2021
ஆலயப்பணி
அக்டோபர் 2021


“ஆலயப் பணி,” லியஹோனா அக்டோபர் 2021

லியஹோனா மாதாந்தர செய்தி, அக்டோபர் 2021

ஆலயப் பணி

ஆலயங்கள் கர்த்தரின் வீடு. ஆலயங்களில் நாம் நியமங்களைப் பெற முடியும் மற்றும் அவருடன் உடன்படிக்கைகளைச் செய்யமுடியும். நமது முன்னோர்களுக்காக ஆலயத்தில் நாம் நியமங்களையும் நடப்பிக்க முடியும்.

படம்
ஆலயம்

பாரன்க்யுல்லா கொலம்பியா ஆலயத்தின் புகைப்படம் - ப்ருனோ லிமா

ஆலயங்களைக் கட்டும்படி வரலாறு முழுவதிலும் கர்த்தர் தம் ஜனங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். தேவனுடைய அன்பை நாம் உணரமுடிகிற, நியமங்களைப் பெறுகிற, அவருடன் வாக்குத்தத்தங்கள் செய்கிற ஆலயங்கள் பரிசுத்த இடங்கள். இந்த ஆசீர்வாதங்களை அதிக, மிக அதிகமான மக்களுக்கு இருக்கும்படிக்கு உலகமுழுவதிலும், சபை, ஆலயங்களைக் கட்டிக்கொண்டிருக்கிறது.

படம்
ஆலயத்தின் முன் பெண்

ஒக்யுர் மவுன்டன் யூட்டா ஆலயத்தின் முன் பெண்ணின் புகைப்படம் - நெக்ஸியோ மற்றும் மாத்யு ரியர்

தரிப்பித்தல்

நீதியாய் வாழ்ந்துகொண்டிருக்கிற சபை உறுப்பினர்கள் நியமங்களைப் பெறவும், உடன்படிக்கைகள், அல்லது வாக்குத்தத்தங்களை தேவனுடன் செய்யவும் ஆலயத்திற்குச் செல்கிறார்கள். ஆலயத்தில் நாம் பெறுகிற ஒரு நியமம் தரிப்பித்தல். தரிப்பித்தல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் “ஒரு வரம்.” ஆலய தரிப்பித்தல் தேவனிடமிருந்து ஒரு வரம். நமது இரட்சிப்புக்காக பரலோக பிதாவின் திட்டத்தைப்பற்றி இந்த நியமத்தில் நாம் கற்றுக்கொண்டு, தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள நாம் உடன்படிக்கைகளைச் செய்கிறோம். நாம் செய்கிற உடன்படிக்கைகளுக்கு நாம் உண்மையுள்ளவர்களாயிருந்தால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

படம்
ஆலயத்தின் முன் தம்பதியர்

மணிலா பிலிப்பைன்ஸ் ஆலயத்தில் நடந்துகொண்டிருக்கிற தம்பதியரின் புகைப்படம் - கிறிஸ்டினா ஸ்மித்

குடும்பங்களை ஒன்றாக முத்திரித்தல்

ஆலயத்தில் நடக்கிற ஒரு திருமணம் முத்திரித்தல் என அழைக்கப்படுகிறது. ஒரு தம்பதியர் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டு தங்களுடைய உடன்படிக்கைகளை அவர்கள் கைக்கொள்ளும்போது அவர்கள் என்றென்றைக்குமாய் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு பிள்ளைகளிருந்தால், அந்த பிள்ளைகளும் அவர்களுடன் முத்திரிக்கப்படுவார்கள். பிள்ளைகள் பெற்ற பிறகு முத்திரிக்கப்பட்ட பெற்றோர், அவர்களுடன் அவர்களுடைய பிள்ளைகள் முத்திரிக்கப்படுகிறார்கள். அவர்கள் நீதியாய் வாழ்ந்தால், நித்தியம் முழுமைக்கும் அவர்கள் ஒரு குடும்பமாக இருப்பார்கள்.

படம்
லிஸ்பன் போர்ச்சுகல் ஞானஸ்நான தொட்டி

லிஸ்பன் போர்ச்சுகல் ஆலய ஞானஸ்நான தொட்டியின் புகைப்படம் - லெஸ்லி நில்சன்

தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் ஆலயப் பணி.

நம் முன்னோர்களைப்பற்றி கண்டுபிடிக்க நாம் குடும்ப வரலாறு பணியைச் செய்கிறோம். பின்னர் அவர்களின் சார்பாக நாம் ஆலயப் பணியைச் செய்கிறோம். உயிரோடிருப்பவர்களுக்குத் தேவையான அனைத்து நியமங்களையும் அவர்களுக்காக நாம் நடப்பிக்கிறோம்: ஞானஸ்நானம், திடப்படுத்துதல், ஆசாரியத்துவத்தைப் பெறுதல் (ஆண்களுக்காக), தரிப்பித்தல் மற்றும் முத்திரித்தல். இந்த நியமங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என பின்னர் அவர்கள் தீர்மானிக்கலாம். இந்த வழியில், தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கமுடியும்.

படம்
ஆலயத்தின் முன் குடும்பம்

பிலடெல்பியா பென்சில்வேனியா ஆலயத்தின் முன் குடும்பத்தின் புகைப்படம் - கோடி பெல்

ஆலயப் பணியின் ஆசீர்வாதங்கள்

ஆலயத்தில் நாம் செய்கிற உடன்படிக்கைகளை நாம் கைக்கொண்டால், நாம் ஆசீர்வதிக்கப்படுவோம், பாதுகாக்கப்படுவோம், பெலப்படுத்தப்படுவோம். நம்முடன் ஆசாரியத்துவ வல்லமையை நாம் பெறுவோம். நமது குடும்பங்கள் என்றென்றும் ஒன்றுசேர்ந்திருக்கும்.

சமாதானம் மற்றும் வெளிப்படுத்தலின் இடமாகவும் ஆலயமிருக்கிறது. நாம் ஆலயப் பணி செய்யும்போது, ஆவிக்குரிய வழிநடத்துதலை நாம் பெறமுடியும் மற்றும் தேவ அன்பை உணரமுடியும்.

அச்சிடவும்