“மனதில் வைத்திருக்கவேண்டிய எண்ணங்கள்: தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனமும்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“மனதில் வைத்திருக்கவேண்டிய எண்ணங்கள்: தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனமும்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
மனதில் வைத்திருக்கவேண்டிய எண்ணங்கள்
தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனமும்
பழைய ஏற்பாட்டின் பாரம்பரிய கிறிஸ்தவப் பிரிவுகளில் கடைசி பாகம் (ஏசாயாவிலிருந்து மல்கியா வரை) “தீர்க்கதரிசிகள்” என அழைக்கப்படுகிறது.1 கர்த்தருடன் பேசிய, பின்னர், சுமார் கி.மு. 900 மற்றும் 500க்கு இடையில் வாழ்ந்தவர்களுடன் அவருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டு, அவருக்காக பேசிய, தேவனின் அதிகாரம் பெற்ற ஊழியக்காரர்களின் வார்த்தைகள், பழைய ஏற்பாட்டின் ஏறக்குறைய கால் பகுதியான இந்த பாகத்தில் அடங்கியிருக்கிறது.2
பழைய ஏற்பாடு முழுவதிலும் தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய கோத்திர பிதாக்கள் தரிசனங்களைக் கண்டனர், பரலோகத் தூதுவர்களுடன் பேசினர். மோசே முகமுகமாய் தேவனுடன் பேசினான், அவருடைய சித்தத்தை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான். எலியா மற்றும் எலிசா தீர்க்கதரிசிகளின் மறக்கமுடியாத பணிகளையும் செய்திகளையும், ஒன்று மற்றும் இரண்டு இராஜாக்கள் புத்தகங்கள் விவரிக்கின்றன. மிரியாம் (யாத்திராகமம் 15:20 பார்க்கவும்) மற்றும் தெபொராள் (நியாயாதிபதிகள் 4 பார்க்கவும்), போன்ற பெண் தீர்க்கதரிசிகளைப்பற்றியும், ரெபெக்காள் (ஆதியாகமம் 25:21–23 பார்க்கவும்) அன்னாள் (1 சாமுவேல் 1:20–2:10 பார்க்கவும்) போன்ற ஆசீர்வதிக்கப்பட்ட பிற பெண்களைப்பற்றியும் பழைய ஏற்பாடு பேசுகிறது. முன்னாள் தீர்க்கதரிசிகளால் சங்கீதங்கள் எழுதப்படாவிட்டாலும்கூட, குறிப்பாக மேசியாவின் வருகைக்காக அவர்கள் எதிர்பார்த்திருந்தபோது அவைகளும் தீர்க்கதரிசன ஆவியால் நிரப்பப்பட்டுள்ளன.
பிற்காலப் பரிசுத்தவான்களுக்கு இவை எதுவும் வியப்பாயில்லை. உண்மையில், தீர்க்கதரிசிகள் வரலாற்றின் ஒரு சுவாரஸ்யமான பகுதி மட்டுமல்ல, ஆனால் தேவனின் திட்டத்தின் இன்றியமையாத பகுதியாகும் என்பதை இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் நமக்குப் போதிக்கிறது. பழைய ஏற்பாட்டின் காலங்களுக்கு தனித்துவமாக சிலர் தீர்க்கதரிசிகளை காணக்கூடும்போது, பழைய ஏற்பாட்டுக் காலங்களுடன் நம்மிடம் பொதுவாயிருக்கிற ஒன்றாக அவைகளை நாம் காண்கிறோம்.
இருப்பினும், ஏசாயா அல்லது எசேக்கியேலிலிருந்து ஒரு அதிகாரத்தை வாசித்தல், தற்போதைய சபையின் தலைவரிடமிருந்து வருகிற பொதுமாநாடு செய்தியை வாசிப்பதிலிருந்து வித்தியாசமாக இருப்பதை உணரக்கூடும். பூர்வகால தீர்க்கதரிசிகள் நம்மிடம் ஏதோ ஒன்றை சொல்லவிருந்ததை சிலசமயங்களில் காண கடினமாயிருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று நாம் வாழும் உலகம் அவர்கள் பிரசங்கித்த மற்றும் தீர்க்கதரிசனமுரைத்ததிலிருந்து மிகவும் வித்தியாசமாயிருக்கிறது. உண்மையில் ஒரு கேள்வியை எழுப்பக்கூடிய ஜீவிக்கிற ஒரு தீர்க்கதரிசி நமக்கிருக்கிறார்: பூர்வகால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை வாசிக்க முயற்சி செய்வது ஏன் மதிப்புள்ளதாயிருக்கிறது? அதற்கு முயற்சி தேவை.
நமக்குச் சொல்ல அவர்களிடம் ஏதோ ஒன்றிருக்கிறது
பெரும்பாலாக, இன்றைய மக்கள் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் ஆரம்ப பார்வையாளர்களல்ல. இன்றைய நம்முடைய உடனடி அக்கறைகளை குறிப்பிடுகிற நமது பிற்காலத் தீர்க்கதரிசிகளைப்போல, அந்த தீர்க்கதரிசிகள் அவர்களுடைய நேரத்திலும், இடத்திலும் அவர்கள் குறிப்பிட்ட உடனடி அக்கறைகள் அவர்களுக்கு இருந்தன.
அதே நேரத்தில், உடனடி அக்கறைகளுக்கு அப்பாலும் தீர்க்கதரிசிகளால் காணமுடியும். ஒரு காரியத்திற்காக, எந்த வயதினருக்கும் பொருத்தமான நித்திய சத்தியங்களை அவர்கள் போதிக்கிறார்கள். மேலும், வெளிப்படுத்தலுடன் ஆசீர்வதிக்கப்பட்டு, தேவனின் பணியின் பரந்த கண்ணோட்டமான ஒரு பெரிய காட்சியைக் காண்கிறார்கள். உதாரணமாக, அவர்களுடைய பாவங்களுக்காக ஏசாயா மக்களை எச்சரிக்க முடிந்தது மட்டுமல்ல, வருங்காலத்தில் 200 ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருந்த இஸ்ரவேலருக்கான விடுதலையைப்பற்றியும், தேவனுடைய சகல மக்களும் நாடின விடுதலையைப்பற்றியும் அவனால் எழுத முடிந்தது. கூடுதலாக, காணாமற்போன இஸ்ரவேல் கோத்திரத்தார் கூடுகிற இடத்தில்,”தேசங்கள்“ “இனியும் யுத்தங்களை கற்றுக்கொள்ளாத” (ஏசாயா 2:4) இடத்தில், “கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கிற” (ஏசாயா 11:9), “புதிய பூமிக்கான” (ஏசாயா 65:17) வாக்குறுதிகளைப்போல, அவர்களுடைய முற்றிலுமான நிறைவேறுதலுக்காக இன்னமும் காத்திருப்பவர்களுக்கு அவன் இன்றும் தீர்க்கதரிசனங்களை எழுத முடியும். அவர்கள் கற்பனை செய்திருந்த மகிமையான நாளில் நாம் ஒரு பாத்திரத்தை வகிப்போம் என்பதை உணர்ந்துகொள்ளுதல், ஏசாயாவைப்போல பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை வாசிப்பதிலிருந்து வருகிற மகிழ்ச்சி மற்றும் உணர்த்துதலின் பாகம்.3
ஆகவே நீங்கள் பூர்வகால தீர்க்கதரிசனங்களை வாசிக்கும்போது அவை எழுதப்பட்ட சூழலைப்பற்றி அறிந்து கொள்ள அது உதவிகரமாய் இருக்கும். ஆனால் நேபி சொன்னதைப் போல் நீங்கள் அவர்களிலும் உங்களைப் பார்க்க வேண்டும், அல்லது “அவர்களை [உங்களுடன்] ஒப்பிடுங்கள்”(1நேபி 19:23–24 பார்க்கவும்). பாபிலோனை ஒரு பண்டைய நகரமாக மட்டுமல்லாமல், உலகத்தன்மை மற்றும் பெருமையின் அடையாளமாக அங்கீகரிப்பது என்று சில நேரங்களில் அதற்கு அர்த்தமாகிறது. எந்தவொரு சகாப்தத்திலும் இஸ்ரவேலை தேவனின் மக்களாகப் புரிந்துகொள்வதையும், எருசலேமின் மற்றொரு வார்த்தையாக இல்லாமல், தேவனின் மக்கள் தழுவிக்கொள்வதற்கான பிற்காலக் காரணமாக சீயோனைப் புரிந்துகொள்வதையும் இது குறிக்கலாம்.
ஒரு தீர்க்கதரிசனம் பல வழிகளில் நிறைவேற்றப்படலாம் என்பதை நாம் புரிந்துகொள்வதால் வேதங்களை நாம் ஒப்பிடலாம்.4 ஏசாயா 40:3லிலுள்ள தீர்க்கதரிசனம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்: “கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணுங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.” பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்ட யூதர்களுக்கு, சிறைப்பிடிப்பிலிருந்து வெளியேறி மீண்டும் எருசலேமுக்கு வர கர்த்தர் ஒரு வழியை அளித்திருந்ததை இந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கக்கூடும். மத்தேயு, மாற்கு மற்றும் லூக்காவிற்கு இந்த தீர்க்கதரிசனம், இரட்சகரின் அநித்திய ஊழியத்திற்காக வழியை ஆயத்தப்படுத்திய யோவான் ஸ்நானனில் நிறைவேறியது.5 கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஊழியத்திற்கான ஆயத்தத்தில் இந்த தீர்க்கதரிசனம் இன்னும் பிற்காலங்களில் நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்று ஜோசப் ஸ்மித் வெளிப்படுத்தலைப் பெற்றார்.6 இன்னும் நாம் புரிந்துகொள்கிற வழிகளில், பண்டைய தீர்க்கதரிசிகள் நம்முடன் பேசினார்கள். அவர்கள் அநேக விலையேறப்பெற்ற, நித்திய சத்தியங்களைப் போதித்தார்கள், பூர்வகால இஸ்ரவேலருக்கு அவைகள் பொருத்தமாயிருந்ததைப்போல நமக்கும் பொருத்தமாயிருக்கிறது.
அவர்கள் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சியமளித்தனர்
ஒருவேளை, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் அவைகளைப் பார்ப்பதை விட மிக முக்கியமானது, அவைகளில் இயேசு கிறிஸ்துவைப் பார்ப்பது. நீங்கள் அவரைத் தேடுகிறீர்களானால், அவர் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், நீங்கள் அவரைக் காண்பீர்கள். பழைய ஏற்பாட்டின் தேவன், கர்த்தராகிய யேகோவா இயேசு கிறிஸ்துதான்என்பதை மனதில் வைத்துக்கொள்ள இது உதவக்கூடும். கர்த்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார் அல்லது அவர் என்ன செய்வார் என எந்த நேரத்திலும் தீர்க்கதரிசிகள் விவரிக்கிறார்கள், அவர்கள் இரட்சகரைப்பற்றிப் பேசுகிறார்கள்.
அபிஷேகம்பண்ணப்பட்ட ஒருவரின் (ஏசாயா 61:1 பார்க்கவும்), ஒரு மீட்பரின் (ஓசியா 13:14 பார்க்கவும்), தாவீதின் சந்ததியிலிருந்து ஒரு வருங்கால ராஜாவின்(ஏசாயா 9:6–7; சகரியா 9:9 பார்க்கவும்) குறிப்புகளையும்கூட நீங்கள் காண்பீர்கள். இவைகள் அனைத்தும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள். மிகப் பொதுவாக, விடுதலை, மன்னிப்பு, மீட்பு மற்றும் மறுஸ்தாபிதத்தைப்பற்றி நீங்கள் வாசிப்பீர்கள். உங்கள் மனதிலும் இருதயத்திலும் இரட்சகருடன் இந்த தீர்க்கதரிசனங்கள் இயற்கையாகவே தேவ குமாரனிடத்தில் உங்களை சுட்டிக்காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, “இயேசுவின் சாட்சியம்” (வெளிப்படுத்தின விசேஷம் 19:10) என யோவான் நமக்குச் சொல்லும் “தீர்க்கதரிசன ஆவியைக் கொண்டிருத்தல் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி.