பழைய ஏற்பாடு 2022
டிசம்பர் 19–25. கிறிஸ்துமஸ்: “இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்”


“டிசம்பர் 19–25. கிறிஸ்துமஸ்: ‘இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“டிசம்பர் 19–25. கிறிஸ்துமஸ்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
குழந்தை இயேசு வெள்ளை துணியால் போர்த்தப்பட்டு வைக்கோலில் படுத்திருத்தல்

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–சைமன் டீவி

டிசம்பர் 19–25

கிறிஸ்துமஸ்

“இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்”

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில், பழைய ஏற்பாடு ஆண்டு முழுவதும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியத்தை எவ்வாறு பலப்படுத்தியது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஆவலுடன் எதிர்பார்ப்பின் ஆவியை பழைய ஏற்பாடு தாங்கியிருக்கிறது. அந்த வகையில், இது சிறிது கிறிஸ்துமஸ் பருவத்தைப் போன்றது. ஆதாம் மற்றும் ஏவாளிலிருந்து தொடங்கி, பழைய ஏற்பாட்டின் கோத்திர பிதாக்கள், தீர்க்கதரிசிகள், கவிஞர்கள் மற்றும் ஜனங்கள் மேசியாவால் புத்துணர்வு மற்றும் விடுதலையைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையால் நிரப்பப்பட்ட சிறந்த நாட்களை எதிர்பார்த்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு அந்த நம்பிக்கை தேவைப்பட்டது, அவர்கள் எகிப்திலோ அல்லது பாபிலோனிலோ சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும் அல்லது தங்கள் பாவத்தினாலோ அல்லது கிளர்ச்சியினாலோ சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும் இஸ்ரவேலருக்கு அந்த நம்பிக்கை அடிக்கடி தேவைப்பட்டது. இந்நேரம் முற்றிலும், “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை கூறவும்,” மேசியா வருவார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு நினைவூட்டினர்( ஏசாயா 61:1).

இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபோது அந்த நம்பிக்கை நனவாகத் தொடங்கியது. இஸ்ரவேலின் வலிமைமிக்க மீட்பர் ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்து ஒரு முன்னணையில் கிடத்தப்பட்டார் (லூக்கா 2: 7 பார்க்கவும்). ஆனால் அவர் பூர்வகால இஸ்ரவேலரை விடுவிப்பவர் மட்டுமல்ல. அவர் உங்களை விடுவிக்க வந்தார், உங்கள் துன்பத்தைத் தாங்கவும், உங்கள் துக்கங்களைச் சுமக்கவும், அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமடையும்படிக்கு உங்கள் அக்கிரமங்களுக்காக காயப்படுத்தப்பட்டார் (ஏசாயா 53: 4–5 பார்க்கவும்). இதனால்தான் கிறிஸ்துமஸ் இன்றும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் நிறைந்துள்ளது. மேசியா 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார், நாம் அவரைத் தேடும்போதெல்லாம் அவர் நம் வாழ்வில் தொடர்ந்து வருகிறார்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

எனது மீட்பரில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இயேசு கிறிஸ்து உலகிற்கு கொண்டு வரும் மகிழ்ச்சியின் காரணமாக கிறிஸ்துமஸ் ஒரு மகிழ்ச்சியான பருவமாக அறியப்படுகிறது. இயேசுவை தேவனின் குமாரனாக ஆராதிக்காதவர்கள் கூட கிறிஸ்துமஸின் மகிழ்ச்சியை அடிக்கடி உணர முடியும். பரலோக பிதா தன் குமாரனை அனுப்பியதால் நீங்கள் உணரும் மகிழ்ச்சியைப்பற்றி சிந்தியுங்கள்.

இரட்சகர் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் வரவிருக்கும் மேசியாவைப்பற்றி பேசியபோது மகிழ்ச்சியையும் உணர்ந்தார்கள். பின்வரும் சில பத்திகளைப் படித்து, இரட்சகரின் பணியை எதிர்நோக்கியவர்களுக்கு அவை ஏன் விலைமதிப்பற்றதாக இருந்திருக்கும் என்பதைப்பற்றி சிந்தியுங்கள்: சங்கீதம் 35:9; ஏசாயா 25:8–9; 44:21–24; 51:11; செப்பனியா 3:14–20; மோசே 5:5–11. இந்த பத்திகள் உங்களுக்கு ஏன் விலைமதிப்பற்றவை?

Russell M. Nelson, “Joy and Spiritual Survival,” Ensign or Liahona, Nov. 2016, 81–84 ஐயும் பார்க்கவும்.

இயேசு கிறிஸ்துவை நினைவுகூர அடையாளங்கள் எனக்கு உதவும்.

கிறிஸ்துமஸுடன் தொடர்புடைய பல மரபுகள் நமக்கு கிறிஸ்துவை சுட்டிக்காட்டும் குறியீட்டு அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம். நட்சத்திர வடிவ அலங்காரங்கள் இயேசு பிறந்த இரவில் பிரகாசித்த பிரகாசமான நட்சத்திரத்தைக் குறிக்கின்றன (மத்தேயு 2:2 பார்க்கவும்). மேய்ப்பர்களுக்குத் தோன்றிய தேவதூதர்களை பாடுபவர்கள் நமக்கு நினைவூட்டலாம் ( லூக்கா 2:13–14 பார்க்கவும்). இந்த ஆண்டு பழைய ஏற்பாட்டைப் படித்தபோது, இரட்சகரின் பல அடையாளங்களை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றைப் படித்து, அவரைப்பற்றி அவை உங்களுக்குக் கற்பிப்பதைப் பதிவுசெய்யவும்.

இயேசு கிறிஸ்துவை சாட்சியமளிக்கும் வசனங்களில் வேறு எந்த அடையாளங்கள், பாகங்களை மற்றும் விவரங்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?

2 நேபி 11:4; மோசியா 3:14–15; மோசே 6:63; “Types or Symbols of Christ ,” in Guide to the Scriptures, “Jesus Christ,” scriptures.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

“அவரது நாமம் அதிசயமானவர் என அழைக்கப்படும்.”

இயேசு கிறிஸ்து பல பெயர்களாலும் பட்டங்களாலும் குறிப்பிடப்படுகிறார். பின்வரும் வசனங்களில் என்ன பட்டங்களைக் காணலாம்? சங்கீதம் 23:1; 83:18; ஏசாயா 7:14; 9:6; 12:2; 63:16; ஆமோஸ் 4:13; சகரியா 14:16; மோசே 7:53. வேறு என்ன பட்டங்களைப்பற்றி நீங்கள் சிந்திக்க முடியும்? கிறிஸ்துமஸ் பாடல்களில் நீங்கள் காணும் இயேசு கிறிஸ்துவின் பட்டங்களை பட்டியலிடுவதை நீங்கள் ரசிக்கலாம். ஒவ்வொரு தலைப்பும் அவரைப்பற்றி நீங்கள் நினைக்கும் விதத்தில் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்துகிறது?

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கிறிஸ்துமஸ் மரபுகள் இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டலாம்.இஸ்ரவேல் குடும்பங்கள் பஸ்கா மற்றும் பிற விருந்துகள் போன்ற மரபுகளைக் கொண்டிருந்தன, அவை அவர்கள் இருதயங்களையும் மனதையும் கர்த்தரிடம் சுட்டிக்காட்டுகின்றன (யாத்திராகமம் 12 பார்க்கவும்). இயேசு கிறிஸ்துவில் கவனம் செலுத்த உதவும் கிறிஸ்துமஸ் நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு என்ன மரபுகள் உள்ளன? உங்கள் குடும்ப வரலாற்றிலிருந்து உங்களுக்கு என்ன மரபுகள் தெரியும்? நீங்கள் தொடங்க விரும்பும் சில மரபுகளை ஒரு குடும்பமாக கலந்துரையாடலாம். சில யோசனைகளில் தேவைப்படும் ஒருவருக்கு சேவை செய்வது அடங்கும் (ஆலோசனைகளுக்கு, ComeuntoChrist.org/light-the-world), பிரதான தலைமை கிறிஸ்துமஸ் ஆராதனை உங்களுடன் சேர்ந்து பார்க்க அழைத்தல் (broadcasts.ChurchofJesusChrist.org) பார்க்கவும். உங்கள் சொந்த கிறிஸ்துமஸ் பாடலை எழுதுதல் அல்லது கிறிஸ்துவின் பிறப்பு செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஆக்கபூர்வமான வழியைக் கண்டறிதல்.

“கிறிஸ்து குழந்தை: ஒரு கிறிஸ்துமஸ் கதை.”கிறிஸ்துவின் பிறப்பின் பயபக்தியையும் மகிழ்ச்சியையும் உணர குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும்? “The Christ Child: A Nativity Story” (ChurchofJesusChrist.org)காணொலி நீங்கள் பார்க்கலாம் அல்லது மத்தேயு 1:18–25; 2:1–12; லூக்கா 1:26–38; 2:1–20 ஒன்றாக வாசிக்கலாம். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் காணொலி அல்லது வசன விவரத்திலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அந்த நபர் இரட்சகரைப்பற்றி எப்படி உணர்ந்தார் என்பதைப் பகிர்ந்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் அவரைப்பற்றிய தங்கள் சொந்த உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

பழைய ஏற்பாட்டில் இரட்சகரைக் கண்டுபிடிப்பது.அடுத்த ஆண்டு புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் படிக்க நீங்கள் தயாராகும் போது, பழைய ஏற்பாட்டில் இந்த ஆண்டு அவரைப்பற்றி அவர்கள் கற்றுக்கொண்டவற்றை உங்கள் குடும்பத்தினருடன் மதிப்பாய்வு செய்வதைக் கருத்தில் கொள்ளவும். நீங்கள் கற்றுக்கொண்டவற்றை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் வகையில், இந்த ஆதாரத்தின் குறிப்புகளையும் எந்தவொரு தனிப்பட்ட படிப்புக் குறிப்புகளையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். இளம் குழந்தைகள் பழைய ஏற்பாட்டு கதைகள் அல்லது இந்த ஆதாரத்தில் உள்ள படங்களை பார்ப்பதன் மூலம் பயனடையலாம். என்ன தீர்க்கதரிசனங்கள் அல்லது கதைகள் நமக்குத் தனித்து நிற்கின்றன? இரட்சகரைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “O Little Town of Bethlehem,” Hymns, no.208.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

உங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கேளுங்கள். “கேட்பது அன்பின் செயல். நமது நிகழ்ச்சி நிரலில் அல்லது குறிப்பில் இருப்பதை விட மற்றொரு நபரின் இருதயத்தில் இருப்பதைப்பற்றி நாம் அதிகம் அக்கறை கொள்ள வேண்டும். … [குடும்ப உறுப்பினர்கள்] பேசப்படும் மற்றும் பேசப்படாத செய்திகளுக்கு நீங்கள் கவனமாக கவனம் செலுத்துகையில், அவர்களின் தேவைகள், அவர்களின் கவலைகள் மற்றும் அவர்களின் ஆசைகளை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள். அவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதை அறிய பரிசுத்த ஆவி உங்களுக்கு உதவும்” (Teaching in the Savior’s Way, 34).

படம்
மரியாளும் குழந்தை இயேசுவும் மேய்ப்பர்களுடன் மாட்டுத் தொழுவத்தில்

கிறிஸ்து பிறப்பு காட்சி–என். சி. வைத்

அச்சிடவும்