பழைய ஏற்பாடு 2022
அக்டோபர் 24–30. எசேக்கியேல் 1–3; 33–34; 36–37; 47: “ஒரு புதிய ஆவியை உங்களுக்குள் நான் வைப்பேனோ”


“அக்டோபர் 24–30. எசேக்கியேல் 1–3; 33–34; 36–37; 47: ‘ஒரு புதிய ஆவியை உங்களுக்குள் நான் வைப்பேனோ,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“அக்டோபர் 24–30. எசேக்கியேல் 1–3; 33–34; 36–37; 47,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

ஆடுகளை  இயேசு வழிநடத்துதல்

என்னைப் பின்பற்றி வாருங்கள்–ஸ்காட் சம்னர்

அக்டோபர் 24–30

எசேக்கியேல் 1–3; 33–34; 36–37; 47

“ஒரு புதிய ஆவியை உங்களுக்குள் நான் வைப்பேனோ”

(எசேக்கியேல் 2:9–3:3,10 பார்க்கவும்). இந்த வாரத்தில் தேவனுடைய வார்த்தைகளுடன் உங்களை நீங்கள் எவ்வாறு நிரப்புவீர்கள்?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

எசேக்கியேல் நாடுகடத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. எருசலேம் இறுதியாக அழிக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மற்ற இஸ்ரவேலர்களுடன் சேர்ந்து, அவன் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு அனுப்பப்பட்டான். எருசலேமில், எசேக்கியேல் ஆலயத்தில் சேவை செய்யும் ஒரு ஆசாரியனாக இருந்திருப்பான். பாபிலோனில், அவன் “சிறைப்பிடிக்கப்பட்டவர்களில்” ஒருவனாக இருந்தான், மேலும், ஆலயத்திலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில், தேவனின் அன்பான வீட்டிற்குத் திரும்புவதற்கான சிறிது நம்பிக்கையுடன் அவன் “அவர்கள் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்தான்” (எசேக்கியேல் 3:15). பின்னர் ஒரு நாள் எசேக்கியேலுக்கு ஒரு தரிசனம் உண்டானது. திரும்ப எருசலேமில் உள்ள ஆலயத்தில் இல்லை, ஆனால் பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்கள் மத்தியிலே, “கர்த்தருடைய மகிமையை” அவன் கண்டான்(எசேக்கியேல்1:28) அங்கே தேவனின் பிரசன்னம் இனியும் இல்லாத அளவுக்கு, அவன் அறிந்துகொண்ட எருசலேமிலுள்ள துன்மார்க்கம் மிக மோசமாயிருந்தது (எசேக்கியேல் 8–11; 33:21 பார்க்கவும்).

அவர்களுடைய கிளர்ச்சியின் விளைவுகளைப்பற்றி இஸ்ரவேலர்களை எச்சரிப்பது எசேக்கியேலின் பணிகளில் ஒன்றாயிருந்தது, அந்த எச்சரிக்கை பெரும்பாலும் கேட்கப்படாததாயிருந்தது. ஆனால், எசேக்கியேலின் செய்தியில் இன்னும் அதிகமிருந்தது: காரியங்கள் எவ்வளவு மோசமாக மாறினாலும்கூட, திரும்ப ஒரு வழியிருக்கிறது என அவன் தீர்க்கதரிசனமுரைத்தான். “கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க” (எசேக்கியேல் 37:4), அழைப்பை தேவனுடைய மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், ஒரு காலத்தில் மரித்ததை புதுப்பிக்க முடியும். ஒரு கல் இருதயம் நவமான இருதயத்தால் மாற்றியமைக்கப்படலாம்” (எசேக்கியேல் 36:26). “[நான்] என் ஆவியை உங்களுக்குள் வைத்து, நீங்கள் உயிரடைவீர்கள்” என கர்த்தர் அவர்களுக்குக் கூறினார். கடைசி நாட்களில் ஒரு புதிய ஆலயத்தையும் ஒரு புதிய பட்டணத்தையும் கர்த்தர் நிர்மாணிப்பார் “அந்நாள் முதல் நகரத்தின் பெயர் கர்த்தர் அங்கிருக்கிறார் என அழைக்கப்படும்” (எசேக்கியேல் 48:35).

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

எசேக்கியேல் 1–3.

“நீ என் வார்த்தைகளைச் சொல்லு.”

எசேக்கியேல் 1–3ல், எசேக்கியேலின் ஊழியத்திற்கான அழைப்பைப்பற்றி வாசித்தல், மற்றவர்களுக்கு அவருடைய வார்த்தைகளைப் பேச உங்களுக்கு தேவன் கொடுத்த வாய்ப்புகளைப்பற்றி சிந்திக்க உங்களை உணர்த்தக்கூடும் (எசேக்கியேல் 3:4). எசேக்கியேல் 2–3ல் எசேக்கியேலுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கமளிப்பு மற்றும் அறிவுறுத்தலின் அவருடைய வார்த்தைகளைக் கவனிக்கவும். நீங்கள் சேவை செய்யும் நபர்கள் ஒருவேளை எசேக்கியேலின் மக்களைப் போல கிளர்ச்சியாளர்களாக இல்லாவிட்டாலும், எசேக்கியேலுக்கான தேவனின் வார்த்தைகள் எவ்வாறு சபையிலும், வீட்டிலும், பிற இடங்களிலும் உங்கள் சேவையைப் பார்க்கும் விதத்தை பாதிக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

எசேக்கியேல் 33:1–9; D.Todd Christofferson, “The Voice of Warning,” Ensign or Liahona, May 2017, 108–11 ஐயும் பார்க்கவும்.

எசேக்கியேல் 33:10–19

கர்த்தர் மன்னிக்க விரும்புகிறார்.

“நம் பாவங்கள் நம்மீதிருந்தால், நாம் பிழைப்பது எப்படி என சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர் ஆச்சரியப்பட்டனர்?” (எசேக்கியேல் 33:10). பதிலாக, மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பைக் குறித்து முக்கியமான சத்தியங்களைக் கர்த்தர் போதித்தார். பின்வரும் இந்தக் கேள்விகள் அந்த சத்தியங்களை சிந்திக்க உங்களுக்கு உதவக்கூடும்:

  • “[உங்களுடைய] சொந்த நீதியை நம்புவதென்பதற்கு அர்த்தம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்”? (எசேக்கியேல் 33:12–13 பார்க்கவும்).

  • எசேக்கியேல் 33:12–19ல் விவரிக்கப்பட்டுள்ள நீதிமானும், துன்மார்க்கனும் நியாயமாக நடத்தப்படவில்லை என உணருகிற ஒருவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? (மத்தேயு 21:28–31; லூக்கா 18:9–14 ஐயும் பார்க்கவும்)

  • மனந்திரும்புதல் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகிற இந்த வசனங்களில் நீங்கள் என்ன சொற்றொடர்களைக் காண்கிறீர்கள்? எசேக்கியேல் 36:26–27 மற்றும் ஆல்மா 7:14–16ல் என்ன கூடுதல் உள்ளுணர்வுகளை நீங்கள் கண்டீர்கள்?

எசேக்கியேல் 34

அவரது ஆடுகளை போஷிக்க கர்த்தர் என்னை அழைக்கிறார்.

எசேக்கியேல் 34ல் அவருடைய மக்களான தலைவர்களை “மேய்ப்பர்கள்” என கர்த்தர் குறிப்பிடுகிறார். நீங்கள் வாசிக்கும்போது, ஒரு தலைவராக இருப்பதன் அர்த்தம் குறித்து இந்த தலைப்பு உங்களுக்கு என்ன அறிவுறுத்துகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும். நாங்கள் போஷிக்க கர்த்தர் விரும்புகிற ஆடுகள் யார்? நமது மேய்ப்பராக இரட்சகர் முன்வைக்கிற எடுத்துக்காட்டை உங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்? (வசனங்கள் 11–31 பார்க்கவும்).

யோவான் 21:15–17 ஐயும் பார்க்கவும்.

பாலைவனமும் சவக்கடலும்

ஆலயத்திலிருந்து ஒரு நதி பாய்ந்து சவக்கடலை குணமாக்குவதை எசேக்கியேல் தரிசனமாகக் கண்டான்.

எசேக்கியேல் 37

அவருடைய மக்களை கர்த்தர் கூட்டிச்சேர்த்து அவர்களுக்கு புதிய ஜீவனைக் கொடுக்கிறார்.

இரண்டு அடையாளங்கள் மூலம் எசேக்கியேல் 37ல் இஸ்ரவேலின் கூடிச்சேர்தல் சித்தரிக்கப்பட்டது. முதலாவது அடையாளத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, செத்த எலும்புகள் ஜீவனுடன் மீட்கப்படும் (வசனங்கள் 1–14 பார்க்கவும்) திரையின் இருபுறமும் இல்ரவேலைக் கூட்டிச் சேர்தலைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதைப்பற்றி சிந்திக்கவும் (எசேக்கியல் 36:24–30 ஐயும் பார்க்கவும்).

இரண்டாவது அடையாளம் (வசனங்கள் 15–28 பார்க்கவும்) பல அறிஞர்கள் ஒரு கீல் இணைந்த மர எழுத்து பலகைகள் என்று விளக்குகிற இரண்டு கோல்களை உள்ளடக்கியிருக்கிறது. யூதாவின் கோல் வேதாகமத்தைக் குறிக்கும் (வேதாகமத்தின் பெரும்பகுதி யூதாவின் சந்ததியினரால் எழுதப்பட்டது என்பதால்), யோசேப்பின் கோல் மார்மன் புஸ்தகத்தைக் குறிக்கலாம் (லேகியின் குடும்பம் எகிப்தின் யோசேப்பின் சந்ததியினர் என்பதால்). இதை மனதில் கொண்டு, இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்ப்பதில் வேதங்களின் பங்கைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றன? 2 நேபி 3:11–13 (ஜோசப் ஸ்மித் மற்றும் மார்மன் புஸ்தகத்தைப்பற்றி ஒரு தீர்க்கதரிசனம்) உங்கள் புரிந்துகொள்ளுதலுக்கு எதைச் சேர்க்கிறது?

2 நேபி 29:14; “சிதறடிக்கப்பட்ட இஸ்ரவேலை மார்மன் புஸ்தகம் கூட்டிச் சேர்க்கிறது” (காணொலி, ChurchofJesusChrist.org) ஐயும் பார்க்கவும்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

எசேக்கியேல் 33:1–5.இந்த வசனங்களை சித்தரிப்பதற்கு, ஒரு குடும்ப உறுப்பினர் ஒரு சாளரத்திற்கு வெளியே பார்த்துவிட்டு, வெளியே என்ன நடக்கிறது என்பதை குடும்பத்தின் மற்றவர்களிடம் சொல்வதன் மூலம் ஒரு “காவலாளியாக” பாசாங்கு செய்யலாம். நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசி நமக்கான ஒரு காவலாளியைப்போல எவ்வாறிருக்கிறார்?

எசேக்கியேல் 33:15–16.இயேசு கிறிஸ்து மூலம் நாம் பெற முடிகிற மன்னிப்பைப்பற்றி இந்த வசனங்கள் நமக்கு என்ன போதிக்கின்றன?

எசேக்கியேல் 36:26–27.“கல்லான இருதயத்தைக்” கொண்டிருத்தல் என்றால் என்னவென்பதைப்பற்றி கலந்துரையாடும்போது, உங்கள் குடும்பத்தினருக்கு சில கற்களைக் காட்டவும். இரட்சகர் நமக்குக் கொடுக்கிற புதிய இருதயம் புதிய ஆவியை விவரிக்கிற வார்த்தைகளை அவர்கள் அறிவுறுத்தட்டும் (மோசியா 3:19; 5:2 பார்க்கவும்).

எசேக்கியேல் 37:15–28.இரண்டு கோல்களை குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடித்து, ஒன்றில் யூதாவுக்காக (வேதாகமம்) எழுதி, மற்றொன்றில் யோசேப்புக்காக (மார்மன் புஸ்தகம்) (வசனங்கள் 16–19 பார்க்கவும்) எழுதவும். பின்னர், வேதாகமத்திலிருந்தும் மார்மன் புஸ்தகத்திலிருந்தும் கதைகளை அல்லது வேதங்களை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடியும், இது இரட்சகரிடத்து நெருக்கமாக உணரவும், “[அவருடைய] ஜனங்களாக” மாறவும் அவர்களுக்குதவும் ( வசனங்கள் 23).

எசேக்கியேல் 47:1–12.ஆலயத்திலிருந்து தண்ணீர் பாய்ந்து, மீன் மற்றும் தாவரங்கள் அதில் வாழ முடியாத அளவுக்கு உப்பு நிறைந்த கடலான சவக்கடலை குணப்படுத்துவதைப்பற்றிய எசேக்கியேலின் பார்வையை இந்த வசனங்கள் விவரிக்கிறது. இந்த தரிசனத்தை ஒரு படமாக வரைய பிள்ளைகள் ரசிக்கக்கூடும். ஆலயத்திலிருந்து பாயும் தண்ணீர் எதை அடையாளப்படுத்த முடியும்? (the video “And the River Will Grow,” ChurchofJesusChrist.org பார்க்கவும்). நம்மைக் குணமாக்க ஆலயம் எவ்வாறு உதவமுடியும்?(எசேக்கியேல் 47:8–9,11 பார்க்கவும்).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Dear to the Heart of the Shepherd,” Hymns, no.221.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

எல்லாவற்றையும் கற்பிக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் எல்லா சத்தியத்தையும் ஆராய உங்களால் முடியாமலிருக்கக்கூடும். எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க ஆவிக்குரிய வழிகாட்டுதலைத் தேடுங்கள். (Teaching in the Savior’s Way, 7.) பார்க்கவும்.)

நதி ஆலயத்திலிருந்து பாய்ந்து கொண்டிருக்கிற சித்தரிப்பு

“இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டு ஓடுகிறது.… இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் பிழைக்கும்” (எசேக்கியேல் 47:1,9). shutterstock.com லிருந்து உரிமம் பெற்று கீழ் பயன்படுத்தப்படும் படம்.