“அக்டோபர் 3–9. மோசே 58–66: ‘சீயோனுக்கு மீட்பர் வருவார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“அக்டோபர் 3–9. ஏசாயா 58–66: ” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
அக்டோபர் 3–9
ஏசாயா 58–66
“சீயோனுக்கு மீட்பர் வருவார்”
ஏசாயா 58–66 நீங்கள் படிக்கும்போது, ஏசாயாவின் வார்த்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் எதிர்காலத்திற்காக நம்பிக்கையையும் தருகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
அவருடைய பூலோக ஊழியத்தின் ஆரம்பத்தில், அவர் வளர்ந்த கிராமமான நாசரேத்திலுள்ள ஒரு ஜெப ஆலயத்திற்கு இயேசு கிறிஸ்து வருகை தந்தார். வேதங்களிலிருந்து வாசிக்க அங்கே அவர் நின்றிருந்து, ஏசாயா புத்தகத்தைத் திறந்து, ஏசாயா 61:1–2 என இப்போது நாம் அறிகிறதை வாசித்தார். “உங்கள் காதுகள் கேட்க இந்த வேத வாக்கியம் இந்றைய தினம் நிறைவேறிற்று” என பின்னர் அவர் அறிவித்தார். “இருதயம் நருங்குண்டவர்களை குணமாக்கி” மற்றும் “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையைப் பிரசித்தம்பண்ணுகிறவருமான” அவர் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்ற இரட்சகரின் மிக நேர்மையான அறிவிப்புகளில் இதுவும் ஒன்றாகும். (லூக்கா 4:16–21 பார்க்கவும்). உண்மையில் இந்த வேதம் அன்றையத்தினம் நிறைவேறிற்று. ஏசாயாவின் அநேக பிற தீர்க்கதரிசனங்களைப்போல, நம் நாளில் இது தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறது. அவரிடத்தில் வருகிற இருதயம் நருங்குண்டவர்கள் அனைவரையும் இரட்சகர் தொடர்ந்து குணமாக்குகிறார். விடுதலை பிரசித்தம்பண்ணப்பட வேண்டியவர்களான சிறைபிடிக்கப்பட்டவர்கள் அங்கே அநேகரிருக்கிறார்கள். “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” கர்த்தர் உருவாக்குகிற நேரத்தை (ஏசாயா 65:17) ஆயத்தப்படுத்த ஒரு மகிமையான வருங்காலமிருக்கிறது மற்றும் “எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்” (ஏசாயா 61:11) ஏசாயாவை வாசித்தல், கர்த்தர் ஏற்கனவே என்ன செய்திருக்கிறார், அவர் என்ன செய்கிறார், இன்னும் அவர் தம் மக்களுக்காக என்ன செய்வார் என்பதற்கு நம் கண்களைத் திறக்கிறார்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
உபவாசம் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது.
அநேக பூர்வகால இஸ்ரவேலர்களுக்கு, உபவாசம் என்பது ஒரு ஆசீர்வாதத்தை விட ஒரு சுமையாக இருந்தது என்று இந்த வசனங்கள் அறிவுறுத்துகின்றன. நம்மில் அநேகர் சில சமயங்களில் அந்த உணர்வோடு தொடர்புபடுத்தலாம். உங்களுடைய உபவாசத்தில் அதிக அர்த்தத்தையும் நோக்கத்தையும் நீங்கள் காண விரும்பினால், நாம் ஏன் உபவாசமிருக்கிறோம் என்ற கேள்விக்கு கர்த்தருடைய பதிலைக் கண்டுபிடிக்க ஏசாயா 58:3–12 வாசிக்கவும். உங்கள் அனுபவத்தில் உபவாசம் எவ்வாறு “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறது” மற்றும் “ஒவ்வொரு நுகத்தடியையும் உடைத்துப்போட முடிகிறது”? (ஏசாயா 58:6). ஏசாயா 58:8–12ல் விவரிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களை உபவாசம் எவ்வாறு உங்களுக்குக் கொண்டுவந்தது? உபவாசத்தைப்பற்றி நீங்கள் நினைக்கிற விதத்தை ஏசாயா 58:3–12 எவ்வாறு பாதிக்கிறது
அவருடைய செய்தியில் “இது நான் தேர்ந்தெடுத்த உபவாசம் அல்லவே?” (Liahona, May 2015, 22–25) உபவாசத்தினாலும் உபவாச காணிக்கைகளினாலும் மக்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை தலைவர் ஹென்றி , பி. ஐரிங் பகிர்ந்தார் உங்கள் வாழ்க்கையில் இதைப்போன்ற ஆசீர்வாதங்களை நீங்கள் எவ்வாறு பார்த்திருக்கிறீர்கள்?
Gospel Topics, “Fasting and Fast Offerings” (topics.ChurchofJesusChrist.org) ஐயும் பார்க்கவும்.
இயேசு கிறிஸ்து என் இரட்சகரும் மீட்பருமானவர்.
இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் பன்மடங்கு குறிப்புகளை ஏசாயா 58–66ல் நீங்கள் காண்பீர்கள். அவைகளைப்பற்றி சிந்திக்க உங்களுக்குதவ சில கேள்விகளுடன் இங்கே சில எடுத்துக்காட்டுகள்.
-
ஏசாயா 59:9–21. வசனங்கள் 9–15ல் விவரிக்கப்பட்டுள்ள மக்களின் ஆவிக்குரிய நிலையை நீங்கள் எவ்வாறு தொகுப்பீர்கள்? வசனங்கள் 16–21ல் “மத்தியஸ்தரைப்பற்றிய” விளக்கமும், அவரிடத்தில் திரும்புவோருக்கு அவர் செய்கிற உடன்படிக்கையையும்பற்றி உங்களை எது கவருகிறது?
-
ஏசாயா 61:1–3. இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள வழிகளில் இயேசு கிறிஸ்து எவ்வாறு உங்களை ஆசீர்வதித்தார்? என்ன நற்செய்திகளை உங்களுக்கு அவர் கொண்டுவந்தார்? சாம்பலுக்குப் பதிலாக எவ்வாறு அழகை அவர் உங்களுக்குக் கொடுத்தார்?
-
ஏசாயா 63:7–9. கர்த்தரின் என்ன அன்பின் இரக்கங்களை உங்களால் குறிப்பிட முடியும் இரட்சகருக்கான என்ன உணர்வுகளை உங்கள் இருதயத்தில் இந்த வசனங்கள் உணர்த்துகிறது?
ஏசாயா 58–66ல் இரட்சகருக்கான என்ன பிற குறிப்புகளை நீங்கள் கண்டீர்கள்?
மோசியா 3:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 133:46–53 ஐயும் பார்க்கவும்.
“கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்.”
கடைசி நாட்களில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எவ்வாறு உலகத்தை ஆசீர்வதிக்கும் என்பதைப்ற்றிப் போதிக்க, ஏசாயா 60 மற்றும்62 வெளிச்சம் மற்றும் இருள், கண்கள் மற்றும் பார்த்தலைப்பற்றிப் பேசுகிறது. இந்தக் கருத்துக்களை, குறிப்பாக ஏசாயா 60:1–5, 19–20; 62:1–2ல் தேடுங்கள். இந்த அதிகாரங்களை வாசிக்கும்போது, இருளிலிருந்து அவருடைய வெளிச்சத்திற்கு அவருடைய பிள்ளைகளை தேவன் எவ்வாறு கூட்டிச்சேர்ப்பார் என சிந்தியுங்கள். இந்தப் பணியில் உங்களுடைய பாத்திரம் என்ன?
1நேபி 22:3–12; 3நேபி 18:24; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:9; போர்னி ஹெச். கார்டன், “That They May See,” Liahona, May 2020, 78–80.
ஆயிரம் வருஷ அரசாட்சியின்போது, கிறிஸ்து பூமியை அரசாளுவார்.
“முந்தினவைகள் நினைக்கப்படாத” போதுள்ள ஒரு நாளைப்பற்றி ஏசாயா பேசினான் (ஏசாயா 65:16). இந்த தீர்க்கதரிசனம் பல்வேறு நிறைவேற்றங்களைக் கொண்டிருந்தாலும், அதன் முழுமையான அர்த்தத்தில், இயேசு கிறிஸ்து பூமிக்குத் திரும்பிவந்து, ஆயிரம் வருஷம் என்று அழைக்கப்படும் சமாதானம் மற்றும் நீதியின் சகாப்தத்தை நிறுவும், அந்த நாள் இன்னும் வரவில்லை. ஏசாயா 64:1–5; 65:17–25; 66ல் ஏசாயா இந்த வருங்கால நாளை விவரிக்கிறான். “களிகூரு” மற்றும் “களிகூருதல்” போன்ற சொற்களை அவன் எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தினான் என்பதைக் கவனியுங்கள். இரட்சகரின் திரும்பிவருதல் ஏன் உங்களுக்கு ஒரு களிகூருதலின் நாளாயிருக்கும் என சிந்தியுங்கள். அவருடைய வருகைக்காக ஆயத்தப்பட உங்களால் என்ன செய்யமுடியும்?
விசுவாசப் பிரமாணங்கள் 1:10; ரசல் எம். நெல்சன், “The Future of the Church: Preparing the World for the Savior’s Second Coming,” Ensign, Apr. 2020, 13–17 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
ஏசாயா 58:3–11.ஏசாயா 58:3–5ல் விவரிக்கப்பட்டுள்ள உபவாசம் மற்றும் ஏசாயா 58:6–8ல் விவரிக்கப்பட்டுள்ள உபவாசத்தின் மாதிரியில் அவர்கள் செயல்பட்டால் உபவாசத்தைப்பற்றிய ஏசாயாவின் செய்தியை குடும்ப உறுப்பினர்கள் சிறப்பாகப் புரிந்துகொள்ளக்கூடும். “[தேவன்] தேர்ந்தெடுத்த உபவாசத்தைப்” போன்று எவ்வாறு நமது உபவாசத்தை நாம் செய்யமுடியும்? உபவாசத்திலிருந்து நீங்கள் என்ன ஆசீர்வாதங்களைக் கண்டீர்கள்?
-
ஏசாயா 58:13–14.“[நமது] சொந்த இஷ்டத்தைக் காணுதலுக்கும்” ஓய்வுநாளில் “கர்த்தரில் மனமகிழ்ச்சியைக் காணுதலுக்கும்” இடையில் என்ன வித்தியாசமிருக்கிறது? ஓய்வுநாளை நாம் எவ்வாறு “மனமகிழ்ச்சியாக்க” முடியும்?
-
ஏசாயா 60:1–5.ஏசாயா 60:1–3 நீங்கள் வாசிக்கும்போது வசனங்கள் வெளிச்சத்தைக் குறிப்பிடும்போது குடும்ப உறுப்பினர்கள் ஒரு வெளிச்சத்தை ஏற்றலாம் மற்றும் வசனங்கள் இருளைக் குறிப்பிடும்போது அதை அணைக்கலாம். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் எவ்வாறு நமக்கு ஒரு ஒளியைப் போலிருக்கிறது? சுவிசேஷத்தின் ஒளியை தேவனின் மக்கள் பகிர்ந்துகொள்ளும்போது, ஏசாயா முன்கண்ட எது நடக்கும்? (ஏசாயா 60:3–5 பார்க்கவும்).
-
ஏசாயா 61:1–3.இந்த வசனங்களில் ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களை இரட்சகர் எவ்வாறு நிறைவேற்றினார்? அவருடைய ஊழியத்தின் இந்த அம்சங்களை சித்தரிக்க அவர்கள் உணருகிற இரட்சகரின் படங்களைத் தேட குடும்ப உறுப்பினர்களை நீங்கள் அழைக்கலாம் (சபைப் பத்திரிக்கைகளில் படங்கள் காணப்படலாம் அல்லது Gospel Art Book)ல் காணப்படலாம். இரட்சகர் நம்மை எவ்வாறு ஆசீர்வதிக்கிறார் என்பது பற்றி “I Feel My Savior’s Love” (Children’s Songbook, 74–75) போன்ற பாடலை நீங்கள் பாடலாம்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “When He Comes Again,” Children’s Songbook, 82–83.