என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
பெப்ருவரி 17–23: “என் சக ஊழியக்காரர்களாகிய உங்கள் மேல்”: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12–17; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:66–75


“பெப்ருவரி 17–23: ‘என் சக ஊழியக்காரர்களாகிய உங்கள் மேல்’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12–17; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:66–75” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12–17; ஜோசப் ஸ்மித்— வரலாறு 1:66–75,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

சஸ்கொய்னா நதி

பென்சில்வேனியாவின் ஹார்மனிக்கு அருகில் சஸ்கொய்னா நதி

பெப்ருவரி17– 23: “என் சக ஊழியக்காரர்களாகிய உங்கள்மேல்”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12–17; ஜோசப் ஸ்மித்— வரலாறு 1:66–75

ஹார்மனி, பென்சில்வேனியா என்றழைக்கப்பட்ட ஒரு இடத்தைப்பற்றி, உலகெங்கிலுமுள்ள அநேக மக்கள் ஒருவேளை ஒருபோதும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அவருடைய ராஜ்யத்தில் மிகக் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளுக்காக கர்த்தர் பெரும்பாலும் பிரபலமற்ற இடங்களைத் தேர்ந்தெடுக்கிறார். மே 15, 1829ல் ஹார்மனிக்கருகில் ஒரு வனப்பகுதியில், ஜோசப் ஸ்மித்துக்கும் ஆலிவர் கவுட்ரிக்கும் யோவான் ஸ்நானன் தோற்றமளித்தான். அவர்களுடைய தலைகள்மீது அவன் அவனுடைய கைகளை வைத்து, “என்னுடைய சகஊழியக்காரர்களே” என அவர்களை அழைத்து அவர்கள்மேல் ஆரோனிய ஆசாரியத்துவத்தை அருளினான் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13:1).

யோவான்ஸ்நானன் தேவனின் நம்பகமான ஊழியனாக இருந்தான், அவன் இரட்சகருக்கு ஞானஸ்நானம் அளித்தான் மற்றும் அவருடைய வருகைக்கான வழியை ஆயத்தம் பண்ணினான் (மத்தேயு 3:1–6, 13–17 பார்க்கவும்). இருபதுகளில் இருக்கும் இந்த இரண்டு வாலிபர்களுக்கும், யோவானின் சக வேலைக்காரர்கள் என்று அழைக்கப்படுவது தாழ்மையாக இருந்திருக்க வேண்டும், ஒருவேளை தாங்கமுடியாமல் கூட இருந்திருக்கலாம். அந்நேரத்தில், ஜோசப்பும், ஆலிவரும் ஹார்மனி இருந்ததைப்போல ஒப்பீட்டளவில் அறியப்படாதிருந்தார்கள். ஆனால் தேவனுடைய பணியில் சேவை என்பது எவ்வாறு என்பதைப்பற்றியது, யார் கவனிக்கிறார்கள் என்பதைப்பற்றி அல்ல. ஆயினும், உங்களுடைய பங்களிப்பு சிறியதாக அல்லது காணப்படாததாக சிலநேரங்களில் தோன்றினாலும், “கர்த்தருடைய மகத்தான பணியில்” நீங்களும்கூட சகஊழியக்காரர்களே. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:1).

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12; 14

தேவனின் “பெரிதும் அதிசயமுமான கிரியையில்” நான் பங்கேற்கமுடியும்.

கர்த்தருடைய பணியில் அவரால் எவ்வாறு உதவ முடியுமென அறிந்துகொள்ள ஜோசப் நைட் மற்றும் டேவிட் விட்மர் விரும்பினார்கள். அவர்களுக்கு கர்த்தர் அளித்த பதிலை நீங்கள் வாசிக்கும்போது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 12; 14), “சீயோனைக்கொண்டுவந்து அதை ஸ்தாபிக்க” (12:6; 14:6 ஐயும் பார்க்கவும்) அதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி சிந்தியுங்கள். இதைச் செய்ய உங்களுக்கு உதவும் எந்தக் கொள்கைகளையும் கிறிஸ்துவைப் போன்ற பண்புகளையும் இந்தப் பாகங்களில் நீங்கள் காண்கிறீர்கள்?

The Knight and Whitmer Families,” Revelations in Context, 20–24ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13

ஆரோனிய ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபிதம் செய்ய இயேசு கிறிஸ்து யோவான் ஸ்நானனை அனுப்பினார்.

யோவான் ஸ்நானன் ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுட்ரியை தனது “சக ஊழியக்காரர்கள்” என்று அழைத்தான். யோவான் ஸ்நானுடன் சக ஊழியக்காரராக இருப்பதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? (மத்தேயு 3:13–17; லூக்கா 1:13–17; 3:2–20 பார்க்கவும்).

13வது பாகத்தில் ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பற்றி யோவான் ஸ்நானன் கூறியதை நீங்கள் வாசிக்கும்போது, இந்த ஆசாரியத்துவத்தின் திறவுகோல்கள், கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்தும் யோவானின் பணியை எப்படி நிறைவேற்ற உதவுகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக:

ஆரோனிய ஆசாரியத்துவத்தின் நியமங்கள் (ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து போன்றவை) உங்கள் வாழ்வில் இரட்சகரை வரவேற்பதற்கான வழியை எவ்வாறு தயார் செய்ய உதவுகின்றன?

ஆசாரியத்துவ திறவுகோல்கள் யாவை?

மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் மற்றும் அவரது மனைவி ரூத், ஆசாரியத்துவ திறவுகோல்கள் பற்றி இந்த விளக்கத்தை அளித்தனர்:

“ஆசாரியத்துவ திறவுகோல்கள் என்ற சொல் இரண்டு வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. முதலாவது ஆரோனிய அல்லது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெறும் அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட உரிமை அல்லது சிலாக்கியத்தைக் குறிக்கிறது. … உதாரணமாக, ஆரோனிய ஆசாரியத்துவம் தரித்தவர்கள் தேவதூதர்களின் ஊழியத்தின் திறவுகோல்களையும், மனந்திரும்புதல் மற்றும் ஆயத்த சுவிசேஷத்தின் திறவுகோல்களை பாவ மன்னிப்பிற்காக முழுக்கு ஞானஸ்நானத்தின் மூலம் பெறுகிறார்கள் (கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 13:1; 84:26–27 ஐப் பார்க்கவும்). மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்தவர்கள் ராஜ்ஜியத்தின் இரகசியங்களின் திறவுகோல், தேவனைப் பற்றிய அறிவின் திறவுகோல் மற்றும் சபையின் அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களின் திறவுகோல்களையும் பெறுகிறார்கள் (கோட்பாடு உடன்படிக்கைகளும் 84:19; 107:18 ஐப் பார்க்கவும்). …

“ஆசாரியத்துவத் திறவுகோல்கள் என்ற சொல் பயன்படுத்தப்படும் இரண்டாவது வழி தலைமைத்துவத்தைக் குறிக்கிறது. ஆசாரியத்துவத் தலைவர்கள் கூடுதல் ஆசாரியத்துவ திறவுகோல்களைப் பெறுகிறார்கள், சபையின் அமைப்புப் பிரிவு அல்லது குழுமத்திற்குத் தலைமை தாங்கும் உரிமை. இது சம்பந்தமாக, ஆசாரியத்துவ திறவுகோல்கள் சபையில் வழிகாட்டுவதற்கும், வழிநடத்துவதற்கும், ஆளுகை செய்வதற்கும் அதிகாரமும் வல்லமையும் ஆகும்.” (The Melchizedek Priesthood: Understanding the Doctrine, Living the Principles [2018], 26).

ஜோசப் ஸ்மித் ஆலிவர் கவுட்ரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

ஜோசப் ஸ்மித் ஆலிவர் கௌட்ரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்–டெல் பார்சன்

ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:66–75

வேத பாட வகுப்பு சின்னம்
தேவனின் வல்லமையை பெறுதலை நியமங்கள் எனக்கு கொடுக்கிறது.

மறுஸ்தாபிதத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கு ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுட்ரியுடன் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் வசனம் 71ன் முடிவிலுள்ள குறிப்பையும் சேர்த்து,ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:66–75 நீங்கள் வாசிக்கும்போது, அவர்கள் உணர்ந்ததில் சிலவற்றையாவது நீங்கள் புரிந்து கொள்ளலாம். அவர்களுடைய வார்த்தைகளில் உங்களைக் கவர்வது என்ன? குறிப்பாக, அவர்கள் ஆசாரியத்துவம் பெற்று ஞானஸ்நானம் பெற்றதால் பெற்ற ஆசீர்வாதங்களைக் கவனியுங்கள். ஆசாரியத்துவ நியமங்கள் மூலம் இரட்சகர் உங்களுக்கு என்ன ஆசீர்வாதங்களை அளித்துள்ளார்?

மேலும் அறிய, நியமங்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் என்ற தலைப்புகளுடன் அட்டவணையை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும். பிறகு, அவற்றிலிருந்து வரும் நியமங்களையும் ஆசீர்வாதங்களையும் பட்டியலிட இதுபோன்ற வசனங்களை நீங்கள் தேடலாம்: யோவான் 14:26; அப்போஸ்தலர் 2:38; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:19–22; 131:1–4; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:73–74. இந்த பட்டியலில் என்ன பிற ஆசீர்வாதங்களை நீங்கள் சேர்ப்பீர்கள்? நீங்கள் பெற்ற நியமங்கள் எப்படி உங்கள் வாழ்வில் இரட்சகரின் வல்லமையைக் கொண்டு வந்துள்ளன?

See also David A. Bednar, “With the Power of God in Great Glory,” Liahona, Nov. 2021, 28–30; Saints, 1:65–68; “God of Power, God of Right,” Hymns, no. 20; Topics and Questions, “Covenants and Ordinances,” Gospel Library.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15–16

கிறிஸ்துவண்டை ஆத்துமாக்களைக் கொண்டுவருவது மிக மதிப்பு வாய்ந்தது.

ஜான் மற்றும் பீட்டர் விட்மர் செய்தது போல், உங்கள் வாழ்க்கையில் எது “மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும்” என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15:4; 16:4. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15–16 நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவிடம் ஆத்துமாக்களைக் கொண்டு வருவது ஏன் மிக மதிப்பு வாய்ந்ததென சிந்தியுங்கள். கிறிஸ்துவிடம் “ஆத்துமாக்களை கொண்டுவர” நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Saints, 1:68-71 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17

அவருடைய வார்த்தையை நிலைநாட்ட கர்த்தர் சாட்சிகளைப் பயன்படுத்துகிறார்.

சாட்சி என்றால் என்ன? அவருடைய பணிக்கு கர்த்தர் ஏன் சாட்சிகளைப் பயன்படுத்துகிறார்? (2 கொரிந்தியர் 13:1 பார்க்கவும்). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17ல் மூன்று சாட்சிகளுக்கு தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் வாசிக்கும்போது இந்தக் கேள்விகளைப்பற்றி சிந்தியுங்கள். (“மூன்று சாட்சிகளின் சாட்சியம்,” மார்மன் புஸ்தகத்தில் பார்க்கவும்.) தேவனுடைய “நீதியின் நோக்கங்களைக்” கொண்டுவர எவ்வாறு சாட்சிகள் உதவுகிறார்கள்? (வசனம் 4)

நீங்கள் என்ன சாட்சி கொடுக்க முடியும்?

See also Saints, 1:73–75; “A Day for the Eternities” (video), Gospel Library.

23:9

A Day for the Eternities

கூடுதல் ஆலோசனைகளுக்கு, லியஹோனா இந்த மாத இதழ் மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 02

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13; ஜோசப் ஸ்மித்— வரலாறு 1:68–74

யோவான் ஸ்நானன் ஆரோனிய ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபிதம் செய்தான்.

  • இந்த குறிப்பில் உள்ள கலைப்படைப்பு உங்கள் குழந்தைகளுக்கு ஆரோனிய ஆசாரியத்துவத்தின் மறுஸ்தாபிதத்தைக் காட்சிப்படுத்த உதவும் (“அத்தியாயம் 6: ஜோசப் மற்றும் ஆலிவருக்கு ஆசாரியத்துவம் கொடுக்கப்படுதல்”, கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள், 26–27 அல்லது சுவிசேஷ நூலகத்தில் உள்ள காணொலியையும் பார்க்கவும்) . ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:68–74ல் அவர்கள் வாசித்ததின் அடிப்படையின்மேல் நிகழ்ச்சியின் ஒரு படத்தை வரைய அவர்கள் சந்தோஷப்படுவார்களா?

    2:20

    Chapter 6: Joseph and Oliver Are Given the Priesthood: May 1829

  • மத்தேயு 3:13–17; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:68–70 நீங்கள் ஒன்றாகப் படிக்கும்போது யோவான் ஸ்நானன் படத்தையும் காட்டலாம். ஜோசப் ஸ்மித்துக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு ஆசாரியத்துவம் கொடுக்க கர்த்தர் யோவான் ஸ்நானனை அனுப்பியது ஏன் முக்கியமானது?

தேவனுடைய உடன்படிக்கை பாதையில் வாழ்நாள் முழுவதும் உங்கள் பிள்ளைகளை ஆயத்தப்படுத்துதல் ஆசாரியத்துவ வல்லமை, அதிகாரம் மற்றும் திறவுகோல்கள் பற்றி உங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ள உதவும் கூடுதல் யோசனைகளுக்கு, பிற்சேர்க்கை A அல்லது பிற்சேர்க்கை B ஐப் பார்க்கவும்.

யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

இயேசு ஞானஸ்நானம் பெறுகிறார், பட விளக்கம்–டான் பர்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13

பரலோக பிதாஆரோனிய ஆசாரியத்துவத்தின் மூலம் என்னை ஆசீர்வதிக்கிறார்.

  • கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13 இல் குறிப்பிடப்பட்டுள்ள திறவுகோல்கள் பற்றிய கலந்துரையாடலைத் தூண்டுவதற்கு, நீங்களும் உங்கள் குழந்தைகளும் திறவுகோல்களின் கொத்தைப் பார்த்து, திறவுகோல்கள் என்ன செய்ய அனுமதிக்கின்றன என்பதைப் பற்றி பேசலாம். பாகம் 13 இல் திறவுகோல் எனும் வார்த்தையைக் கண்டறிய நீங்கள் அவர்களுக்கு உதவலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 13இல் உள்ள வேறு எந்த வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் ஆரோனிய ஆசாரியத்துவத்தின் ஆசீர்வாதங்களை விவரிக்கின்றன? “ஆசாரியத்துவத்தின் ஆசீர்வாதங்கள்” (சுவிசேஷ நூலகம்) என்ற காணொலியில் பரலோக பிதா நம்மை ஆசாரியத்துவத்தின் மூலம் ஆசீர்வதிக்கும் வழிகளையும் உங்கள் பிள்ளைகளால் அடையாளம் காண முடியும்.

3:4

Blessings of the Priesthood

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15:4–6; 16:4–6

இயேசு கிறிஸ்துவிடம் வர மற்றவர்களுக்கு உதவுவது “மிக மதிப்புக்குரியது.”

  • அவர்கள் வாழ்க்கையில் அதிக மதிப்புடையது எதுவாயிருக்குமென ஜான் மற்றும் பீட்டர் விட்மர் இருவரும் அறிந்துகொள்ள விருப்பமாயிருந்தனர் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15:4; 16:4). ஒருவேளை நீங்களும் உங்கள் குழந்தைகளும் உங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க விஷயங்களைப் பற்றி பேசலாம். நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 15:6 அல்லது 16:6 ஐப் படிக்கும்போது, உங்கள் பிள்ளைகள் “மிக மதிப்பு வாய்ந்தது” என்று கர்த்தர் சொன்னதைக் கேட்கும்போது கைகளை உயர்த்தும்படி கேளுங்கள்.

  • “ஆத்துமாக்களை [இயேசு கிறிஸ்துவிடம்] கொண்டுவருவது” என்றால் என்ன? மற்றவர்களுடன் நண்பர்களாக இருத்தல், ஒரு நண்பருடன் வேதங்களைப் பகிர்ந்துகொள்வது அல்லது தேவைப்படும் ஒருவருக்காக ஜெபிப்பது போன்ற யோசனைகளின் பட்டியலை உருவாக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். உங்கள் பிள்ளைகள் சபை இதழ்கள் அல்லது சுவிசேஷ கலை புத்தகத்தில் இந்த விஷயங்களின் படங்களைத் தேடலாம். அல்லது அவர்கள் தங்கள் சொந்த படங்களை வரையலாம். அவர்கள் தயாரிக்கும் பட்டியலில் இருந்து ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க அவர்களை அழைக்கவும். “I Feel My Savior’s Love” (Children’s Songbook, 74–75) என்ற நான்காவது வசனத்தையும் சேர்த்துப் பாடலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17

மார்மன் புஸ்தகத்துக்கு நானும் ஒரு சாட்சியாக இருக்க முடியும்.

  • “அத்தியாயம் 7: சாட்சிகள் தங்கத் தகடுகளைப் பார்த்தல்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள், 31–33 அல்லது சுவிசேஷ நூலகத்தில் தொடர்புடைய காணொலி) உங்கள் பிள்ளைகள் மூன்று சாட்சிகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 17:5–6 வாசித்த பிறகு, மார்மன் புஸ்தகம் உண்மை என்று உங்கள் பிள்ளைகளுக்கு எப்படித் தெரியும் என்று சொல்லுங்கள். மார்மன் புஸ்தகத்துக்கு நாம் எவ்வாறு சாட்சிகளாக இருக்க முடியும்?

    2:7

    Chapter 7: Witnesses See the Gold Plates: 1829–1830

கூடுதல் ஆலோசனைகளுக்கு, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

ஜோசப் மற்றும் ஆலிவர் யோவான் ஸ்நானனிடமிருந்து ஆரோனிய ஆசாரியத்துவத்தைப் பெறுகிறார்கள்

என் சக ஊழியக்காரர்களாகிய உங்கள்மேல்,–லிண்டா கர்லே கிறிஸ்டென்சன்

பிள்ளைகளுக்கான நிகழ்ச்சி பக்கம்