வேதங்கள்
நகல் 3


ஆபிரகாம் புஸ்தகத்திலிருந்து ஒரு நகல்

எண். 3

நகல் 3

விளக்கம்

உருவம். 1. ராஜாவின் அடக்கத்துடன், அவனுடைய தலையின்மேல் ஒரு கிரீடத்துடன், வானத்தில் மகா தலைமையின் அடையாளமாக ஆசாரியத்துவத்துக்கு பிரதியாயிருந்து, நீதியின் செங்கோலுடனும் நியாயத்தீர்ப்பை அவருடைய கைகளில் கொண்டும் பார்வோனின் சிங்காசனத்தில் ஆபிரகாம் அமர்ந்திருத்தல்.

உருவம். 2. அவனுடைய தலைக்குமேலே சித்திரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிற பெயருடைய பார்வோன் ராஜா.

உருவம். 3. நகல் எண். 1ன் உருவம் 10ல் கொடுக்கப்பட்டுள்ளதைப்போல எகிப்தில் ஆபிரகாமைக் குறிப்பிடுகிறது.

உருவம். 4. கைக்குமேலே எழுதப்பட்டிருக்கிறதைப்போல பார்வோனின் பிரபு, எகிப்தின் ராஜா.

உருவம். 5. அவனுடைய கைக்கு மேலேயுள்ள எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல ராஜாவின் முக்கிய பணியாளர்களில் ஒருவனான சூலேம்.

உருவம். 6. ஒலிம்லா, பிரபுக்குச் சொந்தமான ஒரு அடிமை.

ராஜாவின் அரண்மனையில் வானியல் கொள்கைகளைக்குறித்து ஆபிரகாம் விவரித்துக்கொண்டிருத்தல்.