என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
டிசம்பர் 2–8: “அவர்களை நல்வழியில் வைத்திருக்க” மரோனி 1–6


“டிசம்பர் 2–8: ‘அவர்களை நல்வழியில் வைத்திருக்க’ மரோனி 1–6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“டிசம்பர் 2–8. மரோனி 1–6,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024(2023)

மார்மன் தண்ணீர்களில் ஆல்மா ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

மினர்வா கே. டெய்செர்ட் (1888–1976), Alma Baptizes in the Waters of Mormon (மார்மன் தண்ணீர்களில் ஆல்மா ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்,) 1949–1951, oil on masonite, 35⅞ x 48 inches. ப்ரிகாம் யங் பல்கலைக்கழக கலை அருங்காட்சியகம், 1969.

டிசம்பர் 2–8: “அவர்களை நல்வழியில் வைத்திருக்க”

மரோனி 1–6

அவனுடைய தகப்பன் எழுதிய நேபியரின் பதிவேட்டை முடித்த பின்னர், யாரேதியரின் பதிவேட்டை சுருக்கி எழுதிய பின்னர், பதிவேட்டை காத்துக்கொள்ளும் வேலை முடிந்ததென மரோனி நினைத்தான் (மரோனி 1:1 பார்க்கவும்). முற்றிலும் அழிக்கப்பட்ட இரண்டு தேசங்களைப்பற்றி இன்னும் அதிகமாக சொல்ல என்னவிருக்கிறது? ஆனால் மரோனி, நமது காலங்களைப் பார்த்தான் (மார்மன் 8:35 பார்க்கவும்), மற்றும் “எதிர்காலத்தில் எப்போதாவது, பிரயோஜனமாயிருக்கும் பொருட்டு, இன்னும் சிலவற்றை எழுதும்படி”(மரோனி 1:4) அவன் உணர்த்தப்பட்டான். ஆசாரியத்துவ நியமங்களைப்பற்றியும் பொதுவாக மதத்தைப்பற்றியும் குழப்பத்தைக் கொண்டுவந்து மதமாறுபாடு பரவலாக வந்துகொண்டிருக்கிறதென அவன் அறிவான். திருவிருந்து, ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரத்தை அருளுதல் மற்றும் “[நமது] விசுவாசத்தைத் துவங்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிற கிறிஸ்துவின் தகுதிகளின்மேல் மட்டுமே சார்ந்திருந்து [ஒருவருக்கொருவரை] சரியான பாதையில் வைத்திருக்கிற” சகவிசுவாசிகளுடன் கூடிச்சேர்தலின் ஆசீர்வாதங்களைப்பற்றிய விவரங்களை இதனால்தான் அவன் கொடுத்தான் (மரோனி 6:4). “அவன் இன்னும் சிலவற்றை எழுதும்படி” (மரோனி 1:4) மரோனியின் உயிரை கர்த்தர் பாதுகாத்தது இதைப்போன்ற விலையேறப்பெற்ற உள்ளுணர்வுகளுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க நமக்கு காரணமாயிருக்கிறது.

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

மரோனி 1

என்னைச் சுற்றிலும் துன்மார்க்கம் இருப்பினும் நான் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடியும்.

மரோனி 1ஐ நீங்கள் வாசிக்கும்போது, கர்த்தரிடத்திலும் அவருடைய அழைப்பிற்கும் மரோனியின் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்கு எது உணர்த்துகிறது? ஒரு நபர் “கிறிஸ்துவை மறுதலிக்க” சில வழிகள் யாவை? (மரோனி 1:2–3). நீங்கள் சோதனைகளையும் எதிர்ப்பையும் சந்திக்கும் போதும்கூட, இயேசு கிறிஸ்துவில் இதைப்போன்ற விசுவாசத்தை நீங்கள் எவ்வாறு காட்டலாம் என்று சிந்தியுங்கள்.

மரோனி 2–6

கர்த்தர் கட்டளையிட்டதைப்போல, ஆசாரியத்துவ நியமங்கள் நிர்வகிக்கப்படவேண்டும்.

இந்த அதிகாரங்களை எழுதும் போது மரோனி உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருந்தான். நியமங்களை எவ்வாறு நிறைவேற்றுவது போன்ற நிர்வாக விவரங்களைப் பற்றி எழுத அவன் ஏன் அக்கறைகாட்டினான்? மரோனி 2:–6, நீங்கள் வாசிக்கும்போது இதைப்பற்றி சிந்தியுங்கள். இந்த விவரங்கள் கர்த்தருக்கு ஏன் முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் படிப்புக்கு வழிகாட்டக்கூடிய சில கேள்விகள் இதோ:

திடப்படுத்தல் (மரோனி 2; 6:4).திடப்படுத்தல் நியமத்தைப்பற்றி இரட்சகரின் அறிவுரைகள் மரோனி 2:2ல் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? “பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நடப்பிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுதல்” என்றால் என்ன என்பதை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்? (மரோனி 6:4).

ஆசாரியத்துவ நியமம் (மரோனி 3).ஆசாரியத்துவத்திற்கு நியமிக்கப்பட ஆயத்தமாயிருக்கிற ஒருவருக்கு உதவக்கூடிய எதை இந்த அதிகாரத்தில் நீங்கள் காண்கிறீர்கள்? நியமத்தை நடப்பிக்க ஒருவருக்குதவக்கூடிய எதை நீங்கள் காண்கிறீர்கள்?

திருவிருந்து (மரோனி 4–5; 6:6).திருவிருந்தை உங்கள் வாரத்தின் ஆவிக்குரிய சிறப்பம்சமாக மாற்ற நீங்கள் என்ன செய்யலாம்?

ஞானஸ்நானம் (மரோனி 6:1–3).ஞானஸ்நானம் பெறுவதற்கான தகுதிகளைத் தொடர்ந்து அடைய நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

இளம் பெண் ஆசீர்வாதம் பெறுதல்

நியமங்கள் எவ்வாறு நடப்பிக்கப்படவேண்டுமென இயேசு போதித்தார்.

நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்ற அடிப்படையில், நீங்கள் சிந்திக்கிற வழிகளை, அதில் பங்கேற்பதை அல்லது இந்த நியமங்களுக்காக மற்றவர்களை ஆயத்தப்படுத்துதலைப்பற்றி நீங்கள் எவ்வாறு மாற்றுவீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:20 ஐயும் பார்க்கவும்.

பாத்திர-நடிப்பு. நீங்கள் கற்றுக்கொண்டதை நினைவில் வைத்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த வழி, அதை மற்றவர்களுக்கு விளக்குவதாகும். எடுத்துக்காட்டாக, இது போன்ற பாத்திர நடிப்பு காட்சிகளை முயற்சிக்கவும்: ஒரு சிநேகிதி ஞானஸ்நானம் பெறத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. அவளுக்கு உதவ மரோனி 6ஐ எப்படிப் பயன்படுத்துவீர்கள்?

மரோனி 4–5

திருவிருந்தை எடுத்துக்கொள்வது இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கி வர உதவுகிறது.

நீங்கள் பல முறை திருவிருந்து ஜெபங்களைக் கேட்டிருக்கலாம், ஆனால் வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் எவ்வளவுதரம் கவனமாக சிந்திக்கிறீர்கள்? ஒருவேளை நீங்கள் நினைவிலிருந்து இரண்டு திருவிருந்து ஜெபங்களை எழுத முயற்சி செய்யலாம். நீங்கள் எழுதியதை மரோனி 4:3 மற்றும் 5:2 உடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த ஜெபங்களைப் பற்றி நீங்கள் முன்பு கவனிக்காத எதையும் கவனித்தீர்களா?

மரோனி 6:4–9

வேத பாட வகுப்பு சின்னம்
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் ஒருவருக்கொருவரின் ஆத்துமாக்களுக்காக அக்கறை காட்டுகிறார்கள்.

கிறிஸ்துவைப் பின்பற்ற தெரிந்து கொள்ளுதல் ஒரு தனிப்பட்ட விஷயம், ஆனால் சக விசுவாசிகள் நம்மை “சரியான வழியில்” வைத்திருக்க உதவ முடியும் (மரோனி 6:4–5). மரோனியின் காலத்தில் சபை உறுப்பினர்கள் ஒருவரையொருவர் பலப்படுத்த என்ன செய்தார்கள்? மரோனி 6:4–9, நீங்கள் வாசிக்கும்போது, “கிறிஸ்துவினுடைய சபையின் ஜனங்களோடே எண்ணப்பட்டதிலிருந்து” (மரோனி 6:4) வருகிற ஆசீர்வாதங்களை சிந்திக்கவும்.

உங்கள் தொகுதி அல்லது கிளையில் கலந்துகொள்ளும் நபர்களைப் பற்றியும் நீங்கள் சிந்திக்கலாம். உங்கள் அன்பின் சிறப்புத் தேவையுடையவர்கள் யாராவது இருக்கிறார்களா, ஒருவேளை புதியவர் அல்லது சமீபத்தில் திரும்பி வருபவர்? தலைவர் டாலின் எச். ஓக்ஸின்’ “ஒரு சபைக்கான தேவை” என்ற செய்தியின் பகுதி 1ல் நீங்கள் சில உணர்த்துதலை காணலாம்.(லியஹோனா, நவ. 2021, 24–25).

“தேவனின் நல்வசனத்தினால் போஷிக்கப்படுதல்” (மரோனி 6:4) என்பதன் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் சிந்திக்கும்போது, ஒரு நாற்று அல்லது குழந்தைக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தைப் பற்றியும் , அது புறக்கணிக்கப்பட்டால் என்ன ஆகும் என்று சிந்திப்பது உதவியாக இருக்கலாம். ஆவிக்குரிய பிரகாரமாக மற்றவர்களை “போஷிக்க” உதவுவது பற்றிய யோசனைகளுக்கு மரோனி 6:4–9 ஐத் தேடுங்கள். உங்களைப் போஷிக்க சக சீடர்கள் எப்படி உதவியிருக்கிறார்கள்?

“கிறிஸ்துவின் சபையின் ஜனங்களுக்குள் எண்ணப்பட்டிருப்பது” மற்றும் சபைக் கூட்டங்களில் “அடிக்கடி கூடுவது” ஏன் முக்கியம் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீங்கள் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினராக இருப்பதற்கு ஏன் நன்றியுள்ளவர்களாயிருக்கிறீர்கள் என்பதை எப்படி விளக்குவீர்கள்? (தலைவர் டாலின் எச். ஓக்ஸின் “ஒரு சபைக்கான தேவை”. செய்தியின் பிறபாகங்களைப் பார்க்கவும்).

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

மரோனி 2–6

பரிசுத்த ஆவியானவர் ஒரு பரிசுத்த வரம்.

  • மரோனி 2–6 இல் பரிசுத்த ஆவியானவர் அல்லது ஆவி பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. அவரைக் குறிப்பிடும் ஒவ்வொரு வசனத்தையும் கண்டுபிடித்து, அந்த வசனங்களைப் படித்து, பரிசுத்த ஆவியைப் பற்றி அவர்கள் கற்றுக்கொள்வதைப் பட்டியலிடும்படி உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் கேட்கலாம். நீங்கள் ஆவியின் செல்வாக்கை உணர்ந்த அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

மரோனி 4–5

நான் எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவை நினைவுகூர்வேன் என்பதைக் காட்டவே நான் திருவிருந்தை எடுத்துக்கொள்கிறேன்.

  • உங்கள் குழந்தைகளுடன் திருவிருந்து ஜெபங்களை வாசிப்பது, திருவிருந்துடன் அதிக அர்த்தமுள்ள அனுபவங்களைப் பெறுவது பற்றிய விவாதத்திற்கு வழிவகுக்கும். ஒரு நண்பர் முதன்முறையாக திருவிருந்து கூட்டத்திற்கு வருகிறார் என்று கற்பனை செய்வது அவர்களுக்கு உதவக்கூடும். திருவிருந்து என்றால் என்ன, அது ஏன் புனிதமானது என்பதை நம் நண்பருக்கு எப்படி விளக்கலாம்? உங்கள் பிள்ளைகளின் விளக்கங்களில் மரோனி 4 அல்லது 5ல் உள்ளவற்றைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும்.

  • திருவிருந்தின் போது நீங்கள் பயபக்தியுடன் உட்கார்ந்து பயிற்சி செய்யலாம்.

மரோனி 6:1–3

ஞானஸ்நானம் பெற நான் தயாராக முடியும்.

  • யார் ஞானஸ்நானம் பெற முடியும்? மரோனி 6:1–3 இல் இந்தக் கேள்விக்கான பதில்களைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். “நொறுங்குண்ட இருதயத்தையும், நருங்குண்ட ஆவியையும்” கொண்டிருத்தல் என்றால் என்ன அர்த்தம்? (மரோனி 6:2). ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்பட இது நமக்கு எவ்வாறு உதவுகிறது? நீங்கள் எப்படி ஞானஸ்நானம் எடுக்கத் தயாரானீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

மரோனி 6:4–6, 9

திருவிருந்தை எடுத்துக்கொண்டு ஒருவரையொருவர் ஆதரிக்க நாம் சபைக்குச் செல்கிறோம்.

  • நீங்கள் ஏன் சபைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று உங்கள் பிள்ளைகளுக்கு தெரியுமா? மரோனி 6:4–6, 9ஐ வாசிப்பது, சபையில் நாம் செய்யும் சில விஷயங்களை ஒன்றாகக் கலந்தாலோசிக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கும். ஒருவேளை அவர்கள் இந்த விஷயங்களைச் செய்வதைப் போன்ற படங்களை வரையலாம் (ஜெபம் செய்தல், கற்பித்தல், பாடுதல் மற்றும் திருவிருந்து எடுத்துக்கொள்வது போன்றவை).

  • மரோனி 6:4ஐ ஒன்றாக வாசித்த பிறகு, நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஊட்டமளிக்கும் உணவுகளின் படங்கள் அல்லது உதாரணங்களைப் பார்த்து, நம் உடலைப் போஷிப்பதை “தேவனின் நல்வசனத்தினால் போஷிக்கப்படுவதற்கு” ஒப்பிடலாம்.

    3:33

    Children Sharing the Gospel

ஒரு குகையில் மரோனி ஒளிந்திருத்தல்

Moroni in the Cave (குகையில் மரோனி) – ஜோர்ஜ் கோக்கோ