என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
டிசம்பர் 23–29: “அவர் தமது ஜனத்தை மீட்க உலகத்திற்கு வருவார்” கிறிஸ்துமஸ்


கிறிஸ்துமஸ்: “அவர் தமது ஜனத்தை மீட்க உலகத்திற்கு வருவார்” “கிறிஸ்துமஸ்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“டிசம்பர் 23–29. கிறிஸ்துமஸ்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024(2023)

தொழுவத்தில் யோசேப்பும், மரியாளும், குழந்தை இயேசுவும்

இதோ தேவ ஆட்டுக்குட்டி – வால்ட்டர் ரானே

டிசம்பர் 23–29: “அவர் தமது ஜனத்தை மீட்க உலகத்திற்கு வருவார்”

கிறிஸ்துமஸ்

நேபியிலிருந்து மரோனிவரை ஒவ்வொரு மார்மன் புஸ்தக தீர்க்கதரிசியும் புஸ்தகத்தின் தலைப்பு பக்கத்தில் சுருக்கிச் சொல்லப்பட்டுள்ள பரிசுத்த நோக்கத்துக்காக ஒப்புக்கொடுத்தார்கள்: “இயேசுவே கிறிஸ்து என [எல்லா ஜனத்தையும்] உறுதிப்படுத்தவே.” ஒரு தீர்க்கதரிசி அவரை ஒரு அநித்தியத்துக்கு முந்திய ஆவி எனப் பார்த்தான், மற்றொருவன் அவரது அநித்திய ஊழியத்தை தரிசனத்தில் பார்த்தான். அவரது பிறப்பு மற்றும் அவரது மரணத்தைப்பற்றிய அடையாளங்களை அறிவிக்க ஒருவன் சுவற்றின் மீது நின்றான், மற்றொருவன் அவரது உயிர்த்தெழுந்த சரீரத்தின் முன் முழங்கால்படியிட்டான், அவரது கைகளிலும், பாதங்களிலும் விலாவிலும் தொட்டான். அவர்கள் அனைவரும் இந்த அத்தியாவசிய சத்தியத்தை அறிந்திருந்தனர்: “வரவிருக்கிற இயேசு கிறிஸ்துவின் பாவநிவர்த்தியாக்கும் இரத்தத்தினால் மாத்திரம் மனுஷன் இரட்சிக்கப்பட முடியுமே ஒழிய வேறு எந்த வழியாலும் முறையாலும் கூடாது” (ஏலமன் 5:9).

ஆகவே இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், தன் குமாரனை அனுப்பியதில் தேவனின் நன்மையையும் அன்பையும் உலக முழுவதிலுமுள்ள விசுவாசிகள் கொண்டாடும்போது, மார்மன் புஸ்தகம் எவ்வாறு கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தியிருக்கிறது என சிந்தியுங்கள். நீங்கள் அவரது பிறப்பைப்பற்றி சிந்திக்கும்போது, அவர் ஏன் வந்தார், அவரது வருகை எவ்வாறு உங்கள் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது என சிந்தியுங்கள். பின்பு நீங்கள் உங்களுக்கு இயேசு கிறிஸ்து கொடுக்கிற வரமான கிறிஸ்துமஸின் மகிழ்ச்சியை, அனுபவிக்கலாம்.

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

எனது இரட்சகராயிருக்க இயேசு கிறிஸ்து பிறந்தார்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் புதிய ஏற்பாட்டிலுள்ள இரட்சகரின் பிறப்பைப்பற்றிய கதையை வாசிப்பது பாரம்பரியமாகும், ஆனால் மார்மன் புஸ்தகத்தில் இந்த பரிசுத்த நிகழ்வைப்பற்றிய நெருடும் தீர்க்கதரிசனங்களையும் காண முடியும். உதாரணமாக, இரட்சகரின் பிறப்பு மற்றும் ஊழியத்தைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் 1 நேபி 11:13–36; மோசியா 3:5–10; மற்றும் ஏலமன் 14:1–13ல் காணப்படுகின்றன. அந்த பாகங்களை நீங்கள் வாசிக்கும்போது அவரது பிறப்பின் அடையாளங்களுக்கான சின்னங்களைப்பற்றி சிந்திக்கும்போது, இயேசு கிறிஸ்துவைப்பற்றிய என்ன எண்ணங்கள் உங்களுக்கு வருகின்றன? இந்த தீர்க்கதரிசிகளின் சாட்சிகள் கிறிஸ்து மற்றும் அவரது ஊழியத்தைப்பற்றிய உங்கள் சாட்சியை எவ்வாறு பெலப்படுத்துகிறது?

கிறிஸ்துமஸ் சமயத்தில் இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்த உதவும் வேறு சில பரிந்துரைகள் இங்கே:

  • பிரதான தலைமையின் முந்தைய கிறிஸ்துமஸ் பக்திப்பாடல்களின் செய்திகளை சுவிசேஷ நூலகத்தில் நீங்கள் பார்க்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை பரப்ப இந்த செய்திகளையும் இசையையும் பகிர்ந்து கொள்வதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

  • ஒருவருக்கு சேவை செய்வது அல்லது கிறிஸ்துமஸ் பாடல்களை ஒன்றாக பாடுவது போன்ற கிறிஸ்துவின் ஆவியை உணர கிறிஸ்துமஸுக்கு வழிநடத்தும் நாட்களில் உங்கள் குடும்பத்தினர் செய்யக்கூடிய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவதை கருத்தில் கொள்ளவும். சில ஆலோசனைகளுக்கு LighttheWorld.org பார்க்கவும்.

மேலும் மத்தேயு 1:18–25; 2; லூக்கா 2; 3 நேபி 1:4–22 பார்க்கவும்.

இயேசு கிறிஸ்துவே உலகத்தின் மீட்பர்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நாம் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் அவருடைய பாநிவர்த்தியாகும். அந்த தியாகத்தின் காரணமாக, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் அவர் நம்மை காப்பாற்ற முடியும், துன்பங்களில் நம்மை ஆறுதல்படுத்துகிறார், மேலும் “அவரில் பூரணப்படுத்தப்படுவதற்கு” நமக்கு உதவுகிறார் (மரோனி 10:32). உங்களை மீட்க இரட்சகரின் வல்லமையைப்பற்றி இந்த ஆண்டில், மார்மன் புஸ்தகத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்? ஏதேனும் விபரங்கள் அல்லது போதனைகள் உங்களுக்கு தனித்து நிற்கின்றனவா? இரட்சகரின் மீட்பின் ஊழியத்தைப்பற்றி பின்வரும் எடுத்துக்காட்டுகள் உங்களுக்கு என்ன போதிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும்: 2 நேபி 2:6; ஆல்மா 7:7–13; 11:40; மற்றும் ஏலமன் 5:9; 14:16–17. உங்கள் நன்றியுணர்வை அவருக்குக் காட்ட நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுவதாக உணருகிறீர்கள்?

வேத பாட வகுப்பு சின்னம்
மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சி பகருகிறது.

“இயேசு கிறிஸ்துவின் மற்றுமொரு ஏற்பாடு” என்பது மார்மன் புஸ்தகத்துக்கு துணைத்தலைப்பு என்பதை விட அதிகமானது, அது, அதன் தெய்வீக நோக்கத்தைப்பற்றிய அறிக்கை. கிறிஸ்துவைப்பற்றி சாட்சியளிக்க மார்மன் புஸ்தகத்தின் ஊழியத்தைப்பற்றி பின்வரும் வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதைச் சிந்திக்கவும்: 1 நேபி 6:4; 19:18; மற்றும் 2 நேபி 25:23, 26; 33:4, 10.

இவ்வருடம் மார்மன் புஸ்தகத்தை படித்தது எவ்வாறு உங்களைக் கிறிஸ்துவுக்கு நெருக்கமாக கொண்டுவந்திருக்கிறது என உங்கள் குறிப்பிதழில் பதிவு செய்வதைக் கருத்தில் கொள்ளவும். பின்வரும் உணர்த்துதல்கள் உதவக்கூடும்:

  • “இந்த வருடம் இரட்சகரைப்பற்றி புதிதாக நான் கற்றுக்கொண்ட அல்லது உணர்ந்த ஒன்று …”

  • “மார்மன் புஸ்தகத்தில் இரட்சகரைப் பற்றி கற்றுக்கொண்டது நான் இருந்த வழியை மாற்றியது”

  • “மார்மன் புஸ்தகத்தில் எனக்கு பிடித்த நபர் [அல்லது கதை] இரட்சகர் … எனக்கு போதித்தது …”

மார்மன் புஸ்தகத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அறிய ஒருவர் ஆசீர்வதிக்கப்படலாம். உங்கள் அனுபவங்களையும் சாட்சியங்களையும் நீங்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம்? கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு நகலை வழங்க நீங்கள் உணரத்துதல் பெறலாம். மார்மன் புஸ்தகம் பயன்பாடு பகிர்வை எளிதாக்குகிறது.

ஆயர் ஜெரால்ட் காசே மார்மன் புஸ்தகத்திலிருக்கும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய பல சத்தியங்களை பட்டியலிட்டுள்ளார்.இயேசு கிறிஸ்து பற்றிய ஜீவிக்கும் சாட்சி, லியஹோனா, மே 2020, 39–40)ஐப் பார்க்கவும். நீங்கள் அவருடைய பட்டியலைப் பார்த்து, இந்த சத்தியங்கள் ஒவ்வொன்றும் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன, அல்லது மாற்றக்கூடும், என சிந்திக்கலாம்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

இந்த ஞாயிற்றுக்கிழமை மாதத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஆரம்ப வகுப்பு ஆசிரியர்கள் “பிற்சேர்க்கை B: தேவனின் உடன்படிக்கைப் பாதையில் வாழ்நாள் முழுவதற்குமாக குழந்தைகளைத் தயார்படுத்துதல்” இல் கற்றல் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து எனக்கு பரலோக பிதாவின் பரிசு.

  • தம் குமாரனை அனுப்பி பரலோக பிதா நமக்குக் கொடுத்த வரத்தில் கவனம் செலுத்த உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, கிறிஸ்துமஸ் பரிசு போல இயேசு கிறிஸ்துவின் படத்தை நீங்கள் பொதியலாம். அவர்கள் பெற்றிருக்கிற அல்லது பெற நம்புகிற விருப்பமான கிறிஸ்துமஸ் பரிசுகளைப்பற்றி பிள்ளைகளுடன் பேசலாம். பின்பு அவர்கள் கிறிஸ்துவின் படத்தைப் பிரித்து, நமக்கு அவர் எவ்விதம் ஒரு விலைமதிப்பற்ற பரிசாக இருந்திருக்கிறார் என கலந்துரையாடவும். இயேசுவின் பிறப்பினால் நாம் பெற்ற ஆசீர்வாதங்களை விவரிக்கும் சொற்றொடர்களை உங்கள் பிள்ளைகளுக்கு பாடலில் கண்டுபிடிக்க உதவுங்கள்.

எனது இரட்சகராயிருக்க இயேசு கிறிஸ்து பிறந்தார்.

  • இயேசுவின் பிறப்பைப் பற்றி தங்களுக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியடைவார்கள். இரட்சகரின் வாழ்க்கையையும் பாவநிவாரண பலியையும் சித்தரிக்கும் படங்களையும் நீங்கள் பார்க்கலாம். பரலோக பிதா ஏன் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார்?

    தூதன்
  • உங்கள் பிள்ளைகளும் இயேசுவின் பிறப்பு மற்றும் ஊழியத்தைப் பற்றிய தங்கள் சொந்த படங்களை வரைந்து மகிழலாம். 1 நேபி 11:13–23; மோசியா 3:5–10; ஏலமன்14:1–13; and 3 நேபி 1:4–22ல் விவரிக்கப்பட்டுள்ளதை ஒருவேளை அவர்கள் வரையலாம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவர்களுடைய படங்கள் என்ன கற்பிக்கின்றன என்பதை அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  • வேதாகமம் மற்றும் மார்மன் புஸ்தகம் இரண்டும் இயேசுவின் பிறப்பைக் கற்பிக்கின்றன என்பதை வலியுறுத்த, லூக்கா 2:4–14; மத்தேயு 2:1–2; மற்றும் 3 நேபி 1:15, 19–21ல் விவரிக்கப்பட்ட நிகழ்வுகளை நீங்கள் பட்டியலிடலாம். பெத்லகேம், அமெரிக்கா அல்லது இரண்டிலும் என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பதைத் தீர்மானிக்க உங்கள் பிள்ளைகள் இந்த வசனங்களைத் தேடலாம். இயேசுவின் பிறப்பின் இரண்டாவது சாட்சியாக மார்மன் புஸ்தகத்தை வைத்திருப்பதற்கு நாம் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்?

பிள்ளைகள் கதைகளை விரும்புகின்றனர். குழந்தைகளுக்கு சத்தியங்களைக் கற்கவும் நினைவில் கொள்ளவும் உதவும் சிறந்த வழிகளில் ஒன்று கதைகள். நீங்கள் இயேசுவின் பிறப்புக் கதையைப் பகிர்ந்து கொள்ளும்போது, இரட்சகர் மீதான உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்த உதவிய உங்கள் வாழ்க்கையின் கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும்.

மார்மன் புஸ்தகம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி சாட்சி பகருகிறது.

  • நீங்களும் உங்கள் குழந்தைகளும் இந்த ஆண்டு மார்மன் புஸ்தகத்தின் படிப்பை முடிக்கும்போது, இந்தப் பரிசுத்தப் புஸ்தகத்திலிருந்து உங்களுக்குப் பிடித்த கதைகள் அல்லது பத்திகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள இது ஒரு நல்ல நேரமாக இருக்கலாம். இயேசு கிறிஸ்துவைப் பற்றி இந்தக் கதைகள் நமக்கு என்ன கற்பிக்கின்றன என்பதைப் பார்க்க அவர்களுக்கு உதவுங்கள்.

  • நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு இயேசுவின் படத்தைக் கொடுக்கலாம் அல்லது அவர்கள் சொந்தமாக வரையலாம். நீங்கள் 2 நேபி 25:23, 26 வாசிக்கும்போது கிறிஸ்துவின் பெயரைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர்களின் படங்களைப் பிடிக்க அவர்களை அழைக்கவும். மார்மன் புஸ்தகம் நாம் “கிறிஸ்துவில் விசுவாசிக்க” (2 நேபி 25:23) உதவுவதற்காக எழுதப்பட்டது என்று சாட்சி கூறுங்கள்.

ஒரு தரிசனத்தில் கன்னி மரியாளை நேபிக்கு தூதன் காட்டுதல்

Nephi’s Vision of the Virgin Mary (கன்னி மரியாளைப்பற்றிய நேபியின் தரிசனம்)s –ஜூடித் ஏ. மெர்