பழைய ஏற்பாடு 2022
செப்டம்பர் 12–18. ஏசாயா 13–14; 24–30; 35: “அற்புதமும் ஆச்சரியமுமான கிரியை”


“செப்டம்பர் 12–18. ஏசாயா 13–14; 24–30; 35: ‘அற்புதமும் ஆச்சரியமுமான கிரியை,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“செப்டம்பர் 12–18. ஏசாயா 13–14; 24–30; 35,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

பரிசுத்த தோப்பில் பரலோக பிதாவையும், இயேசு கிறிஸ்துவையும் ஜோசப் ஸ்மித் பார்த்தல்

பரிசுத்த தோப்பு–ப்ரெண்ட் போருப்

செப்டம்பர் 12–18

ஏசாயா 13–14; 24–30;35

“அற்புதமும், அதிசயமுமான கிரியை“

தலைவர் போனி ஹெச். கார்டன் போதித்தார், “வேதங்கள் நம் மனதுக்கு அறிவூட்டுகின்றன, நம்முடைய ஆவிகளை போஷிக்கின்றன, நமது கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன, கர்த்தர் மீதுள்ள நம்பிக்கையை அதிகரிக்கின்றன, நம்முடைய வாழ்க்கையை அவர்மீது மையப்படுத்த உதவுகின்றன” (“Trust in the Lord and Lean Not,” Liahona, May 2017,7).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

கர்த்தர் தீர்க்கதரிசிகளிடம் கேட்கும் ஒரு விஷயம், பாவத்தின் விளைவுகளைப்பற்றி எச்சரிப்பதற்காகும். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் விஷயத்தில், வலிமைமிக்க ராஜ்யங்களின் வல்லமை வாய்ந்த ஆளுநர்கள் மனந்திரும்ப வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்று இது பெரும்பாலும் சொல்லும். இது ஒரு ஆபத்தான பணியாக இருந்தது, ஆனால் ஏசாயா அச்சமின்றி இருந்தான், இஸ்ரவேல், யூதா மற்றும் சுற்றியுள்ள நாடுகள் உட்பட அவனுடைய நாளின் ராஜ்யங்களுக்கு அவன் அளித்த எச்சரிக்கைகள் தைரியமானவையாக இருந்தன( ஏசாயா 13–23 பார்க்கவும்).

இருப்பினும், ஏசாயா நம்பிக்கையின் செய்தியும் வைத்திருந்தான். தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட அழிவுகள் இறுதியில் இந்த ராஜ்யங்கள் மீது வந்தாலும், மீட்டெடுப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏசாயா முன்னறிவித்தான். தம்மிடம் திரும்பும்படி கர்த்தர் தம் ஜனத்தை அழைப்பார். “வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகவும்,” அவர் செய்வார் (ஏசாயா 35:7). அவர் “ஒரு அற்புதமான கிரியையும் அதிசயத்தையும்” செய்வார் (ஏசாயா 29:14 ), இஸ்ரவேலுக்கு அவர் வாக்குறுதியளித்த ஆசீர்வாதங்களை மீட்டெடுப்பார். இந்த அற்புதமான கிரியையைக் காண ஏசாயா அல்லது அந்த நேரத்தில் உயிருடன் இருந்த வேறு யாரும் வாழவில்லை. ஆனால் அதன் இறுதி நிறைவை இன்று நாம் காண்கிறோம். உண்மையில், நாம் அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம்!

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஏசாயா 13:1–11, 19–22; 14:1–20

உலகின் பொல்லாத ராஜ்யங்களும் அவற்றின் ஆட்சியாளர்களும் வீழ்ச்சியடைவார்கள்.

ஏசாயா 13–14 பாபிலோனின் “சுமை” என்று அழைக்கப்படுகிறது (பற்றிய தீர்க்கதரிசன செய்தி) ( ஏசாயா 13:1). ஒரு காலத்தில் வல்லமை வாய்ந்த ஆட்சியாளருடன் கூடிய வலிமைமிக்க ராஜ்யமாக இருந்த பாபிலோன் இப்போது பண்டைய வரலாறாகக் கருதப்படுகிறது. பாபிலோனுக்கான செய்தி இன்று நமக்கு ஏன் முக்கியமானதாக இருக்கிறது? வேதத்தில், பாபிலோன் பெருமை, உலகத்தன்மை மற்றும் பாவத்தை குறிக்கிறது, இன்று இவை அனைத்தாலும் நாம் சூழப்பட்டுள்ளோம். ஏசாயா 13:1–11, 19–22; 14:1–20 நீங்கள் வாசிக்கும்போது இந்த அடையாளத்தைப்பற்றி சிந்தியுங்கள். இது போன்ற கேள்விகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:

  • இரட்சகரின் இரண்டாவது வருகைக்கு முன்னர் உலகத்தைப்பற்றிய தீர்க்கதரிசனங்களுடன், பாபிலோனுக்கு ஏசாயாவின் எச்சரிக்கைகள் எவ்வாறு ஒத்திருக்கின்றன? (ஏசாயா 13:1–11; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 45:26–42 பார்க்கவும்).

  • பாபிலோனிய ராஜாவின் பெருமைக்கும் சாத்தானின் பெருமைக்கும் இடையே என்ன ஒற்றுமைகள் நீங்கள் காண்கிறீர்கள்? ( ஏசாயா 14:4–20 ; மோசே 4:1–4 பார்க்கவும்). இந்த வசனங்களில் நீங்கள் உங்களுக்காக என்ன செய்திகளைக் காண்கிறீர்கள்?

  • இரட்சகர், “துக்கத்தையும், உன் தத்தளிப்பையும், நீக்கி, இளைப்பாறப்பண்ணுவது” எப்படி? (ஏசாயா 14:3).

சிவப்பு அங்கியில் இயேசு

அவர் மீண்டும் ஆட்சிசெய்யவும் மற்றும் ராஜரீகம் பண்ணவும் வருகிறார்–மேரி ஆர். சாயர்

ஏசாயா 24:21–23; 25:6–8; 26:19; 28:16

ஏசாயாவின் எழுத்துக்கள் எனக்கு இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகின்றன.

ஏசாயாவின் போதனைகள் பெரும்பாலும் இரட்சகரின் பாவநிவாரண பலி, உயிர்த்தெழுதல் மற்றும் இரண்டாம் வருகை உள்ளிட்டவற்றைக் குறிக்கின்றன. பின்வரும் வசனங்களைப் படிக்கும்போது அவனுடைய ஊழியத்தின் என்ன அம்சங்கள் நினைவுக்கு வருகின்றன: ஏசாயா 24:21–23; 25:6–8; 26:19; 28:16? இரட்சகரை நினைவூட்டுகின்ற வேறு எந்த பத்திகளைக் காண்கிறீர்கள்?

(ஏசாயா 22:22–25ஐயும் பார்க்கவும்.)

ஏசாயா 24:1–12; 28:7–8; 29:7–10; 30:8–14

மதமாறுபாடு என்றால் கர்த்தரிடமிருந்தும் அவருடைய தீர்க்கதரிசிகளிடமிருந்தும் விலகுதல்.

கர்த்தரிடமிருந்து விலகி, அவருடைய தீர்க்கதரிசிகளை நிராகரிப்பதன் விளைவுகளைப்பற்றி எச்சரிக்க, ஏசாயா பலவிதமான உருவகங்களைப் பயன்படுத்தினான். வெட்டாந்தரை (ஏசாயா 24:1–12), குடிப்பழக்கம் (ஏசாயா 28:7–8), பசி மற்றும் தாகம்(ஏசாயா 29:7–10), மற்றும் உடைந்த சுவர் அல்லது பாத்திரம் (ஏசாயா 30:8–14 ) இந்த வசனங்களில் நீங்கள் படித்தவற்றின் அடிப்படையில், நமது உடன்படிக்கைகளை காத்துக்கொள்வது ஏன் முக்கியமாகும்? கர்த்தருக்கும் அவருடைய ஊழியர்களுக்கும் உண்மையாக இருக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

M.Russell Ballard, “Stay in the Boat and Hold On! ஐயும் பார்க்கவும்” Liahona, Nov. 2014, 89–92; Gospel Topics, “Apostasy,” topics.ChurchofJesusChrist.org.

ஏசாயா 29; 30:18–26;35

இழந்த அல்லது உடைந்த விஷயங்களை இறைவன் மீட்டெடுக்க முடியும்.

மனிதர்களோ சமூகங்களோ கர்த்தரிடமிருந்து விலகிச் செல்லும்போது, அதன் விளைவுகளை மீளமுடியாதவை என்று நாம் நினைக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். இருப்பினும், ஜனங்கள் மனந்திரும்பி அவரிடம் திரும்பும்போது, கர்த்தர் செய்யும் சில அற்புதமான காரியங்களை ஏசாயா விவரித்தான். ஏசாயா 29:13–24; 30:18–26;35லிருந்து கர்த்தர், அவரது அன்பு, மற்றும் அவரது வல்லமையைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

நம்முடைய நாளில் கர்த்தர் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்திய ஒரு வழி, அவருடைய சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்வதன் மூலம்தான். ஏசாயா 29 அந்த மறுஸ்தாபித நிகழ்வுகளுக்கு இணையான பல பத்திகளைக் கொண்டுள்ளது. உதாரணமாக:

இந்த பத்திகளைப் படிக்கும்போது சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்வது குறித்து நீங்கள் என்ன எண்ணங்கள் அல்லது உணர்வுகள் பெறுகிறீர்கள்?

The Restoration of the Fulness of the Gospel of Jesus Christ: A Bicentennial Proclamation to the World” (ChurchofJesusChrist.org) ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஏசாயா 25:4–9.ஒரு வெப்பமான கோடை நாளில் புயல் அல்லது நிழலில் இருந்தபோது பாதுகாப்பான தங்குமிடம் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டதை உங்கள் குடும்பத்தினர் எப்போதாவது அனுபவித்திருக்கிறார்களா? (வசனம் 4 பார்க்கவும்). ஏசாயா 25: 4–9ல் காணப்படும் இந்த வசனங்களையும் கர்த்தருடைய பிற விவரிப்புகளையும் வாசிக்கும்போது இதைப்பற்றி பேசுங்கள். கர்த்தர் எவ்வாறு இவற்றைப் போன்று இருக்கிறார்?

ஏசாயா 25:8–9; 26:19.கெத்செமனேயில் சிலுவையில், மற்றும் அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இரட்சகரின் படங்களைக் காண்பிப்பது உங்கள் குடும்பத்திற்கு இந்த வசனங்களுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் இடையிலான தொடர்புகளைக் காண உதவும் (Gospel Art Book, nos. 56, 57, 58,59 பார்க்கவும்). ஏன் “இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழ்கிறார்கள்” என்பதைப் பகிர்ந்து கொள்ள உங்கள் குடும்பத்தினரை அழைக்கவும்( ஏசாயா 25:9 ).

ஏசாயா 29:11–18.இந்த வசனங்கள் உங்கள் குடும்பத்திற்கு சுவிசேஷத்தை மறுஸ்தாபிதம் செய்வதற்கும் மார்மன் புஸ்தகம் வெளிவருவதற்கும் உள்ள “அற்புதமும் அதிசயமுமான கிரியைப்பற்றி” (வசனம் 14) விவாதிக்க உதவும். இந்த விஷயங்கள் நமக்கு ஏன் அற்புதமானவை, மற்றும் அதிசயமானவை? மறுஸ்தாபிதத்தின் அற்புதமான ஆசீர்வாதங்களைக் குறிக்கும் பொருட்களை உங்கள் வீட்டில் கண்டுபிடிக்க குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும்.

ஏசாயா 35.இந்த நாளில் இயேசு கிறிஸ்து எவ்வாறு சீயோனைக் கட்டியெழுப்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் இந்த அதிகாரத்தில் உள்ள உருவங்களின் படங்களை வரைவதை உங்கள் குடும்பத்தினர் ரசிக்கக்கூடும். இந்த உருவங்களில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? சீயோனைக் கட்டி எழுப்ப உதவுவதற்கு நாம் என்ன செய்யமுடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “On a Golden Springtime,” Children’s Songbook,88.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பிள்ளைகள் தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தட்டும். சுவிசேஷக் கொள்கை ஒன்றிற்கு சம்பந்தப்பட்ட ஒன்றை பிள்ளைகள் உருவாக்கும்போது, நீங்கள் அழைக்கும்போது, கொள்கையை சிறப்பாகப் புரிந்துகொள்ள அது அவர்களுக்கு உதவுகிறது. கட்ட, வரைய, வண்ணம், தீட்ட, உருவாக்க அவர்களை அனுமதிக்கவும். (Teaching in the Savior’s Way, 25 பார்க்கவும்.)

மரியாளும் யோவானும் இயேசுவை சிலுவையில் பார்த்தல்

“இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்” (ஏசாயா 25:9). ஜேம்ஸ் டிஸ்ஸோ (ப்ரென்ச், 1836–1902). ஸ்திரீயே, இதோ உன் மகன் (Stabat Mater), 1886–1894. Opaque watercolor over graphite on gray wove paper, Image: 11 11/16 x 6 in. (29.7 x 15.2 cm). புரூக்ளின் அருங்காட்சியகம், பொது மக்களின் சந்தா மூலம் வாங்கப்பட்டது, 00. 159. 300