2021
அவருடைய சபையின் பெயர்
அக்டோபர் 2021


“அவருடைய சபையின் பெயர்,” இளைஞரின் பெலனுக்காக, அக். 2021.

இளைஞரின் பெலனுக்காக மாதாந்தர செய்தி, அக்டோபர் 2021

அவருடைய சபையின் பெயர்

இயேசு கிறிஸ்து அவருடைய சபைக்குக் கொடுத்த பெயருக்குப் பின்னால் அர்த்தமிருக்கிறது

படம்
நல்ல மேய்ப்பனாக இயேசு கிறிஸ்து

எனது சபை

சபை—ஒரே காரியங்களில் நம்பிக்கை வைத்து, ஒன்றுகூடி ஆராதிக்கிற ஒரு மக்கள் குழு. இந்த சபை இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானது. இதை அவர் ஆரம்பித்தார். இதை அவர் நடத்துகிறார். இது அவருடையது.

அழைக்கப்பட

அவருடைய சபையை மக்கள் எவ்வாறு அழைக்கவேண்டுமென அவர் விரும்புகிறாரென, இயேசு கிறிஸ்து நமக்குக் கூறினார். ஆகவே அதன்படிதான் நாம் இதை அழைக்க வேண்டும்—மேலும், இதை மற்றவர்கள் இப்படி அழைக்கும்படியாக நாம் அன்புடன் கேட்கவேண்டும். இந்த பெயர் இயேசு கிறிஸ்துவிடமிருந்து வந்தது.

கடைசி நாட்கள்

கடைசி நாட்கள்—நாம் வாழுகிற நாட்கள்; இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முந்திய நேரம். இந்தக் கடைசி நேரத்திற்காக, இயேசு கிறிஸ்து தம்முடைய சபையை மீண்டும் பூமிக்குக் கொண்டு வந்தார். அவருடைய இரண்டாவது வருகைக்காக உலகத்தை ஆயத்தப்படுத்த இது உதவும்.

இயேசு கிறிஸ்துவின் சபை

(“எனது சபை” பார்க்கவும்) இரட்சகர் அவருடைய சபைக்குக் கொடுத்த இது பெயரின் முதல் பாகம். “சபை” என இதை அவர் அழைக்கிறார் ஏனெனில் இதை அவர் அமைத்தார். அவருடைய பெயரை இதன்மேல் அவர் வைத்தார்.

பிற்காலம்

(“கடைசி நாட்கள்” பார்க்கவும்) இது, சபைப் பெயரின் அடுத்த பாகம். முந்தைய காலங்களில் அவர் ஆரம்பித்த ஆலயம் அல்ல, இந்த நாட்களில் அவர் மீண்டும் கொண்டுவந்த சபை இது தான் என்பதை இது காட்டுகிறது.

பரிசுத்தவான்கள்

பரிசுத்தவான்கள்—“பரிசுத்தமான மக்கள்” என்ற அர்த்தமுள்ள ஒரு வார்த்தை இது சபைப் பெயரின் கடைசி பாகம். இது சபையின் உறுப்பினர்களைப்பற்றிப் பேசுகிறது. நம்மை சுத்தமாகவும் தூய்மையாகவும் மாற்ற இயேசு கிறிஸ்துவால் முடியும். அவர் கட்டளையிட்டவைகளைச் செய்ய நாம் முயற்சிக்கும்போது நம்மைப் பெலப்படுத்த பரிசுத்த ஆவியை அவர் நமக்குக் கொடுக்கிறார். அவரில் நமக்கு விசுவாசமிருந்து முயற்சி செய்துகொண்டிருந்தால், அவர் நம்மை பரிசுத்தமாக்குகிறார். அவர் நம்மை பரிசுத்தவான்களாக்குகிறார்.

அச்சிடவும்