“மார்ச் 10–16: ‘கிறிஸ்துவின் சபையின் எழுச்சி,’ கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–22” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)
“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–22,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025
மார்ச் 10–16: “கிறிஸ்துவின் சபையின் எழுச்சி”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–22
மார்மன் புஸ்தகத்தை வெளிக்கொண்டுவரும் இரட்சகரின் பணி இப்போது முடிந்தது. ஆனால் அவரது மறுஸ்தாபித பணி இப்போதுதான் தொடங்கியது. கோட்பாட்டையும் ஆசாரியத்துவ அதிகாரத்தையும் மறுஸ்தாபிதம் செய்வதற்கும் அதிகமாக, அவருடைய சபையான ஒரு முறையான அமைப்பை மறுஸ்தாபிதம் செய்ய கர்த்தர் விரும்பினாரென்பது ஆரம்ப வெளிப்படுத்தல்களிலிருந்து தெளிவாயிருந்தது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10:53; 18:5 பார்க்கவும்). ஏப்ரல் 6, 1830ல், இயேசு கிறிஸ்துவின் சபை அமைக்கப்படுதலைக் காண, 40க்கும் அதிகமான விசுவாசிகள், பயெட்டி, நியூயார்க்கிலுள்ள விட்மர் குடும்பத்தின் மரவீட்டில் கூடினர்.
நமக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சபை ஏன் தேவையாயிருக்கிறது என சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்? 1830ல் சபையின் அந்த முதல் கூட்டத்துடன் தொடர்புடைய வெளிப்படுத்தல்களில், குறைந்தது ஒரு பகுதி பதில் காணப்படக்கூடும். இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை பிற்காலத்தில், “ஒழுங்காக அமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டிருக்கவில்லையானால்”, இங்கே, விவரிக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்கள் சாத்தியமாயிருந்திருக்காது என அவை விவரிக்கின்றன (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:1).
See also Saints, 1:84–86; “Build Up My Church,” in Revelations in Context, 29–32.
வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–21
இயேசு கிறிஸ்து தம்முடைய சபையை மறுஸ்தாபிதம் செய்தார்.
நமக்கு ஏன் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சபை உள்ளது? ஒருவேளை சிறந்த பதில் “ஏனென்றால் இயேசு கிறிஸ்து ஒன்றை ஒழுங்கமைத்தார்.” நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–21 படிக்கும்போது, அவர் பண்டைய காலத்தில் நிறுவிய சபைக்கும் இன்று அவர் மறுஸ்தாபிதம் செய்த சபைக்கும் உள்ள ஒற்றுமைகளை நீங்கள் கவனிக்கலாம். பண்டைய காலங்களில் இரட்சகரின் சபையைப் பற்றி அறிய பின்வரும் வசனங்களைப் பயன்படுத்தவும்: மத்தேயு 16:15–19; யோவான் 7:16–17; எபேசியர் 2:19–22; 3 நேபி 11:23–26; மரோனி 4–5. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையைப் பற்றி அறிய இந்த வசனங்களைப் பயன்படுத்தவும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:17–25, 60, 72–79; 21:1–2. இதைப் போன்ற ஒரு அட்டவணையில் நீங்கள் காண்கிறதை நீங்கள் பதிவுசெய்யலாம்:
கோட்பாடு |
நியமங்கள் |
ஆசாரியத்துவ அதிகாரம் |
தீர்க்கதரிசிகள் | |
---|---|---|---|---|
கிறிஸ்துவின் பூர்வகால சபை | கோட்பாடு | நியமங்கள் | ஆசாரியத்துவ அதிகாரம் | தீர்க்கதரிசிகள் |
கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை | கோட்பாடு | நியமங்கள் | ஆசாரியத்துவ அதிகாரம் | தீர்க்கதரிசிகள் |
இயேசு கிறிஸ்து ஏன் அவருடைய சபையை ஸ்தாபித்தார் மற்றும் மறுஸ்தாபிதம் செய்தார் என்பது பற்றி இந்த நிகழ்ச்சியிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
See also Dallin H. Oaks, “The Need for a Church,” Liahona, Nov. 2021, 24–26.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37, 75–79; 22
இரட்சகரைப் போல் ஆவதற்கு பரிசுத்த நியமங்கள் எனக்கு உதவுகின்றன.
சபை ஸ்தாபிக்கப்பட்டபோது, ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து உள்ளிட்ட பரிசுத்த நியமங்களைப்பற்றி அவருடைய பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் போதித்தார். இந்த நியமங்களைப் பற்றி நீங்கள் படிக்கும்போது, இரட்சகருடன் இணைந்திருப்பதை உணர அவை உங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, “முடிவுபரியந்தம் [இயேசு கிறிஸ்துவுக்கு] (வசனம் 37). சேவைசெய்ய” காத்துக்கொள்ள இந்த நியமங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவுகின்றன? நீங்கள் திருவிருந்து ஜெபங்ளையும் (வசனங்கள் 77, 79) வாசித்து, அவற்றை நீங்கள் முதல்முறையாகக் கேட்கிறீர்கள் என்று கற்பனை செய்துகொள்ளலாம். என்ன பிற உள்ளுணர்வுகளை நீங்கள் காண்கிறீர்கள்?
See also D. Todd Christofferson, “Why the Covenant Path,” Liahona, May 2021, 116–19.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:38–60
சபை அங்கத்தினர்களையும் அவர்கள் குடும்பங்களையும் ஆசாரியத்துவ சேவை ஆசீர்வதிக்கிறது.
இரட்சகருக்கு அவருடைய சபையில் ஆசாரியத்துவத்தை மறுஸ்தாபிதம் செய்வது ஏன் முக்கியம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:38–60, இல் அவர் ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார் என்று வாசிப்பது உங்களுக்கு சில உள்ளுணர்வுகளைத் தரக்கூடும். இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள பணியின் மூலம் இரட்சகர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எவ்வாறு ஆசீர்வதித்துள்ளார்?
ஆசாரியத்துவத்திற்கு நியமிக்கப்பட்டவர்களைத் தவிர, சபையில் சேவை செய்ய பணிக்கப்பட்ட பெண்களும் தேவ பணியில் பங்கேற்கும்போது அவருடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். எப்படி என்பதை அறிய, தலைவர் டாலின் எச். ஓக்ஸின் செய்தியைப் பார்க்கவும், “The Keys and Authority of the Priesthood” (Liahona, May 2014, 49–52).
தலைப்புகளும் கேள்விகளும் பார்க்கவும், “Joseph Smith’s Teachings about Priesthood, Temple, and Women,” சுவிசேஷ நூலகம்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21
அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது எனக்கு தெய்வீக பாதுகாப்பைக் கொடுக்கும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:4–9 கர்த்தரின் தீர்க்கதரிசியைப் பின்பற்றுவதற்கான அழைப்புகளையும், அதைச் செய்யும் மக்களுக்கு வல்லமைவாய்ந்த வாக்குறுதிகளையும் கொண்டுள்ளது. இந்த வசனங்களை சிந்திக்க பின்வரும் யோசனைகள் உங்களுக்கு உதவ முடியும்:
-
வசனங்கள் 4–5ல் உள்ள எந்த வார்த்தைகள், அவருடைய ஜீவிக்கும் தீர்க்கதரிசியின் வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் செய்ய வேண்டும் என்று இரட்சகர் விரும்புவதை விவரிக்கிறது? இதைச் செய்ய “பொறுமையும் விசுவாசமும்” தேவை என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
-
இரட்சகர் தனது தீர்க்கதரிசியைப் பின்தொடர்வதன் ஆசீர்வாதங்களை விவரிக்க வசனம் 6 இல் பயன்படுத்திய உருவகத்தை சிந்தித்துப் பாருங்கள். “பாதாளத்தின் வாசல்கள்” என்பதன் அர்த்தம் என்ன என நினைக்கிறீர்கள்? கர்த்தர் எப்படி உங்களுக்காக “அந்தகாரத்தின் வல்லமைகளை சிதறடிக்கிறார்”? “உங்கள் நன்மைக்காக வானங்கள் அதிரும்” என்பதன் அர்த்தம் என்ன?
-
சபையின் தற்போதைய தலைவர் மூலம் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் உங்களிடம் கேட்கிறார்? நீங்கள் அவருடைய ஆலோசனையைப் பின்பற்றியதால், கர்த்தர் அவருடைய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றினார்?
மூப்பர் நீல் எல். ஆண்டர்சனின் செய்தியின் பின்வரும் பிரிவுகளிலிருந்து நீங்கள் பெறும் கூடுதல் உள்ளுணர்வுகளைப் பட்டியலிடுங்கள் “The Prophet of God” (Liahona, May 2018, 24–27):
-
தீர்க்கதரிசியை நாம் ஏன் பின்பற்றுகிறோம்:
-
கோபுரத்தில் ஒரு காவலாளி:
-
ஆச்சரியப்பட வேண்டாம்:
“Watchman on the Tower” (video), வையும் பார்க்கவும் ChurchofJesusChrist.org; தலைப்புகளும் கேள்விகளும், “Prophets,” Gospel Library; “We Listen to a Prophet’s Voice,” Hymns, no. 22.
பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20–21
இயேசு கிறிஸ்துவின் சபை மறுஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது.
-
சபை அமைக்கப்பட்ட நாளில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21, கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகளின் அத்தியாயம் 9 அல்லது “Organization of the Church” (ChurchofJesusChrist.org) என்ற காணொலியைப் பயன்படுத்தவும்.
-
பாகம் 20 (வசனங்கள் 21–23, 47, 72–74, 75–79)லிருந்து ஒருவேளை உங்கள் பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவின் படங்கள், யாரோ ஒருவர் ஊழியம் செய்வது, ஞானஸ்நானம் எடுத்தல், மற்றும் திருவிருந்து போன்ற வசனங்களுடன் பொருத்தலாம். இயேசு கிறிஸ்து அவருடைய சபையை மறுஸ்தாபிதம் செய்ததால் நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி கலந்துரையாட இந்தப் படங்களையும் வசனங்களையும் பயன்படுத்தவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37, 41, 71–74
நான் ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்படும்போது, நான் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதாக உறுதியளிக்கிறேன்.
-
ஒரு குழந்தை ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்ட படத்தைப் பார்த்து உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியடையக்கூடும். அவர்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:41, 71–74 லிலுள்ள வழிமுறைகளுடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டலாம். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37 லிருந்து ஞானஸ்நானம் பெற விரும்பும் மக்கள் பற்றி நாம் என்ன கற்கிறோம். “When I Am Baptized” (Children’s Songbook, 103) நீங்கள் ஒன்றாக பாடலாம் அல்லது “The Baptism of Jesus” (Gospel Library) காணொலி காணலாம்.
-
உங்கள் பிள்ளைகள் ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்று திடப்படுத்தப்பட்டிருந்தால், அவர்களின் அனுபவத்தைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் பகிரக்கூடிய படங்கள் உள்ளதா? இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர் அவர்களை எப்படி ஆசீர்வதிக்கிறார் என்பதைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:75–79
நான் இயேசுவின் பெயரை என்மீது எடுத்துக்கொண்டு எப்போதும் அவரை நினைவுகூர முடியும்.
-
உங்கள் பிள்ளைகள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:37 (ஞானஸ்நானம் பற்றி) மற்றும் வசனம் 77 (திருவிருந்து ஜெபம்) இரண்டிலும் “சித்தம்” என்ற வார்த்தையைத் தேடலாம். நாம் என்ன செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார்? உங்கள் பிள்ளைகள் ஒரு பெயர் இருக்கிற ஏதாவதொன்றைப் பார்க்கக்கூடும் (பிராண்ட் பெயர் அல்லது தனிப்பட்ட பெயர் போன்றவை). அந்தப் பொருளைப் பற்றி பெயர் நமக்கு என்ன சொல்கிறது? இயேசு கிறிஸ்துவின் பெயரை நம்மீது எடுத்துக்கொள்வது என்பதன் அர்த்தம் என்ன?
-
கோட்பாடு மற்றும் உடன்படிக்கைகள் 20:77ஐ ஒன்றாக வாசித்து, திருவிருந்தின் ஒரு பகுதியாக நாம் அளிக்கும் வாக்குறுதிகளை அடையாளம் காண உங்கள் குழந்தைகளைக் கேளுங்கள். இரட்சகரை “எப்போதும் நினைவில் கொள்ள” மற்றும் ஒருவருக்கொருவர் என்ன செய்கிறார்கள் என்று யூகிக்க அவர்கள் செய்யக்கூடிய ஏதாவது ஒன்றை அவர்கள் மாறி மாறி நடிக்கலாம். வசனம் 77ன் படி, நாம் எப்பொழுதும் இரட்சகரை நினைவுகூரும்போது நாம் எப்படி ஆசீர்வதிக்கப்படுகிறோம்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:4–6
நான் அவருடைய தீர்க்கதரிசியைப் பின்பற்றும்போது ஆசீர்வதிக்கப்படுகிறேன்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 21:4–6 இல் உள்ள அழைப்புகள் மற்றும் வாக்குறுதிகளைக் கண்டறிந்த பிறகு, உங்கள் பிள்ளைகள் தற்போதைய தீர்க்கதரிசியின் படத்தைப் பார்த்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அல்லது கேட்டதை பகிர்ந்து கொள்ளலாம். அவருடைய தீர்க்கதரிசியைப் பின்பற்றி உங்களை இயேசு கிறிஸ்து ஆசீர்வதித்த வழிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.