2021
மன்னிக்க பெலன் காணுதல்
ஜூன் 2021


மன்னிக்க பெலன் காணுதல் இளைஞரின் பெலனுக்காக ஜூன் 2021, 10–11.

என்னைப் பின்பற்றி வாருங்கள்

மன்னிக்க பெலன் காணுதல்

பிறரை மன்னிக்க கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இந்த ஒன்று உட்பட, தம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ள அவர் நமக்கு உதவுவார்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:10

படம்
தன்னிடம் கையை நீட்டுகிற, ஒருவரை பெண் பார்த்தல்

பட விளக்கம்–ஜேம்ஸ் மாட்சன்

சில கட்டளைகள் கைக்கொள்ள மற்றவற்றைவிட கடினமாகத் தோன்றுகின்றனவா?

அநேகரை அச்சுறுத்தும் ஒன்று இதோ: “கர்த்தராகிய நான் மன்னிப்பவர்களை, மன்னிப்பேன், ஆனால் நீங்கள் சகல மனுஷரையும் மன்னிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 64:10).

காத்திருங்கள் நமக்கு தீங்கு விளைவித்திருக்கிற ஒவ்வொருவரையும் நாம் மன்னிக்கவேண்டும்? அது சாத்தியமானதா?

உங்களிடம் முரட்டுத்தனமாக ஏதாவது சொன்னதற்காக அல்லது இரவு உணவு மேஜையில் கடைசி வரிசையில் வந்ததற்காக ஒருவரை மன்னிப்பது ஒரு விஷயம். ஆனால் ஆழமான காயங்களை என்ன செய்வது? அந்தக் கடுமையான குற்றங்கள், நமது வாழ்க்கைப் பாதையில் இடையூறு செய்யலாம் அல்லது மாற்றக்கூட செய்யலாம்.

நம்மை மிகமோசமாக காயப்படுத்திய ஒருவரை மன்னிக்கும் திறன் சில நேரங்களில் நம்மால் அடையமுடியாததாக உணரலாம்.

நல்ல செய்தி இதோ: இயேசு கிறிஸ்துவின் உதவியுடன் நாமாகவே செய்யமுடிவதுடன் நாம் ஒருபோதும் மட்டுப்படுத்தப்படவில்லை.

அவளுக்குத் தேவைப்பட்ட உதவி

கோரி டென் பூம் என்ற நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவ பெண், யாரையாவது மன்னிக்க உதவுமாறு தேவனிடம் கேட்கும் வல்லமையை நேரில் கண்டுபிடித்தாள்.

இரண்டாம் உலகப் போரின்போது, அவளும் அவளுடைய சகோதரி பெட்ஸியும் சித்திரவதை முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். நாசி சிறை காவலர்களிடமிருந்து காரியும் மற்றவர்களும் பயங்கரமான நிந்தனையை சகித்தனர். அந்த நிந்தனையின் விளைவாக அவளுடைய சகோதரி பெட்ஸி மரித்தும் போனாள். கோரி பிழைத்துக்கொண்டாள்.

மற்றவர்களை மன்னித்தலின் குணமாக்கும் வல்லமையை, போருக்குப் பின்னர், கோரி கண்டுபிடித்தாள். பொது இடங்களில் அவளுடைய செய்தியை அவள் அடிக்கடி பகிர்ந்துகொண்டாள். ஆயினும் ஒரு நாள் அவளுடைய வார்த்தைகள் இறுதி சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஒரு பொது உரையைத் தொடர்ந்து, முகாம்களிலிருந்த மிகக் கொடூரமான சிறைக் காவலர்களில் ஒருவரால் காரி அணுகப்பட்டாள்.

போருக்குப் பின் அவர் கிறிஸ்தவராகிவிட்டதாகவும், ஒரு சிறைக் காவலராக அவர் செய்த கொடூரமான காரியங்களுக்காக அவர் மனந்திரும்பியதாகவும் காரியிடம் அவர் கூறினார்.

அவர் தனது கையை நீட்டிச் சொன்னார், “நீ என்னை மன்னிப்பாயா?”

மற்றவர்களை மன்னிப்பதைப்பற்றி அவள் கற்றுக்கொண்டு, பகிர்ந்துகொண்ட எல்லாவற்றையும் மீறி, இந்த குறிப்பிட்ட மனிதனின் கையைப் பிடிக்கவும் அவரை மன்னிக்கவும் காரியால் முடியவில்லை, எப்படியாயினும் அவளால் தாமாக அதைச்செய்ய முடியவில்லை.

பின்னர் அவள் எழுதினாள், “கோபம் மற்றும் பழிவாங்குதலின் எண்ணங்கள் எனக்குள் கொதித்த போதிலும், அவர்களின் பாவத்தை நான் பார்த்தேன். … கர்த்தராகிய இயேசுவே, என்னை மன்னியும், அவரை மன்னிக்க எனக்குதவும் என நான் ஜெபித்தேன்.

“நான் புன்னகைக்க முயற்சித்தேன், [மற்றும்] என்னுடைய கையைத் தூக்க நான் போராடினேன். என்னால் முடியவில்லை. நான் எதையும் உணரவில்லை, அரவணைப்பின் அல்லது தயாளத்தின் ஒரு பொறியைக்கூட உணரவில்லை. ஆகவே மீண்டும் ஒரு அமைதியான ஜெபத்தை நான் கிசுகிசுத்தேன். இயேசுவே, அவரை என்னால் மன்னிக்கமுடியவில்லை. உமது மன்னிப்பை எனக்குத் தாரும்.

நான் அவருடைய கையைப் பிடித்தபோது, நம்பமுடியாத காரியம் நடந்தது. என் தோள் வழியாக என் கரம் மற்றும் என் கை வழியாக, ஒரு மின்னோட்டம் என்னிடமிருந்து அவரிடம் கடந்து செல்வது போல் தோன்றியது, அதே நேரத்தில் என் இருதயத்தில் இந்த அந்நியன் மீது, என்னை மேற்கொண்ட ஒரு அன்பு எழும்பியது.

“ஆகவே, நமது நன்மையைவிட உலகத்தின் குணப்படுத்துதல், இனிமேலும் நம்முடைய மன்னித்தலை சார்ந்திருக்கவில்லை, என்பதைக் கண்டுபிடித்தேன், ஆனால் அவரைச் சார்ந்திருக்கிறது. நம்முடைய எதிரிகளிடம் அன்புகூர அவர் நம்மிடம் கூறியபோது, கட்டளையுடன் அன்பையும் அவர் கொடுக்கிறார்”1.

அது கடினமாயிருக்கும் போதும் கூட, மன்னிக்க கொடுக்கப்பட்ட கட்டளையையும் உள்ளடக்கி, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள உங்களுக்குதவ தேவன் இருக்கிறார். காரி டென் பூமுக்கு அவர் உதவியதைப்போலவே அவர் உங்களுக்குதவ முடியும்.

உங்களுக்குத் தேவைப்படுகிற குணமாக்குதல்

வாழ்க்கை சிக்கல் நிறைந்தது. இது குழப்பமானது. தேவன் கொடுத்த சுயாதீனமுள்ள ஜனத்தால் இது முற்றிலுமாக நிரம்பியுள்ளது.

உங்களுடைய கடுமையான வேதனை ஏற்படுத்துகிற, அல்லது தற்செயலாக அப்படிச் செய்ய ஒருவர் தேர்ந்தெடுக்கும் அந்த நேரங்களின்போது, உதவிக்காகவும் மன்னிக்க முயற்சி செய்யவும் நீங்கள் ஜெபிக்கும்போது உங்களால் குணமாக்குதலின் வல்லமையைப் பெறமுடியும்.

மற்றவர்களை மன்னித்தல் உங்கள் ஆத்துமாவுக்கு குணமாக்குதலைக் கொண்டுவருகிறது. உங்களுக்கு தவறிழைத்த ஒருவரை தேவனின் உதவியுடன் நீங்கள் மன்னிக்கும்போது, உங்களைத் தடுத்து வைத்திருக்கிற, ஒரு பயங்கர சுமையை உங்கள் தோளிலிருந்து கீழே போட்டுவிடுகிறீர்கள். உண்மையான குணப்படுத்துதலுக்கான பாதை கடினமாக இருந்தாலும் கூட, தேவனிருக்கும்போது, நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க வேண்டியதில்லை.

குறிப்புகள்

  1. Corrie ten Boom, The Hiding Place (1971), 215.

  2. Jeffrey R. Holland, Oct. 2018 general conference (Ensign or Liahona, Nov. 2018, 79).

அச்சிடவும்