“ஆகஸ்டு 8–14. சங்கீதம் 1–2; 8; 19–33; 40; 46: ‘கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“ஆகஸ்டு 8–14. சங்கீதம் 1–2; 8; 19–33; 40; 46,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022
ஆகஸ்டு 8–14
சங்கீதம் 1–2; 8; 19–33; 40; 46
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்”
இச்சங்கீதங்களின் தேர்ந்தெடுப்புகள் அல்லது இக்குறிப்பில் ஆலோசனையளிக்கப்பட்ட கொள்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக உணராதீர்கள். கர்த்தருடன் நெருக்கமாக உணர உதவும் சத்தியங்களுக்கு ஆவியானவர் உங்களை வழிநடத்துவாராக.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
சங்கீதங்களை எழுதியவர் யார் என்பது நமக்குத் தெரியாது. சில தாவீது ராஜா எழுதியது என்று கூறப்படுகிறது, ஆனால் அவைகளில் பெரும்பாலானவற்றுக்கு எழுத்தாளர்கள் அநாமதேயர்களாகவே இருக்கிறார்கள். சங்கீதங்களை வாசித்த பிறகு, அவர்களின் பெயர்களை நாம் அறியாவிட்டாலும் சங்கீதக்காரர்களின் இருதயங்களை நாம் அறிந்தது போல உணர்கிறோம். சங்கீதங்கள் இஸ்ரவேலர்களிடையே வழிபாட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன என்பது நமக்குத் தெரியும், இரட்சகர் அவற்றை அடிக்கடி மேற்கோள் காட்டினார் என்பதை நாம் அறிவோம். சங்கீதத்தில், தேவனின் பூர்வகால மக்களின் ஆன்மாவுக்கு ஒரு ஜன்னலைப் பெறுகிறோம். அவர்கள் தேவனைப்பற்றி எப்படி உணர்ந்தார்கள், அவர்கள் எதைப்பற்றி கவலைப்படுகிறார்கள், அவர்கள் எவ்வாறு சமாதானம் கண்டார்கள் என்பதைப் பார்க்கிறோம். இன்று விசுவாசிகளாக, உலகெங்கிலும், தேவனை வணங்குவதில் இந்த வார்த்தைகளை இன்னும் பயன்படுத்துகிறோம். சங்கீதத்தின் எழுத்தாளர்கள் நம்முடைய ஆத்துமாக்களுக்கு ஒரு ஜன்னலைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது, மேலும் தேவனைப்பற்றி நாம் எப்படி உணர்கிறோம், எதைப்பற்றி கவலைப்படுகிறோம், அமைதியை எப்படி காண்கிறோம் என்பதை வெளிப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது.
சங்கீதப் புத்தகத்தின் ஒரு மேம்போக்கான பார்வைக்கு “Psalms” in the Bible Dictionary பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
சங்கீதம் 1; 23; 26–28; 46
கர்த்தரை நம்பும்படி சங்கீதம் நமக்குக் கற்பிக்கிறது.
சங்கீதங்களை வாசிக்கும்போது எழுத்தாளர்கள் எவ்வளவு அடிக்கடி பயம், துக்கம் அல்லது பதட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கலாம். இத்தகைய உணர்வுகள் விசுவாசமுள்ளவர்களுக்கு கூட இயல்பானவை. ஆனால், கர்த்தரில் முழுமையான நம்பிக்கை உட்பட அவர்கள் வழங்கும் தீர்வுகள் சங்கீதங்களை உணர்த்துவனவாக்குகின்றன. சங்கீதம் 1; 23; 26–28; 46 வாசிக்கும்போது இந்த உணர்த்துதலான செய்திகளை கருத்தில் கொள்ளவும். பின்வருவனவற்றைப் பாருங்கள், நீங்கள் கண்டுபிடித்ததை எழுதுங்கள்:
-
தேவனை நம்புவதற்கான அழைப்புகள்:
-
கர்த்தரை விவரிக்கும் வார்த்தைகள்:
-
அவர் வழங்கும் அமைதி, வலிமை மற்றும் பிற ஆசீர்வாதங்களை விவரிக்கும் வார்த்தைகள்:
-
அவரை நம்புபவர்களை விவரிக்கும் வார்த்தைகள்:
சங்கீதம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தை நம் மனதுக்கு சுட்டிக்காட்டுகிறது.
பல சங்கீதங்கள் இயேசு கிறிஸ்துவின் பூலோக வாழ்க்கையை சுட்டிக்காட்டுகின்றன. புதிய ஏற்பாட்டு கால கிறிஸ்தவர்கள் இந்த தொடர்புகளையும் கண்டார்கள், உதாரணமாக, ஏரோது ராஜா மற்றும் பொந்தியு பிலாத்து ஆகியோருக்கு முன்பாக இயேசுவின் விசாரணைகளைப்பற்றிய குறிப்பு சங்கீதம் 2 ல் அவர்கள் அடையாளம் கண்டனர் ( அப்போஸ். 4: 24–30 பார்க்கவும்). சங்கீதம் 2 மற்றும் 22, மத்தேயு 27:35–46; லூக்கா 23:34–35; மற்றும் யோவான் 19:23–24 வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்த சங்கீதங்களில் உள்ள சொற்களுக்கும் இரட்சகரின் வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்புகளைத் தேடுங்கள், அடுத்த சில வாரங்களில் நீங்கள் சங்கீத புத்தகத்தைப் படிக்கும்போது இதேபோன்ற இணைப்புகளைத் தேடுங்கள்.
இயேசுவின் காலத்தில் நீங்கள் சங்கீதம் அறிந்த ஒரு யூதராக இருந்தீர்கள் மற்றும் இரட்சகரின் வாழ்க்கைக்கு தொடர்புகளைக் கண்டீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த அறிவு உங்களுக்கு எப்படி ஒரு ஆசீர்வாதமாக இருந்திருக்கும்?
சங்கீதம் 31:5; 34:20; 41:9; லூக்கா 24:44; எபிரெயர் 2:9–12 ஐயும் பார்க்கவும்.
சங்கீதம் 8; 19; 33
“பூமி கர்த்தரின் நன்மையால் நிறைந்திருக்கிறது.”
சங்கீதம் 8; 19; மற்றும் 33 வாசித்தல் கர்த்தருடைய பல அற்புதமான படைப்புகளைக் கருத்தில் கொள்ள உங்களைத் தூண்டக்கூடும். நீங்கள் செய்வது போலவே உங்கள் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் கவனம் செலுத்துங்கள். கர்த்தருடைய சிருஷ்டிப்புகள் உங்களுக்கு எவ்வாறு “தேவனின் மகிமையை அறிவிக்கின்றன”? (சங்கீதம் 19:1).
கர்த்தருடைய வார்த்தை வல்லமையானது, “இருதயத்தை மகிழ்விக்கிறது.”
சங்கீதத்தில், சாட்சியம், சட்டங்கள், கட்டளை, மற்றும் தீர்ப்புகள் போன்ற வார்த்தைகள் கர்த்தருடைய வார்த்தையைக் குறிக்கலாம். நீங்கள் சங்கீதம் 19:7–11 வாசிக்கும்போது இதை மனதில் வையுங்கள். கர்த்தருடைய வார்த்தையைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கின்றன? சங்கீதம் 29 அவருடைய குரலைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? உங்கள் அனுபவத்தில், கர்த்தரின் வார்த்தை அல்லது குரல் இந்த விவரிப்புகளுடன் எவ்வாறு பொருந்தியுள்ளது?
கர்த்தருடைய பிரசன்னத்தில் நுழைவதற்கு தூய்மை தேவை.
எருசலேமில் உள்ள ஆலயம் ஒரு மலையில் கட்டப்பட்டதால், “கர்த்தருடைய பர்வதம்” ( சங்கீதம் 24:3) என்ற சொற்றொடர் ஆலயத்தைக் குறிக்கலாம் அல்லது தேவ பிரசன்னத்தைக் குறிக்கலாம். சங்கீதம் 24 யைப்பற்றிய உங்கள் புரிதலுக்கு இது என்ன சேர்க்கிறது? “சுத்தமான கைகள், தூய்மையான இருதயம்” வைத்திருப்பது என்றால் அர்த்தம் என்ன ?? (சங்கீதம் 24:4).
சங்கீதம் 26 மற்றும் 27 கர்த்தருடைய வீட்டைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கின்றன?
சங்கீதம் 5; David A. Bednar, “Clean Hands and a Pure Heart,” Liahona, Nov. 2007, 80–83ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
சங்கீதம் 22.ஒரு குடும்ப அங்கத்தினர் இந்த சங்கீதத்தை வாசிக்கும்போது, மற்றவர்கள் மத்தேயு 27: 35–46 ல் உள்ள ஒற்றுமையைத் தேடலாம். பின்னர் அவர்கள் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும், நமக்காக அவர் செய்த தியாகத்தைப்பற்றியும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
-
சங்கீதம் 23.சங்கீதம் 23 “The Lord Is My Shepherd” மற்றும் “The Lord My Pasture Will Prepare” (Hymns, nos. 108, 109) போன்ற பல பாடல்களுக்கு உணர்த்துதலாக இருந்தது. ஒருவேளை உங்கள் குடும்பத்தினர் இந்த பாடல்களில் ஒன்றைப் பாடலாம், மற்றும் பாடலை உணர்த்தியிருக்கக்கூடிய சங்கீதத்தில் உள்ள சொற்களை அடையாளம் காணவும் விரும்பலாம். அல்லது சங்கீதத்திலோ அல்லது பாடலிலோ அவர்கள் காணும் ஏதேனும் ஒரு படத்தை வரைந்து மேலும் படங்களுடன் பொருந்தும் வசனங்கள் அல்லது பாடல்களை குடும்ப அங்கத்தினர்கள் யூகிக்க அனுமதித்து மகிழலாம், கர்த்தர் நமக்கு ஒரு மேய்ப்பனைப் போல எப்படி இருக்கிறார்?
-
சங்கீதம் 24:3–5 .தூய்மையான கைகள் மற்றும் தூய்மையான இருதயம் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த, குடும்ப அங்கத்தினர்கள் கைகளைக் கழுவும்போது சங்கீதம் 24: 3–5 வாசிக்கலாம். இந்த சங்கீதத்தில் கைகள் எதைக் குறிக்கலாம்? இருதயம் எதைக் குறிக்கிறது? ஆவிக்குரிய பிரகாரமாக நம் கைகளை சுத்தப்படுத்தவும், இருதயங்களை சுத்திகரிக்கவும் நாம் என்ன செய்ய முடியும்?
-
சங்கீதம் 30:5, 11.“சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்தில் களிப்புண்டாகும்” என்ற வாக்குத்தத்தம் சங்கீதம் 30:5ல் அடங்கியிருக்கிறது. கர்த்தர் நம் சோகத்தை எவ்வாறு மகிழ்ச்சியாக மாற்றியுள்ளார்? சில குடும்ப அங்கத்தினர்கள் வசனம் 11 விவரிப்பதை ரசிக்கலாம்.
-
சங்கீதம் 33.இந்த சங்கீதத்தில் அனைத்தும் என்ற சொல் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். இந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதிலிருந்து, குறிப்பாக வசனங்கள் 13–15ல் கர்த்தரைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
-
சங்கீதம் 46:10. அது குடும்ப அங்கத்தினர்கள் “அமைதியாக இருக்க”, தேவைப்படுகிற ஏதாவது ஒன்றை நீங்கள் செய்யலாம், தேவனை அறிந்துகொள்ள அமைதியாக இருப்பது இன்னும் நமக்கு எப்படி உதவ முடியும்? நாம் அமைதியாக இருக்கவும் தேவனை அறிந்து கொள்ளவும் என்ன வாய்ப்புகள் உள்ளன?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Lord Is My Shepherd,” Hymns, no. 108.