“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: மார்மன் புஸ்தகத்தின் சாட்சிகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
மார்மன் புஸ்தகத்தின் சாட்சிகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
மார்மன் புஸ்தகத்தின் சாட்சிகள்
பெயட்டி, நியுயார்க்கிலுள்ள விட்மர் வீட்டிற்கருகிலிருந்த காடுகளில் மரோனி தூதன் தங்கத் தகடுகளை ஜோசப் ஸ்மித், ஆலிவர் கௌட்ரி, டேவிட் விட்மர் மற்றும் மார்டின் ஹாரிஸூக்குக் காண்பித்தான். அந்த நேரத்தில் ஜோசப்பின் பெற்றோர் விட்மர் குடும்பத்தினரை சந்தித்தனர். சாட்சிகளின் மேல் ஏற்பட்ட இந்த அற்புதமான அனுபவத்தின் பாதிப்பை ஜோசப்பின் தாய் லூசி மாக் ஸ்மித் விவரித்தார்.
“இது மூன்று மணிக்கும் நான்கு மணிக்குமிடையில் நடந்தது. திருமதி. விட்மர் மற்றும் திரு. ஸ்மித்தும், நானும் ஒரு படுக்கையறையில் அமர்ந்திருந்தோம். நான் படுக்கைக்கருகில் அமர்ந்திருந்தேன். ஜோசப் உள்ளே வந்தபோது, அவன் ஓடிவந்து என்னருகில் விழுந்தான். ‘அப்பா! அம்மா!’ என்றழைத்தான். ‘நான் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. என்னைத் தவிர மேலும் மூன்று பேருக்கு கர்த்தர் தட்டுகளைக் காட்டியுள்ளார், அவர்கள் ஒரு தூதனையும் கண்டிருக்கிறார்கள், நான் சொன்னவை பற்றிய உண்மைக்கு அவர்கள் சாட்சியமளிக்க வேண்டும். ஏனெனில் நான் ஜனங்களை ஏமாற்றப்போவதில்லை என்பதை அவர்களாகவே அறிந்துகொண்டார்கள். ஏறக்குறைய என்னால் சகித்துக்கொள்ள முடியாது போலிருந்த ஒரு பயங்கரமான சுமையிலிருந்து விடுபட்டதாக நான் உணர்ந்தேன். ஆனால் இப்போது அவர்கள் ஒரு பங்கைத் தாங்க வேண்டியதிருக்கும், மேலும், உலகத்தில் இனிமேலும் முற்றிலுமாக நான் தனியாயில்லை என்பது என் ஆத்துமாவை களிகூரச் செய்தது.’ பின்னர் மார்டின் ஹாரிஸ் உள்ளே வந்தார். அவர் அளவுக்கதிகமான சந்தோஷத்திலிருப்பவராகக் காணப்பட்டார். பின்னர், ஆலிவர் மற்றும் டேவிட்டைப் போன்ற மற்றவர்களைப் போலவே அவர் கண்டதையும் கேட்டதையும் குறித்து சாட்சியமளித்தார். மார்மன் புஸ்தகத்தில் அடங்கியிருந்ததைப் போலவே அவர்களுடைய சாட்சியமுமிருந்தது. …
“குறிப்பாக மார்டின் ஹாரிஸூக்கு அவருடைய உணர்வுகளை வார்த்தைகளில் சிறிதும் கொடுக்க முடியாததாகத் தோன்றியது. அவர் சொன்னார், ‘நான் இப்போது பரலோகத்திலிருந்து ஒரு தூதனைக் கண்டேன், அவன் பதிவேட்டைப்பற்றி நான் கேட்ட எல்லாவற்றின் சத்தியத்துக்கும் ஒரு நிச்சயமான சாட்சியம் அளித்துள்ளான், என் கண்கள் அவனைக் கண்டன. நான் தகடுகளையும் கண்டேன், அவைகளை என் கைகளால் கையாண்டேன், முழு உலகத்திற்கும் அதை என்னால் சாட்சியமளிக்க முடியும். ஆனால், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத, நாவுகளால் விவரிக்க முடியாத, ஒரு சாட்சியை நானே பெற்றேன், மற்றும் மனுஷ குமாரர்களின் சார்பாக அவருடைய பணி மற்றும் வடிவமைப்புகளின் மகத்துவத்திற்கு ஒரு சாட்சியாக என்னை, என்னையும்கூட ஆக்குவதற்கு அவர் மனமிறங்கி வந்தாரென என்னுடைய ஆத்துமாவின் நேர்மையுடன் தேவனை நான் துதிக்கிறேன். தேவனுடைய நன்மைக்கும் இரக்கத்திற்குமாக அவருக்கு பயபக்தியான துதிகளுக்காக ஆலிவரும் டேவிட்டும்கூட அவருடன் சேர்ந்துகொண்டனர். ஒரு மகிழ்ச்சியான, களிகூரும் சிறிய கூட்டமாக [பல்மைரா, நியூயார்க்] வீட்டிற்கு அடுத்த நாள் நாங்கள் திரும்பினோம்.”
எட்டு சாட்சிகளும் தங்களுடைய அனுபவத்திலிருந்து திரும்பியபோது லூசி மாக் ஸ்மித்தும் அங்கிருந்தார்.
“இந்த சாட்சிகள் வீட்டிற்குத் திரும்பிய பின்னர், மீண்டும் தூதன் ஜோசப்புக்கு தோற்றமளித்தான், அந்த நேரத்தில் ஜோசப் அவனுடைய கைகளில் தட்டுகளை வழங்கினார். அந்த மாலை வேளையில் நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்தினோம், அதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைகளைப்பற்றி அனைத்து சாட்சிகளும் சாட்சியமளித்தனர், மேலும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும், 14 வயது நிரம்பிய டான் கார்லோஸ் [ஸ்மித்], கூட பிற்கால ஊழியக்காலத்தின் சத்தியத்தைக்குறித்து சாட்சியமளித்தனர், பின்னர் அது முழுமையாகப் கொண்டுவரப்பட்டது.”
மூன்று சாட்சிகள் மற்றும் எட்டு சாட்சிகள் தவிர, டேவிட் விட்மரின் தாயார், மேரி விட்மரும் தங்கத் தகடுகளின் சாட்சியாக இருக்க ஆசீர்வதிக்கப்பட்டார். ஜோசப்பும், எம்மாவும், ஆலிவரும் அவருடைய வீட்டில் வசித்துக்கொண்டிருந்தபோது அவருடைய தியாகங்களின் ஒரு அங்கீகாரமாக மரோனி தூதன் அவைகளை அவளுக்குக் காண்பித்தான். “உங்கள் உழைப்பில் நீங்கள் மிகவும் விசுவாசமாகவும் கருத்துடனும் இருந்திருக்கிறீர்கள்” என்று மரோனி அவரிடம் கூறினான். “எனவே, உன் விசுவாசம் பலப்படுத்தப்படுவதற்கு நீ ஒரு சாட்சியைப் பெறுவது சரியானது.”