பழைய ஏற்பாடு 2022
நவம்பர் 14–20. ஆமோஸ்; ஒபதியா: “கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்”


“நவம்பர் 14–20. ஆமோஸ்; ஒபதியா: ‘கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“நவம்பர் 14–20. ஆமோஸ்; ஒபதியா,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

இருண்ட அறையில் மெழுகுவர்த்திகளால் பிரகாசிக்கப்பட்ட இயேசுவின் முகம்

ஜீவ அப்பம்–கிறிஸ் யங்

நவம்பர் 14–20

ஆமோஸ்; ஒபதியா

“கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்”

உங்களுக்காக மட்டுமே குறிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையில் உள்ள செய்திகளுக்கு உங்கள் மனதையும் இருதயத்தையும் பரிசுத்த ஆவியானவர் திறக்க முடியும். இந்த வாரத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் என்று நீங்கள் உணருகிறீர்கள்?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

சகல ஜனங்களுக்கும் ஆபிரகாமின் சந்ததி “ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்படியாக” அவர்களை அவருடைய உடன்படிக்கை மக்களாகத் தேவன் தேர்ந்தெடுத்தார் (ஆதியாகமம் 12:2–3 பார்க்கவும்). ஆனால் அதற்கு பதிலாக, ஆமோஸின் ஊழியத்தின் போது, உடன்படிக்கை மக்களில் அநேகர் ஏழைகளை ஒடுக்கி, தீர்க்கதரிசிகளை புறக்கணித்து, தங்கள் வழிபாட்டுச் செயல்களை வெறுமை மற்றும் அர்த்தமற்றதாக்கிக் கொண்டிருந்தனர் (ஆமோஸ் 2:6–16 பார்க்கவும்). உண்மையில், அவர்களைச் சுற்றியிருந்த நாடுகள் பெரிய பாவங்களால் குற்றமுள்ளவர்களாக உணர்ந்தார்கள் (ஆமோஸ் ; 2:1–5 பார்க்கவும்), ஆனால், தேவனுடைய மக்களுக்கு அது ஒருபோதும் காரணமில்லை (ஆமோஸ் 3:2. பார்க்கவும்). ஆகவே, இஸ்ரவேல் ராஜ்யத்திற்கு மனந்திரும்புதலைப் பிரசங்கி்க்க யூதாவிலிருந்து ஆமோஸ் என்ற பெயருடைய ஒரு மேய்ப்பனைத் தேவன் அனுப்பினார். பின்னர், யூதாவின் ராஜ்யம் அழிக்கப்பட்டிருந்தாலும், கர்த்தர் தம்முடைய மக்களை மீண்டும் கூட்டி ஆசீர்வதிப்பார் என்று தேவன் ஒபதியா தீர்க்கதரிசி மூலம் அறிவித்தார். உடன்படிக்கை மக்கள் கர்த்தரிடமிருந்து விலகிவிட்டார்கள், தீர்க்கதரிசிகள் இருவரும் சாட்சியமளித்தார்கள், ஆனால் அவர்கள் என்றென்றும் புறம்பே தள்ளப்பட மாட்டார்கள். தேவன் அவருடைய இரகசியங்களை, தீர்க்கதரிசிகளான அவருடைய ஊழியக்காரர்களுக்கு வெளிப்படுத்துகிறபோது (ஆமோஸ் 3:7 பார்க்கவும்), அவரோடு நாம் செய்த உடன்படிக்கைகளின்படி வாழ இன்னமும் அவர் நமக்குதவ விரும்புகிறாரென்பதற்கு இதை ஒரு அடையாளமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஆமோஸ் மற்றும் ஒபதியா புத்தகங்களைப்பற்றிய அதிகத் தகவலுக்காக,“ஆமோஸ் ” மற்றும் “ஒபதியா ” in the Bible Dictionary பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஆமோஸ் 3:1–8; 7:10–15

கர்த்தர் அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்.

ஆமோஸ் 3:3–6ல், ஆமோஸ் தீர்க்கதரிசி காரணங்கள் மற்றும் விளைவுகளுக்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை முன் வைத்தான்: ஒரு சிங்கம் இரையைக் கண்டுபிடிப்பதால், சிங்கம் கர்ஜிக்கிறது; ஒரு பறவைக்கு ஒரு இரை வைக்கப்பட்ட பொறி அமைக்கப்பட்டிருப்பதால், பறவை சிக்கிக் கொள்கிறது. வசனம் 6ன் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பில் “செயல்” என்ற வார்த்தை “அறியப்பட்டது” என மாற்றப்பட்டதைக் கவனிக்கவும். [ஆமோஸ் 3:6, அடிக்குறிப்புb].) வசனங்கள் 7–8ல் இந்த தாக்கத்தை தீர்க்கதரிசிகளுக்கு ஆமோஸ் பயன்படுத்தினான். ஒரு தீர்க்கதரிசிக்கு தீர்க்கதரிசனமுரைக்க எது காரணமாயிருக்கிறது? ஆமோஸ் 7:10–15 நீங்கள் வாசிக்கும்போது தீர்க்கதரிசிகளைப்பற்றி வேறு எதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள்? கர்த்தர் இன்னமும் “தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்” என்பதற்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள் (ஆமோஸ் 3:7). தேவனைப்பற்றி இந்த சத்தியம் உங்களுக்கு எதை ஆலோசனையளிக்கிறது?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:38; 21:4–8; 35:13–14 ஐயும் பார்க்கவும்

ஆமோஸ் 4–5

“கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.”

ஆமோஸ் 4:6–13, நீங்கள் வாசிக்கும்போது, இஸ்ரவேல் மக்கள்மீது கர்த்தர் அனுப்பிய நியாயத்தீர்ப்புகளைக் கவனிக்கவும். இந்த அனுபவங்கள் ஒவ்வொன்றிற்கும் பிறகு என்ன நடக்கும் என்று தேவன் நம்பியதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன ஆலோசனை அளிக்கின்றன? (ஏலமன் 12:3ஐயும் பார்க்கவும்) சமீபத்தில் நீங்கள் அனுபவித்த சோதனையைப்பற்றி சிந்தியுங்கள். உங்கள் சோதனை தேவனால் அனுப்பப்படாததாக தோன்றினாலும், அவரைத் தேடுவதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உங்களுக்கு கொடுக்கப்படக்கூடும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஆமோஸ் 5:4, 14–15, வாசித்து, உங்களுடைய சோதனையின் நேரங்களிலும்கூட, நீங்கள் அவரைத்தேடும்போது, கர்த்தர் உங்கள்மீது எவ்வாறு “இரக்கமுள்ளவராயிருப்பாரென” (வசனம் 15) சிந்தியுங்கள்.

டோனால்ட் எல். ஹால்ஸ்டரோம், “Turn to the Lord,” Ensign or Liahona, May 2010, 78–80 ஐயும் பார்க்கவும்.

ஆமோஸ் 8:11–12

ஆவிக்குரிய பசியையும் தாகத்தையும் கர்த்தருடைய வார்த்தை திருப்தியாக்கும்.

ஆவிக்குரிய பசி மற்றும் தாகத்தின் நேரங்களை நாம் அனைவரும் அனுபவித்திருக்கிறோம், ஆனால் “ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும் அலைந்து திரிய” அவசியமில்லை (ஆமோஸ் 8:12). அந்த ஆவிக்குரிய பசியை எது திருப்தியாக்கும் என்பதை நாம் அறிவோம், மேலும் கர்த்தருடைய வார்த்தையால் நாம் ஏராளமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். ஆமோஸ் 8:11–12 நீங்கள் வாசிக்கும்போது, தேவனின் வார்த்தையின்றி வாழ்வதற்கு பஞ்சம் ஏன் ஒரு நல்ல ஒப்பீடு என்பதைப்பற்றி சிந்தியுங்கள். மத்தேயு 5:6; யோவான் 6:26–35; 2நேபி 9:50–51; 32:3; ஏனோஸ் 1:4–8ல் என்ன கூடுதல் உள்ளுணர்வுகளை நீங்கள் காண்கிறீர்கள்?

ஜெப்ரி ஆர். ஹாலண்ட், “He Hath Filled the Hungry with Good Things,” Ensign, Nov. 1997, 64–66; Gospel Topics, “Apostasy,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

ஆலயத்தின் முன் இளைஞர் குழு நின்றிருத்தல்

ஆலயம் மற்றும் குடும்ப வரலாற்றுப் பணிகளைச் செய்வதன் மூலம் நாம் சீயோன் மலையில் மீட்பர்களாக மாறமுடியும்.

ஒபதியா 1:21

“சீயோன் மலைகளின்மேல் மீட்பர்கள் யார்”?

“ஆலயம் மற்றும் குடும்ப வரலாறு பணிக்கு சொற்றொடரை இணைத்து, சீயோன் மலையில் மீட்பவர்கள்” என்ற சொற்றொடருக்கு தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி ஒரு சாத்தியமான விளக்கத்தை அளித்தார்: “[ஆலயத்தில்] நாம் உண்மையில் சீயோன் மலையில் மீட்பர்களாக மாறுகிறோம். இதற்கு அர்த்தம் என்ன? ஒரு பதிலி தியாகமாக, அனைத்து மனிதர்களுக்கும் தனது ஜீவனை நம்முடைய மீட்பர் கொடுத்தது போல, அவ்வாறு செய்வதன் மூலம் அவர் நம்முடைய இரட்சகராக மாறினார், அப்படியிருந்தும், நாம் ஒரு சிறிய அளவில், ஆலயத்தில் பதிலி வேலையில் ஈடுபடும்போது, பூமியில் உள்ளவர்கள் தங்கள் சார்பாக ஏதாவது செய்யாவிட்டால் முன்னேற எந்த வழியும் இல்லாதவர்களான, மறுபுறத்தில் இருப்பவர்களுக்கு இரட்சகராக மாறுகிறோம்”(“Closing Remarks,” Ensign or Liahona, Nov. 2004,105).

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஆமோஸ் 3:7.சபையின் தலைவரிடமிருந்து பல சமீபத்திய செய்திகளை நீங்கள் மதிப்பாய்வு செய்து, அவர் மூலம் உங்கள் குடும்பத்திற்கு கர்த்தர் என்ன வெளிப்படுத்துகிறார் என்பதை விவாதிக்கலாம். ஒரு தீர்க்கதரிசி சபையை வழிநடத்துவது ஏன் முக்கியம்? அவர் ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்பதை நாம் எவ்வாறு அறிகிறோம்? அவருடைய ஆலோசனையைப் பின்பற்ற நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

ஆமோஸ் 5:4.இந்த வசனத்துடன் உங்கள் குடும்பத்தினர் உங்கள் வீட்டில் தொங்கவிட ஒரு சுவரொட்டியை உருவாக்கலாம். கர்த்தரைத் தேடுதல் என்றால் என்ன அர்த்தம்? நாம் அவரை எவ்வாறு தேடுகிறோம்? நாம் அப்படிச் செய்யும்போது என்ன ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்? மத்தேயு 7:7–8; ஏத்தேர் 12:41; மற்றும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:63 போன்ற கர்த்தரைத் தேடுவதைப்பற்றி கற்பிக்கும் பிற பத்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் கலந்துரையாடவும் குடும்ப உறுப்பினர்களை நீங்கள் அழைக்கலாம்.

ஆமோஸ் 8:11–12.இந்த வசனங்களில் சொற்றொடர்களுடன் பொருந்தும் செயல்களை பிள்ளைகள் ரசிக்கலாம். நம் உடல்கள் பசியாகவோ அல்லது தாகமாகவோ இருக்கும்போது, நாம் என்ன செய்வோம்? நம் ஆவிகள் பசியாகவோ அல்லது தாகமாகவோ இருக்கும்போது, நாம் என்ன செய்வோம்? “The Great Apostasy” (ChurchofJesusChrist.org) காணொலியையும் நீங்கள் பார்க்கக்கூடும் மற்றும் நமது ஆவிக்குரிய பசியை மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் எவ்வாறு திருப்திப்படுத்துகிறது என்பதைப்பற்றி பேசவும்.

ஒபதியா 1:21.“சீயோன் மலையின் மேல் மீட்பர்கள் … “என்றால் என்ன அர்த்தமாயிருக்க முடியும்? (சாத்தியமான ஒரு விளக்கத்துக்கு, தலைவர் கார்டன் பி. ஹிங்க்லியின் அறிக்கையை “தனிப்பட்ட வேதப் படிப்புக்கான ஆலோசனைகள்.”பார்க்கவும்.) நம் முன்னோர்களில் யாருக்கு இரட்சிப்பின் நியமங்கள் தேவை? அவர்களுக்குதவ நாம் என்ன செய்வோம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “We Thank Thee, OGod, for a Prophet,” Hymns, no.19.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பரிசுத்த ஆவியை அழைக்கவும் கோட்பாட்டைக் கற்றுக்கொள்ளவும் இசையைப் பயன்படுத்தவும். ஒரு பாடலைக் கேட்பது அல்லது வாசிப்பது சுவிசேஷக் கொள்கைகளைக் கற்றுக்கொள்ள உங்களுக்குதவும். உதாரணமாக, ஜீவிக்கிற தீர்க்கதரிசிகளில் மிகுந்த விசுவாசத்தை உணர்த்த “We Thank Thee, OGod, for a Prophet” (Hymns, no.19) பாடலை நீங்கள் கேட்கலாம் அல்லது வாசிக்கலாம். (Teaching in the Savior’s Way, 22.) பார்க்கவும்.)

சான்டோ டொமிங்கோ டொமினிகன் குடியரசு ஆலயம்

சான்டோ டொமிங்கோ டொமினிகன் குடியரசு ஆலயம்