2021
இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றினார்
ஏப்ரல் 2021


“இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றினார்,” லியஹோனா, ஏப்ரல் 2021

லியஹோனா செய்தி, ஏப்ரல் 2021

இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றினார்

அவருடைய தியாகத்தின் காரணமாக, நித்திய சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் காண நம் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது.

கடைசி இராப்போஜனம்

பூமியை கிறிஸ்து சிருஷ்டித்தல் - ராபர்ட் டி. பாரட்

இயேசு கிறிஸ்துவை நம்முடைய இரட்சகர் என்று நாம் குறிப்பிடுகிறோம். ஏனென்றால், நம்முடைய பாவங்களுக்காக அவர் கிரயம் செலுத்தி, மரணத்தின் வல்லமையை மேற்கொண்டார். அவர் நம்மைக் காப்பாற்றினார்! பாவநிவர்த்தி என்று அழைக்கப்படுகிறது நமக்காக அவர் செய்த தியாகம், எப்போதும் நிகழ்ந்ததில் மிக முக்கியமான நிகழ்வு. அவரால், மரணம் ஒரு முடிவு அல்ல. அவர் காரணமாக, நம்முடைய பாவங்களுக்காக நாம் மன்னிக்கப்பட்டு, மீண்டும் சுத்தமாகி, ஒவ்வொரு நாளும் சிறப்பாக வளர முடியும்.

இயேசு கிறிஸ்து முதற்பேறானவராக இருந்தார்

பூமிக்கு வருவதற்கு முன்பு, நம்முடைய பரலோக பெற்றோருடன் நாம் வாழ்ந்தோம். முதற்பேறானவராக, இந்த அழகான உலகத்தை சிருஷ்டிக்க இயேசு கிறிஸ்து உதவினார். அவர் நம்முடைய இரட்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் ஒரு சரியான முன்மாதிரியை ஏற்படுத்த, அவருடைய சுவிசேஷத்தைக் கற்பிக்க, நமக்காக பாவநிவர்த்தியை நிறைவுசெய்யும்படியாக, பூமியில் பிறக்க ஒப்புக்கொண்டார்,

கெத்செமனேயில் இயேசு ஜெபித்தல்

என் தேவனே - சைமன் டீவி

இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக கிரயம் செலுத்தினார்

இயேசு விரைவில் மரித்துவிடுவார் என்று அவர் அறிந்தபோது, ஜெபிப்பதற்காக கெத்செமனே என்றழைக்கப்பட்ட தோட்டத்திற்குச் சென்றார். அந்த ஜெபத்தின்போது, நம்முடைய பாவங்களுக்கான கிரயத்தை அவர் செலுத்தத் தொடங்கினார். அவர் மனமுவந்து துன்பப்பட்டார், அதனால் நாம் மனந்திரும்பினால் நாம் அதைச் செய்ய வேண்டியதில்லை. நம்முடைய பாவங்களிலிருந்து விலகி, அதற்கு பதிலாக இரட்சகரைப் பின்பற்றும்போது, மன்னிப்பையும் குணப்படுத்துதலையும் நாம் காணலாம். கெத்செமனேவில் அவர் அனுபவித்தவற்றின் காரணமாக, நாம் ஒவ்வொருவரும் எப்படியிருக்கிறோம் என்பதைப்பற்றி இயேசு நன்கு புரிந்துகொள்கிறார். நமது துக்கங்களை, வியாதிகளை, வேதனைகளை அனைத்தையும் அவர் உணர்ந்தார். இது பாவநிவர்த்தியின் முதல் பருவம்.

கிறிஸ்துவின் அடக்கம்

கிறிஸ்துவின் அடக்கம் - கார்ல் ஹென்ரிச் ப்ளாச்

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார்

கெத்செமனேவில் அவர் ஜெபித்த பின், இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரண தண்டனை அடைந்தார். அவர் சகல வல்லவராயிருந்தாலும், இயேசு சிலுவையில் மரிக்க உடன்பட்டார். அவரைப் பின்பற்றுபவர்கள் அன்புடன் அவருடைய சரீரத்தை கல்லறையில் வைத்தார்கள். அவருடைய சரீரம் மரித்திருந்தாலும், அவருடைய ஆவியானது ஆவி உலகில் இன்னும் ஜீவனுடன் இருப்பதை அவர்கள் உணரவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு, இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்தார், அவர்களை அவர் சந்தித்தார். அவரால் மரணத்தை வெல்லமுடியும் என்பதை நிரூபித்தார். இது பாவநிவர்த்தியை நிறைவு செய்தது. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதால், நாம் மரித்த பிறகும் நாம் ஒவ்வொருவரும் மீண்டும் வாழ்வோம்.

கல்லறையில் கிறிஸ்துவும் மரியாளும்

அவர் ஜீவிக்கிறார் - சைமன் டீவி

கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டரின் அர்த்தம்

இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை நினைவில் கொள்ள உதவும் இரண்டு விடுமுறை நாட்களை உலகின் பெரும்பகுதி கொண்டாடுகிறது. கிறிஸ்மஸின் போது, நமக்காக படுகளும் மரிப்பும் இருக்கும் என்றபோதும் பூமிக்கு வருவதற்கான ஊழியத்தை ஏற்றுக்கொள்ள இயேசு தயாராக இருந்தார் என்பதை நன்றியுடன் நாம் நினைவில் கொள்கிறோம். மகிழ்ச்சியின் நித்திய எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நமக்கு அளிக்கிற, பாவம் மற்றும் மரிப்புக்கு எதிரான இரட்சகரின் வெற்றியை ஈஸ்டர் கொண்டாடுகிறது.

கிறிஸ்து பேதுருவையும் அந்திரேயாவையும் அழைக்கிறார்

கிறிஸ்து பேதுருவையும் அந்திரேயாவையும் அழைக்கிறார் - ஜேம்ஸ் டெய்லர் ஹார்வுட்

இரட்சகரின் பாவநிவர்த்தியைப்பற்றி வேதங்கள் என்ன சொல்லுகின்றன?

இயேசு நம்மை நன்கு அறிந்திருப்பதால், அவர் நமக்கு “ஒத்தாசை” செய்யலாம் அல்லது உதவலாம் (ஆல்மா 7: 11–12 பார்க்கவும்).

மீட்பர் நம்முடைய துக்கங்களையும் துயரங்கங்களையும் புரிந்துகொள்கிறார் (ஏசாயா 53: 2–5 பார்க்கவும்).

தேவன் நம் ஒவ்வொருவரையும் நேசிப்பதால் தேவன் நம்மை இரட்சிக்க இயேசுவை அனுப்பினார். (யோவான் 3: 16–17 பார்க்கவும்).

நாம் உட்பட தம்மைப் பின்பற்றுபவர்களுக்காக, தீமைகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், அவருடனும் பரலோக பிதாவுடனும் ஒன்றாக இருக்கும்படியும் இயேசு ஜெபித்தார் (யோவான் 17 பார்க்கவும்).

நம்முடைய இரட்சகர் அவரைப் பின்பற்றி அவருடைய பிரசன்னத்திற்குத் திரும்பும்படி நம்மை அழைக்கிறார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:16–19, 23–24; 132:23 பார்க்கவும்).