என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
மார்ச் 24–30: “சகல காரியங்களும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும்”: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27–28


“மார்ச் 24–30: ‘சகல காரியங்களும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும்’: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27–28 ” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2025 (2025)

“கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27–28,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2025

ஜோசப் ஸ்மித் சிலை

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 24–30: “சகல காரியங்களும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும்”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27–28

மறுஸ்தாபிதம் தொடர்ந்து திறக்கும்போது, பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தல் இன்னும் ஒப்பீட்டளவில் ஒரு புதிய கருத்தாய் இருந்தது. சபைக்கான வெளிப்படுத்தலை தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் பெறமுடியுமென ஆரம்பகால சபை அங்கத்தினர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் பிறருக்கு முடியுமா? சபைக்கான வெளிப்படுத்தலை தான் பெற்றதாக, தங்கத்தகடுகளைப்பற்றிய எட்டு சாட்சிகளில் ஒருவரான ஹைரம் பேஜ் நம்பியபோது, இதைப்போன்ற கேள்விகள் முக்கியமாயின. இந்த வெளிப்படுத்தல்கள் தேவனிடமிருந்து வந்தன என அநேக விசுவாசமிக்க பரிசுத்தவான்கள் நம்பினர். தன் சபையில் “சகல காரியங்களும் ஒழுங்கான முறையில், நடத்தப்பட வேண்டும்” என கர்த்தர் பதிலளித்தார். ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:13). முழு சபைக்கும் இந்த சபையில், “கட்டளைகளையும், வெளிப்படுத்தல்களையும் பெற ஒருவனே நியமிக்கப்பட்டான்” என்பதே இதன் பொருள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:2) பிறர், அப்படியிருந்தும், கர்த்தருடைய பணியில் தங்களுடைய பங்காக தனிப்பட்ட வெளிப்படுத்தலை மற்றவர்களால் பெறமுடியும். உண்மையில், “நீ என்ன செய்யவேண்டுமென்பது … உனக்குத் தெரிவிக்கப்படும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:15) என்று ஆலிவர் கவுட்ரிக்கு கர்த்தருடைய வார்த்தைகள் நம் அனைவருக்கும் ஒரு நினைவுபடுத்தலாயிருக்கிறது.

சகல காரியங்களும் ஒழுங்கான முறையில் நடத்தப்பட வேண்டும்,” Revelations in Context, 50–53 ஐயும் பார்க்கவும்.

படிப்பு சின்னம்

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:1–4

வேத பாட வகுப்பு சின்னம்
நான் இயேசு கிறிஸ்துவின் நினைவாக திருவிருந்தை எடுக்கிறேன்.

ஜூன் 1830ல் சாலி நைட்டும் எம்மா ஸ்மித்தும் ஞானஸ்நானம் பெற்றார்கள், ஆனால் அவர்களுடைய திடப்படுத்தல் ஒரு கும்பலால் சீர்குலைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், சாலியும் அவரது கணவர் நியூவெல்லும் எம்மாவையும் ஜோசப்பையும் சந்திக்க வந்து, திடப்படுத்தல்கள் இப்போது நடப்பிக்கப்பட வேண்டுமெனவும், குழுவினர் ஒன்றுசேர்ந்து திருவிருந்தில் பங்கேற்கவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. திருவிருந்திற்காக திராட்சை ரசம் வாங்க செல்லும் வழியில் ஒரு தூதனால் ஜோசப் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தூதன் அவருக்கு திருவிருந்து பற்றி என்ன கற்பித்தான் என்பதை அறிய கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:1–4 வாசிக்கவும். திருவிருந்தை நீங்கள் எவ்வாறு அணுகவேண்டுமென இரட்சகர் விரும்புகிறார் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன போதிக்கின்றன? “[அவருடைய] மகிமைக்காக ஒரு நோக்கத்துடன்” அதில் பங்கெடுப்பதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? லூக்கா 22:19–20 மற்றும் 3 நேபி 18:1–11 நீங்கள் படிக்கும் போது இதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், திருவிருந்து பற்றிய பிற உள்ளுணர்வுகளைத் தேடுங்கள். (See also the videos “The Last Supper,” “Jesus Christ Blesses Bread in Remembrance of Him,” and “Jesus Christ Blesses Wine in Remembrance of Him,” Gospel Library).

6:1

The Last Supper

4:24

Jesus Christ Blesses Bread in Remembrance of Him | 3 Nephi 18:1-7

2:28

Jesus Christ Blesses Wine in Remembrance of Him | 3 Nephi 18:8-11

திருவிருந்தை ஒரு ஆராதனை அனுபவமாக மாற்றுவது பற்றி அறிய, மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சனின் செய்தியைப் படிக்கவும், “The Living Bread Which Came Down from Heaven” (Liahona, Nov. 2017, 36–39). மூப்பர் கிறிஸ்டாபர்சன் என்ன கற்பித்தார், இது திருவிருந்தின் மூலம் இரட்சகருடன் அதிக தொடர்பை உணர எவ்வாறு உதவுகிறது? இரட்சகரின் பாவநிவிர்த்தியின் சின்னங்களில் பங்குகொள்வதற்கும் அவற்றை அதிக பயபக்தியுடன் அல்லது நோக்கத்துடன் நடத்துவதற்கும் சிறப்பாகத் தயாராக நீங்கள் என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள்.

As Now We Take the Sacrament” (Hymns, no. 169) ஒரு திருவிருந்து பாடலைப் பாடுவது, கேட்பது அல்லது வாசிப்பது மற்றும் இந்த திருவிருந்து நியமத்தில் பங்கேற்பது பற்றிய உங்கள் உணர்வுகளை பதிவு செய்தல் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்.

இசையைப் பயன்படுத்தவும். திருவிருந்து இசை சுவிசேஷ சத்தியங்களை சாட்சியமளிக்க ஆவியை அழைக்கிறது. இந்த சத்தியங்களை மறக்கமுடியாத வகையில் புரிந்துகொள்ளவும் உணரவும் இது உங்களுக்கு உதவும். கற்றலை மேலும் ஈடுபாட்டுடன் செய்ய இசை உதவுகிறது.

See also Doctrine and Covenants 20:77, 79; 59:9–13; Topics and Questions, “Sacrament,” Gospel Library; “Obtaining and Retaining a Remission of Sins through Ordinances,” in David A. Bednar, “Always Retain a Remission of Your Sins,” Liahona, May 2016, 60–62.

15:20

Always Retain a Remission of Your Sins

பிட்கப்பட்ட அப்பம்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:5–14

கர்த்தர் தம்முடைய பணிகளை வழிநடத்த அவருடைய ஊழியர்களுக்கு ஆசாரியத்துவத் திறவுகோல்களைக் கொடுக்கிறார்.

இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்ட தீர்க்கதரிசிகளைப்பற்றி நாம் என்ன அறிந்துகொள்கிறோம்? அவர்களைப் பற்றிய தகவல்களை நீங்கள் வேத வழிகாட்டியில் தேடலாம். இந்த தீர்க்கதரிசிகள் வைத்திருந்த திறவுகோல்கள் மூலம் உங்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் திறக்கப்பட்டுள்ளன?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:15–18.

தீமைக்கு எதிராக நிற்க, தேவனின் சர்வாயுத வர்க்கம் எனக்கு உதவும்.

தலைவர் எம். ரசல் பல்லார்ட் சொன்னார்: “ஆவிக்குரியவிதமாக நாம் ஆயுதந்தரிக்க நாம் செய்யவேண்டிய ஒரு பெரிய, மகத்தான காரியம் ஒன்றும் இல்லை. அனைத்து தீமையிலிருந்தும் பாதுகாக்கிற, தடுக்கிற ஆவிக்குரிய அரண் என்ற ஒரு துணியில் ஒன்றாக தைக்கப்பட்டிருக்கிற ஏராளமான சிறிய செயல்களில் உண்மையான ஆவிக்குரிய வல்லமை உள்ளது” (“Be Strong in the Lord,” Ensign, July 2004, 8).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:15–18, இல் உள்ள தேவனின் சர்வாயுத வர்க்கத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளும்போது, இது போன்ற ஒரு அட்டவணையை நீங்கள் உருவாக்கலாம். தேவனின் சர்வாயுதவர்க்கத்தின் ஒவ்வொரு துண்டின்மேல் போட நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

சர்வாயுதவர்க்கத்தின் துண்டு

பாதுகாக்கப்பட்ட சரீரத்தின் பகுதி

அந்த சரீர பகுதி எதைப் பிரதிபலிக்கிறது

சர்வாயுதவர்க்கத்தின் துண்டு

நீதியின் மார்புக்கவசம்

பாதுகாக்கப்பட்ட சரீரத்தின் பகுதி

இருதயம்

அந்த சரீர பகுதி எதைப் பிரதிபலிக்கிறது

நமது வாஞ்சைகளும் பாசங்களும்

சர்வாயுதவர்க்கத்தின் துண்டு

இரட்சிப்பின் தலைக்கவசம்

பாதுகாக்கப்பட்ட சரீரத்தின் பகுதி

தலை அல்லது மனம்

அந்த சரீர பகுதி எதைப் பிரதிபலிக்கிறது

சர்வாயுதவர்க்கத்தின் துண்டு

பாதுகாக்கப்பட்ட சரீரத்தின் பகுதி

அந்த சரீர பகுதி எதைப் பிரதிபலிக்கிறது

சர்வாயுதவர்க்கத்தின் துண்டு

பாதுகாக்கப்பட்ட சரீரத்தின் பகுதி

அந்த சரீர பகுதி எதைப் பிரதிபலிக்கிறது

எபேசியர் 6:11–18; Jorge F. Zeballos, “Building a Life Resistant to the Adversary,” லியஹோனா, Nov. 2022, 50–52 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28.

தம் ஜீவிக்கும் தீர்க்கதரிசி மூலம் தன் சபையை இயேசு கிறிஸ்து நடத்துகிறார்.

முழு சபைக்கும் கட்டளைகளையும் வெளிப்படுத்தலையும் யாராவது ஒருவர் பெறமுடிந்தால் அது எப்படி இருக்குமென கற்பனை செய்து பாருங்கள். ஹைரம் பேஜ் அத்தகைய வெளிப்படுத்தலை பெற்றதாக சொன்னபோது சபை அங்கத்தினர்களுக்கு மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28, அவருடைய சபையில் வெளிப்படுத்தலுக்காக ஒரு ஒழுங்கை கர்த்தர் வெளிப்படுத்தினார். சபையின் தலைவரின் குறிப்பிடத்தக்க பாத்திரத்தைப்பற்றி இந்த பாகத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? தேவன் உங்களை எவ்வாறு வழிநடத்த முடியுமென்பதைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

See also Dale G. Renlund, “A Framework for Personal Revelation,” Liahona, Nov. 2022, 16–19.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:8–9.

லாமானியர்களுக்கு ஊழியம் செய்வது ஏன் முக்கிமானதாயிருந்தது?

மார்மன் புஸ்தகத்தின் ஒரு நோக்கம் என்னவென்றால், “லாமானியர்கள் தங்கள் பிதாக்களின் ஞானத்திற்குள் வரும்படிக்கும், கர்த்தரின் வாக்குத்தத்தங்களை அறிந்துகொள்ளும்படிக்குமே” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3:20). அநேக மார்மன் புஸ்தக தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தர் செய்த வாக்குத்தத்தங்களுடன் இது ஒத்திருந்தது (உதாரணமாக, 1 நேபி 13:34–41; ஏனோஸ் 1:11–18; ஏலமன் 15:12–13 பார்க்கவும்). அமெரிக்க செவ்விந்தியர்கள் மார்மன் புஸ்தக ஜனங்களின் சந்ததியராயிருந்தனர் என ஆரம்பகால சபை அங்கத்தினர்கள் கருதினர். (இன்றைய சபையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவென்றால், லாமானியர்கள் “அமெரிக்க செவ்விந்தியர்களின் மூதாதையர்களிடையே இருந்தனர்” [மார்மன் புஸ்தகத்தின் முன்னுரை ].

பக்கத்திலிருந்த அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினருக்கு ஆலிவர் கவுட்ரியின் ஊழியத்தைப்பற்றி அதிகம் வாசிக்க “A Mission to the Lamanites” (Revelations in Context, 45–49) பார்க்கவும். கர்த்தரைப்பற்றியும், அவருடைய பணியைப்பற்றியும் இந்த ஊழியம் உங்களுக்கு என்ன போதிக்கிறது?

கூடுதல் ஆலோசனைகளுக்கு, லியஹோனா மற்றும் இளைஞர்களின் பெலனுக்காக பத்திரிக்கைகளின் இந்த மாத இதழ்களைப் பார்க்கவும்.

பிள்ளைகள் பகுதி சின்னம் 01

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:1–2

இயேசு கிறிஸ்துவை நினைவில் கொள்ள திருவிருந்து நமக்குதவுகிறது.

  • இயேசு திராட்சை ரசத்தைப் பயன்படுத்தியபோது நாம் ஏன் திருவிருந்திற்கு தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்று குழந்தைகள் ஆச்சரியப்படலாம் (லூக்கா 22:19–20; 3 நேபி 18:1–11 பார்க்கவும்). நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:1–2ஐ ஒன்றாகப் படித்து, “[தேவனின்] மகிமைக்கு ஒரே நோக்கத்தோடு” (வசனம் 2) திருவிருந்தை எடுத்துப்பதன் அர்த்தம் என்ன என்று கலந்துரையாடலாம். நாம் திருவிருந்தை எடுக்கும்போது இரட்சகரிடம் கவனம் செலுத்த என்ன செய்யலாம்?

  • ஒருவேளை இரட்சகரைப் பற்றிய படங்கள், வேத வசனங்கள் அல்லது பாடல் வரிகள் இருந்தால், உங்கள் பிள்ளைகள் திருவிருந்தை எடுக்கும்போது அவரை நினைவில் வைத்துக் கொள்ள உதவலாம். இந்த படங்கள், வசனங்கள் மற்றும் பாடல் வரிகள் சிலவற்றைக் கொண்டு ஒரு சிறு புத்தகத்தை உருவாக்குவதை அவர்கள் விரும்பலாம். அவர்கள் தங்கள் சொந்த படங்களை வரையலாம் அல்லது நண்பன் பத்திரிகையில் சிலவற்றைக் காணலாம்.

கிறிஸ்து அப்பம் பிட்குதல்

கடைசி இராப்போஜனம் இருந்து விளக்கம்–சைமன் டிவே

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:15–18.

தேவனுடைய சர்வாயுதவர்க்கம் என்னைப் பாதுகாக்கிறது.

  • என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்புக்காக: புதிய ஏற்பாடு 2023 இந்த குறிப்பில் உள்ளதைப் போன்ற அல்லது எபேசியர்களுக்கான குறிப்பில் உள்ள நிகழ்ச்சி பக்கத்தில் உள்ள சர்வாயுத வர்க்கத்தின் படத்தை உங்கள் குழந்தைகளுக்குக் காட்டலாம். நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27:15–18ஐப் படிக்கும்போது, படத்தில் உள்ள சர்வாயுத வர்க்கத் துண்டுகளைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுங்கள். “தீங்கு நாளிலே எதிர்க்க” தேவனின் சர்வாயுத வர்க்கம் நமக்கு எவ்வாறு உதவ முடியும்? ( வசனம் 15).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:2, 6–7.

தீர்க்கதரிசி சபைக்கு வெளிப்பாட்டைப் பெறுகிறார்; நான் என் வாழ்க்கைக்கான வெளிப்பாட்டைப் பெற முடியும்.

  • உங்களுக்கு பல குழந்தைகள் இருந்தால், “தலைவரைப் பின்தொடர்” விளையாட அவர்களை அழைக்கலாம், ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை தலைவராக இருக்கச் சொல்லுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தலைவர்கள் இருக்கும்போது என்ன நடக்கும்? நீங்கள் ஹைரம் பேஜ் பற்றி அறிந்து கொள்ளலாம் (பார்க்கவும் “Chapter 14: The Prophet and Revelations for the Church,” in கோட்பாடும் உடன்படிக்கைகளும் கதைகளில், 56–57, அல்லது சுவிதேஷ நூலக்தித்திலுள்ள தொடர்புடைய காணொலியில் ; அல்லது பாகத்தின் தலைப்பில் r கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28). ஆரம்பகால சபை உறுப்பினர்களின் குழப்பத்தை பரலோக பிதா எவ்வாறு சரி செய்தார்? இன்று அவர் சபையை எவ்வாறு வழிநடத்துகிறார்? ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:2 பார்க்கவும்) தற்போதைய தீர்க்கதரிசி நம் நாளில் அவருடைய சபையை வழிநடத்த கர்த்தரால் அழைக்கப்படுகிறார் என்பதற்கு உங்கள் சாட்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    1:21

    Chapter 14: The Prophet and Revelations for the Church: September 1830

  • சபைக்கான வெளிப்பாடு எப்பொழுதும் தீர்க்கதரிசி மூலம் கொடுக்கப்படும் அதே வேளையில், நாம் அனைவரும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட முடியும். பின்வரும் வசனங்களில் சிலவற்றைத் தேடுவதற்கும், பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தும் வழிகளின் பட்டியலை உருவாக்குவதற்கும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவலாம்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 28:1, 4, 15; யோவான் 14:26; மரோனி 8:26; 10:4–5. பரிசுத்த ஆவியால் நீங்கள் எவ்வாறு வழிநடத்தப்பட்டீர்கள் என்பதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கூடுதல் ஆலோசனைகளுக்கு, நண்பன் பத்திரிக்கையின் இந்த மாத இதழைப் பார்க்கவும்.