பழைய ஏற்பாடு 2022
டிசம்பர் 12–18. மல்கியா: “நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்”


“டிசம்பர் 12–18. மல்கியா: ‘நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022 (2021)

“டிசம்பர் 12–18. மல்கியா,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
கிறிஸ்டஸ் உருவச்சிலை

டிசம்பர் 12–18

மல்கியா

“நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்”

மல்கியா என்ற பெயரின் அர்த்தம் “என் தூதுவன்” (Bible Dictionary, “மல்கியா”). இஸ்ரவேலுக்கான மல்கியாவின் செய்தியை நீங்கள் படிக்கும்போது, உங்கள் வாழ்க்கைக்கான என்ன செய்திகளைக் காண்கிறீர்கள்? மல்கியாவின் வார்த்தைகள் நம் நாளோடு எவ்வாறு தொடர்புபடுகிறது?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

“நான் உங்களைச் சிநேகித்தேன்” என்று கர்த்தர் தம் ஜனத்திடம் மல்கியா தீர்க்கதரிசி மூலம் கூறினார். ஆனால், பல தலைமுறை துன்பங்களையும் சிறைப்பிடிப்புகளையும் அனுபவித்த இஸ்ரவேலர், கர்த்தரை நோக்கி, “எங்களை எப்படிச் சிநேகித்தீர்?” என கேட்டார்கள். மல்கியா 1:2. எல்லா இஸ்ரவேலும் கடந்து வந்தபின், பண்டைய இஸ்ரவேலின் வரலாறு உண்மையில் தேவனின் உடன்படிக்கை ஜனம் மீதான அன்பின் கதையா என்று அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம்.

இந்த ஆண்டு பழைய ஏற்பாட்டில் நீங்கள் படித்ததைப்பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, தேவனின் அன்புக்கு என்ன ஆதாரம் காண்கிறீர்கள்? மனித பலவீனம் மற்றும் கிளர்ச்சியின் பல எடுத்துக்காட்டுகளைப் பார்ப்பது எளிது. ஆயினும் அவை அனைத்திலும் கூட, தேவன் ஒருபோதும் அன்பை அடைவதை நிறுத்தவில்லை. யாக்கோபின் புத்திரர் தங்கள் சகோதரன் யோசேப்பிடம் தவறாக நடந்துகொண்டபோது, அவர்களைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற கர்த்தர் இன்னும் ஒரு வழியை ஆயத்தம் பண்ணினார்( ஆதியாகமம் 45:4–8 பார்க்கவும்). இஸ்ரவேல் வனாந்தரத்தில் முணுமுணுத்தபோது, தேவன் அவர்களுக்கு மன்னாவைக் கொடுத்தார் ( யாத்திராகமம் 16:1–4பார்க்கவும்). இஸ்ரவேல் அவரைக் கைவிட்டு, மற்ற தேவர்களிடம் திரும்பி, சிதறடிக்கப்பட்டபோதும், தேவன் அவர்களை ஒருபோதும் முற்றிலுமாக கைவிடவில்லை, ஆனால் அவர்கள் மனந்திரும்பினால், அவர்களைக் கூட்டிச்சேர்த்து “மிகுந்த இரக்கத்துடன்” மீட்டுக்கொள்வதாக வாக்குறுதி அளித்தார் (ஏசாயா 54:7பார்க்கவும்).

இந்த வழியில் பார்க்கும்போது, பழைய ஏற்பாடு என்பது தேவனின் பொறுமை, நீடித்த அன்புபற்றிய கதை. அந்த கதை இன்றும் தொடர்கிறது. “ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்,” என மல்கியா தீர்க்கதரிசனம் உரைத்தான் (மல்கியா 4:2). இயேசு கிறிஸ்து வந்தார், தன்னிடம் வரும் அனைவருக்கும், சரீர மற்றும் ஆவிக்குரிய குணப்படுத்துதலைக் கொண்டுவந்தார். பண்டைய இஸ்ரவேலுக்கும் நம் அனைவருக்கும் தேவன் அன்பு காட்டியதற்கு அவன் மிகப் பெரிய சான்று.

மல்கியா புத்தகத்தைப்பற்றிய கூடுதல் தகவலுக்கு, “Bible Dictionary, மல்கியா” பார்க்கவும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மல்கியா 1–4

“என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது நான் உங்களிடத்திற்குத் திரும்புவேன்”

மல்கியாவின் நாளில், இஸ்ரவேலர் ஏற்கனவே எருசலேமில் உள்ள ஆலயத்தை மீண்டும் கட்டியிருந்தார்கள், ஆனால் ஒரு ஜனமாக அவர்கள் கர்த்தருடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. நீங்கள் மல்கியாவைப் படிக்கும்போது, கர்த்தர் இஸ்ரவேலரிடம் கேட்ட கேள்விகள் அல்லது அவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளைத் தேடுங்கள். கர்த்தருடனான உங்கள் உறவை மதிப்பிடுவதற்கும் அவருடன் நெருங்கி வருவதற்கும் உங்களுக்கு உதவ இதே போன்ற கேள்விகளைக் கேளுங்கள் (சில எடுத்துக்காட்டுகள் கீழே பரிந்துரைக்கப்படுகின்றன).

  • என் மீதான கர்த்தருடைய அன்பை நான் எப்படி உணர்ந்தேன்? (மல்கியா 1: 2 பார்க்கவும்).

  • கர்த்தருக்கு நான் கொடுத்த காணிக்கைகள் அவரை உண்மையிலேயே கனம் பண்ணுகிறதா? ( மல்கியா 1: 6–11 பார்க்கவும்).

  • எந்த வழிகளில் நான் கர்த்தரிடம் “திரும்ப” வேண்டும்? (மல்கியா 3: 7 பார்க்கவும்).

  • நான் எந்த வகையிலும் தேவனிடத்தில் திருடுகிறேனா? (மல்கியா 3:8–11பார்க்கவும்).

  • கடினமான காலங்களில் என் மனநிலை கர்த்தர் மீதான என் உணர்வுகளை எவ்வாறு பிரதிபலிக்கிறது? ( மல்கியா 3:13–15 பார்க்கவும்; 2:17ஐயும் பார்க்கவும்).

D.Todd Christofferson, “As Many as I Love, I Rebuke and Chasten,” Liahona, May 2011, 97–100ஐயும் பார்க்கவும்.

மல்கியா 1:6–14

கர்த்தர் “தூய்மையான காணிக்கையைக்” கேட்கிறார்.

ஆலயத்தில், கர்த்தர் தடைசெய்த கறைபடிந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளை இஸ்ரவேலின் ஆசாரியர்கள் பலியிடுகிறார்கள் என்பதை மல்கியா 1ல் உள்ள கர்த்தருடைய வார்த்தைகள் குறிக்கிறது (லேவியராகமம் 22:17–25 பார்க்கவும்). கர்த்தர் மீதான ஆசாரியர்களின் உணர்வுகளைப்பற்றி இந்த பலிகள் என்ன கூறுகின்றன? (மல்கியா 1:13 பார்க்கவும்). நம்முடைய சிறந்த காணிக்கைகளை அவரிடம் கொடுக்கும்படி கர்த்தர் ஏன் கேட்கிறார்? கர்த்தர் நீங்கள் செய்யுமாறு கேட்ட பலிகளைப்பற்றி சிந்தியுங்கள். அவருக்கு “தூய்மையான காணிக்கை” கொடுக்க நீங்கள் என்ன செய்ய முடியும்? மல்கியா 1:11; 3:3ஐயும் பார்க்கவும்.

மரோனி 7:5–14ஐயும் பார்க்கவும்.

மல்கியா 3–4

மல்கியாவின் தீர்க்கதரிசனங்கள் பிற்காலங்களில் நிறைவேற்றப்படுகின்றன.

இரட்சகர் அமெரிக்காவிற்கு வந்தபோது, அவர் மல்கியா 3–4ஐ நேபியர்களிடம் மேற்கோள் காட்டினார்(3 நேபி 24–25 பார்க்கவும்). 1823 ம் ஆண்டில், மரோனி தூதன் இதே அதிகாரங்களின் பகுதிகளை ஜோசப் ஸ்மித்துடன் பகிர்ந்து கொண்டான்( ஜோசப் ஸ்மித்—வரலாறு 1: 36–39 பார்க்கவும்; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2 ஐயும் பார்க்கவும்). மல்கியாவின் வார்த்தைகள் வேதங்களில் அடிக்கடி மீண்டும் மீண்டும் வருவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27: 9; 110:13–16; 128: 17–18 பார்க்கவும்). உங்கள் கருத்துப்படி, மல்கியா 3–4லிருந்து என்ன செய்திகள் நம் நாளுக்கு மிகவும் முக்கியமானவை?

மரோனி ஜோசப் ஸ்மித்துக்கு மல்கியா 4: 5–6 மேற்கோள் காட்டியபோது, அது வேதாகமத்தில் வாசிக்கப்படும் விதத்திலிருந்து சிறிது மாற்றத்தோடு வாசித்தான் ( ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:36). இந்த தீர்க்கதரிசனத்தைப்பற்றிய நமது புரிதலுக்கு மரோனி செய்த மாறுதல் என்ன சேர்க்கிறது? எலியாவின் வருகையைப்பற்றியும், இந்தத் தீர்க்கதரிசனம் இன்று எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதையும்பற்றி மேலும் அறிய, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110: 13–16 மற்றும் Elder David A. Bednar’s message “The Hearts of the Children Shall Turn” (Liahona, Nov. 2011, 24–27) பார்க்கவும். எலியா வந்ததற்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?

படம்
கர்த்லாந்து ஆலயத்தில் ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரிக்கு எலியா தோன்றுதல்

கர்த்லாந்து ஆலயத்தில் ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கௌட்ரிக்கு எலியா தோன்றிய படவிளக்கம்– ராபர்ட் டி. பாரட்

மல்கியா 3:8–12

தசமபாகம் செலுத்துவது பரலோகத்தின் பலகணிகளைத் திறக்கும்.

நீங்கள் மல்கியா 3: 8–12 வாசிக்கும்போது, தசமபாகம் செலுத்துவதில் உங்கள் சொந்த அனுபவங்களைப்பற்றி சிந்தியுங்கள். “வானத்தின் பலகணிகளைத் திறந்து” (வசனம் 10) என்ற சொற்றொடர் உங்களுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மல்கியா 1:2.மல்கியா 1: 2ல் காணப்படும், “[கர்த்தர்] நம்மை எப்படி சிநேகித்தார்?” என்ற கேள்விக்கு உங்கள் குடும்பத்தினர் எவ்வாறு பதிலளிப்பார்கள். கர்த்தர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் சில சான்றுகள் யாவை?

மல்கியா 3:8–12. நீங்கள் மல்கியா 3: 8–12 வாசிக்கும்போது, தசமபாகம் குறித்த அவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள குடும்ப உறுப்பினர்களை அழைக்கவும். தசமபாகம் செலுத்துவதில் இருந்து என்ன உலகப்பிரகார மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் கண்டிருக்கிறோம்? (David A. Bednar, “The Windows of Heaven,” Liahona, Nov. 2013, 17–20 பார்க்கவும்). குடும்ப உறுப்பினர்கள் இந்த ஆசீர்வாதங்களைக் குறிக்க படங்களை வரைந்து மகிழலாம் மற்றும் படங்களை ஒரு சாளரத்தில் தொங்கவிடலாம்.

மல்கியா 3:13–18.கர்த்தருக்குச் சொந்தமானவர் என்றும் அவருடைய “சம்பத்தில்” ஒன்றாக இருப்பதுவும் என்றால் என்ன?

மல்கியா 4:5–6.இந்த வசனங்களைப் படித்த பிறகு, மல்கியாவின் தீர்க்கதரிசனத்தைப்பற்றிய பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை உங்கள் குடும்பத்தினர் அடையாளம் காணலாம்: யார்? என்ன? எப்போது? எங்கு? ஏன்? (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2 ஐயும் பார்க்கவும்).

நாம் எப்படி நமது இருதயங்களை நமது பிதாக்களிடம் திருப்புகிறோம்? நாம் செய்யும்போது நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம்? “The Promised Blessings of Family History” (ChurchofJesusChrist.org) காணொலியைப் பார்க்கும்போது இந்த கேள்விகளைப்பற்றி நீங்கள் சிந்திக்கலாம். இந்த ஆசீர்வாதங்களைப் பெற ஒரு குடும்பமாக நாம் என்ன செய்வோம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Family History—I Am Doing It,” Children’s Songbook,94.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

நீங்கள் படிக்கும்போது கேள்விகளைக் கேட்கவும் வேதங்களை நீங்கள் படிக்கும்போது, உங்கள் மனதில் கேள்விகள் எழக்கூடும். இந்தக் கேள்விகளை சிந்தித்து பதில்களைத் தேடுங்கள்.

படம்
அவளுக்குப் பின்னால் பல மூதாதையர்களுடன் வெள்ளை கைக்குட்டை அசைக்கும் பெண்

மோர்னிங்கின் ஓசன்னா–ரோஸ் டட்டாக் டால். மோர்னிங் என்ற பெண் தன் மூதாதையர்களால் சூழப்பட்டு ஆவி உலகில் நிற்கிறாள். ஆவிக்குரிய சிறையிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டதை அவள் கொண்டாடுகிறாள்.

அச்சிடவும்