“மறுஸ்தாபிதத்தின் குரல்கள்: எம்மா ஹேல் ஸ்மித் ,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“எம்மா ஹேல் ஸ்மித்,“என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
எம்மா ஹேல் ஸ்மித்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25ல் பதிக்கப்பட்டுள்ள எம்மா ஸ்மித்துக்கு கர்த்தருடைய வார்த்தைகள் அவரைப்பற்றியும், அவருடைய பணிக்காக அவரால் கொடுக்கமுடிகிற பங்களிப்புகளையும்பற்றி, அவர் எவ்வாறு உணர்ந்தாரென வெளிப்படுத்துகிறது. ஆனால் எம்மா எப்படிப்பட்டவர்? அவளுடைய ஆளுமை, அவளுடைய உறவுகள், அவளுடைய பலங்களைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? இந்த “தெரிந்துகொள்ளப்பட்ட பெண்ணைப்பற்றி” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:3) தெரியவருவதற்கு ஒரு வழி, அவரைத் தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்கிற மக்களின் வார்த்தைகளை வாசிப்பதாகும்.
ஜோசப் ஸ்மித் இளையவர், அவளுடைய கணவர்
“என்னுடைய மனைவியான, என் இளமையின் மனைவியான, என் இதயம் தேர்ந்தெடுத்த என் அன்புக்குரிய எம்மாவை அந்த இரவில் கைகளால் பிடித்தபோது, சொல்ல முடியாத சந்தோஷத்துடனும், மகிழ்ச்சியின் பரிமாற்றங்களுடனும் என் நெஞ்சு விரிந்தது. நாங்கள் அழைக்கப்பட்ட கடந்துசெல்லும்படியான காட்சிகளை ஒரு கணநேரம் நான் சிந்தித்தபோது என் மனதில் அநேக மறுஅதிர்வுகள் ஏற்பட்டன. சோர்வுகள், உழைப்புகள், துக்கங்கள், துன்பங்கள் மற்றும் மகிழ்ச்சிகளும், ஆறுதல்களும் நேரத்திற்கு நேரம் எங்கள் பாதைகளை நீட்டி எங்கள் வாழ்வுக்கு முடிசூட்டின. ஓ! என்ன ஒரு கலவையான எண்ணம் என் மனதை இந்த நேரத்தில் நிரப்பியது. மீண்டும் அவள் ஏழாவது பிரச்சனையில் இருந்தாலும், தயக்கமின்றி, உறுதியான மற்றும் அசைக்க முடியாத, மாறாத, பாசமுள்ள எம்மா.”
அவளுடைய மாமியாரான லூசி மாக் ஸ்மித்
“அவள் அப்போது இளமையாக இருந்தாள், இயற்கையாகவே ஆர்வமுள்ளவளாக இருந்ததால், அவளுடைய முழு இருதயமும் கர்த்தருடைய பணியில் இருந்தது, சபையையும் சத்தியத்தின் நோக்கத்தையும் தவிர வேறு எந்த ஆர்வத்தையும் அவள் உணரவில்லை செய்யவேண்டிய எதையும் தன் கைகளால் செய்யக்கண்டாலும் அவள், தன்னுடைய பெலத்தால் அதை அவள் செய்தாள், ‘வேறு யாரையும்விட வேறு அதிகமாக எனக்கு கிடைக்குமா?’ என்ற சுயநலமான கேள்வியை எப்போதும் அவள் கேட்டதில்லை. பிரசங்கிக்க மூப்பர்கள் அனுப்பப்பட்டால், அவளுடைய தனிப்பட்டவைகள் எதுவாயிருந்தாலும் அவர்களுடைய பயணத்திற்காக ஆடையணிவதற்கு உதவிசெய்ய அவளுடைய சேவையை முன்வந்து செய்ய அவள் முதன்மையாயிருந்தாள்.”
ஜோசப் ஸ்மித் மூத்தவர், அவளுடைய மாமனார்
சபையின் கோத்திரத்தலைவனாக சேவைசெய்துகொண்டிருந்த ஜோசப் ஸ்மித் மூத்தவரால் கொடுக்கப்பட்ட எம்மா ஸ்மித்தின் கோத்திரத்தலைவன் ஆசீர்வாதம்:
என் மருமகள் எம்மா, உன்னுடைய விசுவாசத்திற்கும் உண்மைக்கும், கர்த்தரால் நீ ஆசீர்வதிக்கப்படுகிறாய்: உன்னுடைய கணவருடன் நீ ஆசீர்வதிக்கப்படுவாய், அவர்மேல் வருகிற மகிமையில் நீ களிகூருவாய்: உன்னுடைய தோழனின் அழிவை நாடுகிற மனிதர்களின் துன்மார்க்கத்தினிமித்தம் உன்னுடைய ஆத்துமா அல்லல்பட்டது, அவருடைய விடுதலைக்காக ஜெபத்தில் உன் முழுஆத்துமாவும் இழுக்கப்பட்டிருக்கிறது: கர்த்தராகிய உன்னுடைய தேவன் உன்னுடைய வேண்டுதலைக் கேட்கிறபடியால் களிகூரு.
“உன்னுடைய தகப்பன் வீட்டாரின் இருதயங்களின் கடினத்திற்காக நீ துக்கப்பட்டாய், அவர்களுடைய இரட்சிப்புக்காக நீ ஏங்கினாய். உன்னுடைய அழுகைகளுக்காக கர்த்தர் மரியாதை கொடுப்பார், அவருடைய நியாயத்தீர்ப்புகளால் அவர்களில் சிலரின் முட்டாள்தனத்தைக் காணவும், அவர்களின் பாவங்களுக்காக அவர்களை மனந்திரும்பவும் செய்வார், ஆனால் உபத்திரவத்தால் அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். நீ அநேக நாட்களை காண்பாய், ஆம், நீ திருப்தியடையும்வரை கர்த்தர் உன்னை விட்டுவைப்பார், ஏனெனில் நீ உன் மீட்பரைக் காண்பாய். கர்த்தருடைய மகத்தான பணியில் உன்னுடைய இருதயம் களிகூரும், உன்னிடமிருந்து உன்னுடைய களிகூருதலை ஒருவனாலும் எடுத்துப்போட முடியாது.
நேபியர்களின் பதிவேடுகளை அவனுடைய பொறுப்பில் தூதன் கொடுத்தபோது, என்னுடைய மகனோடு நீ துணைநிற்க உன்னை அனுமதித்ததில் உன்னுடைய தேவனின் பெரிய அருள்புரிதலை நீ எப்போதும் நினைவுகூருவாய். உன்னுடைய மூன்று பிள்ளைகளை உன்னிடமிருந்து கர்த்தர் எடுத்துக்கொண்டதால் நீ அதிக துக்கத்தைக் கண்டாய்: என்னுடைய மகனின் பெயர் ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒரு குடும்பத்தை வளர்க்க உன்னுடைய தூய்மையான விருப்பங்களை அவர் அறிந்திருந்ததால் இதில் நீ குற்றம் சாட்டப்படுவதில்லை. இப்பொழுது, இதோ, நான் உனக்குச் சொல்வது என்னவெனில், இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், நீ நம்பினால், இந்தக் காரியத்தில் இன்னமும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் மற்றும் உன்னுடைய ஆத்துமாவின் சந்தோஷத்திற்கும் திருப்திக்கும், உன்னுடைய நண்பர்களின் களிகூருதலுக்கும் பிற பிள்ளைகளை நீ கொண்டுவருவாய்.
“புரிந்துகொள்ளுதலுடன் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், உன்னுடைய இனத்திற்கு அறிவுறுத்த நீ வல்லமை கொண்டிருப்பாய். உன் குடும்பத்தினருக்கு நீதியை போதி, வாழ்க்கையின் பாதையை உன் பிள்ளைகளுக்குப் போதி, பரிசுத்த தூதர்கள் உன்னைக் கண்காணிப்பார்கள், தேவனின் ராஜ்யத்தில் நீ இரட்சிக்கப்படுவாய், அப்படியே ஆகக்கடவது. ஆமென்.”