உருவம். 1. சிலஸ்டியலுக்கு அருகிலுள்ள, அல்லது தேவனின் வாசஸ்தலமாயிருக்கிற கோலோப், முதல் சிருஷ்டிப்பைக் குறிக்கிறது. முதலில் அரசாங்கத்திலும், கடைசி காலத்தின் அளவிற்கு சம்பந்தப்பட்டதுமாயிருக்கிறது. ஒரு நாளை ஒரு முழத்திற்கு குறிப்பிடுகிற சிலஸ்டியல் நேரமான சிலஸ்டியல் நேரத்தின்படி அளவு இருக்கிறது. கோலோப்பில் ஒரு நாள், எகிப்தியரின் யா-ஒ-வாவினால் அழைக்கப்பட்ட இந்த பூமியின் அளவின்படி ஒரு ஆயிரம் வருஷங்களுக்கு சமமாயிருக்கிறது.
உருவம். 2. சிலஸ்டியலுக்கு அல்லது தேவன் வாசம் செய்வதற்கருகில் மகா ஆளுகையின் சிருஷ்டிப்பாய் இருக்கிற கர்த்தருக்கென்று அவன் கட்டிய ஒரு பலிபீடத்தின்மேல் அவன் பலிசெலுத்தியபோது தேவனிடமிருந்து ஆபிரகாமிற்கு வெளிப்படுத்தப்பட்டதைப்போல பிற கிரகங்களுக்கும் சொந்தமான வல்லமையின் திறவுகோலையும் தரித்திருந்த, எகிப்தியர்களால் ஒலிபிலிஷ் என்றழைக்கப்படுகிற, கோலோப்பிற்கு அடுத்து நின்று கொண்டிருக்கிறது.
உருவம். 3. அவருடைய தலையின்மேல் ஒரு நித்திய ஒளியின் கிரீடத்துடன், வல்லமையுடனும் அதிகாரத்துடனும் ஆடை அணிந்து அவருடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருந்து ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கும், சேத்துக்கும், நோவாவுக்கும், மெல்கிசேதேக்குக்கும், ஆபிரகாமுக்கும், ஆசாரியத்துவம் வெளிப்படுத்தப்பட்ட எல்லோருக்கும் வெளிப்படுத்தப்பட்டதைப்போல பரிசுத்த ஆசாரியத்துவத்தின் மகா முக்கிய வார்த்தைகளையும்கூட பிரதிபலிக்கிற தேவனை பிரதிபலிக்க செய்யப்பட்டது.
உருவம். 4. விரிவை, அல்லது ஆகாயவிரிவை குறிப்பிட்டு, எகிப்திய பாஷையில் ஒரு ஆயிரத்தைக் குறிப்பிடுகிற ஒரு எண்ணிக்கையின் உருவத்திலும்கூட, அதன் சுழற்சியிலும் அதன் நேரத்தை அளவிடுதலிலும் கோலோப்புடன் சமமான ஒலிபிலிஷின் நேரத்தை அளவிடுதலுக்கு பதிலளிப்பதில் ராக்கீயாங் என்ற எபிரேயு வார்த்தைக்கு பதில்கள்.
உருவம். 5. எகிப்திய பாஷையில் எனிஷ்-கோ-ஆன்-டோஷ் என்றழைக்கப்படுகிறது; இது ஆளும் கிரகங்களில் ஒன்றாகவுமிருக்கிறது, சூரியனாயிருந்தது என்றும் மகா திறவுகோலான அல்லது வேறு வார்த்தைகளில் எனில் பிற பதினைந்து கிரகங்களை அல்லது நட்சத்திரங்களை, புலோயீஸ் அல்லது சந்திரனையும், பூமியையும் சூரியனையும் அவைகளின் வருஷாந்தர சுழற்சிகளில் ஆளுகை செய்கிற ஆளுகையின் சக்தியான கா-இ-வான்ரஷ் ஊடகம் மூலமாக அதனுடைய வெளிச்சத்தை கோலோப்பிடமிருந்து கடன் வாங்கியதாக எகிப்தியர்களால் சொல்லப்பட்டது. க்ளி-ப்ளோஸ்-இஸ்-எஸ் அல்லது ஹா-கோ-கா-பீம் ஊடகம் மூலமாக இந்த கிரகம் அதன் சக்தியைப் பெறுகிறது, கோலோப்பின் சுழற்சிகளிலிருந்து ஒளியைப் பெற்றுக்கொண்டு 22 மற்றும் 23 எண்களால் நட்சத்திரங்கள் பிரதியாயிருக்கின்றன.
உருவம். 6. அதன் நான்கு பாகங்களில் இந்த பூமிக்கு பிரதியாயிருக்கிறது.
உருவம். 7. ஆசாரியத்துவத்தின் மகா முக்கிய வார்த்தைகளை வானங்களின் மூலமாக வெளிப்படுத்திக்கொண்டு அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற தேவனை பிரதியாக்குகிறது; ஒரு புறாவின் வடிவத்தில் ஆபிரகாமிற்கு பரிசுத்த ஆவியின் அடையாளமாகவுமிருக்கிறது.
உருவம். 8. உலகத்திற்கு வெளிப்படுத்த முடியாத எழுத்துக்கள் அடங்கியிருக்கிறது; ஆனால் அது பரிசுத்த ஆலயத்தில் இருக்க வேண்டியதாயிருக்கும்.
உருவம். 9. தற்போதைய நேரத்தில் வெளியிடப்படக் கூடாததாயிருக்கும்.
உருவம். 10. மற்றும்.
உருவம். 11. மற்றும். இந்த எண்களை உலகம் கண்டுபிடிக்க முடியுமானால், அது அப்படியே ஆகக்கடவது. ஆமென்.
உருவங்கள் 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 மற்றும் 21 கர்த்தரின் ஏற்ற காலத்தில் கொடுக்கப்படும்.
தற்காலத்தில் கொடுக்க எங்களுக்கு உரிமையிருக்கிறபடி மேலேயுள்ள மொழிபெயர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.