“மார்ச் 2–8. 2 நேபி 31–33: ‘இதுவே வழி,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“மார்ச் 2–8. 2 நேபி 31–33,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
மார்ச் 2–8
2 நேபி 31–33.
“இதுவே வழி”
2 நேபி 31–33 ல் நீங்கள் அர்த்தமுள்ளதாக காணக்கூடிய கொள்கைகளை இந்தத் குறிப்பு ஆலோசனையளிக்கிறது. ஆனால் உங்கள் தியானத்தில் நீங்கள் கற்கவிருக்கிற மிக முக்கியமான விஷயங்கள் ஆவியின் கிசுகிசுப்புகளிலிருந்தே வரும். இந்த வழிகாட்டுதலை தேடுங்கள், மற்றும் வரும் உணர்த்துதல்களைப் பதிவுசெய்யுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
நேபியின் பதிவுசெய்யப்பட்ட இறுதி வார்த்தைகளின் மத்தியில், நாம் இந்த பிரகடனத்தைக் காண்கிறோம்: “கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார், நான் கீழ்ப்படிய வேண்டும்” (2 நேபி 33:15). இது நேபியின் வாழ்க்கையின் ஒரு பொருத்தமான சுருக்க உரைபோலத் தோன்றுகிறது. அவன் கர்த்தருடைய சித்தத்தை நாடி துணிவோடு அதற்குக் கீழ்ப்படிய முயற்சித்தான்—அது லாபானிடம் இருந்து பித்தளைத் தகடுகளைப் பெற தன் வாழ்வை இக்கட்டில் வைத்ததினாலும் சரி, ஒரு படகைக் கட்டி கடலைக் கடந்ததினாலும் சரி, அல்லது தெளிவோடும் வல்லமையோடும் கிறிஸ்துவின் கொள்கைகளை விசுவாசத்தோடு போதித்ததினாலும் சரி. “நித்திய ஜீவனுக்கு அழைத்துச் செல்லும் நெருக்கமும் இடுக்கமுமான வழியைப்” பின்பற்றி “கிறிஸ்துவில் திடநம்பிக்கையாய் முன்னேற வேண்டிய” தேவையை நேபியால் அழுத்தமாய் பேச முடிந்தது (2 நேபி 31:20, 18), ஏனெனில் அவன் பின்பற்றிய பாதை அதுவே. இந்தப் பாதை, சில வேளைகளில் கடினமானதாக இருந்தாலும், மகிழ்ச்சியானதும் கூட என அவன் அறிந்திருந்தான், மேலும் “இதைத் தவிர வானத்தின் கீழே தேவனுடைய ராஜ்யத்தில் மனுஷன் இரட்சிக்கப்படும்படிக்கு வேறு எந்த வழியோ நாமமோ கொடுக்கப்படவில்லை” (நேபி 31:21).
தனிப்பட்ட வேத தியானத்திற்கான ஆலோசனைகள்
இயேசு கிறிஸ்துவும் அவரது கோட்பாடுமே நித்திய ஜீவனுக்கான ஒரே வழி.
நித்திய ஜீவனுக்கான வழியை சில சொற்களில் சுருக்கி சொல்ல வேண்டியதாக இருந்தால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? நேபி, தமக்கே உரிய தெளிவோடும் எளிமையோடும் அதை இவ்வாறு கூறினான்: கிறிஸ்துவில் விசுவாசம், மனந்திரும்புதல், ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வரம் பெறுதல், மற்றும் இறுதிபரியந்தம் தரித்திருத்தல். நீங்கள் நேபியின் போதனைகளை நேபி 31–32 ல் படித்தபின், உங்கள் சொந்த வார்த்தையைக் கொண்டு நீங்கள் எவ்வாறு வேறு ஒருவருக்கு அதை விளக்குவீர்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இந்த போதனைகளின்படி வாழுதல் எவ்வாறு உங்களை ஆசீர்வதித்திருக்கிறது என்பதைப்பற்றி எண்ணிப்பாருங்கள். நீங்கள் 2 நேபி 31:18–20ல் உள்ள நேபியின் போதனைகளை சிந்தித்து சுவிசேஷப் பாதையில் “முன்னேறிச் செல்லும்” உங்கள் சொந்த முயற்சிகளை மதிப்பிடலாம்.
3 நேபி 11:32–39; 27:13-22; Todd Christofferson, “The Doctrine of Christ,” Ensign or Liahona, May 2012, 86–90; Brian K. Ashton, “The Doctrine of Christ,” Ensign or Liahona, Nov. 2016, 106–9 ஐயும் பார்க்கவும்.
அவர் ஞானஸ்நானம் பெற்ற போது இயேசு கிறிஸ்து கீழ்ப்படிதலுக்கு பரிபூரண எடுத்துக்காட்டை ஏற்படுத்தினார்.
உங்கள் ஞான்ஸ்நானம் நேற்றோ அல்லது 80 ஆண்டுகளுக்கு முன்னோ நடைபெற்றதாக இருந்தாலும், அது ஒரு முக்கியமான தருணம்—இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வாழ்நாள் உடன்படிக்கைக்குள் நீங்கள் நுழைந்துவிட்டீர்கள். இரட்சகரின் ஞானஸ்நானத்தைப்பற்றி 2 நேபி 31:4–13ல், படிக்கும்போது உங்கள் ஞானஸ்நானத்தைப்பற்றியும் சிந்தித்துப்பாருங்கள். இரட்சகர் ஏன் ஞானஸ்நானம் பெற்றார்? அவர் ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணங்கள் எவ்வாறு நீங்கள் ஞானஸ்நானம் பெற்றதற்கான காரணங்களைப் போல இருக்கின்றன? இரட்சகரின் கீழ்ப்படிதலைப்பற்றிய எடுத்துக்காட்டைத் தொடர்ந்து பின்பற்றுவதற்கு இன்று நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற, திருவிருந்து நியமனம் மறு ஒப்புக்கொடுக்க கிடைக்கிற வாரந்தோறும் ஒரு வாய்ப்பு. அடுத்தமுறை நீங்கள் திருவிருந்தில் பங்குகொள்ளும்போது நேபி 31:13வாசித்து, “இருதயத்தின் முழு நோக்கத்தோடு குமாரனைப் பின்பற்ற” உங்கள் தீர்மானத்தையும், “கிறிஸ்துவின் நாமத்தை உங்கள் மேல் தரித்துக்கொள்வதில்” உங்கள் விருப்பத்தையும்பற்றி தியானிப்பதையும் கருத்தில் கொள்ளவும்.
நான் என்ன செய்யவேண்டும் என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்குக் காட்டுவார்.
ஞானஸ்நானமும் திடப்படுத்தலும் “[நாம்] பிரவேசிக்கக் கூடிய வாசல்” இடுக்கமும் நெருக்கமுமாக இருந்தால் (2 நேபி 31:17), பாதைக்கு வந்துவிட்ட பின் நாம் என்ன செய்கிறோம்? அப்படித்தான் நேபியின் ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள் (2 நேபி 32:1) பார்க்கவும் . நேபி 31: 19–20 மற்றும் அத்தியாயம் 32ல் என்ன பதில்களை நேபி கொடுத்தான்? உங்களுக்காக நீங்கள் என்ன பதிலைக் காண்கிறீர்கள்?
David A. Bednar, “Receive the Holy Ghost,” Ensign or Liahona, Nov. 2010, 94–97; “Holy Ghost,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.
கிறிஸ்துவை நம்புமாறு அனைவரையும் மார்மன் புஸ்தகம் வற்புறுத்துகிறது.
2 நேபி 33 ல் நேபி தன் எழுத்துக்களை முடிக்கும்போது, முதலாவதாக அவன் ஏன் எழுதுகிறான் என்பதற்கு காரணங்களை விவரித்தான். இந்த அதிகாரத்தில் நீங்கள் என்ன காரணங்களைக் காண்கிறீர்கள்? 1 நேபி மற்றும் 2 நேபியில் இதுவரை நீங்கள் வாசித்தவைகளையும் நீங்கள் எழுதிய குறிப்புகளையும்பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கான நேபியின் நோக்கத்தை கதைகளும் போதனைகளும் எவ்வாறு நிறைவேற்றியிருக்கின்றன? உதாரணமாக, அவைகள் எவ்விதம் “[கிறிஸ்துவை] நம்பவும், இறுதிபரியந்தம் நிலைத்திருப்பதையும்” குறித்து உங்களை எவ்வாறு வற்புறுத்தின? (வசனம் 4). இந்த அனுபவங்களை பதிவு செய்ய அல்லது ஒரு குடும்ப அங்கத்தினர் அல்லது நண்பரோடு பகிர்ந்துகொள்ளுவதைப்பற்றி எண்ணிப்பாருங்கள்.
குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வேதங்களை வாசிக்கும் போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டுமென்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.
2 நேபி 31:5–13.
யாராவது குடும்ப அங்கத்தினர்கள் ஞானஸ்நானத்துக்காக ஆயத்தப்படுகிறார்களா, அல்லது யாராவது சமீபத்தில் ஞானஸ்நானம் பெற்றார்களா? ஒருவேளை ஏன் அவர்கள் ஞானஸ்நானம் பெற தீர்மானித்தார்கள் என்று அவர்கள் பகிர்ந்துகொள்ளலாம். நேபியின் போதனைகளின்படி, நாம் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் யாவை? நாம் ஞானஸ்நானம் பெறும்போது நாம் பெறும் சில ஆசீர்வாதங்கள் யாவை?
2 நேபி 31:17–21.
“இடுக்கமான மற்றும் நெருக்கமான வழியைப்பற்றிய” நேபியின் ஒப்புமையை உங்கள் குடும்பம் புரிந்துகொள்ள நீங்கள் எவ்விதம் உதவி செய்யலாம்? (2 நேபி 31:18). உதாரணமாக, நேபி 31: 17–21ல், நேபி விவரித்துள்ள பாதையின் படத்தை வரையவும், அந்த வழியில் நுழைந்து முன்னேறிச் செல்வதற்கு நாம் செய்யவேண்டியவற்றை அதில் அடையாளப்படுத்தி நீங்கள் ஒன்றாக முயற்சிக்கலாம். அந்த வழியில் முன்னேறிச் செல்ல இரட்சகர் எவ்வாறு நமக்கு உதவுகிறார்?
2 நேபி 31:20.
நாம் எவ்வாறு இறுதிபரியந்தம் தரித்திருக்கிறோம் என்பதை உங்கள் குடும்பம் சிறந்தமுறையில் புரிந்துகொள்ள உதவ நீங்கள் விரும்பினால், என் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் பக்கம் 6 ல் ஒரு பயனுள்ள விளக்கமிருக்கிறது; அவ்வாறே Elder Dale G. Renlund’s message “Latter-day Saints Keep on Trying” (Ensign or Liahona, May 2015, 56–58)லிலும் இருக்கிறது.
2 நேபி 32:8–9.
நம்மால் “எப்போதும் ஜெபிக்கமுடியுமென்பதை” குடும்ப அங்கத்தினர்கள் புரிந்துகொள்வதற்கு உதவ, நீங்கள் நாம் ஜெபிக்கக்கூடிய சூழ்நிலைகளை ஒரு பட்டியலிடலாம் (அல்லது அவற்றைக் குறிக்கப் படங்களை வரையலாம்). பின்னர் உங்கள் குடும்பம் ஜெபத்தைப்பற்றி போதிக்கும் “Did You Think to Pray?” போன்ற ஒரு பாடலைப் பாடலாம்.கீர்த்தனை, எண்.140), இந்தப் பாடலில் உள்ள சில வார்த்தைகளை தங்கள் பட்டியலில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு மாற்றுதல், நாம் எப்போதும் ஜெபிக்கும்போது கர்த்தர் நம்மை எவ்விதம் ஆசீர்வதிக்கிறார்?
2 நேபி 33:1–2.
“பரிசுத்த ஆவிக்கு எதிராகத் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்த ”ஜனங்களை எது வழிநடத்தக் கூடும்? பரிசுத்த ஆவிக்கு “[நமக்குள்] இடம்” பெற்றிருப்பதை எவ்விதம் நாம் நிச்சயப்படுத்தலாம்?
பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், —ஆரம்ப வகுப்புல் இந்த வாரத்தின் குறிப்பு பார்க்கவும்.