“டிசம்பர் 9–15: ‘கிறிஸ்து உன்னை உயர்த்துவாராக’ மரோனி 7–9,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)
“டிசம்பர் 9–15. மரோனி 7–9,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2023)
டிசம்பர் 9–15: “கிறிஸ்து உன்னை உயர்த்துவாராக”
மரோனி 7–9
இன்று நாம் மார்மன் புஸ்தகம் என அறிகிற பதிவேட்டை மரோனி முடிப்பதற்கு முன், தன் சொந்த கடைசி வார்த்தைகளுடன், தன் தகப்பனாகிய மார்மனிடமிருந்து பெற்ற மூன்று செய்திகளை அவன் பகிர்ந்தான்: “சமாதானமுள்ள கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்கு” (மரோனி 7:3) ஒரு செய்தியும், மற்றும் மரோனிக்கு மார்மன் எழுதிய இரு நிருபங்களும். அவனது நாள் மற்றும் நமது நாளுக்கு இடையே இருந்த அழிவுகளின் ஒற்றுமைகளை அவன் பார்த்ததினிமித்தம், மார்மன் புஸ்தகத்தில் இச்செய்திகளை ஒருவேளை மார்மன் சேர்த்திருக்கலாம். இந்த வார்த்தைகள் எழுதப்பட்டபோது, நேபிய ஜனம் முழுவதுமாக இரட்சகரிடமிருந்து விலகிப்போய்க் கொண்டிருந்தனர். அவர்களில் அநேகர் “ஒருவருக்கொருவர் மீதான அன்பை அவர்கள் இழந்தனர்” மற்றும் “நன்மையைத் தவிர மற்றனைத்திலும் பிரியப்பட்டிருந்தனர்” (மரோனி 9:5, 19). இருப்பினும், நம்பிக்கை என்பது உலகின் பிரச்சினைகளைப் புறக்கணிப்பது அல்லது அப்பாவியாக இருப்பது என்று அர்த்தமல்ல என நமக்குப் போதித்து, மார்மன் இன்னும் நம்பிக்கைக்கான காரணத்தைக் கண்டுபிடித்தான். நம்பிக்கை என்பது பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைப்பதைக் குறிக்கிறது, அவருடைய வல்லமை அந்தப் பிரச்சினைகளை விட அதிகமாகவும் நிலைத்தும் இருக்கிறது. அதாவது “எல்லா நன்மைகளையும் ஏற்றுக்கொள்வதாகும்” (மரோனி 7:19). அதாவது இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியை அனுமதித்து, “அவருடைய மகிமை, நித்திய ஜீவன் ஆகியவற்றில் நம்பிக்கை உன் மனதில் தங்குவதாகும்” (மரோனி 9:25).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கிறிஸ்துவின் ஒளி நன்மை தீமையை அறிய எனக்கு உதவுகிறது.
“தேவனிடமிருந்து அல்லது என் சொந்த எண்ணங்களிலிருந்து ஒரு உணர்வு வருகிறதா என்பதை நான் எப்படி அறிவேன்?” என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். அல்லது “இன்று இவ்வளவு ஏமாற்றத்துக்கிடையே, எது சரி எது தவறு என்று நான் எப்படி அறிந்து கொள்வது?” மரோனி 7ல் உள்ள மார்மனின் வார்த்தைகள், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க நாம் பயன்படுத்தக்கூடிய பல கொள்கைகளை நமக்கு வழங்குகிறது. குறிப்பாக வசனங்கள் 12–20ல் அவைகளைத் தேடவும். இந்த வாரம் நீங்கள் எதிர்கொள்கிற செய்திகளையும் அனுபவங்களையும் மதிப்பிடுவதற்கு இந்த சத்தியங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
கிறிஸ்துவினிமித்தம், நான் “எல்லா நன்மையான காரியத்தையும் பற்றிக்கொள்ளலாம்.”
இன்று முக்கியமாகத் தோன்றும் ஒரு கேள்வியை மார்மன் கேட்டான்: “எப்படி ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் பற்றிக்கொள்ள முடியும்?” (மரோனி 7:20). பின்னர் அவன் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம், நம்பிக்கை மற்றும் தயாளம் பற்றி கற்பித்தான். 20–48 வசனங்களை நீங்கள் வாசிக்கும்போது, ஒவ்வொரு பண்பும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து வரும் நற்குணத்தைக் கண்டறியவும், “பற்றிக்கொள்ளவும்” உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் சீடருக்கு இந்த பண்புகள் ஏன் அவசியம்?
“தயாளத்துவம் கிறிஸ்துவின் தூய்மையான அன்பு.”
இயேசு கிறிஸ்துவில் உள்ள நமது விசுவாசமும் நம்பிக்கையும் நம்மைத் தொண்டு செய்ய வழிநடத்துகிறது என மார்மன் கவனித்தான். ஆனால் எது தயாளத்துவம்? நீங்கள் தயாளம் … என்று எழுதி, பிறகு மரோனி 7:44–48 வாசித்து, வாக்கியத்தை முடிக்கக்கூடிய வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களைத் தேடலாம். நீங்கள் முடித்ததும், தயாளத்துவம் என்ற சொல்லை இயேசு கிறிஸ்து என்ற பெயருடன் மாற்றவும். இது இரட்சகரைப் பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது? இயேசு கிறிஸ்து தனது தூய அன்பை எவ்வாறு வெளிப்படுத்தினார்? வேதங்களிலிருந்தும் உங்கள் சொந்த வாழ்க்கையிலிருந்தும் உதாரணங்களை நினைத்துப் பாருங்கள்.
தலைவர் டாலின் எச். ஓக்ஸ் குறிப்பிட்டார்: “தயாளத்துவம் ஒருக்காலும் ஒழியாது என்பதற்கான காரணமும், நன்மையின் மிக முக்கிய செயல்களைவிடவும் தயாளத்துவம் உயர்வானது என்பதற்கான காரணமும் ‘தயாளத்துவம் கிறிஸ்துவின் தூய்மையான அன்பு’ (மரோனி 7:47), என்பது ஒரு செயலல்ல, ஆனால் ஒரு நிபந்தனை அல்லது இருக்கிற நிலை. … தயாளம் உங்கள் சீஷத்துவத்தை எவ்வாறு பாதிக்கிறது? நீங்கள் எவ்வாறு தயாளத்தோடு இசைந்திருக்க வேண்டும்? (வசனம் 46).
1 கொரிந்தியர் 13:1–13; ஏத்தேர் 12:33–34ஐயும் பார்க்கவும்.
கோபம் துக்கத்திற்கும் துன்பத்திற்கும் வழிவகுக்கிறது.
மரோனி 7:44-48 இல் உள்ள மார்மனின் அன்பின் செய்திக்கு மாறாக, மரோனிக்கு மார்மனின் இரண்டாவது நிருபத்தில் இன்று பலர் போராடும் —கோபத்துக்கு எதிரான எச்சரிக்கைகள் உள்ளன. மரோனி 9:3–5இன் படி, நேபியர்களின் கோபத்தின் சில விளைவுகள் என்ன? 3–5, 18–20, 23 வசனங்களிலிருந்து நாம் என்ன எச்சரிக்கைகளை பெறலாம்?
என்னுடைய சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது கிறிஸ்துவில் நான் நம்பிக்கை வைக்கமுடியும்.
அவன் பார்த்த துன்மார்க்கத்தை விவரித்த பிறகு மார்மன் தன் குமாரனிடத்தில் துக்கப்படாதிருக்குமாறு சொன்னான். மார்மனின் நம்பிக்கையின் செய்தியில் எது உங்களைக் கவர்கிறது? கிறிஸ்து “[உங்களை] உயர்த்துவது” என்றால் என்ன என நினைக்கிறீர்கள்? கிறிஸ்துவின் எந்த தன்மைகள் மற்றும் அவரது சுவிசேஷ கொள்கைகள் “உங்கள் மனதில் பதிந்து” உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது? (மரோனி 9:25).
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
இயேசு கிறிஸ்துவில் எனக்கு விசுவாசம் இருந்தால், நான் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோஅதை என்னால் செய்ய முடியும்.
-
கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது எப்படி இந்த உதாரணங்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது? இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும்போது நாம் என்ன செய்ய முடியும் என்று தேடி, நீங்களும் உங்கள் குழந்தைகளும் மரோனி 7:33 வாசிக்கலாம். தம்முடைய சித்தத்தைச் செய்ய தேவன் உங்களை ஆசீர்வதித்தபோதிருந்த அனுபவங்களை நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.
இயேசு கிறிஸ்துவை நம்புவது எனக்கு நம்பிக்கையை அளிக்கும்.
-
நீங்கள் மரோனி 7:41ஐ உங்கள் பிள்ளைகளுக்கு வாசிக்கும்போது, நாம் நம்பிக்கையாயிருக்க வேண்டும் என்று மார்மன் சொன்னதைக் கேட்கும்போது அவர்கள் கைகளை உயர்த்தலாம். இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாக நீங்கள் உணரும் நம்பிக்கையைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்.
-
நீங்களும் உங்கள் குழந்தைகளும் ஏதோவொன்றில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி நினைக்கலாம். ஒருவேளை உங்கள் பிள்ளைகள் அந்த நபருக்கு ஒரு படத்தை வரையலாம், அது அவருக்கு அல்லது அவளுக்கு இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதை நினைவூட்டலாம்.
கடினமான சோதனைகளின் போதும் நான் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருக்க முடியும்.
-
இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க, நீங்கள் ஒரு தெளிவான கொள்கலனில் தண்ணீரை நிரப்பி அதில் இரண்டு பொருட்களை விடலாம்—ஒன்று மிதக்குமாறு மற்றும் ஒன்று மூழ்குமாறு. மரோனி 7:40–41 மற்றும் 9:25–26 ஆகியவற்றை நீங்கள் ஒன்றாகப் படிக்கும்போது, நம்பிக்கை நமக்கு என்ன செய்கிறது என்பதை உங்கள் பிள்ளைகள் தேடலாம். பின்னர் அவர்கள் மிதக்கும் பொருளை கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட ஒரு நபருடன் ஒப்பிடலாம். நாம் கடினமான சோதனைகளை எதிர்கொள்ளும்போது அவர் எவ்வாறு “[நம்மை] உயர்த்துகிறார்”? உங்கள் பிள்ளைகள் இரட்சகரையும் அவருடைய ஊக்கமளிக்கும் போதனைகளையும் “[தங்கள்] மனதில் என்றென்றும்” வைத்திருப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்க உதவுங்கள்.
“தயாளத்துவம் கிறிஸ்துவின் தூய்மையான அன்பு.”
-
நீங்கள் மரோனி 7:47ஐப் படிக்கலாம் அல்லது சுருக்கமாகக் கூறலாம் மற்றும் ஒருவரிடம் அன்பைக் காட்டும் படங்களை வரைய உங்கள் குழந்தைகளை அழைக்கலாம். இயேசுவைப் போல மற்றவர்களை நேசிப்பதை அவர்களுக்கு நினைவூட்டும் இடத்தில் தங்கள் படத்தை வைக்குமாறு பரிந்துரைக்கவும்.
-
உங்கள் பிள்ளைகளின் வாழ்வில் கிறிஸ்துவின் தூய அன்பைத் தேடவும் வளர்க்கவும் நீங்கள் எவ்வாறு ஊக்குவிக்கலாம்? இயேசு தயாளம் காட்டிய விதங்களைப் பற்றி சிந்திக்க நீங்கள் அவர்களுக்கு உதவலாம் (உதாரணமாக லூக்கா 23:34; யோவான் 8:1–11; ஏத்தேர் 12:33–34 பார்க்கவும்). அவரது எடுத்துக்காட்டை நாம் எப்படி பின்பற்றலாம்?