பழைய ஏற்பாடு 2022
அக்டோபர் 17–23. எரேமியா 30–33; 36; புலம்பல் 1; 3: “ நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுவேன்”


“அக்டோபர் 17–23. எரேமியா 30–33; 36; புலம்பல் 1; 3: ‘நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுவேன்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022 (2021)

“அக்டோபர் 17–23. எரேமியா 30–33; 36; புலம்பல் 1; 3, “ நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுவேன்” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

எரேமியா தீர்க்கதரிசியின் செதுக்கப்பட்ட சித்திரம்

எரேமியா தீர்க்கதரிசியின் அழுகை, நாசரேன் பள்ளியின் ஒரு செதுக்கலில் இருந்து

அக்டோபர் 17–23

எரேமியா 30–33; 36; புலம்பல் 1; 3

“நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுவேன்”

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யும்போது, எரேமியா மற்றும் புலம்பலில் உள்ள கொள்கைகள் பழைய ஏற்பாட்டில் நீங்கள் கற்றுக்கொண்ட பிற விஷயங்களுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன. என்பதைப்பற்றி சிந்தியுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

எரேமியாவை ஒரு தீர்க்கதரிசி என்று கர்த்தர் முதன்முதலில் அழைத்தபோது, அவனுடைய ஊழியம் “பிடுங்கவும், இடிக்கவும்,” ( எரேமியா 1:10 ) என்று சொன்னார், எருசலேமில் பிடுங்கவும், இடிக்கவும், ஏராளமான துன்மார்க்கம் இருந்தன. ஆனால் இது எரேமியாவின் ஊழியத்தின் ஒரு பகுதியில் மட்டுமே, அவன் “கட்டவும் நாட்டவும்” அழைக்கப்பட்டான் (எரேமியா 1:10). இஸ்ரவேலின் கிளர்ச்சியால் எஞ்சியிருக்கும் பாழடைந்த இடிபாடுகளில் என்ன கட்டப்படலாம் அல்லது நடப்படலாம்? இதேபோல், பாவம் அல்லது துன்பம் நம் வாழ்க்கையை நாசமாக்கும்போது, நாம் எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்பவும், மீண்டும் நடவும் முடியும்? “நீதியின் கிளை” ( எரேமியா 33:15ல்), வாக்குறுதியளிக்கப்பட்ட மேசியாவில் இருக்கிறது என்பதில் பதில் இருக்கிறது. மேசியா “ஒரு புதிய உடன்படிக்கையை”( எரேமியா 31:31) கொண்டுவருகிறார், இதற்கு மேலோட்டமான அர்ப்பணிப்பு அல்லது அர்ப்பணிப்பின் வெளிப்புற தோற்றத்தை விட அதிகமாக தேவைப்படுகிறது. அவருடைய நியாயப்பிரமாணம் “[நம்முடைய] உள்ளத்தில்” இருக்க வேண்டும், “[நம்முடைய] இருதயங்களில்” எழுதப்பட வேண்டும். கர்த்தர் “[நமது] தேவனாக” இருப்பதற்கும், நாம் “[அவருடைய] ஜனமாக” இருப்பதற்கும் உண்மையில் இதுதான் அர்த்தம்( எரேமியா 31:33 ). இது ஒரு வாழ்நாள் செயல்முறை, நாம் இன்னும் தவறுகளைச் செய்வோம், அவ்வப்போது துக்கம் அனுசரிக்க காரணம் இருக்கிறது. ஆனால் நாம் அவ்வாறு செய்யும்போது, கர்த்தரிடமிருந்து இந்த வாக்குறுதியைப் பெற்றுள்ளோம்: “நான் அவர்களின் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவேன்” ( எரேமியா 31:13).

புலம்பலைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு, “Lamentations, Bookof” in the Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org) பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

எரேமியா 30–31; 33

கர்த்தர் இஸ்ரவேலை சிறைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்து அவர்களைச் கூட்டிச் சேர்ப்பார்.

எரேமியா 30–31; 33ல் இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்படும்போது அவர்கள் அனுபவிக்கும் “புலம்பலையும் கசப்பான அழுகையையும்” (எரேமியா 31:15) கர்த்தர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், அவர் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் வார்த்தைகளையும் கொடுத்தார். இந்த அத்தியாயங்களில் என்ன சொற்றொடர்கள் இஸ்ரவேலருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? கர்த்தரிடமிருந்து அவருடைய ஜனங்களுக்கு என்ன வாக்குறுதிகள் கிடைக்கின்றன? இந்த வாக்குத்தத்தங்கள் உங்களுக்கு எப்படி பொருந்தக்கூடும்?

எரேமியா 31:31–34; 32:37 –42

“அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களின் தேவனாயிருப்பேன்.”

இஸ்ரவேலர் கர்த்தருடனான உடன்படிக்கையை முறித்திருந்தாலும், கர்த்தர் தம்முடைய ஜனங்களுடன் மீண்டும் ஒரு “புதிய” மற்றும் “நித்திய உடன்படிக்கையை” ஏற்படுத்துவார் என்று எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தான் (எரேமியா 31:31; 48}). புதிய மற்றும் நித்திய உடன்படிக்கை “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முழுமை [ கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 66:2 பார்க்கவும்]. மதமாறுபாட்டின் காலத்தைத் தொடர்ந்து புதிதாக வெளிப்படும் ஒவ்வொரு முறையும் இதுபுதியது ஆகும். இது நித்திய தேவனின் உடன்படிக்கை என்பதோடு, ஜனங்கள் அதைப் பெற தயாராக இருக்கும் ஒவ்வொரு சுவிசேஷ ஊழியக்காலத்திலும் அனுபவிக்கப்பட்டு வருகிறது” (Guide to the Scriptures, “New and Everlasting Covenant,” scriptures.ChurchofJesusChrist.org; சாய்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது).

எரேமியா 31: 31–34; 32: 37–42 , நீங்கள் வாசிக்கும்போது, தேவனின் உடன்படிக்கை ஜனங்களில் ஒரு பகுதியாக இருப்பதன் அர்த்தம் என்னவென்று சிந்தியுங்கள். தேவனுடனான உங்கள் உடன்படிக்கை உறவை நீங்கள் பார்க்கும் விதத்தை இந்த வசனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன? அவருடைய நியாயப்பிரமாணம் உங்கள் இருதயத்தில் எழுதப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? (எரேமியா 31:33பார்க்கவும்).

எரேமியா 24:7; எபிரெயர் 8:6–12 ஐயும் பார்க்கவும்.

சிறுமி, வேதங்களைப் படித்தல்

மனந்திரும்பவும் கர்த்தரிடம் திரும்புவதற்கும் வேதங்கள் நமக்கு உணர்த்தும்.

எரேமியா 36

என்னை தீமையிலிருந்து விலக்க வசனங்களுக்கு வல்லமை இருக்கிறது.

“அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படியாகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிக்கும்படியாகவும், ” இந்த தீர்க்கதரிசனங்களை ஜனங்கள் கேட்க வேண்டும் ( எரேமியா 36:2–3) என விவரித்து தனது தீர்க்கதரிசனங்களை “ஒரு புத்தகத்தின் சுருள்” அல்லது ஒரு சுருளில் பதிவு செய்யும்படி கர்த்தர் எரேமியாவுக்குக் கட்டளையிட்டார். எரேமியா 36 நீங்கள் வாசிக்கும்போது, இந்த தீர்க்கதரிசனங்களைப்பற்றி பின்வரும் ஜனங்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும்:

கர்த்தர்:

எரேமியா:

பாருக்கு:

யெகுதியும் யேயாக்கிம் ராஜாவும்:

எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவும்:

வசனங்களையும் உங்கள் வாழ்க்கையில் அவற்றின் பங்கையும்பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று சிந்தியுங்கள். தீமையிலிருந்து விலகிச் செல்ல அவை எவ்வாறு உங்களுக்கு உதவியுள்ளன?

Julie B. Beck, “My Soul Delighteth in the Scriptures,” Ensign or Liahona, May 2004, 107–9 ஐயும் பார்க்கவும்.

புலம்பல் 1; 3

பாவத்தின் காரணமாக நாம் அனுபவிக்கும் துக்கத்திலிருந்து கர்த்தர் விடுவிக்க முடியும்.

புலம்பல் புத்தகம், எருசலேம் மற்றும் அதன் ஆலயம் அழிக்கப்பட்ட பின்னர் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகும். இந்த புலம்பல்கள் பாதுகாக்கப்பட்டு பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டிருப்பது ஏன் முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? புலம்பல் 1 மற்றும் 3 ல் உள்ள உருவகங்கள் இஸ்ரவேல் உணர்ந்த பெரும் துக்கத்தைப்பற்றி புரிந்துகொள்ள உதவுகின்றன. கிறிஸ்துவில் நம்பிக்கையின் எந்த செய்திகளை நீங்கள் காணலாம்? (விசேஷமாக புலம்பல் 3:20–33 பார்க்கவும்; மத்தேயு 5:4; யாக்கோபு 4:8–10; ஆல்மா 36:17–20 ஐயும் பார்க்கவும்).

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

எரேமியா 31:3.பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் நம்மீது “நித்திய அன்பை” எப்படி காட்டியிருக்கிறார்கள்? கிறிஸ்து நமக்காக உருவாக்கிய அல்லது அவருடைய பூலோக ஊழியத்தின் போது செய்தவற்றின் படங்களைக் காண்பிப்பது உங்கள் குடும்பத்தினருக்கு அவருடைய “அன்பான தயவை” உணர உதவலாம்.

எரேமியா 31:31–34; 32:38–41.நாம் அவருடன் உடன்படிக்கை செய்யும்போது கர்த்தர் வாக்குறுதி அளித்த, இந்த வசனங்களில் உள்ள விஷயங்களின் பட்டியலை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும். நமது உடன்படிக்கைகளின் முக்கியத்துவத்தைப்பற்றி இந்த வசனங்கள் நமக்கு என்ன கற்பிக்கின்றன?

குடும்ப உறுப்பினர்கள் இரட்சகரைப்பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைக் காட்டும் ஒன்றை காகித இருதயங்களில் எழுதலாம் (அல்லது வரையலாம்). அவருடைய நியாயப்பிரமாணம் நம்முடைய இருதயங்களில் எழுதப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? (எரேமியா 31:33 பார்க்கவும் ). நாம் அவருடைய ஜனங்களாக இருக்க விரும்புகிறோம் என்பதை கர்த்தருக்குக் காண்பிப்பது எப்படி?

எரேமியா 36.வசனங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி உங்கள் குடும்பத்தினர் அறிய உதவ, எரேமியா 36ஐ எவ்வாறு பயன்படுத்தலாம்? (எடுத்துக்காட்டாக, 6–9, 1–6, 10, 23–24, 27–28, 32 வசனங்கள் பார்க்கவும்). எரேமியாவுக்காக பாருக்கு செய்ததைப் போல ஒரு குடும்ப உறுப்பினரை இந்த அதிகாரத்திலிருந்து ஒரு வசனத்தை வாசிக்கும்படி நீங்கள் கேட்கும்போது மற்றொரு குடும்ப உறுப்பினர் அதை எழுதலாம். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைப் பாதுகாத்த பாருக்கு போன்றவர்களின் முயற்சிகளுக்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்? வேதங்களிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளை மதிக்கிறோம் என்பதைக் காட்ட நாம் என்ன செய்ய முடியும்?

புலம்பல் 3:1–17, 21–25, 31–32.ஒரு குடும்பமாக, புலம்பல் 3:1–17ல் தெரிவிக்கப்பட்ட உணர்வுகளை, நாம் பாவம் செய்யும் போது நம்மிடம் இருக்கும் உணர்வுகளுடன் எவ்வாறு தொடர்புபடுத்தலாம் என்பதைப்பற்றி பேசலாம். வசனங்கள் 21–25, 31–32ல் உள்ள செய்திகள் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Feel My Savior’s Love,” Children’s Songbook, 74–75.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

வெளிப்படுத்தலை நாடுங்கள். நீங்கள் நாள் முழுவதும் சிந்திக்கும்போது, நீங்கள் படித்த வசனங்களைப்பற்றிய கூடுதல் யோசனைகளையும் எண்ணங்களையும் பெறலாம். சுவிசேஷப் படிப்பை நேரம் கிடைத்தால் படிக்கும் ஒன்றாக நினைக்காதீர்கள், ஆனால் நீங்கள் எப்போதும் செய்யும் ஒன்றாக ஆக்குங்கள். (Teaching in the Savior’s Way, 12 பார்க்கவும்.)

நகரம் வெளியே எரியும் போது குகையில் மனிதன் சோகமாக இருக்கிறான்.

எருசலேமின் அழிவைப்பற்றி எரேமியா புலம்புகிறான் –ரெம்ப்ராண்ட் வான் ரிஜ்ன்