“பெப்ருவரி 24–மார்ச் 2: ‘ஆத்துமாக்களின் மதிப்பு பெரிதாயிருக்கிறது’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
பெப்ருவரி 24–மார்ச் 2: “ஆத்துமாக்களின் மதிப்பு பெரிதாயிருக்கிறது”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18.
ஒரு நபரின் மதிப்பை அளவிட பல்வேறு வழிகள் உள்ளன. திறமை, கல்வி, செல்வம் மற்றும் உடல் தோற்றம் அனைத்தும் நாம் ஒருவரையொருவரையும் நம்மையும் எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதைப் பாதிக்கலாம். ஆனால் தேவனின் பார்வையில், நமது மதிப்பு மிகவும் எளிமையான விஷயம், மேலும் இது கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18 இல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது: “ஆத்துமாக்களின் மதிப்பு தேவனின் பார்வையில் பெரிதாயிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்” (வசனம் 10). இந்த எளிய உண்மை தேவன் என்ன செய்கிறார் மற்றும் ஏன் செய்கிறார் என்பதை விளக்குகிறது. நம்முடைய நாளில் இயேசு கிறிஸ்துவின் சபையை ஸ்தாபிக்க ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுட்ரிக்கு அவர் ஏன் அறிவுறுத்தினார்? (1–5 வசனங்களைப் பார்க்கவும்). ஏனெனில் ஆத்துமாக்களின் மதிப்பு மிகப்பெரியது. அவர் ஏன் “எல்லா இடங்களிலுமுள்ள மனுஷர்கள் யாவரும் மனந்திரும்ப கட்டளையிடுகிறார்” மற்றும் மனந்திரும்புதலைப் பிரசங்கிக்க அப்போஸ்தலர்களை அனுப்புகிறார்? (வசனம் 9). ஏனெனில் ஆத்துமாக்களின் மதிப்பு மிகப்பெரியது. இயேசு கிறிஸ்து ஏன் “மாம்ச மரணத்தையும்” “எல்லா மனிதர்களின் வேதனையையும்” அனுபவித்தார்? (வசனம் 11). ஏனெனில் ஆத்துமாக்களின் மதிப்பு மிகப்பெரியது. இந்த ஆத்துமாக்களில் ஒன்று கூட இரட்சகரின் பரிசை ஏற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுத்தால், அவர் மகிழ்ச்சியடைகிறார், ஏனென்றால் “மனந்திரும்பிய ஆத்துமாவினிமித்தம் அவரது சந்தோஷம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது” (வசனம் 13).
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:1–5
“எனது சபையைக் கட்டுங்கள்”
பாகம் 18 இல், இயேசு கிறிஸ்துவின் சபையின் அஸ்திவாரத்தை அமைப்பதற்கு ஆலிவர் கவுட்ரிக்கு கர்த்தர் அறிவுறுத்தல்களை வழங்கினார். குறிப்பாக 1–5 வசனங்களில் அவர் கொடுத்த அறிவுரை பற்றி நீங்கள் என்ன கவனிக்கிறீர்கள்? கிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை “கட்ட” இதே அறிவுரை உங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை நீங்கள் சிந்திக்கலாம். உதாரணமாக:
-
கர்த்தரிடத்திலிருந்து நீங்கள் எதை “அறிய வாஞ்சித்தீர்கள்”? (வசனம் 1).
-
“எழுதப்பட்ட காரியங்களை நீ சார்ந்திருக்கவேண்டும்” என்பது உங்களுக்கு என்ன அர்த்தமாகிறது? (வசனம் 3). இவைகள் உண்மையானவை என்பதை ஆவியானவர் எவ்வாறு “உங்களுக்கு வெளிப்படுத்தினார்”? (வசனம் 2; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:22–24ஐயும் பார்க்கவும்).
-
“[இரட்சகரின்] சுவிசேஷம் மற்றும் [அவருடைய] கன்மலையின் அடித்தளத்தின்” மீது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு கட்டமைக்கிறீர்கள்? (வசனம் 5).
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–13.
“ஆத்துமாக்களின் மதிப்பு தேவனின் பார்வையில் பெரிதாயிருக்கிறதென்பது.”
ஒரு பொருளின் மதிப்பை எவ்வாறு தீர்மானிக்கலாம்? உதாரணமாக, சந்தையில் ஒரு பொருளின் விலை மற்றொன்றை விட ஏன் அதிகம்? இந்த வாரம் பாகம் 18, குறிப்பாக 10–13 வசனங்களை நீங்கள் படிக்கும்போது, தேவனின் பார்வையில் ஒரு ஆத்துமாவை மதிப்புமிக்கதாக ஆக்குவதை மக்கள் எப்படி அடிக்கடி மதிப்பிடுகிறார்கள் என்பதை நீங்கள் வேறுபடுத்திப் பார்க்கலாம். “ஆத்துமா,” “ஆத்துமாக்கள்” மற்றும் “எல்லா மனிதர்கள்” என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக உங்கள் பெயரை வைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். அவன் அல்லது அவளுடைய தகுதியைக் கேள்வி கேட்கும் ஒருவருக்கு இந்த வசனங்கள் எப்படி உதவும்?
ஆத்துமாவின் மதிப்பைப் பற்றி கற்பிக்கும் வேறு சில பத்திகள் இங்கே உள்ளன: லூக்கா 15:1–10; யோவான் 3:16–17; 2 நேபி 26:24–28; மோசே 1:39. இந்தப் பத்திகளின் அடிப்படையில், தேவன் உங்களைப் பற்றி எப்படி உணருகிறார் என்பதை நீங்கள் எவ்வாறு சுருக்கமாகக் கூறுவீர்கள்? தேவனுக்கு உங்கள் மதிப்பைப் பற்றி அறிய உதவும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கண்டுபிடிக்க, “You Matter to Him” (Liahona, Nov. 2011, 19–22) வில் தலைவர் டியட்டர் எப். உக்டர்ப் செய்தியையும் நீங்கள் தேடலாம்.
நீங்கள் அவருக்கு மிகவும் மதிப்புள்ளவர் என்பதை தேவன் உங்களுக்கு எவ்வாறு காட்டுகிறார்? இரட்சகரைப்பற்றி நீங்கள் மற்றும் பிறர் உணரும் விதத்தை இது எப்படி பாதிக்கிறது?
See also Joy D. Jones, “Value beyond Measure,” Liahona, Nov. 2017, 13–15; Topics and Questions, “Children of God,” Gospel Library.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:11–16.
நான் மனந்திரும்பும்போது கர்த்தர் களிகூருகிறார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18 முழுவதும் மனந்திரும்பு மற்றும் மனந்திரும்புதல் போன்ற வார்த்தைகள் எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கவனியுங்கள். இந்த வார்த்தைகளை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் அதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். வசனங்கள் 11–16 ஐ விசேஷமாக கருத்தில் கொள்ளவும். மனந்திரும்புதலைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை இந்த வசனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன—உங்கள் சொந்த மனந்திரும்புதல் மற்றும் மனந்திரும்புவதற்கும் மேம்படுத்துவதற்கும் மற்றவர்களை அழைக்கும் கடமை? நீங்கள் கற்றுக்கொள்வதைப் பதிவுசெய்வதற்கான ஒரு வழி இங்கே உள்ளது: “மனந்திரும்புதல் என்பது.” பல வழிகளில் இந்த வாக்கியத்தை முடியுங்கள்
See also Alma 36:18–21; Guide to the Scriptures, “Repentance,” Gospel Library; Dale G. Renlund, “Repentance: A Joyful Choice,” Liahona, Nov. 2016, 121–24.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:14–16.
மற்றவர்கள் கிறிஸ்துவிடம் வர உதவுவதிலிருந்து மகிழ்ச்சி கிடைக்கிறது.
14–16 வசனங்களை நீங்கள் படிக்கும்போது, “மனந்திரும்புதல்” என்பதன் அர்த்தம் என்ன, அது ஏன் இவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது என்று சிந்தியுங்கள். மற்றவர்கள் இரட்சகரிடம் வந்து மன்னிப்பைப் பெறுவதற்கு நீங்கள் கண்டறிந்த சில வழிகள் யாவை? மற்றவர்கள் உங்களுக்காக அதை எப்படி செய்தார்கள்?
See also Craig C. Christensen, “There Can Be Nothing So Exquisite and Sweet as Was My Joy,” Liahona, May 2023, 45–47.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:34–36
வேதங்களில் கர்த்தருடைய குரலை நான் கேட்கமுடியும்.
கர்த்தருடைய குரல் எப்படியிருக்குமென யாராவது ஒருவர் உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:34–36 நீங்கள் வாசிக்கும்போது இந்தக் கேள்வியைப்பற்றி சிந்தியுங்கள். கோட்பாடும் உடன்படிக்கைகளுமை வாசிப்பதிலிருந்து கர்த்தருடைய குரலைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? அவருடைய குரலை மிகத் தெளிவாகக் கேட்க நீங்கள் என்ன செய்யமுடியும்?
See also “As I Search the Holy Scriptures,” Hymns, no. 277.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–13.
நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு மிகவும் மதிப்புமிக்கவர்கள்.
-
நீங்களும் உங்கள் குழந்தைகளும் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–13 ஐப் படிக்கும்போது, “ஆத்துமா”, “ஆத்துமாக்கள்” மற்றும் “எல்லா மனிதர்கள்” என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ஒருவருக்கொருவர் பெயர்களை மாற்றிவைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். பரலோக பிதா நம் ஒவ்வொருவரையும் எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த வசனங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம்.
-
மக்கள் மதிப்புமிக்கதாகக் கருதும் விஷயங்களைப் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் கேட்கலாம். அல்லது உங்களுக்கு மதிப்புமிக்க ஒன்றை அவர்களுக்குக் காட்டலாம். நமக்கு மதிப்புமிக்க விஷயங்களை எப்படி நடத்துவது? பின்னர் அவர்கள் மாறி மாறி கண்ணாடியில் பார்க்கட்டும். அவர்கள் செய்யும் போது, ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் தேவனின் குழந்தை என்றும் அவர்கள் மிகவும் மதிப்புமிக்கவர்கள் என்றும் சொல்லுங்கள். நம் பார்வையில் “[அவர்களுடைய] ஆத்துமாவின் மதிப்பு பெரிது” என்பதை மற்றவர்களுக்கு எப்படிக் காட்டலாம்?
-
எல்லா மக்களும் பரலோக பிதாவுக்கு மிகுந்த மதிப்புள்ளவர்கள் என்பதை வலியுறுத்த, நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10–13 ஐப் வாசிக்கும்போது, உங்கள் பிள்ளைகள் இந்த குறிப்பின் முடிவில் உள்ள படத்தைப் பார்க்கலாம். “Every Star Is Different” (Children’s Songbook, 142–43) போன்ற பாடலை ஒன்றாகப் பாடுவது இந்தக் கருத்தை பலப்படுத்த உதவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:13–16.
சுவிசேஷத்தைப் பகிர்வது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
-
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க, உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒன்றை நீங்கள் கண்டறிந்தால், அனுபவங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசலாம். நீங்கள் ஏன் அதைப் பகிர விரும்பினீர்கள், அதைப் பகிர்வது உங்களை எப்படி உணரவைத்தது? பிறகு நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகள் 18:13, 16 ஐ வாசிக்கலாம். கர்த்தருக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறது? எது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று அவர் கூறுகிறார்? நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இரட்சகரின் சுவிசேஷத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களைப் பற்றி பேசலாம்.
-
“I Want to Be a Missionary Now” (Children’s Songbook, 168),போன்ற சுவிசேஷத்தைப் பகிர்வது பற்றிய பாடல், உங்கள் பிள்ளைகள் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளும் வழிகளைப் பற்றி சிந்திக்க உதவலாம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:34–36
வேதங்களில் கர்த்தருடைய குரலை நான் கேட்கமுடியும்.
-
குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது சபைத் தலைவர்கள் போன்ற பல்வேறு நபர்களின் குரல்களை அடையாளம் காண முயற்சிக்கும் விளையாட்டை உங்கள் பிள்ளைகள் ரசிக்கக்கூடும். ஒருவருக்கொருவர் குரல்களை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்? கர்த்தரின் சத்தத்தை நாம் எவ்வாறு அடையாளம் காணலாம்? இந்தக் கேள்வியைப் பற்றி விவாதிக்க நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:34–36ஐ ஒன்று சேர்ந்து வாசிக்கலாம். வேதத்தில் கர்த்தருடைய சத்தத்தை நீங்கள் எவ்வாறு கேட்டீர்கள் என்பதையும் நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.