“நவம்பர் 7–13. ஓசியா 1–6; 10–14; யோவேல்: ‘அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“நவம்பர் 7–13. ஓசியா 1–6; 10–14; யோவேல்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
நவம்பர் 7–13
ஓசியா 1–6; 10–14; யோவேல்
“அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்”
ஓசியா மற்றும் யோவேலைப்பற்றிய உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக இருக்க பரிசுத்த ஆவியானவரை அழைக்கவும். உங்கள் இருதயத்திலும் மனதிலும் பரிசுத்த ஆவி உணர்த்தும் செய்திகளைக் கவனியுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
அதை கர்த்தர் ஒரு திருமணத்துடன் ஒப்பிட்ட விதமாக கர்த்தருடனான இஸ்ரவேலின் உடன்படிக்கை மிகவும் ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இந்த உடன்படிக்கையில், ஒரு திருமணத்தைப் போலவே, நித்திய அர்ப்பணிப்பு, பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்கள், ஒன்றாக ஒரு வாழ்க்கையை உருவாக்குதல், முற்றிலுமான விசுவாசம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, முழு மனதுடன் கூடிய அன்பு ஆகியவை அடங்கும். இந்த வகையான அர்ப்பணிப்பு அதிக எதிர்பார்ப்புகளுடன் வந்தது, துரோகத்திற்கு துன்பகரமான விளைவுகள். இஸ்ரவேலர் தங்கள் உடன்படிக்கையை மீறியதால் அவர்கள் சந்தித்த சில விளைவுகளை தேவன் ஓசியா தீர்க்கதரிசி மூலம் விவரித்தார். இருப்பினும் அவருடைய செய்தி “விசுவாசமற்றவர்களாக இருப்பதற்காக நான் உங்களை என்றென்றும் நிராகரிப்பேன்” என்பது அல்ல. அதற்கு பதிலாக “நான் உங்களை திரும்ப அழைப்பேன்” ( ஓசியா 2: 14–15 பார்க்கவும்). “உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்” என கர்த்தர் அறிவித்தார்(ஓசியா 2:19). “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்” (ஓசியா 14:4). நம்முடைய உடன்படிக்கைகளின்படி அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வாழ முற்படுகையில், இன்று அவர் நமக்கு அளிக்கும் செய்தி இதுதான்.
இதேபோன்ற ஒரு செய்தியை யோவேல் பகிர்ந்து கொண்டான்: “ உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்” (யோவேல் 2:13). “கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்” (யோவேல் 3:16). ஓசியா மற்றும் யோவேலை வாசிக்கும்போது, கர்த்தருடனான உங்கள் சொந்த உறவைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். அவருக்கு உண்மையாக இருக்க அவருடைய விசுவாசம் உங்களை எவ்வாறு தூண்டுகிறது என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
ஓசியா மற்றும் யோவேல் புத்தகங்களின் மேலோட்டப் பார்வைக்கு, “Hosea, or Hoshea” and “Joel” in the Bible Dictionary பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
அவரிடம் திரும்பும்படி கர்த்தர் எப்போதும் என்னை அழைக்கிறார்.
ஓசியாவின் மனைவி கோமர் அவனுக்கு விசுவாசமாக இல்லை, இஸ்ரவேலர்களைப்பற்றியும், அவருடனான உடன்படிக்கைகளைப்பற்றியும் அவர் எப்படி உணர்ந்தார் என்பதை கற்பிக்க தேவன் இந்த சோகமான நிகழ்வை சுட்டிக்காட்டினார். நீங்கள் ஓசியா 1–3 வாசிக்கும்போது, கர்த்தர் தம்முடைய உடன்படிக்கை ஜனங்களுடனான உறவை எவ்வாறு கருதுகிறார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இஸ்ரவேலரைப் போலவே நீங்களும் கர்த்தருக்கு விசுவாசமற்றவர்களாக இருந்திருக்கலாம், அவர் உங்களிடம் எவ்வாறு வந்தார் என்பதை நீங்கள் சிந்திக்கலாம். எடுத்துக்காட்டாக, ஓசியா 2: 14–23 மற்றும் ஓசியா 14 கர்த்தருடைய அன்பையும் இரக்கத்தையும்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? உங்கள் அன்பையும் விசுவாசத்தையும் அவருக்கு எப்படி காட்டுகிறீர்கள்?
Dieter F. Uchtdorf, “Point of Safe Return,” Liahona, May 2007, 99–101 ஐயும் பார்க்கவும்.
தேவன் மீதான பக்தியை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல், உள்ளுக்குள் உணர வேண்டும்.
மிருக பலிகளைச் செலுத்தும்படி கர்த்தர் தம் ஜனங்களுக்குக் கட்டளையிட்டார். ஓசியாவின் நாளில் இருந்தவர்கள் அந்த நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்திருந்தாலும், அவர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டளைகளை மீறினார்கள் ( ஓசியா 6: 4–7 பார்க்கவும்). “பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்” என கர்த்தர் சொன்னதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (ஓசியா 6:6). நீதியானது மேகம் போல அல்லது பனி போன்றது என்ற அர்த்தம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நம்முடைய நீதி எப்படியிருக்க வேண்டும்? (ஏசாயா 48:18; 1 நேபி 2:9–10 பார்க்கவும்).
ஓசியா 6:6ஐ தன் ஊழியத்தின்போது கர்த்தர் எப்படி பயன்படுத்தினார் என பார்க்க, நீங்கள் மத்தேயு 9:10–13; 12:1–8 வாசிக்கலாம். ஓசியாவின் சொற்களைப் புரிந்துகொள்ள இந்த பாகங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன?
யோவேல் 2: 12–13 வாசிக்கும்போது, ஒருவரின் ஆடைகளை சிதைத்தல் அல்லது கிழிப்பது பாரம்பரியமாக துக்கம் அல்லது வருத்தத்தின் வெளிப்புற அறிகுறியாகும் என்பதை அறிய இது உதவக்கூடும் (எடுத்துக்காட்டாக, 2 நாளாகமம் 34:14–21, 27 பார்க்கவும்). நம்முடைய ஆடைகளை சிதைப்பதில் இருந்து நம் இருதயங்களை சிதைப்பது எவ்வாறு வேறுபட்டது?
ஏசாயா 1:11–17; மத்தேயு 23:23; 1 யோவான் 3:17–18 ஐயும் பார்க்கவும்.
“நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன்”
“கர்த்தருடைய நாளைப்பற்றி,” யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்தபோது, “அது இருளும் அந்தகாரமுமான நாள்,” “ பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்” என அதை விவரித்தான்(யோவேல் 2:1–2,11). இஸ்ரவேல் அதன் வரலாறு முழுவதும் பல பெரிய மற்றும் பயங்கரமான நாட்களை எதிர்கொண்டது, மேலும் தேவனின் உடன்படிக்கை ஜனம் எதிர்காலத்தில் அதிகமாக எதிர்கொள்வார்கள். யோவேல் 2: 12–17ல் கர்த்தர் கொடுத்த ஆலோசனையைப்பற்றி உங்களைக் கவர்ந்தது எது? அவர் வாக்குறுதியளித்த ஆசீர்வாதங்களை யோவேல் 2: 18–32ல் கவனியுங்கள். 27–32 வசனங்களில் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் நம்முடைய நாள் உட்பட யோவேல் 2ல் விவரிக்கப்பட்டுள்ள நாட்களில் ஏன் குறிப்பாக மதிப்புமிக்கதாக இருக்கலாம்?
கர்த்தர் “[அவருடைய] ஆவியை மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவார்” என்பதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (யோவேல் 2:28). யோவேல் 2: 28–29ல் உள்ள தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன? அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:1; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:41 பார்க்கவும்.
தலைவர் ரசல் எம். நெல்சனின் இந்த வார்த்தைகளை நீங்கள் சிந்திக்கலாம்: “வரவிருக்கும் நாட்களில், பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதல், வழிநடத்துதல், ஆறுதல் மற்றும் நிலையான செல்வாக்கு இல்லாமல் ஆவிக்குரிய பிரகாரமாக உயிர்வாழ முடியாது” (“Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018,96). நாம் ஆவிக்குரிய விதமாக பிழைத்திருப்பதற்கு வெளிப்படுத்தல் ஏன் அத்தியாவசியம்? தனிப்பட்ட வெளிப்பாட்டைப் பெறுவதற்கான திறனை நீங்கள் எவ்வாறு அதிகரிக்க முடியும்?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
ஓசியா 2:19–20.இஸ்ரவேலுடனான தனது உடன்படிக்கை உறவை விவரிக்க கர்த்தர் திருமணத்தின் உருவகத்தைப் பயன்படுத்தினார் (Guide to the Scriptures, “Bridegroom,” scriptures.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்). தேவனுடனான நமது உடன்படிக்கைகளுக்கு திருமணம் ஏன் ஒரு நல்ல உருவகமாக இருக்க முடியும் என்பதை உங்கள் குடும்பத்தினர் விவாதிக்க முடியும். நம்மைப்பற்றி தேவன் எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஓசியா 2: 19–20 எவ்வாறு நமக்கு உதவுகிறது? அவருடனான நம்முடைய உடன்படிக்கைகளுக்கு நாம் எவ்வாறு உண்மையுள்ளவர்களாக இருக்க முடியும்?
-
ஓசியா 10:12.பிள்ளைகள் ஒரு கடிகாரத்தை வரைவதையும், நாள் முழுவதும் வெவ்வேறு நேரங்களில் கர்த்தரைத் தேடுவதற்கான வழிகளைத் திட்டமிடுவதையும் ரசிக்கலாம்.
-
யோவேல் 2:12–13.உங்கள் குடும்பத்திற்கு யோவேல் 2: 12–13பற்றி பேச உதவ, நீங்கள் ஒரு அறையின் ஒரு பக்கத்தில் இரட்சகரின் படத்தையும் எதிர் பக்கத்தில் பாவம் என்ற வார்த்தையையும் வைக்கலாம். அடையாளத்துக்கு எதிரில் நிற்க முறை எடுக்க குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும், பின்னர் இரட்சகரை நோக்கி திரும்பவும், அவர்கள் “[நம்] முழு இருதயத்தோடும்” அவரிடம் திரும்புவதற்கு நமக்கு உதவக்கூடிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிகள், வேலை, பள்ளி மற்றும் உறவுகள் உட்பட அவர்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும்பற்றி சிந்திக்க குடும்ப உறுப்பினர்களை ஊக்குவிக்கவும்.
-
யோவேல் 2:28–29.ஆவியானவர் நம்மீது “ஊற்றப்படுவார்” என்பதன் அர்த்தம் என்ன? ஒரு திரவத்தை ஊற்றி, பின் அதை சொட்டு சொட்டாக ஊற்றி அல்லது ஒழுகவிட்டு ஒப்பிடுவதன் மூலம் இதை நீங்கள் நிரூபிக்கலாம்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Come unto Jesus,” Hymns, no.117.