“செப்டம்பர் 26–அக்டோபர் 2. ஏசாயா 50–57: ‘அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“செப்டம்பர் 26–அக்டோபர் 2. ஏசாயா 50–57,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
செப்டம்பர் 26–அக்டோபர் 2
ஏசாயா 50–57
“அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்”
இரட்சகரிடம் நெருங்கி வர உதவும் ஏசாயா 50–57ன் உள்ளுணர்வுகளைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பெறும் எண்ணங்களைப் பதிவு செய்யவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்
தனது ஊழியம் முழுவதும், ஏசாயா ஒரு வலிமையான விடுவிப்பவரைப்பற்றி பேசினான் (உதாரணமாக, ஏசாயா 9: 3–7 பார்க்கவும்). இந்த தீர்க்கதரிசனங்கள் பல நூற்றாண்டுகள் கழித்து பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது விசேஷமாக இஸ்ரவேலர்களுக்கு விலைமதிப்பற்றதாக இருந்திருக்கும். பாபிலோனின் சுவர்களை இடிக்கக்கூடிய ஒருவர் உண்மையில் ஒரு வலிமையான ஜெயம்கொள்பவராக இருப்பார். 52–53 அதிகாரங்களில் ஏசாயா விவரித்த மேசியா அப்படிப்பட்டவராக இல்லை: “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம். … நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” (ஏசாயா 53:3–4). அத்தகைய எதிர்பாராத விடுவிப்பவரை அனுப்புவதன் மூலம், உண்மையான விடுதலையைப்பற்றி தேவன் நமக்குக் கற்பித்தார். அடக்குமுறை மற்றும் துன்பத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற, தேவன் தான் “ நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட” ஒருவரை அனுப்பினார். சிலர் சிங்கத்தை எதிர்பார்த்த இடத்தில், அவர் ஒரு ஆட்டுக்குட்டியை அனுப்பினார்( ஏசாயா 53: 7 பார்க்கவும்). நிச்சயமாக, தேவனின் வழிகள் நம் வழிகள் அல்ல (ஏசாயா 55: 8–9 பார்க்கவும்). இயேசு கிறிஸ்து சிறையைத் திறப்பதன் மூலம் மட்டுமல்ல, அங்கே நம்முடைய இடத்தைப் பெறுவதன் மூலமும் நம்மை விடுவிக்கிறார். துயரத்தின் மற்றும் துக்கத்தின் சங்கிலிகளிலிருந்து அவர் நம்மை விடுவித்து அவற்றை தம்மீது தாங்கிக் கொள்கிறார் (ஏசாயா 53: 4–5,12பார்க்கவும்). அவர் நம்மை தூரத்திலிருந்து காப்பாற்றுவதில்லை. “நித்திய கிருபையுடன்” கூடிய செயலில் “உன்னைவிட்டு விலகாமலும்” நம்முடன் அவர் பாடனுபவிக்கிறார் (ஏசாயா 54:8,10).
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கர்த்தருடைய ஜனத்துக்கு எதிர்காலம் பிரகாசமாயிருக்கிறது.
இஸ்ரவேலர் பல ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும், அந்த சிறைப்பிடிப்பு அவர்களின் சொந்த மோசமான தேர்ந்தெடுப்புகளின் விளைவாக இருந்தாலும், அவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்க வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். ஏசாயா 50–52ல் என்ன நம்பிக்கையான செய்திகளை நீங்கள் காண்கிறீர்கள்? இந்த அதிகாரங்களில் கர்த்தர் தன்னைப்பற்றி நமக்கு என்ன போதிக்கிறார், இது உங்களுக்கு ஏன் நம்பிக்கையைத் தருகிறது? (எடுத்துக்காட்டாக, ஏசாயா 50:2, 5–9; 51:3–8, 15–16; 52: 3, 9–10 பார்க்கவும்).
இந்த நம்பிக்கையான எதிர்காலத்தை நனவாக்க இஸ்ரவேல் செய்யும்படி 51–52 அதிகாரங்களில் கர்த்தர் அழைக்கும் அனைத்தையும் பட்டியலிடலாம். இந்த வார்த்தைகளின் மூலம் கர்த்தர் உங்களை என்ன செய்ய அழைக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உதாரணமாக, “எழும்பு” மற்றும் “பெலன்கொள்” என்பதன் அர்த்தம் என்ன என நினைக்கிறீர்கள்? ஏசாயா 51:9; ஏசாயா 52:1; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 113:7–10ஐயும் பார்க்கவும். “செவிகொடுங்கள்” (அல்லது “கீழ்ப்படிய வேண்டும் என்ற நோக்கத்துடன் கேளுங்கள்”) என்ற அழைப்பு ஏன் திரும்ப திரும்ப கொடுக்கப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (Russell M. Nelson, “Hear Him,” Liahona, May 2020,89).
மோசியா 12:20–24; 15:13–18; 3 நேபி 20:29–46ஐயும் பார்க்கவும்.
என்னுடைய பாவங்களையும், துக்கங்களையும், இயேசு கிறிஸ்துவே தம்மீது எடுத்துக்கொண்டார்.
இயேசு கிறிஸ்துவின் மீட்பின் ஊழியத்தை ஏசாயா 53ஐ விட அழகாக வேதத்தில் சில அதிகாரங்கள் விவரிக்கின்றன. இந்த வார்த்தைகளை சிந்திக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வசனத்திலும், “துக்கங்கள்,” “துயரங்கள்” மற்றும் “மீறல்கள்” எல்லா ஜனத்துக்கும் குறிப்பாக உங்களுக்காகவும், இரட்சகர் பாடனுபவித்ததை சிந்திக்க இடைநிறுத்துங்கள். நீங்கள் வாசிக்கும்போது “நாங்கள்” மற்றும் “எங்கள்” போன்ற சொற்களை “நான்” மற்றும் “என்” என்று மாற்றலாம். இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன உணர்வுகள் அல்லது எண்ணங்களை உணர்த்துகின்றன? அவற்றை எழுதுவதைக் கருத்தில் கொள்ளவும்.
இரட்சகரைப்பற்றி கற்பிக்க ஏசாயாவின் வார்த்தைகளை தீர்க்கதரிசி அபிநாதி எவ்வாறு பயன்படுத்தினான் என்பதைப் பார்க்க, நீங்கள் மோசியா 14; 15:1–13 மதிப்பாய்வு செய்ய விரும்பலாம்.
நான் அவரிடம் திரும்ப வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார்.
நம்முடைய பாவங்கள் அல்லது பலவீனங்களால் நாம் அனைவரும் கர்த்தரிடமிருந்து தொலைவில் இருப்பதை உணரும் நேரங்கள் உள்ளன. அவர் அவர்களை எப்போதும் மன்னிப்பார் என்ற நம்பிக்கையை சிலர் கைவிட்டுவிட்டார்கள். அதுபோன்ற காலங்களில் உறுதியளிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஏசாயா 54 மற்றும் 57 படிக்க சிறந்த அதிகாரங்கள். குறிப்பாக ஏசாயா 54:4–10; 57:15–19ல், இரட்சகரின் இரக்கம் மற்றும் உங்களைப்பற்றிய அவரது உணர்வுகளைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? அவரைப்பற்றிய இந்த விஷயங்களை அறிந்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது?
ஏசாயா 54:11–17ல் விவரிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எவ்வாறு பொருந்தும்?
“என் உடன்படிக்கையைப் பிடித்துக்கொள்ள” கர்த்தர் அனைவரையும் அழைக்கிறார்.
பல தலைமுறைகளாக, இஸ்ரவேல் தேவனின் உடன்படிக்கை ஜனங்களாக அடையாளம் காணப்பட்டது. இருப்பினும், தேவனின் திட்டம் எப்போதுமே ஒரு தேசத்தை விட அதிகமாக உள்ளடக்கியதாகவே உள்ளது, ஏனென்றால் “தாகமாக இருக்கும் ஒவ்வொருவரும்” “தண்ணீரண்டை வாருங்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள் (ஏசாயா 55:1). ஏசாயா 55 மற்றும் 56 வாசிக்கும்போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், மேலும் தேவஜனம் என்பதன் அர்த்தம் என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவரிடமிருந்து “முற்றிலும் பிரிந்துவிட்டதாக” உணருபவர்களுக்கு தேவனின் செய்தி என்ன? (ஏசாயா 56:3). “என் உடன்படிக்கையைப் பிடித்துக் கொள்பவர்களின்” மனநிலைகளையும் செயல்களையும் விவரிக்கும் வசனங்களைக் குறிப்பதைக் கருத்தில் கொள்ளவும்( ஏசாயா 56:4–7 பார்க்கவும்).
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
ஏசாயா 51–52.இந்த அதிகாரங்களில் கர்த்தரின் அழைப்புகளைப்பற்றி நீங்கள் கலந்துரையாடும்போது, குடும்ப உறுப்பினர்களை நடிக்குமாறு அழைக்கலாம். உதாரணமாக, “ உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுப்பது,” “விழித்திருந்து, எழுந்து நிற்பது” அல்லது “தூசியை உதறிவிட்டு” என்பது எப்படி இருக்கும்? (ஏசாயா 51:6, 17; 52:2). இயேசு கிறிஸ்துவைப்பற்றி இந்த சொற்றொடர்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன?
-
ஏசாயா 52:9.இந்த வசனத்தை வாசித்த பிறகு, உங்கள் குடும்பத்தினர் ஒரு பாடல் அல்லது பிள்ளைகளின் பாடலை “ஒன்றாகப் பாடலாம்”, அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஏசாயா 52ல் என்ன வாக்குத்தத்தங்கள் நமக்கு “மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன”?
-
ஏசாயா 52:11; 55:7.இந்த வசனங்கள் “நீங்கள் சுத்தமாக இருங்கள்” என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன என்பதைப்பற்றிய கலந்துரையாடலுக்கு வழிவகுக்கும். கலந்துரையாடலின் பகுதியாக For the Strength of Youth (booklet, 2011) அல்லது ஆவிக்குரிய விதமாக சுத்தமாக இருப்பதன் ஆசீர்வாதங்கள்பற்றிய வசனங்களை வாசிக்கவும் ( 3 நேபி 12:8; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:45–46 பார்க்கவும்).
-
ஏசாயா 53.இரட்சகரைப்பற்றிய ஏசாயாவின் விளக்கத்தை அறிமுகப்படுத்த, கதைகள், திரைப்படங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மக்களை காக்கும் கதாநாயகர்களை எவ்வாறு சித்தரிக்கின்றன என்பதைப்பற்றி உங்கள் குடும்பத்தினர் பேசலாம். அந்த சித்தரிப்புகளை நீங்கள் ஏசாயா 53ல் வாசித்து, இரட்சகரின் விளக்கங்களுடன் ஒப்பிடலாம். “My Kingdom Is Not of This World” (ChurchofJesusChrist.org) காணொலியையும் நீங்கள் பார்க்கலாம், மற்றும் ஏசாயா 53லுள்ள தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறின என்பதைப்பற்றி பேசலாம். இரட்சகர் நமக்காக சுமக்கும் சில துக்கங்களும் துயரங்களும் யாவை?
-
ஏசாயா 55:8–9.நீங்கள் தரைக்கு மேலே உயரத்தில் இருக்கும்போது விஷயங்கள் எவ்வாறு வித்தியாசமாக இருக்கும்? தேவனின் வழிகளும் எண்ணங்களும் நம்முடையதை விட உயர்ந்தவை என்பதன் அர்த்தம் என்ன?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Stand All Amazed,” Hymns, no. 193.