“பெப்ருவரி 24–மார்ச் 1. 2 நேபி 26–30: ‘அற்புதமும், மகத்துவமுமுள்ள கிரியை,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“பெப்ருவரி 24–மார்ச் 1. 2 நேபி 26–30,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020
பெப்ருவரி 24–மார்ச் 1
2 நேபி 26–30
“அற்புதமும், மகத்துவமுமுள்ள கிரியை“
கர்த்தர் கூறினார், “நான் அனைவருக்கும் கட்டளையிடுகிறேன் … நான் அவர்களிடம் பேசுகிற வார்த்தைகளை அவர்கள் எழுதவேண்டும்” (2 நேபி 29:11). அவருடைய வார்த்தையை நீங்கள் தியானிக்கும்போது, கர்த்தர் தமது ஆவி மூலமாக உங்களிடம் பேசுவார். நீங்கள் பெறுவதை பதிவு செய்யுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யுங்கள்
“கடைசி காலங்களைக் குறித்து நான் உங்களுக்கு தீர்க்கதரிசனம் உரைக்கிறேன்,” என நேபி எழுதினான் (2 நேபி 26:14). வேறொரு வார்ரத்தைகளெனில் அவன் நமது நாட்களைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தான். அவன் பார்த்ததைப்பற்றி கவலைப்பட ஒரு காரணம் இருந்தது: ஜனங்கள் தேவனுடைய வல்லமையையும் அற்புதங்களையும் நம்ப மறுத்தனர், பொறாமையும் சண்டைகளும் பெருகின, பிசாசானவன் ஜனங்களை வலிமையான கயிறுகளால் கட்டிக்கொண்டு இருந்தான். ஆனால் எதிரியால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்தப் பிற்கால “இருளின் கிரியைகளோடும் கூட” (2 நேபி 26:10, 22) கர்த்தர் தம்மாலேயே வழிநடத்திச் செல்லப்பட்ட ”அற்புதமும், மகத்துவமுமுள்ள கிரியைப்பற்றி” நேபி பேசினான் (2 நேபி 27:26). மேலும் அந்த கிரியையின் மையமாக ஒரு புஸ்தகம், புழுதியிலிருந்து பேசுகின்ற, சாத்தானின் பொய்களை அம்பலப்படுத்தும், ஒரு கொடி போல் நீதிமான்களை ஒன்று கூட்டும் ஒரு புஸ்தகம் இருக்கும். அந்தப் புஸ்தகமே மார்மன் புஸ்தகம், மகத்துவமுள்ள கிரியை என்பது பிற்காலத்தில் கர்த்தரின் சபையின் கிரியை, மேலும் அந்த அற்புதம் என்பது பங்கேற்பதற்கு நமக்கிருக்கும் பலவீனத்துக்கு இடையிலேயும் அவர் நம்மை அழைப்பது.
தனிப்பட்ட வேத தியானத்துக்கான ஆலோசனைகள்
இயேசு கிறிஸ்து நம் அனைவரையும் அவரிடத்தில் வர அழைக்கிறார்.
“நாம் விசுவாசிக்கவும் பெறவும் முடியாத அளவுக்கு தமது இரக்கங்களிலும் ஆசீர்வாதங்களிலும் பரலோக பிதா எல்லையற்றவர்” என்று தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித், போதித்தார். History, 1838–1856, volume D-1,” p. 4 [addenda], josephsmithpapers.org). 2 நேபி 26:20–22ல் நேபி எதை முன்கண்டார் என்பதையும் வசனங்கள் 23–33,ல் அவர் இரட்சகரைப்பற்றி என்ன போதித்தார் என்பதையும் வாசிக்கவும், அதை ஜோசப் ஸ்மித்தின் கூற்றோடு ஒப்பிட்டு நோக்கவும். கர்த்தரின் எல்லையற்ற இரக்கத்தைக் குறித்து என்ன அறிந்துகொள்ளுகிறீர்கள்? இயேசு கிறிஸ்து சபை அங்கத்தினராக நீங்கள் அதிகமாய்க் கிறிஸ்துவைப்போலாக தேவ பிள்ளைகளை நடத்தும் வழியில் உங்களால் என்ன முடியும்?
3 நேபி 18:30–32 ஐயும் பார்க்கவும்.
இந்த அதிகாரங்களில் குறிப்பிடப்படும் புஸ்தகம் எது?
ஏசாயாவின் முந்திய தீர்க்கதரிசனத்தில் இருந்து அதிகமாக எடுக்கப்பட்ட 2 நேபி 26–27, ல் உள்ள நேபியின் தீர்க்கதரிசனம் (ஏசாயா 29பார்க்கவும்), மார்மன் புஸ்தகம் வெளிப்படுவதைக் குறித்து முன்னறிவிக்கிறது. இந்தத் தீர்க்கதரிசனம் பின்வருபவற்றை விளக்குகிறது:
-
லேகியினுடைய வித்தின் (அவன் சந்ததி) வார்த்தைகள் “கீழே புழுதியிலிருந்து” ஒரு “பரிச்சயமான ஆவியில்“ பேசி “ஒரு புஸ்தகத்தில் முத்திரையிடப்படும்” (2 நேபி 26:14–17; ஏசாயா 29:4ஐயும் பார்க்கவும்).
-
அந்தப் புஸ்தகத்தின் ஒரு பகுதி கற்றறிந்த மனிதர் ஒருவரிடம் கொடுக்கப்பட அவர், “என்னால் வாசிக்க முடியாது” என்கிறார். (2 நேபி 27:15–20; ஜோசப் ஸ்மித்—வரலாறு 1:64–65; ஏசாயா 29:11)ஐயும் பார்க்கவும்.
ஏசாயா மட்டும் அல்லாமல், பிற வேதாகம தீர்க்கதரிசிகள், அதன் பெயரை குறிப்பிடாவிட்டாலும் மார்மன் புஸ்தகத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றனர். உதாரணமாக, எசேக்கியேல் 37:15–20 பேசுகிற “யோசேப்பின் கோல்,” யோசேப்பின் சந்ததியாரான நேபியர்களின் பதிவேட்டைக் குறிக்கலாம். வேதாகமம் எனப் பொருள்படுகிற “யோசேப்பின் கோலும்” இந்தப் பதிவேடும் ஒன்றாகிறது.
பிற எடுத்துக்காட்டுகளை மார்மன் புஸ்தகம்“ (வேத வழிகாட்டி, scriptures.ChurchofJesusChrist.org) ல் காணலாம் “.
சாத்தான் ஏமாற்ற வழிதேடுகிறான்.
சாத்தானின் பல ஏமாற்றும் பொய்களும், சூழ்ச்சிகளும் நேபியின் கடைசிகாலத்தைப்பற்றிய விளக்கங்களில்2 நேபி 28ல் வெளிப்படுத்தப்படுகின்றன. அவற்றை உங்களால் கண்டுபிடிக்கமுடிகிறதா என்று பாருங்கள் (உதாரணமாக வசனங்கள் 6, 8, 21–23, 29 பார்க்கவும்). சாத்தானின் பொய்களைப்பற்றி நீங்கள் ஏன் அறிய வேண்டும்? எதிரி உங்களை ஏமாற்ற முயற்சி செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
தம் பிள்ளைகளுக்கு வழிகாட்ட தேவன் தொடர்ந்து வெளிப்படுத்தல்களைக் கொடுத்துவருகிறார்.
பிற்காலப் பரிசுத்தவான்களாக தேவ வார்த்தை நமக்கு மிக ஏராளமாக அருளப்பட்டுள்ளது, ஆகவே நேபியின் எச்சரிக்கை நமக்கும் பொருந்தும்: “நமக்கு போதுமானதாக இருக்கிறது!” என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது. நீங்கள் 2 நேபி 28 மற்றும்29, ல் எச்சரிக்கைகளை வாசிக்கும்போது இப்படிப்பட்ட கேள்விகளை சிந்தியுங்கள்:
-
அவரது வார்த்தைக்கு நான் எவ்வாறு பதிலளிக்க வேண்டும், என்று கர்த்தர் விரும்புகிறார்?
-
தேவனிடமிருந்து அதிக சத்தியத்தைப் பெறுவதற்கு ஜனங்கள் ஏன் சிலசமயம் “கோபப்படுகிறார்கள்”? (2 நேபி 28:28). இதுபோல நான் எப்போதாவது உணர்கிறேனா? அப்படியானால், உண்மையை அதிகமாக ஏற்றுக்கொள்ளுகிறவனாக நான் எவ்வாறு மாறமுடியும்?
-
தேவனின் வார்த்தையை பெறுவது என்பதற்கு அர்த்தம் என்ன? நான் அவருடைய வார்த்தையை அதிகமாகப் பெறவிரும்புகிறேன் என்பதை எவ்வாறு என்னால் காட்ட முடியும்?
ஆல்மா 12:10–11; 3 நேபி 26:6–10 ஐயும் பார்க்கவும்.
நம்முடைய நாட்களுக்காக தேவன் மார்மன் புஸ்தகத்தை ஆயத்தப்படுத்தினார்.
மார்மன் புஸ்தகம் முழுமையாக எழுதப்படும் முன்னரே, அது ஒரு நாள் “மனுப்புத்திரர்களுக்கு பெரு மதிப்புள்ளதாக இருக்கும்” என்று நேபி வெளிப்படுத்தல் மூலமாக, அறிந்தான்.2 நேபி 28:2 மார்மன் புஸ்தகம் உங்களுக்கு ஏன் பெரு மதிப்புள்ளதாக இருக்கிறது? 2 நேபி 29–30ஐ நீங்கள் வாசிக்கும்போது இந்தக் கேள்வியைப்பற்றி சிந்தியுங்கள் . மார்மன் புஸ்தகம் மூலம் உலகத்திலும் உங்கள் வாழ்க்கையிலும் தேவன் நிறைவேற்றிவரும் சில “மகத்துவமான” கிரியைகள் என்ன?
குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.
2 நேபி 26:12–13.
இயேசு கிறிஸ்து தம்மை பரிசுத்த ஆவியின் மூலமாக வெளிப்படுத்துகிறார் என்று நேபி போதித்தான். இரட்சகரைப்பற்றிய தங்கள் சாட்சிகள் பரிசுத்த ஆவியால் பலப்படுத்தப்படும்போது குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் என்ன அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்?
2 நேபி 26:22; 28:19–
பிசாசைப்பற்றி 2 நேபி 26:22 என்ன போதிக்கிறது என்பதை சித்திரப்படுத்தும் ஒரு பொருள்சார் பாடத்தில் உங்கள் குடும்பம் மகிழ்ச்சி அடையக் கூடும். நீங்கள் சாத்தானின் சூழ்ச்சிகளைப்பற்றி 2 நேபி 28:19–22, ல் வாசிக்கும்போது “ஒரு சணல் கயிற்றை” குறிக்க, ஒருவரின் மணிக்கட்டில் ஒரு நூலைக் கட்டலாம். சணல் கயிறு எவ்விதம் சாத்தானின் சோதனைகளைப்போல் இருக்கிறது? அது எவ்வாறு வலிமையான கயிறாகலாம்? சாத்தானின் பொய்களை நாம் எவ்வாறு கண்டறியலாம்?
2 நேபி 27:20–21.
“என்னுடைய சொந்த கிரியையை என்னால் செய்ய முடியும்” என்று என்ன அர்த்தத்தில் கர்த்தர் சொல்லி இருப்பார்? நாம் அவருடைய சபையில் சேவை செய்கிற வழியில் இந்த உண்மை எவ்வாறு செல்வாக்கை ஏற்படுத்துகிறது?
2 நேபி 28:30–31
தேவனிடமிருந்து வருகிற வெளிப்படுத்தல் ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக பெற்றுக்கொண்டால் நலமாயிருக்கும் என்ற ஒன்றை உங்கள் குடும்பம் நினைக்க முடியுமா? ஒரே தடவையில் இல்லாமல் “கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக” ஏன் சத்தியத்தை தேவன் நமக்கு வெளிப்படுத்துகிறார்?
2 நேபி 29:7–9
மார்மன் புஸ்தகத்தைக் கொண்டு கர்த்தர் எதை நிருபிக்க அல்லது காட்ட நினைக்கிறார்?
பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்பு ல் இந்த வாரத்தின் குறிப்பு.