என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
மார்ச் 17–23: “உலகத்தின் காரியங்களை, சிறப்பானவற்றை நாட வேண்டும்”: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23–26


“மார்ச் 17–23: ‘உலகத்தின் காரியங்களை, சிறப்பானவற்றை நாட வேண்டும்’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23–26” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23–26,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

எம்மா ஸ்மித்

மார்ச் 17–23: “உலகத்தின் காரியங்களை, சிறப்பானவற்றை நாட வேண்டும்”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 23–26

பெரும்பாலான மக்களுக்கு, ஞானஸ்நானம் பெறுவது ஒரு பயபக்தியான, அமைதியான அனுபவமாகும். இருப்பினும், எம்மா ஸ்மித் மற்றும் பிறரின் ஞானஸ்நானம், அவர்களை கேலி செய்த ஒரு கும்பலால் சீர்குலைக்கப்பட்டது, அவர்களை அச்சுறுத்தியது மற்றும் அவர்களை ஓடச் செய்தது. பின்னர், புதிய அங்கத்தினர்களை ஜோசப் திடப்படுத்தவிருந்தபோது, பிரசங்கிப்பதால் சமூகத்தை வருத்தப்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இத்தனை எதிர்ப்பிலும், தான் சரியாகச் செய்கிறேன் என்று எம்மா எப்படி உறுதியளிக்க முடியும்? அதே இடத்தை நாம் அனைவரும் காணலாம்—கர்த்தரின் வெளிப்பாட்டின் மூலம். அவர் எம்மாவிடம் “சிறப்பான [உலக] காரியங்கள்”—அவருடைய ராஜ்யம்—அதில் அவளுக்கு இருக்கும் இடம் பற்றி பேசினார். அவர் அவளை பயப்படாதே என்றார், “[அவளுடைய] இருதயத்தை உயர்த்தி, சந்தோஷப்படவும் களிகூரவும், [அவள்] செய்த உடன்படிக்கைகளுக்கு இசைந்திருக்கவும் சொன்னார்,” இந்த ஊக்கம் மற்றும் அறிவுரை வார்த்தைகள் அவருடைய “அனைவருக்கும் குரலாயிருக்கின்றன” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25: 9– 10, 13, 16).

Saints, 1:89–90, 94–97 ஐயும் பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24

[என்னுடைய] “உபத்திரவங்களிலிருந்து” இரட்சகர் என்னை தூக்கி விடமுடியும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24 இல் உள்ள வெளிப்பாடு ஜோசப் ஸ்மித் மற்றும் ஆலிவர் கவுட்ரி ஆகியோரை சோதனையின் போது “பலப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் மற்றும் அறிவுறுத்தவும்” கொடுக்கப்பட்டது (பாகம் தலைப்பு; see also Saints, 1:94–96). அவர்களைப் பலப்படுத்தி உற்சாகப்படுத்தியிருக்கும் என்று நீங்கள் நினைக்கிற, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24ல்உள்ள சொற்களைத் தேடுங்கள்.

உங்களுடைய சவால்களிலிருந்து உங்களை இரட்சகர் எவ்வாறு தூக்கி விடுவார் என்பதைப்பற்றி பின்வரும் வசனங்கள் உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கிறது?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:1–3

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:8

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7–8

ஏசாயா 40:28–31

மோசியா 24:14–15

ஒரு மனிதனை  கிறிஸ்து சுகமாக்குதல்

அநேக பலவிதமான நோய்களை/ அவர் குணமாக்கினார் - ஜே. கிர்க் ரிச்சர்ட்ஸ்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25

தேவனுடைய ராஜ்யத்தில் ஆற்ற எனக்கு முக்கிய பங்கு உள்ளது.

எம்மா ஸ்மித் தனது கணவர் ஜோசப் ஸ்மித் மூலம் மறுஸ்தாபிதம் வெளிப்படுவதைப் பார்த்தபோது, அவளுடைய பங்கு என்னவாக இருக்கும் என்று அவள் யோசித்திருக்கலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25ல் கர்த்தர் கொடுத்திருக்கிற பதில்களைத் தேடவும். வசனம் 16ல் “[உங்களுக்காக] அவருடைய குரல்]” என நீங்கள் உணரும்படியாக இந்த பாகத்தில் நீங்கள் எதையாவது கண்டுபிடித்தீர்களா?

See also “An Elect Lady” (video), Gospel Library; “Thou Art an Elect Lady,” in Revelations in Context, 33–39; Joy D. Jones, “An Especially Noble Calling,” Liahona, May 2020, 15–18.

2:3

"An Elect Lady"

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:5, 14

“சாந்த குணமுள்ள ஆவியில் தொடருங்கள்”

“சாந்த குணமுள்ள ஆவி” என்ற சொற்றொடர் உங்களுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது? சாந்த குணம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்காக பாகம் 25 தேடவும். மூப்பர் டேவிட் ஏ. பெட்னாரின் செய்தி “Meek and Lowly of Heart” உதவும் (Liahona, May 2018, 30–33). இயேசு கிறிஸ்து உங்களுக்கு எப்படி சாந்த குணத்துக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்? (மத்தேயு 11:28–30 பார்க்கவும்). உங்கள் வாழ்க்கையில் நீங்கள் “சாந்த குணத்தின் ஆவியில்” செய்யக்கூடிய விஷயங்களைப் பற்றி சிந்தியுங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:10, 13

வேத பாட வகுப்பு சின்னம்
“உலகத்தின் காரியங்களை நீ ஒதுக்கிவிட்டு சிறப்பானவற்றை நாட வேண்டும்.”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:10 இல் உள்ள கர்த்தரின் அறிவுரையை நீங்கள் சிந்திக்கும்போது, நீங்கள் “ஒதுக்க வேண்டும்” என்று அவர் விரும்பும் இந்த “உலகத்தின் காரியங்களின்” பட்டியலை உருவாக்க இது உதவும். பிறகு, நீங்கள் தேடவேண்டும் என்று அவர் விரும்புகிற “சிறந்த [உலக] காரியங்கள்” என்ற பட்டியலை நீங்கள் உருவாக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைக்கும் முதல் பட்டியலிலிருந்து குறைந்தபட்சம் ஒன்றையும், நீங்கள் தேடும் இரண்டாவது பட்டியலில் இருந்து ஒன்றையும் தேர்வு செய்யலாம்.

தலைவர் ரசல் எம். நெல்சன் “இந்த உலகத்தின் பல விஷயங்களை ஒதுக்கி வைப்பது” பற்றி ஆலோசனையும் வாக்குறுதிகளும் அளித்துள்ளார். “Spiritual Treasures” (Liahona, Nov. 2019)ல் அவரது செய்தியின் பக்கம் 77 இல் அதைத் தேடுங்கள். அவருடைய ஆலோசனையை நீங்கள் எவ்வாறு கடைபிடிப்பீர்கள்?

நீங்கள் வசனம் 13 ஐப் படிக்கும்போது, பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனும் நீங்கள் செய்துள்ள உடன்படிக்கைகளைப் பற்றி சிந்தியுங்கள். இந்த உடன்படிக்கைகளுக்கு “இசைந்திருக்க” என்பதன் அர்த்தம் என்ன? உங்களுடைய உடன்படிக்கைகள் “இந்த உலகத்தின் காரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சிறந்த காரியங்களைத் தேடுவதற்கு” எப்படி உதவுகிறது?

“இவ்வுலகத்தின் காரியங்களுக்கும்” மற்றும் “நல்ல காரியங்களுக்கும்” இடையே பகுத்தறிய உதவும் வேறு சில வசனங்கள் இங்கே உள்ளன: மத்தேயு 6:19, 21, 25–34; லூக்கா 10:39–42; 2 நேபி 9:51.

See also Topics and Questions, “Sacrifice,” Gospel Library.

பகிர அழைக்கவும்.. “உலக காரியங்களை எப்படி ஒதுக்கி வைப்பது” என்பதை நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள் என்றால், இந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ள அவர்களை அழைப்பதற்கான வழிகளைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் உள்ளுணர்வு மற்றும் அனுபவங்களைக் கேட்பதன் மூலம் நாம் பெரும் வலிமையையும் தைரியத்தையும் பெற முடியும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:11–12

கர்த்தர் என் “இருதயத்தின் பாடலில்” களிகூர்கிறார்.”

பரலோக பிதா அல்லது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் உங்களுடைய சில “இருதயங்[களின்] பாடல்கள் யாவை? அவற்றில் சிலவற்றைப் பாடுவதையோ அல்லது கேட்பதையோ கவனியுங்கள். இந்தப் பாடல்கள் உங்களுக்கு சிறப்பாகத் தெரிவது ஏன்?

இந்தப் பாடல்கள் எப்படி ஒரு ஜெபத்தைப் போன்றது என்பதையும் நீங்கள் சிந்திக்கலாம். பரிசுத்த இசைக்கும் ஜெபத்துக்கும் பொதுவானது என்ன? உங்கள் பரிசுத்தப் பாடல்களுக்கு “ஆசீர்வாதத்துடன் பதில்” எப்படி கிடைத்தது?

Oh, What Songs of the Heart,” Hymns, no. 286 ேஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 26:2

“சகல காரியங்களும் சபையில் பொதுவான சம்மதத்துடன் செய்யப்படும்.”

இந்த வசனத்தில் உள்ள “பொது சம்மதம்” என்ற சொற்றொடர், அழைப்பு அல்லது ஆசாரியத்துவ நியமிப்பைப் பெறும் ஒரு நபரை நாம் ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு நம் கைகளை உயர்த்தும் செயலைக் குறிக்கிறது. ஒரு சபைக் கூட்டத்திற்கு வருபவருக்கு நாம் ஒருவரை ஆதரித்தல் என்றால் என்ன அர்த்தம் என்பதை எப்படி விளக்குவீர்கள்? “The Power of Sustaining Faith” எனும் தலைவர் ஹென்றி பி. ஐரிங் செய்தியில் நீங்கள் என்ன பதில்களைக் கண்டீர்கள்? (Liahona, May 2019, 58–60).

கூடுதல் ஆலோசனைகளுக்கு, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிக்கைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 03

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:1, 8

[என்னுடைய] “உபத்திரவங்களிலிருந்து” இரட்சகர் என்னை தூக்கி விடமுடியும்.

  • ஜோசப் ஸ்மித் மற்றும் ஆரம்பகால பரிசுத்தவான்கள் எதிர்கொண்ட சில துன்பங்கள் அல்லது சவால்களைப் பற்றி அறிய, நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம், “Chapter 11: More People Join the Church,” in கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகள், 46–47, அல்லது சுவிசேஷ நூலகத்திலுள்ள தொடர்புடைய காணொலியில். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24: 1, 8ல் அப்போது, ஜோசப்புக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பற்றி கர்த்தர் என்ன சொன்னார் என்பதை நீங்களும் உங்கள் குழந்தைகளும் கண்டுபிடிக்கலாம். கடினமான காலங்களில் கர்த்தர் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறார் என்பதையும் நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம்.

    1:52

    Chapter 11: More People Join the Church: April–June 1830

  • “[நமது] துன்பங்களில் பொறுமையாக இருத்தல்” என்பதன் அர்த்தம் என்ன என்பதை அறிய, நீங்களும் உங்கள் குழந்தைகளும் “Continue in Patience” (Gospel Library). என்ற காணொலியில் பரிசோதனையை மீண்டும் உருவாக்கலாம். பொறுமையைப்பற்றி கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24:8 நமக்கு என்ன போதிக்கிறது? நம்முடைய துன்பங்களின் போது அவர் “[நம்முடன்]” இருக்கிறார் என்பதை இரட்சகர் எவ்வாறு நமக்குத் தெரியப்படுத்துகிறார்?

    2:41

    Continue in Patience

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:11–12

இயேசு “இருதயத்தின் பாடல்களை” விரும்புகிறார்.

  • கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:12 ஐப் படித்த பிறகு, உங்களுக்குப் பிடித்த பாடல் அல்லது சபைப் பாடலைப் பற்றி நீங்கள் ஒருவருக்கொருவர் சொல்லலாம்—உங்கள் “இருதயத்தின் பாடல்”—அவற்றை ஒன்றாகப் பாடுங்கள். நீங்கள் ஏன் இந்தப் பாடல்களை விரும்புகிறீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தப் பாடல்களைப் பாடும்போது கர்த்தர் ஏன் மகிழ்ச்சி அடைகிறார்? நமது பாடல்கள் எவ்வாறு “[அவருக்கு] ஜெபத்தைப்” போலிருக்கும்?

குடும்பம் பியானோவுக்கு அருகில் பாடுதல்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:13, 15

பரலோக பிதாவுடனான எனது உடன்படிக்கைகள் எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன.

  • “உடன்படிக்கைகளுக்கு இசைந்திருப்பது” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:13) என்பதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள, உங்கள் பிள்ளைகள் தங்களால் இயன்றவரை ஏதாவதொன்றை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளலாம். அப்போது நீங்களும் உங்கள் குழந்தைகளும் நீங்கள் எப்படி “இசைந்திருக்கிறீர்கள்” அல்லது உங்கள் உடன்படிக்கைகளைப் பற்றிப் பிடித்திருக்கிறீர்கள் என்பதைப்பற்றி பேசலாம். தேவைப்பட்டால், நாம் செய்யும் உடன்படிக்கைகளை உங்கள் குழந்தைகளுடன் மதிப்பாய்வு செய்யவும் (மோசியா 18:8–10; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37; மற்றும் இந்த வார நிகழ்ச்சி பக்கம் பார்க்கவும்).

  • கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25:13க்கான சூழலை உங்கள் குழந்தைகளுக்கு வழங்க, இது எம்மா ஸ்மித்தின் ஞானஸ்நானத்திற்குப் பிறகு கர்த்தர் கூறியது என்பதை நீங்கள் சுட்டிக்காட்டலாம். சமீபத்தில் ஞானஸ்நாநம் கொடுக்கப்பட்ட ஒருவருக்கு இது ஏன் நல்ல அறிவுரையாக இருக்கும்?

கூடுதல் ஆலோசனைகளுக்கு, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.

எம்மா வேதங்களைப் படித்தல்

எம்மாவின் பாடல்கள்–லிஸ் லெமன் ஸ்வின்டல்

ஆரம்ப வகுப்பு நிகழ்ச்சி பக்கம்