“உங்கள் சுவிசேஷம் கற்றலில் பரிசுத்த இசையை சேர்த்தல்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)
“உங்கள் சுவிசேஷம் கற்றலில் பரிசுத்த இசையை சேர்த்தல்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022
உங்கள் சுவிசேஷம் கற்றலில் பரிசுத்த இசையை சேர்த்தல்
ஆரம்ப வகுப்பு பாடல்களையும் துதிப்பாடல்களையும் பாடுவது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பல வழிகளில் ஆசீர்வதிக்க முடியும். இந்த யோசனைகள் நீங்கள் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளவும் வாழவும் முயற்சிக்கும்போது பரிசுத்த இசையைப் பயன்படுத்த உதவும்.
-
கோட்பாட்டுக் கொள்கைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பாடும் அல்லது கேட்கும் பாடல்களில் கற்பிக்கப்பட்ட சத்தியங்களைத் தேடுங்கள். இது நாள் முழுவதும் இந்த சத்தியங்களைப்பற்றிய சுவிசேஷ கலந்துரையாடலுக்கு வழிவகுக்கும். இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவருடைய சுவிசேஷம்பற்றியும் கற்பிக்கும் ஆரம்ப வகுப்பு பாடல்கள் அல்லது துதிப்பாடல்களைப் பாடுங்கள் அல்லது கேளுங்கள். இரட்சகரையும் அவருடைய போதனைகளையும் குறித்து பரிசுத்த ஆவியானவர் சாட்சியமளிக்கும் வழிகளில் கவனம் செலுத்துங்கள்.
-
இசையின் வல்லமையை அங்கீகரிக்கவும். ஆரம்ப வகுப்பு பாடல்களையும் துதிப்பாடல்களையும் பாடுவது அல்லது கேட்பது தேவைப்படும் காலங்களில் ஒரு ஆசீர்வாதமாக இருக்கும். உதாரணமாக, ஒரு துதிப்பாடலைப் பாடுவது ஒரு பிள்ளையைப் படுக்கை நேரத்தில் அமைதிப்படுத்தலாம், உங்கள் குடும்பம் ஒன்றிணைந்து செயல்படுவதால் மகிழ்ச்சியை உருவாக்கலாம், நோய்வாய்ப்பட்ட ஒரு அண்டை வீட்டாரை உயர்த்தலாம் அல்லது கவலைப்படுபவருக்கு ஆறுதல் கூறலாம்.
-
அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும். பாடல்களின் செய்திகளுடன் தொடர்புடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்புடைய வேதக் கதைகளையும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
-
உங்கள் குடும்பத்தை ஈடுபடுத்துங்கள். உங்கள் குடும்பத்தினர் ஆர்வமாக பங்கேற்கிறார்களானால் பாடல்களிலிருந்து அவர்கள் அதிகம் கற்றுக்கொள்வார்கள். குடும்ப உறுப்பினர்களை ஈடுபடுத்த, இளம் உடன்பிறப்புகளுக்கு ஒரு பாடலைக் கற்பிக்க உதவுவதற்காக ஒரு கூடுதலான வயதுடைய பிள்ளையை நீங்கள் அழைக்கலாம் அல்லது ஆரம்ப வகுப்பில் அவர்கள் கற்றுக்கொண்ட பாடலை குடும்பத்திற்கு கற்பிக்க குழந்தைகளை அழைக்கலாம். ஒரு பாடலை நடத்த குடும்ப உறுப்பினர்களை நீங்கள் அனுமதிக்கலாம்.
-
ஆக்கப்பூர்வமாயிருங்கள். ஒரு குடும்பமாக பரிசுத்த இசையைக் கற்றுக்கொள்ள பல்வேறு வழிகளைப் பயன்படுத்துங்கள். உதாரணமாக, ஒரு பாடலில் உள்ள சொற்கள் மற்றும் சொற்றொடர்களுடன் ஒத்துப்போகும் சைகைகளை நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்கள் பாடலை யூகிக்க முயற்சிக்கும்போது ஒரு பாடலின் சில பகுதிகளை நடிக்க நீங்கள் முறை எடுக்கலாம். உங்கள் குடும்பத்தினர் வெவ்வேறு வேகத்தில் அல்லது சுருதிகளில் பாடல்களைப் பாடி மகிழலாம். The Gospel Library app மற்றும் the Gospel for Kids app பாடல்களைக் கற்றுக்கொள்ள உதவும் ஒலி பதிவுகளும் காணொலிகளும் கொண்டுள்ளன. நீங்கள் கேட்க பரிசுத்த இசையின் இயக்க பட்டியல்களையும் உருவாக்கலாம்.
கூடுதல் யோசனைகளுக்கு, “Using Music to Teach Doctrine” and “Helping Children Learn and Remember Primary Songs and Hymns,” found in “Instructions for Singing Time and the Children’s Sacrament Music Presentation” in Come, Follow Me—For Primary பாகங்களைப் பார்க்கவும்.