என்னைப் பின்பற்றி வாருங்கள்
மார்ச் 16–22. யாக்கோபு 5-7: “கர்த்தர் நம்மோடு பிரயாசப்படுகிறார்”


“மார்ச் 16–22. யாக்கோபு 5–7: ‘கர்த்தர் நம்மோடு பிரயாசப்படுகிறார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“மார்ச் 16–22. யாக்கோபு 5–7,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

ஓர் ஒலிவ மரத் தோப்பில் மனுஷர்கள் வேலைசெய்கிறார்கள்

ஒலிவ மரத்தைப்பற்றிய உருவகம், பிராட் டியர்

மார்ச் 16–22

யாக்கோபு 5–7

கர்த்தர் நம்மோடு பிரயாசப்படுகிறார்

வேதங்களை வாசிப்பது வெளிப்படுத்தல்களை அழைக்கிறது. நீங்கள் யாக்கோபு 5–7ஐ வாசிக்கும்போது, உங்களுக்கும் குடும்பத்துக்கும் உதவி செய்ய ஆவியானவரிடமிருந்து வழிகாட்டுதலை நாடவும். கர்த்தர் உங்களுக்காக என்ன செய்திகளை வைத்திருக்கிறார்?

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இன்னமும் கேள்விப்படாத அநேக அநேக ஜனங்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களைக் கர்த்தரின் சபைக்குள் சேர்க்கும் வேலையின் மாபெரும் பளுவைப்பற்றி எப்போதாவது மூழ்கடிக்கும் உணர்வை நீங்கள் அடைந்ததுண்டானால் யாக்கோபு 5 ல் உள்ள ஒலிவ மரங்களைப்பற்றிய உருவகத்தில் ஓர் உறுதியளிக்கும் நினைவூட்டல் உள்ளது : திராட்சைத் தோட்டம் கர்த்தருடையது. அவருடைய வேலையில் துணைபுரிய அவர் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறு பகுதியை அளித்திருக்கிறார்-நம் குடும்பம், நம்முடைய நண்பர்கள் வட்டம், நம்முடைய செல்வாக்கு வளையம். சேர்க்க நாம் உதவும் முதல் நபர் சிலசமயங்களில் நாமாகவே இருக்கிறோம். ஆனால் நாம் ஒருபோதும் இந்த வேலையில் தனியாக இல்லை, ஏனெனில் திராட்சைத் தோட்டக்காரர் அவருடைய வேலையாட்களுடன் பிரயாசப்படுகிறார் (யாக்கோபு 5:72 பார்க்கவும்). தேவன் தமது பிள்ளைகளை அறிகிறார் மற்றும் நேசிக்கிறார், கடந்த காலத்தில் அவரை நிராகரித்தவர்கள் உட்பட அவர்கள் ஒவ்வொருவரும் தமது சுவிசேஷத்தைக் கேட்கும் ஒரு வழியை ஆயத்தம் செய்வார் (யாக்கோபு 4:15–18பார்க்கவும்). அதன் பின்னர், வேலை முடிந்த பின், “கருத்தாய் [அவரோடு] உழைத்தவர்கள் … [அவரது] திராட்சைத் தோட்டத்தின் கனியின் காரணமாக [அவருடன்] மகிழ்ச்சியாய் இருப்பார்கள்” (யாக்கோபு 5:75).

தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்துக்கான ஆலோசனைகள்

யாக்கோபு 5–6

ஓர் உருவகம் என்பது என்ன?

உருவகம் என்பது ஆவிக்குரிய சத்தியங்களை அடையாளங்களின் மூலம் போதிக்கும் கதைகள். ஒலிவ மரங்களைப்பற்றிய உருவகத்தில், உதாரணமாக, தோட்டம் உலகைக் குறிக்கிறது, ஒரு நாட்டு ஒலிவ மரம் இஸ்ரவேலைக் குறிக்கிறது (தேவனோடு உடன்படிக்கை செய்தவர்கள்), மற்றும் காட்டு ஒலிவ மரங்கள் புறஜாதியாரைக் குறிக்கிறது (தேவனோடு உடன்படிக்கை செய்துகொள்ளாதவர்கள்).

நீங்கள் யாக்கோபு 5ல் உருவகத்தைப்பற்றி தியானிக்கும்போது, கூடுதல் அடையாளங்களை தேடி, அவற்றிற்கு என்ன் பொருள் என்று சிந்தியுங்கள். உதாரணமாக, நல்ல கனிகள் எதைக் குறிக்கின்றன என்று எண்ணுகிறீர்கள்? கெட்ட கனிகள் எதைக் குறிக்கக்கூடும்?

யாக்கோபு 5; 6:3–5

இயேசு கிறிஸ்துவே தோட்டக்காரர்.

ஒலிவ மரத்தின் உருவகத்தை நீங்கள் யாக்கோபு 5ல், தியானிக்கத் தொடங்கும்முன் யாக்கோபு 4:10–18ஐ பரிசீலனை செய்து யாக்கோபு ஏன் தம் ஜனங்களோடு இந்த உருவகத்தைப் பகிர்ந்து கொண்டான் என்று அறிந்துகொள்வது உதவியாயிருக்கும். யாக்கோபு 6:3–5ல் யாக்கோபு வலியுறுத்த விரும்பிய சில கூடுதல் செய்திகளை நீங்கள் காணலாம்; இந்த செய்திகளை உருவகத்தில் தேடுங்கள். யாக்கோபு 5ல் நீங்களாகவே என்ன செய்தியைக் காண்கிறீர்கள்?

மிக நீண்ட அதிகாரமான யாக்கோபு 5, மார்மன் புஸ்தகத்தில் மிக நீண்ட அத்தியாயம். உலக வரலாற்றின் காலகட்டங்களை விளக்கும் கீழ்க்காணும் பிரிவுகளாக அதை பகுத்துக்கொண்டால் ஒருவேளை உதவியாக இருக்கும்:

வசனங்கள் 3–14.கிறிஸ்துவின் காலத்துக்கு முன் இஸ்ரவேலின் சிதறடிக்கப்படுதல்

வசனங்கள் 15–28.கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களின் ஊழியம்

வசனங்கள் 29–49.மாபெரும் மதமாறுபாடு

வசனங்கள் 50–76.பிற்காலத்தில் இஸ்ரவேலர்கள் கூட்டிச்சேர்க்கப்படுதல்

வசனங்கள் 76–77.ஆயிரவருஷ காலமும் உலக முடிவும்

இந்த உருவகத்தைப்பற்றிய கூடுதல் நுண்ணறிவுக்கு, இந்த வரையறைக் குறிப்போடு இணைந்துள்ள படத்தைப் பார்க்கவும்.

மூத்த தம்பதியர் பிறருடன் ஒரு கணினியில்

அவருடைய பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்க அவருக்குதவுவதில் நாம் அனைவரும் தேவனுக்கு சேவை செய்யலாம்

யாக்கோபு 5:61–75

தம் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்க அவருக்கு உதவும்படி தேவன் என்னை அழைக்கிறார்.

தேவனின் தோட்டத்திற்குள் அழைக்கப்பட்ட “மற்ற வேலையாட்களில்” (யாக்கோபு 5:70) உங்களைப் போன்ற ஜனங்கள் அடங்குவர், சபையின் அங்கத்தினர்களாக, நாம் அனைவருமே தேவன் தம் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்க்க உதவும் பொறுப்புடையவர்கள். யாக்கோபு 5ல், குறிப்பாக வசனங்கள் 61–62 மற்றும் 70–75ல், தேவனின் தோட்டத்தில் வேலை செய்வதைப்பற்றி என்ன கொள்கைகளைக் காண்கிறீர்கள்? அவர் தமது தோட்டத்தில் பணி செய்ய உங்களை அழைத்தபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்? அவருடைய வேலையில் பங்குகொண்டபோது என்ன அனுபவங்களை நீங்கள் பெற்றீர்கள்?

“ஊழியப் பணி,“ சுவிசேஷப் பாடத்தலைப்புகள், topics.ChurchofJesusChrist.org; “பழைய ஏற்பாடு ஒலிவத் தோட்டம்,” “சபை வளர உதவுங்கள்” (வீடியோக்கள், ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்).

யாக்கோபு 7:1–23

பிறர் என் விசுவாசத்துக்கு சவால்விடும்போது என்னால் வலுவாக நிற்க முடியும்.

நேபியர்களின் சேரெமுடனான அனுபவம் இன்றும் அடிக்கடி திரும்பவும் நடக்கிறது: கற்ற, நாகரிகமாகப் பேசும் ஜனங்கள் உங்கள் விசுவாசத்தைக் குலைக்க முயல்கிறார்கள். ஆனால் யாக்கோபை “அசைக்க முடியவில்லை” (யாக்கோபு 7:5). யாக்கோபின் விசுவாசம் தாக்கப்பட்டபோது அவன் எப்படி பதில்வினையாற்றினான்? அவனது பதில்வினையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறோம்? உங்கள் விசுவாசத்துக்கு சவாலான நேரங்களுக்காக ஆயத்தப்பட, இப்போது உங்களால் என்ன செய்ய முடியும்?

“Answering Gospel Questions,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org; Jeffrey R. Holland, “The Cost—and Blessings—of Discipleship,” Ensign or Liahona, May 2014, 6–9 யும் பார்க்கவும்

குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலை நேரத்துக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

யாக்கோபு 5

ஒலிவ மர உருவகத்தை வாசிக்கும்போது அதிலுள்ள அடையாளங்களை சில குடும்பங்கள் வரைவது அவர்களுக்கு உதவியாக இருப்பதைக் காணலாம். உங்கள் குடும்பம் அந்த அணுகுமுறையில் மகிழலாம், அல்லது உருவகத்தின் அடையாளங்களைக் காட்சிப்படுத்த குடும்ப அங்கத்தினர்களுக்கு உதவ வேறு முறையை நீங்கள் தரலாம். நீங்கள் ஒரு மேசையில் அல்லது தரையில் ஒரு பகுதியைத் தோட்டத்தை (அல்லது உலகத்தை) குறிக்க அடையாளப்படுத்தி பல துண்டுகளாகப் பிரிக்கக் கூடிய (சிதறுண்ட இஸ்ரவேலர்கள்) ஒரு புதிரைப்போன்ற ஒரு பொருளுடன் வீட்டு ஒலிவ மரத்தைக் (இஸ்ரவேலர்களின் வீடு) குறித்து பின் திரும்ப ஒன்றாக்குதலைச் (இஸ்ரவேலர் கூட்டி சேர்க்கப்படுதல்) செய்யலாம். இந்த உருவகம் கர்த்தரைப்பற்றி, அவருடைய ஊழியர்களைப்பற்றி நமக்கு என்ன போதிக்கிறது?

யாக்கோபு 5:70–77

“அவருடைய திராட்சைத் தோட்டத்தில் கர்த்தர் பிரயாசப்படுகிறார் என்ற “கடைசி காலத்தைப்பற்றி” நீங்கள் படிக்கும் போது கர்த்தருக்கு “முழு பெலத்தோடு” சேவை செய்ய உங்களையும் குடும்பத்தையும் எது ஊக்குவிக்கிறது? (யாக்கோபு 5:71). நீங்கள் உங்கள் குடும்ப அங்கத்தினர்களை வசனம் 75ஐ தங்கள் பெயரை இந்த வசனத்தில் இணைத்துத் தனிப்பயனாக்க அழைக்கலாம்-உதாரணமாக “நீ [பெயர்] பாக்கியவான்.” திராட்சைத் தோட்டக்காரராகிய கர்த்தருக்கு சேவை செய்யும்போது மகிழ்ச்சி அடைந்த தங்கள் அனுபவத்தை அவர்கள் பகிரலாம், உதாரணமாக சுவிசேஷத்தை அறிவித்தல், ஆலயத்துக்கு சேவை செய்தல் அல்லது சபை அங்கத்தினர்களை பலப்படுத்துதல். (எம்.ரசல் பாலார்ட், “Put Your Trust in the Lord,” Ensign or Liahona, Nov. 2013, 43–45ஐயும் பார்க்கவும்)

யாக்கோபு 6:4–7

எவ்வாறு கர்த்தர் தமது இரக்கத்தின் கரத்தை நமக்கு நேராக நீட்டினார்? இந்த வசனங்களில் “ஒட்டிக்கொள்ளுதல்” என்ற சொல்லின் அர்த்தம் என்ன? கர்த்தர் எவ்வாறு நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கிறார்? நாம் எவ்வாறு அவரோடு ஒட்டிக்கொண்டிருக்க முடியும்?

யாக்கோபு 7:1–12

இந்த வசனங்களில் இருந்து பிறரை வழிவிலகச்செய்யும் ஜனங்களைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? நாம் எவ்வாறு யாக்கோபின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி கிறிஸ்துவின் மேலுள்ள நம் விசுவாசத்தில் உறுதியாக இருக்க முடியும்?

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள், -ஆரம்ப வகுப்புக்காக ல் இந்த வாரத்தின் குறிப்பு. பார்க்கவும்

நமது போதித்தலை மேம்படுத்துதல்

ஒரு வசனத்தை மனப்பாடம் செய்யவும். குறிப்பாக உங்கள் குடும்பத்துக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் ஒரு வேத பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதை இணைந்து மனப்பாடம் செய்யவும். மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் போதித்தார், “மனப்பாடம் செய்த ஒரு வேதபகுதி காலத்தால் பலவீனம் அடையாத ஒரு இணை பிரியா நண்பன்” (“The Power of Scripture,” Ensign or Liahona, Nov. 2011, 6)