதை நீங்கள் நம்புமாறு தூண்டப்படலாம்?

சங்கீதம் 134–36ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, கர்த்தர் செய்யக்கூடிய வல்லமைவாய்ந்த காரியங்களின் பட்டியலை நீங்கள் உருவாக்கலாம். அவர் உங்களுக்காக என்ன வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறார்?

சங்கீதம் 146–50

“கர்த்தரை ஸ்தோத்தரி.”

ஸ்தோத்திரம் செலுத்தும் இந்த இறுதி சங்கீதங்களை நீங்கள் படிக்கும்போது, நீங்கள் கர்த்தரைத் துதிக்க வேண்டிய காரணங்களைப்பற்றி சிந்தியுங்கள். அவரைத் துதிப்பது ஏன் முக்கியமானதாயிருக்கிறது? நீங்கள் அவரை ஸ்தோத்தரிக்கக்கூடிய வழிகள் யாவை?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

சங்கீதம் 119:105.ஒரு வேளை உங்கள் குடும்பத்தினர் ஒரு பாதையை உருவாக்கி, இருட்டில் அதன் வழியே நடந்து, ஒரு ஒளியைப் பயன்படுத்தி முன்னோக்கி செல்லும் பாதையில் வெளிச்சம் போடலாம். நீங்கள் நடக்கும்போது, “நமது வாழ்க்கையில் இந்த இருள் போல எது இருக்கிறது?” போன்ற கேள்விகளைக் கேட்கலாம். அல்லது “தேவனுடைய வார்த்தை ஒரு ஒளி போன்று எப்படி இருக்கிறது?” “Teach Me to Walk in the Light” (Children’s Songbook, 177), போன்ற தேவனின் ஒளியைப்பற்றிய பாடல் பாடுதல் சங்கீதம் 119:105ல் போதிக்கப்பட்டுள்ள கொள்கைகளைப் பெலப்படுத்த உங்களுக்கு உதவும்.

சங்கீதம் 127–28.“[நமது] வீட்டைக் கட்ட” கர்த்தர் நமக்கு உதவுவது என்றால் என்ன? சங்கீதம் 127:1. நீதியுள்ள ஒரு வீட்டை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளில் நாம் அவரை எவ்வாறு சிறப்பாக ஈடுபடுத்த முடியும்? இந்த கேள்விக்கு உங்கள் குடும்பத்தினர் பதிலளிக்க, நீங்கள் ஒரு வீட்டை ஒரு காகிதத்தில் வரைந்து புதிர் துண்டுகளாக வெட்டலாம். ஒவ்வொரு பகுதியின் பின்புறத்திலும், குடும்ப அங்கத்தினர்கள் கர்த்தரை உங்கள் வீட்டின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான வழிகளை எழுதலாம் அல்லது வரையலாம். பின்னர் நீங்கள் புதிரை ஒன்று சேர்க்கலாம். கர்த்தருடைய வழிகளில் நடக்க நமக்கு உணர்த்தும் இந்த சங்கீதங்களில் வேறு என்ன காண்கிறீர்கள்?

சங்கீதம் 139.1–4 வசனங்களைப் படித்த பிறகு, குடும்ப அங்கத்தினர்கள் தேவன் அவர்களை தனிப்பட்ட முறையில் அறிவார் என்பதை அவர்கள் எவ்வாறு அறிந்து கொண்டார்கள் என்பதைப்பற்றி பேசலாம் (14–15, 23–24 வசனங்களையும் பார்க்கலாம்).

சங்கீதம் 146–50.எழுதியவரின் உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிற சங்கீதம் 146–50ன் சில வசனங்களை சத்தமாக வாசிக்க உங்கள் குடும்பத்தினரை அழைக்கலாம், கர்த்தருக்கு நம்முடைய துதியை எவ்வாறு வெளிப்படுத்தலாம்? குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் சொந்த துதியின் சங்கீதங்களை எழுதி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதை அனுபவிக்கலாம்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனயளிக்கப்பட்ட பாடல்: “Teach Me to Walk in the Light,” Children’s Songbook, 177.

நமது கற்பித்தலை மேம்படுத்துதல்

ஒலிநாடா பதிவுகளை பயன்படுத்தவும். உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கற்பிக்கும்போது, ChurchofJesusChrist.org அல்லது Gospel Library appல் காணப்படுகிற வேதங்களின் ஒலி வடிவத்தைக் கேட்பதைக் கருத்தில் கொள்ளவும். சங்கீதங்களைக் கேட்பது குறிப்பாக வல்லமை வாய்ந்ததாக இருக்க முடியும், ஏனெனில் அவை சத்தமாக சொல்லப்பட வேண்டியவை.

படம்
காட்டில் பாதை

“உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; ஏனென்றால் அதில் நான் அதில் பிரியமாயிருக்கிறேன்” ( சங்கீதம் 119: 35).

அச்சிடவும்