“அக்டோபர் 31–நவம்பர் 6. தானியேல் 1–6: ‘இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“அக்டோபர் 31–நவம்பர் 6. தானியேல் 1–6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
அக்டோபர் 31–நவம்பர் 6
தானியேல் 1–6
“இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை”
மூப்பர் ரிச்சர்ட் ஜி. உணர்த்துதல்களைப் பதிவுசெய்தல் “தேவனின் தொடர்புகள் நமக்கு பரிசுத்தமானவை என்பதைக் காட்டுகிறது” என ஸ்காட் விளக்கினார். பதிவுசெய்தல் வெளிப்பாட்டை நினைவுபடுத்தும் திறனை மேம்படுத்தும்” (“How to Obtain Revelation and Inspiration for Your Personal Life,” Ensign or Liahona, May 2012,46).
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசிப்பதால் உங்களை கொடிய சூளை அல்லது சிங்கங்களின் குகையில் தள்ளுவதாக யாரும் அச்சுறுத்தவது வெகுவாக நிகழாது. ஆனால் விசுவாசத்தின் சோதனை இல்லாமல் நாம் யாரும் இந்த வாழ்க்கையை முடிப்பதில்லை. வலிமைமிக்க பாபிலோனிய சாம்ராஜ்யத்தால் இளைஞர்களாக சிறைபிடிக்கப்பட்ட தானியேல், சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ போன்றவர்களின் உதாரணத்திலிருந்து நாம் அனைவரும் பயனடையலாம் ( 2 இராஜாக்கள் 24:10–16பார்க்கவும்). இந்த இளைஞர்கள் வெவ்வேறு மதிப்புகளைக் கொண்ட அறிமுகமில்லாத கலாச்சாரத்தால் சூழப்பட்டனர், மேலும் அவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும் நீதியான மரபுகளையும் கைவிட பெரும் சோதனையை எதிர்கொண்டனர். ஆனாலும் அவர்கள் தங்கள் உடன்படிக்கைகளுக்கு உண்மையாக இருந்தார்கள். எகிப்தில் யோசேப்பு மற்றும் பெர்சியாவில் எஸ்தரைப் போலவே, தானியேலும் பாபிலோனில் உள்ள அவனுடைய நண்பர்களும் தேவன்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள், தேவன் அற்புதங்களைச் செய்தார், அது இன்றுவரை விசுவாசிகளுக்கு உணர்த்துதல் அளிக்கிறது.
இவ்வளவு விசுவாசமாக இருக்க அவர்கள் எவ்வாறு பலம் கண்டார்கள்? ஜெபம், உபவாசம், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது, தேவன்மீது நம்பிக்கை வைப்பது, மற்றவர்களுக்கு ஒளியாக இருப்பது போன்ற சிறிய மற்றும் எளிமையான காரியங்களை செய்ய தேவன் நம் அனைவரிடமும் கேட்டவற்றை அவர்கள் செய்தார்கள். இதே சிறிய மற்றும் எளிமையான காரியங்களைச் செய்வதன் மூலம் நாம் பலப்படுத்தப்படுவதால், நம் சொந்த வாழ்க்கையில் சிங்கங்களையும் கொடிய சூளைகளையும் விசுவாசத்துடன் எதிர்கொள்ள முடியும்.
தானியேல் புத்தகத்தின் மேலோட்டமான பார்வைக்கு, “Genesis” in the Bible Dictionary பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
தானியேல் 1; 3; 6
என் விசுவாசம் சோதிக்கப்படும்போது நான் கர்த்தரை நம்ப முடியும்.
ஒரு விதத்தில், நாம் அனைவரும் பாபிலோனில் வாழ்கிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகம் நம்முடைய தரங்களை சமரசம் செய்வதற்கும் இயேசு கிறிஸ்து மீதான நம்முடைய விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்குவதற்கும் பல சோதனைகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் தானியேல் 1, 3 , மற்றும் 6 ஆகியவற்றைப் படிக்கும்போது, தானியேல், ஷாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ ஆகியோர் தங்களுக்குத் தவறு எனத்தெரிந்த விஷயங்களைச் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்ட வழிகளைக் கவனியுங்கள். உங்கள் நம்பிக்கைகளை சமரசம் செய்ய நீங்கள் எப்போதாவது அழுத்தத்தை உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் எதிர்ப்பை எதிர்கொள்ளும்போது கர்த்தரை நம்புவதற்கு உதவும் இந்த மனிதர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
பெரிய அற்புதங்களுக்கு வழிவகுத்த பெரிய விசுவாச அனுபவங்களை தானியேல் புத்தகம் மற்றும் பல வேதங்கள் பதிவு செய்கின்றன. ஆனால் நம்முடைய விசுவாசம் நாம் தேடும் அற்புதங்களுக்கு வழிவகுக்காவிட்டால் என்ன செய்வது? (எடுத்துக்காட்டாக, ஆல்மா 14:8–13 பார்க்கவும்). தானியேல் 3:13–18ல் நீங்கள் படித்தவற்றின் அடிப்படையில், இந்த கேள்விக்கு ஷாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ எப்படி பதிலளித்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் விசுவாச சோதனைகளை நீங்கள் எவ்வாறு அணுகலாம் என்பதை அவர்களின் உதாரணம் எவ்வாறு பாதிக்கும்? இந்த வசனங்களைப்பற்றி மேலும் அறிய, மூப்பர் டென்னிஸ் இ. சிம்மன்ஸ் செய்தி பார்க்கவும் “But If Not…” (Ensign or Liahona, May 2004, 73–75).
ஒரு நபரின் நீதியான தேர்ந்தெடுப்புகள் மற்றவர்களை கர்த்தர் மீது அதிக நம்பிக்கைக்கு இட்டுச் செல்லும் என்பதையும் தானியேல் புத்தகம் காட்டுகிறது. அதிகாரங்கள் 1, 3 , மற்றும் 6 ஆகியவற்றில் இதற்கு என்ன எடுத்துக்காட்டுகள் உள்ளன? உங்கள் தேர்ந்தெடுப்புகளால் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை சிந்தித்துப் பாருங்கள்( மத்தேயு 5:16 பார்க்கவும்).
Dieter F. Uchtdorf, “Be Not Afraid, Only Believe,” Ensign or Liahona, Nov. 2015, 76–79; David R. Stone, “Zion in the Midst of Babylon,” Ensign or Liahona, May 2006, 90–93 ஐயும் பார்க்கவும்.
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை பூமியின்மேல் தேவனுடைய ராஜ்ஜியம்.
நேபுகாத்நேச்சாரின் சொப்பனம் வருங்கால உலக ராஜ்யங்களையும், “என்றென்றைக்கும் அழியாது” என்ற தேவனுடைய எதிர்கால ராஜ்யத்தையும் முன்னறிவிப்பதை வெளிப்பாடு மூலம் தானியேல் கண்டான்( தானியேல் 2:44). “சபை என்பது பிற்கால ராஜ்ஜியத்தை முன்னறிவித்தது, ”மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சன் கற்பித்தார், “மனிதனால் படைக்கப்படாமல், ஆனால் பரலோக தேவனால் அமைக்கப்பட்டு, கைகளாலல்லாமல் மலையிலிருந்து வெட்டப்பட்ட ஒரு கல்லாக உருண்டு, பூமியை நிரப்பும்” (“Why the Church,” Ensign or Liahona, Nov. 2015,111). தானியேல் 2:34–35, 44–45 கல்லின் விவரிப்புகளை நீங்கள் வாசிக்கும்போது தேவனின் பிற்கால ராஜ்யத்தைப்பற்றி சிந்தியுங்கள். கல்லுக்கும் ராஜ்யத்துக்கும் இடையே என்ன ஒற்றுமைகள் காணப்படுகின்றன? தேவனின் ராஜ்யம் இன்று பூமியை நிரப்புவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
Gordon B. Hinckley, “The Stone Cut Out of the Mountain,” Ensign or Liahona, Nov. 2007, 83–86; L.Whitney Clayton, “The Time Shall Come,” Ensign or Liahona, Nov. 2011, 11–13ஐயும் பார்க்கவும்.
இரட்சகர் என் சோதனைகளில் என்னை ஆதரிப்பார்.
ஷாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோ ஆகியோருடன் கொடிய சூளையில் தோன்றும் நான்காவது உருவத்தைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது என்ன உள்ளுணர்வு உங்களுக்கு வருகிறது? நீங்கள் எதிர்கொள்ளும் சோதனைகளில் இந்த விவரம் எவ்வாறு உங்களுக்கு உதவ முடியும்? மோசியா 3:5–7; ஆல்மா 7:11–13; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 61:36–37; 121:5–8ல் என்ன உள்ளுணர்வுகளை நீங்கள் காணலாம்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
தானியேல் 6:1–2தானியேல் 1 மற்றும் 2 ஆகியவற்றை நீங்கள் ஒன்றாக வாசிக்கும்போது, ராஜாவின் இறைச்சியையும் மதுவையும் சாப்பிடுவதைத் தவிர்ப்பதன் மூலம் தானியேலும் அவனது நண்பர்களும் பெற்ற ஆசீர்வாதங்களை நீங்கள் தேடலாம். (God Gave Them Knowledge,” ChurchofJesusChrist.org காணொலி பார்க்கவும்.) ஞான வார்த்தை போன்ற அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடிக்கும்போது அந்த ஆசீர்வாதங்களை நீங்கள் நம்முடையவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:18–21 பார்க்கவும்). ஞான வார்த்தையின்படி வாழ்ந்ததற்காக கர்த்தர் நம்மை எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்?
-
தானியேல் 3தானியேல் 3லுள்ள கதையைப்பற்றி அறிய உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும்? “சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ,” பழைய ஏற்பாட்டு கதைகள் உதவ முடியும். ஷாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்-நேகோகோவைப்பற்றிய எது கவர்கிறது? நம்முடைய விசுவாசத்துக்கு சவால் விடும் எந்த சூழ்நிலையை நாம் எதிர்கொள்கிறோம், மேலும் நாம் தேவனை நம்புகிறோம் என்பதைக் காட்ட நமக்கு தேவைப்படுகிறது.
-
தானியேல் 6:1–23.தானியேல் 6:1–23 (எடுத்துக்காட்டாக, வசனங்கள் 10–12 அல்லது 16–23)ல் உங்கள் குடும்பத்தினர் கதையின் சில பகுதிகளை நடித்து மகிழலாம். தானியேலின் எடுத்துக்காட்டிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறோம்? அவனைப் போல அதிகமாக இருக்க நாம் என்ன செய்ய முடியும்?
-
தானியேல் 6:25–27இந்த வசனங்களின்படி, கர்த்தர் தானியேலை சிங்கங்களிடமிருந்து விடுவித்தபோது தரியு ராஜா எவ்வாறு பாதிக்கப்பட்டான்? நீங்கள் தானியேல் 2:47; 3:28–29 வாசிக்கும்போது நேபுகாத்நேச்சார் ராஜா இதேபோல் எவ்வாறு பாதிக்கப்பட்டான் என்பதையும் வாசிக்கலாம். மற்றவர்களில் செல்வாக்கு ஏற்படுத்த நமக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன? குடும்ப உறுப்பினர்கள் உட்பட மற்றவர்களின் நம்பிக்கை மற்றவர்களை நன்மையாக எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்தியது என்பதற்கு நீங்கள் பார்த்த உதாரணங்களைப்பற்றி கலந்துரையாடவும்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Want to Live the Gospel,” Children’s Songbook,148.