2021
ஒரு சிறுவனின் வழியாக ஒரு கிராமம் மீட்கப்பட்டது
ஏப்ரல் 2021


“ஒரு சிறுவனின் வழியாக ஒரு கிராமம் மீட்கப்பட்டது,” இளைஞரின் பெலனுக்காக,ஏப்ரல் 2021, 10–11.

மாதந்தோறும்இளைஞரின் பெலனுக்காக செய்தி, ஏப்ரல் 2021

சிறுவனின் வழியாக ஒரு கிராமம் மீட்கப்பட்டது

டாம் ஃபானெனுக்கு 12 வயதுதான் இருந்தது, ஆனால் அவனது சமோவான் கிராமத்தில் ஒரு பேரழிவு நோய் வந்தபோது, அவன் பெரிய காரியங்களைச் செய்வதற்காக அழைக்கப்பட்டான்.

படம்
சமோவான் தீவில் நோய்வாய்ப்பட்ட கிராமவாசிக்கு உதவும் சிறுவன்

சித்தரிப்பு - ஜேமஸ் மாட்சன்; புகைப்படம் கெட்டி படங்களிலிருந்து

இந்த ஆண்டின் இளைஞர் கருப்பொருள் சொல்வது போல், நீங்கள் “அரும் பெரிய காரியத்திற்கு அடித்தளம் இடுகிறீர்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:33). சபையின் வரலாறு முழுவதும், தேவனுடைய ராஜ்ஜியத்தை அமைப்பதில் இளைய சமூகத்தினர் பெரும்பாலும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதோ ஒரு உதாரணம்.

தோற்றுநோய் பரவும் தீவு

100 ஆண்டுகளுக்கு முன்பு, பசிபிக் பெருங்கடலின் சமோவான் தீவுகளில், டாம் ஃபானென் என்ற இளைஞன் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை அங்கத்தினர்களுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பெரும் உதவியாக இருந்தான்.

பிற்காலப் பரிசுத்தவான்கள் ஒன்றுகூடி ஒரு சமுதாயத்தை உருவாக்கின இடமாக அவர்களால் நிறுவப்பட்ட, ஸௌனியாட்டு என்ற கிராமத்தில்டாம் வசித்து வந்தான். மற்ற காலங்களில், இடங்களில் வாழ்ந்த தேவனின் பரிசுத்தர்களைப் போலவே, அவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை ஒன்றாகக் கட்டியெழுப்ப உழைத்தபோது சோதனைகளையும் அற்புதங்களையும் அனுபவித்தார்கள். 1918 ஆம் ஆண்டு ஒரு சோதனையின் போது, இன்ஃப்ளூயன்ஸா என்னும் தொற்றுநோய் கிராமத்தை வந்தடைந்தது.

நோய் வந்ததுடனேயே, அது பேரழிவை ஏற்படுத்தியதுடன், மிக விரைவாகவும் பரவியது. ஏறக்குறைய 400 கிராமவாசிகள் அனைவரும் அதன் காரணமாக படுக்கையில் விழுந்தனர். அவர்களில் இருவர்மட்டுமே சுற்றிவர முடிந்தவர்களாயிருந்தனர்: ஒரு வயதானவரும் 12 வயது டாமும்.

விசுவாசமும் கடின உழைப்பும்

டாமின் குடும்பத்தினர் இதற்கு முன்னர் நோயுற்றபோது விசுவாசம் வைத்து, அற்புதங்களைக் கண்டனர். டாமின் இளைய சகோதரன் அய்லாமா சில ஆண்டுகளுக்கு முன்பு நோயுற்றிருந்தான். அவர்களின் தந்தை எலிசலாவின் கனவில், அவருக்கு அய்லாமாவைப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டன: ஒரு வில்லி-வில்லி மரத்தைக் கண்டுபிடி, சில பட்டைகளை எடுத்து அதை அடித்து சாற்றை வெளியேற்றும்படி. எலிசலா இதை செய்து சாற்றை அய்லாமாவிடம் கொண்டுவந்தார், அதை குடித்ததும் அவன் சுகம் பெற்றான். இதனால், விசுவாசத்துடன் செயல்பட்டால் எவ்வாறு நோயை மேற்கொள்ள உதவும் என்பதை டாம் அறிந்திருந்தான்.

1918 ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் தாக்கத்தின் போது, கிராம மக்களைக் காப்பாற்ற கடுமையாக உழைக்கும்போது டாம் விசுவாசத்துடன் இருந்தான். “மக்களுக்கு உணவளிக்கவும் சுத்தம் செய்யவும், மரித்தவர்களைக கண்டிபிடிக்க தினமும் காலை நான் வீடு வீடாகச் செல்வேன்” என்று அவன் கூறினான்.

அவன் ஒரு நீரூற்றிலிருந்து தண்ணீரை வாளிகளில் எடுத்து ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் கொண்டு வந்தான். அவன் தென்னை மரங்களில் ஏறி, தேங்காய்களைப் பறித்து, அவற்றை உடைத்து, சாறு எடுத்து நோயுற்றவர்களுக்கு கொண்டு வந்தான். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சூப் தயாரிக்க கிராமத்தில் உள்ள அனைத்து கோழிகளையும் கொன்றான்.

மாற்றத்தை உருவாக்குதல்

இந்த தொற்றுநோய் காலத்தில், சமோவாவில் உள்ள மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் காய்ச்சலால் மரித்தனர். டாமின் கிராமத்திலும் சிலர் மரித்தனர். டாம் கல்லறைகளைத் தோண்டி, அவற்றில் அவரது சொந்த தந்தை எலிசலா உட்பட, 20 க்கும் மேற்பட்டோரை அடக்கம் செய்ய உதவினான்.

ஆனால் டாமின் கடின உழைப்புக்கும் அன்பான கவனிப்பிற்கும் நன்றி, அவனது கிராமத்தில் பலர் தப்பினர். அவன் அந்த மக்களுக்கும் சமோவாவில் கர்த்தருடைய ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்கும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினான். அவன் “ஒரு பெரிய பணிக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்தான்.”

உங்கள் வழியில் நீங்களும் அப்படியே.

டாம் செய்த பல காரியங்களைச் செய்ய நீங்கள் அழைக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் உண்மையில், நீங்கள், உங்களுக்கும் மற்றவர்களுக்கும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் பல்வேறு வழிகளிலும், தேவனுடய ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கும் நீங்கள் விசுவாசத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.

நல்லொழுக்கம், பொறுமை, இரக்கம் மற்றும் அன்பு ஆகியவற்றைக் காண்பிப்பதன் மூலம் உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் பிறருக்கு ஒரு முன்மாதிரி ஆகிறீர்கள். பிறருக்கு சேவை செய்கிறீர்கள். நீங்கள் வேத படிப்பு மற்றும் ஜெபத்தில் ஈடுபடுகிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிக்கப்பட்ட சுவிசேஷத்தின் உண்மைகளை நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்கள்.

கடந்த ஆண்டில், ஒரு தொற்றுநோயின் விளைவுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும்போது, உங்களில் பலர் இந்த விஷயங்களைச் செய்து வருகின்றனர். நீங்கள் தண்ணீரையும் தேங்காய்களையும் கொண்டுவராமல் இருக்கலாம், உடல்நலம் திரும்ப 400 பேருக்கு சேவை செய்யாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் மக்களுக்கு ஆறுதல், நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தை வேறு பல வழிகளில் கொண்டு வருகிறீர்கள்.

உங்கள் விசுவாசமும், மற்றவர்களுக்கு பணி செய்யவும் சேவை செய்யுவும் உங்களுடைய விசுவாசத்தையும் விருப்பத்தையும்விட குறைவாகவே உங்கள் வயது முக்கியம். தேவனின் பெரும் பணிக்கு அடித்தளம் அமைப்பதில் நீங்கள் தேவை என்பதை டாம் ஃபானென் போன்ற கடந்த கால எடுத்துக்காட்டுகளிலிருந்து பார்க்க, உங்களுக்கு உதவலாம்.

அச்சிடவும்