“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பு
ஏப்ரல் 1829ல் கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகங்கள் 6–9 பெறப்பட்ட மாதத்தில், மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்ப்பது ஜோசப் ஸ்மித்தின் முக்கிய வேலையாயிருந்தது. அந்த அற்புதமான மொழிபெயர்ப்பு முறையைப்பற்றி நமக்குப் பல விவரங்கள் தெரியவில்லை, ஆனால் ஜோசப் ஸ்மித் ஒரு ஞானதிருஷ்டிக்காரர், தேவன் ஆயத்தம் செய்த கருவிகளால் உதவி செய்யப்பட்டார்: கண்ணாடி போன்ற கற்களான ஊரிம் மற்றும் தும்மீம் மற்றும் ஞானதிருஷ்டிக் கல்..
இந்த பதிவேடு எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டதென பின்னர் கேட்கப்பட்டபோது ஜோசப் சொன்னார் “விவரங்கள் அனைத்தையும் உலகிற்குக் கூரும் நோக்கம் அதற்கில்லை” “தேவனின் வரத்தாலும் வல்லமையாலும்” இது மொழிபெயர்க்கப்பட்டதென அவர் வழக்கமாக எளிமையாக சொன்னார்
மொழிபெயர்ப்பு முறையை கண்கண்ட சாட்சிகளிடமிருந்து பின்வரும் அறிக்கைகள் ஜோசப் ஸ்மித்தின் சாட்சியத்தை ஆதரிக்கின்றன.
எம்மா ஸ்மித்
என்னுடைய கணவர் மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்த்துக்கொண்டிருந்தபோது, வார்த்தைக்கு வார்த்தை ஒவ்வொரு வாக்கியங்களையும் அவர் சொல்லக்கேட்டு அதன் ஒரு பகுதியை நான் எழுதினேன், அவரால் உச்சரிக்கமுடியாத பெயர்களுக்கு அல்லது நீண்ட வார்த்தைகளுக்கு அவர் வந்தபோது அவைகளை அவர் அதை ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தார், அவைகளை நான் எழுதிக்கொண்டிருந்தபோது, நான் ஏதாவது எழுத்துப் பிழைகள் செய்திருந்தால், அந்த நேரத்தில் நான் அவற்றை எவ்வாறு எழுதுகிறேன் என்பதைப் பார்ப்பது அவருக்கு சாத்தியமில்லை என்றாலும் அவர் என்னை நிறுத்தி என்னுடைய எழுத்துப்பிழைகளை திருத்துவார். சாரா என்ற வார்த்தையைக்கூட முதலில் அவரால் உச்சரிக்கமுடியவில்லை, ஆனால் எழுத்துக்கூட்டி உச்சரிக்கவேண்டும், அவருக்காக நான் உச்சரிப்பேன்.”
“மடித்து வைப்பதற்கு நான் அவருக்குக் கொடுத்த ஒரு சிறிய கைத்தறி மேஜை துணியால், பெரும்பாலும் மறைக்க எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் தட்டுகள், மேசையில் கிடந்தன. அவைகள் இவ்விதமாக மேசையில் கிடந்ததால், அவைகளின் வெளிப்புறத்தையும் வடிவத்தையும் உணர ஒருமுறை தட்டுகளை நான் தொட்டுப் பார்த்தேன். அவை தடிமனான காகிதத்தைப் போல வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டதாகத் தோன்றியது, மேலும் விளிம்புகளை சில நேரங்களில் கட்டைவிரலால் உயர்த்துவது போல விளிம்புகளை கட்டைவிரலால் ஒருவர் நகர்த்தும்போது ஒரு உலோக ஒலியுடன் சலசலக்கும். …
“மார்மன் புஸ்தகம் தெய்வீக நம்பகத்தன்மையுடையது என்பது என் நம்பிக்கை, எனக்கு அதில் சிறிதும் சந்தேகம் இல்லை. கையெழுத்துப் பிரதிகளின் எழுத்துக்களை உணர்த்துதலில்லாமல் எந்த மனிதனாலும் சொல்லியிருக்க முடியாதென்பதில் நான் திருப்தியடைகிறேன், ஏனெனில், அவருக்கு நான் எழுத்தராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது [ஜோசப்] மணிக்கணக்காக எனக்குச் சொல்லிக்கொண்டிருப்பார், பின்னர் உணவுக்குப் திரும்பியபோது அல்லது, சில தடங்கல்களுக்குப் பின்னர், கையெழுத்துப் பிரதியைப் பார்க்காமல் அல்லது அதன் எந்தப் பகுதியும் அவருக்குப் படிக்கப்படாமல் அவர் விட்ட இடத்திலிருந்து உடனேயே ஆரம்பிப்பார். இது அவருக்கு ஒரு வழக்கமான செயலாயிருந்தது. ஒரு கற்றறிந்த மனிதனால் இதைச் செய்ய முடியும் என்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும்; மேலும், அவரைப்போல அறியாத மற்றும் கற்றறியாத ஒருவருக்கு, அது அறவே சாத்தியமற்றது”.
ஆலிவர் கௌட்ரி
“தீர்க்கதரிசியின் நாவுகளிருந்து அது வந்ததைப்போல, தேவனின் வரத்தாலும் வல்லமையாலும் அவர் மொழிபெயர்த்ததைப்போல, ஊரிம் தும்மீமின் உதவிகளால், அல்லது பரிசுத்த மொழிபெயர்ப்பாளர்கள் என புத்தகத்தில் அழைக்கப்படுகிறதைப்போல அவற்றின் உதவியால் (ஒரு சில பக்கங்களைத் தவிர) மார்மன் புஸ்தகம் முழுவதையும் என்னுடைய சொந்த எழுதுகோலால் நான் எழுதினேன். அந்த மொழிபெயர்க்கப்பட்ட தங்கத் தகடுகளை, நான் என் கண்களால் கண்டேன், என்னுடைய கரங்களால் கையாண்டேன். மொழிபெயர்ப்பு கருவிகளையும் நான் கண்டேன்.”