பழைய ஏற்பாடு 2022
செப்டம்பர் 19–25. ஏசாயா 40–49: “என் ஜனமே நீ ஆறுதலடைவாய்”


“செப்டம்பர் 19–25. ஏசாயா 40–49: ‘என் ஜனமே நீ ஆறுதலடைவாய்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“செப்டம்பர் 19–25. ஏசாயா 40–49,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

இயேசு குருடனை குணமாக்குதல்

குருடனை கிறிஸ்து சுகமாக்குதல்–கார்ல் ஹெய்ன்ரிச் பிளாக்

செப்டம்பர் 19–25

ஏசாயா 40–49

“என் ஜனமே நீ ஆறுதலடைவாய்”

பெரும்பாலும் குறியீட்டு மொழியை ஏசாயா பயன்படுத்தினான். உங்கள் மனதிற்கும் இருதயத்திற்கும் இந்த அடையாளங்கள் கொண்டுவருகிற சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் கவனம் செலுத்துங்கள். அவர் என்ன போதித்தார் என்பதை சிறப்பாகப் புரிந்துகொள்ள இது உங்களுக்கு உதவக்கூடும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஏசாயா அதிகாரம் 40ன் முதல் வார்த்தை “ஆறுதல்” இது ஒரு வித்தியாசமான தொனியின் தொடக்கத்தைக் குறிக்கிறது, தீர்க்கதரிசியின் செய்தியில் வேறுபட்ட முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. இஸ்ரவேலும் யூதாவும் செய்த பாவங்களால் வரக்கூடிய அழிவு மற்றும் சிறைப்பிடிப்பு குறித்து ஏசாயாவின் முந்தைய எழுத்துக்கள் அவர்களுக்கு எச்சரித்தபோது, இந்த பிற்கால தீர்க்கதரிசனங்கள் வருங்காலத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக யூதர்களை ஆறுதல்படுத்துவதற்காகவே, எருசலேம் அழிக்கப்பட்ட பின்னர், ஆலயம் அழிக்கப்பட்டு, பாபிலோனால் மக்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் இந்த தீர்க்கதரிசனங்கள் தோற்கடிக்கப்பட்ட, மனச்சோர்வடைந்த இஸ்ரவேலர்களைவிட வருங்காலத்திற்கு இன்னும் அதிகமாக போய்ச் சேர்ந்தது. சில சமயங்களில் தோற்கடிக்கப்பட்ட, மனச்சோர்வடைந்த, காணாமற் போனவர்களுமான அவர்கள் நம்முடன் பேசுகிறார்கள்.

அவர்களுக்கும் நமக்கும் ஏசாயாவின் செய்தி எளியது: “பயப்படாதே” (ஏசாயா 43:1). அனைத்தும் இழக்கப்படவில்லை. கர்த்தர் உங்களை மறக்கவில்லை, உங்கள் கட்டுப்பாட்டையும் தாண்டியதாகத் தோன்றுகிறபோது சூழ்நிலைகளின் மேல் அவருக்கு வல்லமையிருக்கிறது. “வானங்களைச் சிருஷ்டித்து, … பூமியை பரப்பினவரும் அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவர் கர்த்தர் இல்லையா”? (ஏசாயா 42:5). பாபிலோனைவிட, பாவத்தைவிட, உங்களை சிறைபிடித்து வைத்திருக்கும் எதையும்விட அவர் அதிக வல்லமை நிறைந்தவரில்லையா? “என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக்கொண்டேன்” என அவர் கெஞ்சுகிறார் (ஏசாயா 44:22). குணப்படுத்த, மீட்டெடுக்க, பெலப்படுத்த, ஆறுதலளிக்க, உங்கள் விஷயத்தில் மீட்டெடுக்கப்பட உங்களுக்கு எது தேவையாயிருந்தாலும் அவரால் முடியும்.

நேபியும் யாக்கோபும் எவ்வாறு அவர்களுடைய மக்களுக்கு ஒப்பிட்டார்கள் ஏசாயா 48–49 என்பதை அறிந்துகொள்ள 1நேபி 22 மற்றும் 2 நேபி 6 பார்க்கவும்

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஏசாயா 40–49

இயேசு கிறிஸ்து எனக்கு ஆறுதலளித்து எனக்கு நம்பிக்கை அளிக்கமுடியும்.

இஸ்ரவேலர் பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிவது அவர்களுக்கே ஊக்கமிழக்கச் செய்யும், பேரழிவு தரும். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட, உடன்படிக்கையின் மக்களாக, அவர்கள் என்றென்றும் அவர்களின் இடத்தை இழந்துவிட்டார்களா என்று அநேகர் வியப்புற்றிருக்கலாம். ஏசாயா 40–49, நீங்கள் வாசிக்கும்போது, ஆறுதலையும் நம்பிக்கையையும் தரக்கூடியதான வாசகங்களைத் தேடுங்கள். நீங்கள் கண்டறிகிற ஒவ்வொரு வாசகத்திலும், இந்த வசனங்களில் கர்த்தர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை சிந்தித்து பதிவுசெய்யுங்கள். பாருங்கள். நீங்கள் ஆரம்பிக்கக்கூடிய ஒரு சில வசனங்கள் இங்கே:

ஊக்கம் அல்லது நம்பிக்கை தேவைப்படுகிற ஒருவருடன் இந்த செய்திகளை நீங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்? (ஏசாயா 40:1–2 பார்க்கவும்).

ஜெப்ரி ஆர். ஹாலன்ட், “A Perfect Brightness of Hope,” Ensign or Liahona, May 2020, 81–84 ஐயும் பார்க்கவும்.

காட்டில் நதி

கர்த்தருக்கு கீழ்ப்படிதலால் “ஒரு நதியையப்போல நமக்கு சமாதானம் இருக்கும்” (ஏசாயா 48:18).

ஏசாயா 40:3–8, 15–23; 42:15–16; 47:7–11

உலகத்தின் வல்லமையை விட தேவனின் வல்லமை மிகப்பெரியது.

அவர்களைச் சுற்றியுள்ள அடக்குமுறையின் உலக வல்லமையுடன் ஒப்பிடும்போது, தேவனின் ஒப்பிடமுடியாத வல்லமையை தனது மக்களுக்கு ஏசாயா மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினான். ஏசாயா 40:3–8, 15–23; 42:15–16; மற்றும் 47:7–11 நீங்கள் வாசிக்கும்போது இந்த செய்தியை தேடுங்கள் (அதிகாரம் 47 இஸ்ரவேலை சிறைபிடித்த பாபிலோனுக்கு உரைக்கப்பட்டது என்பதைக் கவனிக்கவும்). உலகப் பிரகாரமான காரியங்களைப்பற்றி இந்த வாசகங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? தேவனைப்பற்றி அவை உங்களுக்கு என்ன போதிக்கின்றன? சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு இந்த செய்தி ஏன் மதிப்புமிக்கதாக இருந்திருக்கக்கூடும் என்று சிந்தியுங்கள். அது ஏன் உங்களுக்கு மதிப்புமிக்கது?

Abide with Me!Hymns, no.166 ஐயும் பார்க்கவும்.

ஏசாயா 41:8–13; 42:1–7; 43:9–12; 44:21–28; 45:1–4; 48:10; 49:1–9

“நீங்களே என் ஊழியக்காரர்கள்.”

ஏசாயா 40–49 முழுவதிலும் அவருடைய “ஊழியக்காரரைப்பற்றியும்” அவருடைய “சாட்சிகளைப்பற்றியும்” கர்த்தர் பேசுகிறார். சில பாகங்களில் இந்த வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதாகத் தோன்றுகிறது (ஏசாயா 42:1–7 பார்க்கவும்), மற்றவைகள் இஸ்ரவேல் வீட்டாரைக் குறிக்கிறது (ஏசாயா 45:4 பார்க்கவும்), இன்னும் மற்றவைகள், எருசலேமுக்கு திரும்பி வந்து ஆலயத்தை திரும்பக் கட்ட யூதர்களை அனுமதித்த கோரேஸ் ராஜாவைக் குறிப்பிடுகிறது (44:26–45:4 பார்க்கவும்) ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒரு ஊழியக்காரராகவும் கர்த்தருடைய சாட்சியாகவும் பாகங்கள் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதையும் நீங்கள் பரிசீலிக்கலாம். உதாரணமாக, பின்வருபவற்றைப் போன்ற கேள்விகளைப்பற்றி சிந்தியுங்கள்.

ஏசாயா 41:8–13; 42:6; 44:21. உங்களை என்ன செய்ய கர்த்தர் அழைத்தார்? அவருக்கு சேவை செய்வதற்கான முறையான சபை அழைப்புகள், அப்படியே பிற உடன்படிக்கை பொறுப்புகளைக் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் சேவை செய்யும்போது, அவர் உங்களை எவ்வாறு ஆதரிக்கிறார், “எவ்வாறு [உங்கள்] கையைப் பிடித்துக் கொள்கிறார்” (ஏசாயா 42:6) அவருடைய ஊழியக்காரராய் மாற அவர் உங்களை எப்படி “உருவாக்கினார்” ? (ஏசாயா 48:10 ஐயும் பார்க்கவும்).

ஏசாயா 43:9–12. எந்த அர்த்தத்தில் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் ஒரு சாட்சியாயிருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் என்ன அனுபவங்கள், அவரே இரட்சகர் என உங்களுக்குக் காண்பித்தது?

ஏசாயா 49:1–9. உங்கள் முயற்சிகளும் சேவையும் வீணும் வியர்த்தமுமாய் இருப்பதாகத் தோன்றுகிறபோது உதவக்கூடிய என்ன செய்திகளை இந்த வசனங்களில் நீங்கள் காண்பீர்கள்”? (வசனம் 4).

மோசியா 18:9; ஹென்றி பி. ஐரிங், “A Child and a Disciple,” Ensign or Liahona, May 2003, 29–32 ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஏசாயா 40:3–4.“கர்த்தருடைய வழியை ஆயத்தம் செய்ய” என்பதன் அர்த்தம் என்ன என்பதை ஆராய்வதற்கு, உங்கள் குடும்பத்தினர் கோணலான ஒன்றை நேராக்கலாம், ஒழுங்கீனமான தரையை சுத்தமாக்கலாம், அல்லது பாறை நிலத்தில் தெளிவான பாதையை உருவாக்கலாம். யோவான் ஸ்நானன் மற்றும் ஜோசப் ஸ்மித் படங்களைக்கூட நீங்கள் காட்ட முடியும் (Gospel Art Book, nos. 35,87 பார்க்கவும்). கர்த்தருடைய வருகைக்காக வழியை அவர்கள் எவ்வாறு ஆயத்தப்படுத்தினார்கள்? (லூக்கா 3:2–18; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 135:3 பார்க்கவும்). அவருக்கான வழியை ஆயத்தப்படுத்த நாம் எவ்வாறு உதவுகிறோம்? (உதாரணமாக, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 33:10 பார்க்கவும்).

ஏசாயா 40:28; 43:14–15; 44:6.இந்த வசனங்களில் இயேசு கிறிஸ்துவின் என்ன பெயர்களை அல்லது பட்டங்களை நாம் காண்கிறோம்? ஒவ்வொரு பெயரும் அவரைப்பற்றி நமக்கு என்ன போதிக்கின்றன?

ஏசாயா 41:10; 43:2–5; 46:4.இந்த வசனங்கள் “How Firm a Foundation” (Hymns, no.85) என்ற துதிப்பாடலில் பிரதிபலிக்கிறது. உங்கள் குடும்பத்தினர் சேர்ந்து பாடலைப் பாடுவதையும், இந்த வசனங்களில் உள்ள சொற்றொடர்களைப் போன்ற சொற்றொடர்களை அதில் கண்டுபிடிப்பதையும் ரசிக்கலாம். இயேசு கிறிஸ்துவைப்பற்றி இந்த சொற்றொடர்கள் நமக்கு என்ன போதிக்கின்றன?

ஏசாயா 44:3–4; 45:8.இந்த வசனங்களைப் படித்த பின்னர், கர்த்தர் அவர்கள் மீது பொழிந்த ஆசீர்வாதங்களைப்பற்றி பேசும்போது உங்கள் குடும்பத்தினர் ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றலாம். ஒரு செடிக்கு தண்ணீர் ஊற்றும்போது அதற்கு என்ன நேரிடுகிறது? கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்போது, நம்மிடமிருந்து அவர் எதை எதிர்பார்க்கிறார்?

ஏசாயா 48:17–18.நதிகள் மற்றும் சமுத்திரங்களின் அலைகளின் படங்கள் அல்லது காணொலிகளைக் காட்டுவதைக் கருத்தில் கொள்ளவும். சமாதானம் எவ்வாறு ஒரு நதியைப் போலிருக்க முடியும்? நீதி எவ்வாறு அலைகளைப் போலிருக்க முடியும்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “How Firm a Foundation,” Hymns, no.85.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

வார்த்தைகளை விளக்கவும். உங்களுக்குப் புரியாத வேதங்களிலுள்ள வார்த்தைகள் மற்றும், நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நீங்கள் நினைக்கும் வார்த்தைகளுக்கும் கூட விளக்கங்களைத் தேட முயற்சிக்கவும் . சில சமயங்களில் விளக்கங்கள் ஒரு வசனத்தை வித்தியாசமாக வாசிக்கவும், புதிய ஆவிக்குரிய உள்ளுணர்வுகளைப் பெறவும் உங்களுக்குதவும்.

சிறுமி மற்றும் மனிதனுடன் இயேசு

“கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார், சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார்” (ஏசாயா 49:13).கிலேயாத்தின் தைலம்–ஆன் ஆடெல் ஹென்றி