“ஆகஸ்டு 29–செப்டம்பர் 4. நீதிமொழிகள் 1–4; 15–16; 22; 31; பிரசங்கி 1–3; 11–12: ‘கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“ஆகஸ்டு 29–செப்டம்பர் 4. நீதிமொழிகள் 1–4; 15–16; 22; 31; பிரசங்கி 1–3; 11–12,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
ஆகஸ்டு 29–செப்டம்பர் 4
நீதிமொழிகள் 1–4; 15–16; 22; 31; பிரசங்கி 1–3; 11–12
“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்”
“நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ண” ( நீதிமொழிகள் 2:2) நீதிமொழிகள் மற்றும் பிரசங்கியை நீங்கள் படித்தல் எவ்வாறு உங்களுக்கு உதவமுடியுமென்பதைக் கருத்தில் கொள்ளவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
நீதிமொழிகள் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் இந்த வார்த்தைகளை நாம் காண்கிறோம்: “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே” (நீதிமொழிகள் 1:8). ஞானத்தை, குறிப்பாக, தேவன் வழங்குகிற வகையான ஞானத்தை நாடுபவர்களுக்கு, சமாதானம் மற்றும் செழிப்பின் ஆசீர்வாதங்கள் வருகிறது என்பதை முக்கியச் செய்தியாய் வைத்திருக்கிற அன்பான பெற்றோரிடமிருந்து வரும் புத்திசாலித்தனமான சொற்களின் தொகுப்பாக நீதிமொழிகள் காணப்படலாம். ஆனால், நீதிமொழிகள் புத்தகத்தைத் தொடருகிற பிரசங்கி “ அவ்வளவு எளிதானதல்ல” என சொல்வதாகத் தோன்றுகிறது. பிரசங்கியில் மேற்கோள்காட்டப்பட்ட பிரசங்கி, “ஞானத்தை அறிகிறதற்கு [அவனுடைய] மனதை பிரயோகம்பண்ணினான்” , இருந்தும் “மனதுக்கு சஞ்சலமாயிருக்கிறதையும் அதிக சலிப்பையும்” கண்டான் (பிரசங்கி 1:17–18). பல்வேறு வழிகளில் புத்தகம் கேட்கிறது, “எல்லாமுமே வீணானதாகவும், தற்காலிகமாகவும், நிச்சயமற்றவையாகவும் தோன்றுகிற ஒரு உலகத்தில் உண்மையான அர்த்தம் இருக்க முடியமா?”
இன்னும், இரண்டு புத்தகங்களும் வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கும்போது, அவை ஒத்த உண்மைகளை கற்பிக்கின்றன. பிரசங்கி அறிவிக்கிறான்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (பிரசங்கி 12:13). இந்த இதே கொள்கை நீதிமொழிகள் முழுவதிலும் காணப்படுகிறது: “உன் முழுஇருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து. … நீ உன்னை ஞானியென்று எண்ணாதே: கர்த்தருக்குப் பயந்திரு” (நீதிமொழிகள் 3:5,7). வாழ்க்கை என்னவாக இருந்தாலும், அது குழப்பமாகவும் சீரற்றதாகவும் தோன்றினாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பும்போது அது எப்போதும் நல்லது.
இந்த புத்தகங்களின் மேலோட்டமான பார்வைக்காக, “நீதிமொழிகள், புஸ்தகம்” மற்றும் “பிரசங்கி ” in the Bible Dictionary பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
“உன் செவியை ஞானத்திற்குச் சாய்.”
நீதிமொழிகள் புத்தகம் ஞானத்தைப்பற்றிய உள்ளுணர்வுகளால் நிரம்பியுள்ளது. “ஞானம்” என்ற வார்த்தையையும், அதிகாரங்கள் 1–4 மற்றும் 15–16ல் நீங்கள் அவைகளை கண்டுபிடிக்கையில் “அறிவு” மற்றும் “புரிந்துகொள்ளுதல்” போன்ற சம்பந்தப்பட்ட வார்த்தைகளையும் அடையாளப்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். ஞானத்தைப்பற்றி நீங்கள் சிந்திக்கிற வழியை இந்த அதிகாரங்கள் எவ்வாறு பாதிக்கின்றன? நீங்கள் கண்டுபிடிக்கிறவற்றின் அடிப்படையில், கர்த்தர் கொடுக்கிற ஞானத்தை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? நீதிமொழிகள் 2:6. “இருதயத்தில் ஞானமாயிருக்க” (நீதிமொழிகள் 16:21) கர்த்தருடைய உதவியை நீங்கள் எவ்வாறு நாடிக்கொண்டிருக்கிறீர்களென்பதைக் கருத்தில் கொள்ளவும். தேவனுடைய ஞானத்திலிருந்து என்ன ஆசீர்வாதங்கள் வருகின்றன?
நீதிமொழிகள் 8–9; மத்தேயு 7:24–27; 25:1–13 ஐயும் பார்க்கவும்.
நீதிமொழிகள் 1:7; 2:5; 16:6; 31:30; பிரசங்கி 12:13
“கர்த்தருக்கு பயப்படுதல்” என்றால் என்ன?
மூப்பர் டேவிட் எ. பெட்னர் விளக்கினார்: “எச்சரிக்கையையும் பதட்டத்தையும் உருவாக்குகிற உலக பயத்தைப் போலல்லாமல், தெய்வீக பயம் சமாதானம், உறுதி மற்றும் நம்பிக்கையின் ஆதாரமாகும் [இது] கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பயபக்தியின் ஒரு ஆழமான உணர்வை, மரியாதை, மற்றும் பிரமிப்பு; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல்; இறுதி தீர்ப்பு மற்றும் அவரது கையில் நீதியின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. … அவரை நேசிப்பதுவும் நம்புவதும் தெய்வீக பயம்” (“Therefore They Hushed Their Fears,” Liahona, May 2015, 48–49).
நீதிமொழிகள் 8:13ஐயும் பார்க்கவும்.
“உன் காலின் நடையைச் சீர்தூக்கிப் பார்.”
ஒரு “பாதை” அல்லது ஒரு “வழி” என நீதிமொழிகள் 4 ஞானத்தையும் நீதியையும் விவரிக்கிறது (நீதிமொழிகள் 3:5–6 ஐயும் பார்க்கவும்). இந்த அதிகாரத்தை நீங்கள் வாசிக்கும்போது, உன் காலின் நடை” (வசனம் 26) என்பதையும், உங்கள் காலின் நடைகள் எவ்வாறு கர்த்தருக்கு நெருக்கமாக இழுக்கிறதென்பதையும்பற்றி சிந்திக்க உங்களுக்குதவுகிற பத்திகளை நீங்கள் காணக்கூடும். உதாரணமாக, சரியான பாதையைப் பின்பற்றுவதில் வருகிற ஆசீர்வாதங்களைப்பற்றி வசனங்கள் 11–12 மற்றும் 18–19 என்ன போதிக்கின்றன? வசனங்கள் 26 மற்றும் 27 உங்களுக்கு என்னவாக அர்த்தமாகிறது?
2நேபி 31:18–21 ஐயும் பார்க்கவும்.
நீதிமொழிகள் 15:1–2, 4, 18,28; 16:24–32
“மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்.”
அதிகாரங்கள் 15 மற்றும் 16லிலுள்ள சில நீதிமொழிகள் மற்றவர்களுடன் குறிப்பாக அன்பானவர்களுடன் நீங்கள் தொடர்புகொள்ளுகிற வழியை மேம்படுத்த உங்களை உணர்த்தக்கூடும். உதாரணமாக, “கடுஞ்சொற்களைவிட” “ஒரு மெதுவான பிரதியுத்தரத்தை” நீங்கள் பயன்படுத்தியபோதுள்ள குறிப்பிட்ட நேரங்களைப்பற்றி சிந்தியுங்கள் (நீதிமொழிகள் 15:1). நீங்கள் பயன்படுத்துகிற வார்த்தைகளைப்பற்றி சிந்திக்க நீதிமொழிகள் 16:24–32லிலுள்ள ஆலோசனை எவ்வாறு உங்களுக்குதவுகிறது?
மூப்பர் டபுள்யு. க்ரெய்க் ஸ்விக்கிடமிருந்து வருகிற இந்த உள்ளுணர்வை கருத்தில் கொள்ளவும்: “ஒரு மெதுவான பிரதியுத்தரம், தாழ்மையான இருதயத்திலிருந்து வருகிற ஒழுக்கமான வார்த்தைகளான ஒரு நியாயமான பிரதியுத்தரத்தைக் கொண்டுள்ளது. நாம் ஒருபோதும் நேரடியாக பேசுவதில்லை அல்லது கோட்பாட்டு சத்தியத்தை சமரசம் செய்கிறோம் என்று அர்த்தமல்ல. தகவலில் உறுதியாக இருக்கும் சொற்கள் ஆவியில் மென்மையாக இருக்கலாம்” (“நீங்கள் என்ன சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” Liahona, May 2014,42).
“கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.”
“ஒரு குணசாலியான ஸ்திரீ,” அல்லது சிறந்த ஆவிக்குரிய பெலன், திறன் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு ஸ்திரீயை நீதிமொழிகள் 31:10–31 விவரிக்கிறது. இந்த வசனங்கள் ஒவ்வொன்றும் அவளைப்பற்றி என்ன சொல்கின்றன என்பதை உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கமாகக் கூற நீங்கள் முயற்சி செய்யக்கூடும். நீங்கள் பின்பற்றக்கூடிய அவளுடைய சில பண்புகள் எவை?
அநித்திய வாழ்க்கை தற்காலிகமானது.
“வீண்” (அல்லது தற்காலிகமானது, பெரும்பாலும் முக்கியமற்றது) என பிரசங்கி 1–2 வலியுறுத்துவதைப்போல, இந்த உலகத்தில் அதிகமானவற்றை நீங்கள் நினைவில் வைத்திருப்பது ஏன் மதிப்புமிக்கது? வாழ்க்கை நித்திய மதிப்பைக் கொடுக்கிறதென்பதில் அதிகாரம் 12ல் நீங்கள் எதைக் காண்கிறீர்கள்?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
நீதிமொழிகள்.வேதங்களிலிருந்தும் பிற்கால தீர்க்கதரிசிகளிடமிருந்தும் புத்திசாலித்தனமான ஆலோசனையின் ஒரு தொகுப்பாகிய உங்கள் சொந்த “நீதிமொழிகள் புத்தகத்தை” உங்கள் குடும்பத்தினர் உருவாக்குவதை ரசிக்கலாம்.
-
நீதிமொழிகள் 1:7; 2:5; 16:6; பிரசங்கி 12:13–14.நீதிமொழிகள் 1:7; 2:5; 16:6; பிரசங்கி 12:13, பயம் என்ற வார்த்தையை பயபக்தி, அன்பு, அல்லது கீழ்ப்படிதல் போன்ற வார்த்தைகள் மாற்றாக இருக்க உதவக்கூடும் ((எபிரெயர் 12:28 ஐயும் பார்க்கவும்). இந்த வசனங்களைப்பற்றி நாம் சிந்திக்கிற விதத்தை இது எவ்வாறு பாதிக்கிறது? கர்த்தருக்கு நாம் பயப்படுகிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்டுகிறோம்?
-
நீதிமொழிகள் 3:5–7.இந்த வசனங்கள் கற்பிப்பதை குடும்ப உறுப்பினர்களுக்கு காட்சிப்படுத்த உதவ, ஒரு சுவர் போன்ற உறுதியான மற்றும் நிலையான ஒன்றுக்கு எதிராக சாய்வதற்கு நீங்கள் அவர்களை அழைக்கலாம். பின்னர் அவர்கள் ஒரு துடைப்பம் போன்ற உறுதியில்லாத ஒன்றின் மீது சாய்ந்து கொள்ள முயற்சி செய்யலாம். நாம் ஏன் [நமது] “சுயபுத்தியின்மேல் சாயக்கூடாது”? நம் முழுஇருதயத்தோடும் நாம் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்டமுடியும்?
-
நீதிமொழிகள் 15:1–2,18; 16:24,32.நமது வீட்டில் நமது வார்த்தைகள் எவ்வாறு ஆவியைப் பாதிக்கும்? ஒருவேளை குடும்ப உறுப்பினர்கள் “கடுஞ்சொற்களுக்கு” “மெதுவான பிரதியுத்தரம்” கொடுப்பதைப் பயிற்சி செய்யலாம் மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதில் அவர்கள் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். “Kindness Begins with Me” (Children’s Songbook,145) போன்ற ஒரு பாடல் இந்தக் கொள்கையை வலுப்படுத்த உதவமுடியும்
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Where Love Is,” Children’s Songbook, 138–39.