என்னைப் பின்பற்றி வாருங்கள்
மார்ச் 9–15. யாக்கோபு 1–4: “கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் மூலம் தேவனிடத்தில் ஒப்புரவாகுங்கள்”


“மார்ச் 9–15. யாக்கோபு 1–4: ‘கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் மூலம் தேவனிடத்தில் ஒப்புரவாகுங்கள்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“மார்ச் 9–15. யாக்கோபு 1–4,“ என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

இயேசுவின் பாதங்களில் முழங்காலிட்டுப் பணிந்த பெண்

மன்னிக்கப்பட்டது, கிரெக் கே. ஓல்சன்

மார்ச் 9–15

யாக்கோபு 1–4

கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் மூலம் தேவனிடத்தில் ஒப்புரவாகுங்கள்

ஆவிக்குரிய உந்துதல்களை நீங்கள் பதிவுசெய்யும் போது, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு போதிக்கவேண்டும் என்று விரும்புவதைக் காட்டுகிறீர்கள். நீங்கள் யாக்கோபு 1–4 ஐ வாசிக்கும்போது, உங்கள் உள்ளுணர்வுகளை எழுதுவது குறித்து எண்ணுங்கள்.

உங்கள் உந்துதல்களைப் பதிவுசெய்யவும்

நேபியர்கள், நேபியை தங்கள் “சிறந்த காவலனாக” எண்ணினார்கள் (யாக்கோபு 1:10). அவர்களுடைய எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து அவர்களை அவன் பாதுகாத்தான், மேலும் அவன் ஆவிக்குரிய அபாயங்கள் குறித்து அவர்களை எச்சரித்தான். இப்போது அவன் இல்லை, நேபியர்களை ஆவிக்குரிய ரீதியாக வழிநடத்தும் பொறுப்பு ஜனங்களுக்கு ஆசாரியராகவும் போதகராகவும் நேபியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட யாக்கோபின் மேல் விழுந்தது (யாக்கோபு 1:18பார்க்கவும்). தனது ஜனங்கள் “பாவத்தில் பிரயாசப்படத் தொடங்கிவிட்டதால்” அவர்களுக்கு “மிகுந்த தைரியத்துடன்” கற்றுக்கொடுக்க வேண்டும் என்று உள்ளெழுச்சியினால் யாக்கோபு மனக்கண்ணில் கண்டான் (யாக்கோபு 2:7, 5). இன்று ஜனங்கள் போராடுபவைகள் போன்றவைதான் இந்த பாவங்கள்: செல்வத்தின் மேல் ஈர்ப்பும், பாலியல் ஒழுக்கக்கேடும். இந்தப் பொல்லாங்கைக் கண்டிக்க வேண்டும் என்று யாக்கோபு உணர்ந்த போதிலும், இருதயங்கள் “ஆழமான காயங்களால் ஊடுருவிக் குத்தப்பட்ட” பாதிக்கப்பட்டவர்களுக்காக அவனுடைய இருதயமும் வலித்தது (யாக்கோபு 2:35). பாவிகள் மற்றும் ஆவிக்குரியரீதியாகக் காயமடைந்தவர்களான இரு குழுவினருக்கும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்தே குணமடைதல் வருகிறது என்று யாக்கோபு சாட்சியம் அளித்தான். அவனுக்கு முன்னிருந்த நேபியின் செய்தியைப் போலவே, “கிறிஸ்துவினுடைய பாவநிவர்த்தியின் மூலம் தேவனிடத்தில் ஒப்புரவாகுங்கள்” என்ற அழைப்பே யாக்கோபின் செய்தியுமாக இருந்தது (யாக்கோபு 4:11).

தனிப்பட்ட தியான சின்னம்

தனிப்பட்ட வேத தியானத்துக்கான ஆலோசனைகள்

யாக்கோபு 1:6–8, 15–; 2:1–11

என் அழைப்பை நான் மேன்மைப்படுத்த வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார்.

யாக்கோபுக்கு, தேவனுடைய வார்த்தையை போதிப்பது தன்னுடைய சகோதரனிடம் இருந்து கிடைத்த பணி ஒதுக்கீடு என்பதை விடவும் மேலானதாக இருந்தது—அது “கர்த்தரிடம் இருந்து வந்த அழைப்பு,” ஆகவே அவன் “[தன்] வேலையை மேன்மைப்படுத்த” கடுமையாக உழைத்தான் (யாக்கோபு 1:17, 19). “நாம் கருத்தாய் சேவைசெய்யும்போது, நாம் விசுவாசத்துடனும் சாட்சியுடனும் போதிக்கும்போது, அவர்களுடைய வாழ்க்கையை நாம் தொடுகிறவர்களை தூக்கி, பெலப்படுத்தி, நீதியின் நம்பிக்கைகளை கட்டும்போது” நாம் நம் அழைப்பை மேன்மைப்படுத்துகிறோம் என்று தலைவர் கார்டன் பி.ஹிங்க்லி போதித்தார். (“Magnify Your Calling,” Ensign, May 1989, 47). யாக்கோபு 1:6–8, 15–19 மற்றும் 2:1–11ஐ நீங்கள் படிக்கும்போதே உங்களுக்கென “கர்த்தரிடம் இருந்து வந்த [அழைப்பைப்பற்றி]” சிந்தியுங்கள் . யாக்கோபு ஏன் மிகவும் விசுவாசத்தோடு சேவித்தான்? உங்கள் சபை அழைப்புகளையும் உங்கள் வீட்டுப் பொறுப்புகளையும் மேன்மைப்படுத்த என்ன செய்வதற்கு அவனுடைய எடுத்துக்காட்டு உங்களுக்கு ஊக்கமளிக்கிறது?

“Rise to Your Call” (video, ChurchofJesusChrist.org) ஐயும் பார்க்கவும்.

யாக்கோபு 2:23–3:12

கற்பொழுக்கம் கர்த்தருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் பாவம் விளைவுகளை ஏற்படுத்தும். பாலியல் பாவத்தைப்பற்றி பேசும்போது, யாக்கோபு இரு வகையான விளைவுகளைப்பற்றி எச்சரித்தான். நீங்கள் யாக்கோபு 2:31–35 மற்றும் 3:10ஐ வாசிக்கும்போது, ஜனங்களாகவும் தனிநபர்களாகவும் நேபியர்களை ஒழுக்கக்கேடு பாதித்த முறைகளை ஆய்ந்து பார்க்கவும். இந்த முறைகள் இன்றைய உலகில் நீங்கள் காணும் ஒழுக்கக்கேட்டின் விளைவுகளோடு எவ்வாறு ஒத்ததாக இருக்கின்றன? கற்பொழுக்கத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி நேசிக்கும் ஒருவருக்கு போதிக்க உதவும் வண்ணம் யாக்கோபின் வார்த்தைகளில் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? கற்பொழுக்கத்தோடு இருக்க உங்கள் முயற்சிகளின் மூலம் நீங்கள் எவ்விதம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்?

ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியோடு வாழும் பழக்கத்தைப்பற்றியும் யாக்கோபு பேசி இருப்பதை குறித்துக்கொள்ளுங்கள். கர்த்தர் ஏன் சில வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் பலதார மணத்தைக் கடைபிடிக்க தன்னுடைய ஜனங்களுக்குக் கட்டளையிட்டார் என்பதை யாக்கோபு 2:23–30 ல் நீங்கள் காணும் எது உங்களுக்கு புரிந்துகொள்ள உதவுகிறது? அவரது அங்கீகாரம் இல்லாமல் அப்படி செய்பவர்களைப்பற்றி அவர் எவ்விதம் உணர்கிறார்?

யாக்கோபு 4

நான் இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியின் மூலம் தேவனோடு ஒப்புரவாக முடியும்.

யாக்கோபு “கிறிஸ்துவின் பாவநிவிர்த்தியின் மூலம் [தேவனோடு] ஒப்புரவாகும்படி” தம் ஜனங்களோடு வேண்டிக்கொண்டான் (யாக்கோபு 4:11). அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஓர் அகராதியில் ஒப்புரவாகுதலைப் பார்ப்பது உதவுமா? ஒருவேளை நீங்கள் எவ்விதம் கிறிஸ்துவிடம் வந்து அதனால் தேவனோடு ஒப்புரவாக முடியும் என்று உங்களுக்கு ஆலோசனை கூறும் சொற்களையும் சொற்றொடர்களையும் இந்த அத்தியாயத்தில் காண முடியும். உதாரணமாக, ஜனங்ளை இயேசு கிறிஸ்துவை நோக்கிச் சுட்டிக்காட்டவே மோசேயின் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது என்று யாக்கோபு போதித்தான் (யாக்கோபு 4:5பார்க்கவும்). உங்களை கிறிஸ்துவிடம் சுட்டிக்காட்ட தேவன் என்ன அளித்துள்ளார்? தேவனிடம் நெருங்கிச்சேர இந்த காரியங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்?

2 நேபி 10:24ஐயும் பார்க்கவும்.

யாக்கோபு 4:8–18

இரட்சகரை நோக்கிப் பார்ப்பதால் ஆவிக்குரிய குருட்டுத்தனத்தை என்னால் தவிர்க்க முடியும்.

யாக்கோபு தன் ஜனங்களை, தேவனிடம் முழுவதுமாக திருப்ப முனைந்தபோது, ஆவிக்குரிய குருடாக இருக்க வேண்டாம் என்றும் சுவிசேஷத்தின் “தெளிவான வார்த்தைகளை” வெறுக்க வேண்டாம் என்றும் அவன் அவர்களிடம் எச்சரித்தான் (யாக்கோபு 4:13–14 பார்க்கவும்). நமது நாட்களில் இது போன்ற பிரச்சினைகளைக் குறித்து மூப்பர் குயின்டின் எல். குக் எச்சரித்தார்: “அடிப்படை சுவிசேஷத்தின் சாட்சியைப் பேணுவதற்கு மாறாக ‘குறியீட்டைத் தாண்டிப் பார்க்கும்’ ஒரு மனப்போங்கு நம்மில் சிலரிடம் உள்ளது. சுவிசேஷ சத்தியங்களுக்குப் பதிலாக மனிதர்களின் தத்துவங்களைப் புகுத்தும்போதும், சுவிசேஷ தீவிரவாதத்தில் ஈடுபடும்போதும், … அல்லது விதிகளைக் கோட்பாட்டிற்கு மேலாக உயர்த்தும்போதும் இதை நாம் செய்கிறோம். இந்த நடத்தைகளை தவிர்ப்பது யாக்கோபு விளக்கிய இறையியல் குருட்டுத்தனத்தையும் தடையையும் தவிர்க்க நமக்கு உதவும் (“Looking beyond the Mark,” Ensign, Mar. 2003, 42).

யாக்கோபு 4:8–18 ன் படி, இரட்சரை நோக்கிப் பார்ப்பதற்கும் ஆவிக்குரியக் குருட்டுத்தனத்தைத் தவிர்ப்பதற்கும் நாம் என்ன செய்யலாம்?

குடும்ப தியான சின்னம்

குடும்ப வேத தியானம் மற்றும் குடும்ப இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இணைந்து வேதங்களை வாசிக்கும்போது, உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற எந்தக் கொள்கைகளை வலியுறுத்தவும் விவாதிக்கவும் வேண்டும் என்று அறிந்துகொள்ள ஆவியானவர் உங்களுக்கு உதவ முடியும். இங்கே சில ஆலோசனைகள்.

யாக்கோபு 1:6–8, 15–19; 2:1–11; 4:18

இந்த வசனங்களில் எந்த சொற்களும் சொற்றொடர்களும் அவன் வழிநடத்தியவர்களுக்காக யாக்கோபு உணர்ந்த அன்பை வெளிப்படுத்துகிறது? “[நமது] ஆத்துமாவின் நன்மைக்கான விருப்பம் மற்றும் கவலை” குறித்த அவர்களுடைய உணர்வை புரிந்து கொள்ள நமக்கு உதவ நமது சபைத் தலைவர்கள் என்ன செய்துள்ளார்கள்? (யாக்கோபு 2:3). நாம் நமது சபைத் தலைவர்களை ஆதரிக்க ஒருவேளை நமது குடும்ப அங்கத்தினர்கள் வழிகளைப் பகிரலாம். உள்ளூர் சபை தலைவர்களின் சேவைக்காக நன்றி குறிப்புகளை எழுதுதல் அல்லது உங்கள் ஜெபத்தில் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நினைவு கூர்தல் போன்ற ஏதாவது செய்ய நீங்கள் குடும்பமாகத் திட்டமிடலாம்.

யாக்கோபு 2:8

“காயம்பட்ட ஆத்துமாவை” தேவனுடைய வார்த்தை எவ்வாறு குணப்படுத்துகிறது?

யாக்கோபு 2:12–21

பொருள் செல்வத்தை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைப்பற்றி இந்த வசனங்கள் என்ன போதிக்கின்றன? நமது உதவி தேவைப்படுபவர்களை சென்றடைய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

யாக்கோபு 3:1–2

“இருதயத்தில் தூய்மையாக” இருத்தல் மற்றும் “மன உறுதியுடன் தேவனை நோக்கிப் பார்த்தல்” ஆகியவற்றின் பொருள் என்ன?

யாக்கோபு 4:4–11

தங்கள் விசுவாசத்தில் “அசைக்கப்படாமல் இருத்தல்” என்பதன் பொருளை உங்கள் குடும்பம் புரிந்துகொள்ள உதவி செய்ய, அருகில் இருக்கும் ஒரு பெரிய மரத்தைக் கண்டு அதன் தனிதனிக் கிளைகளை அசைக்கும்படி உங்கள் குடும்ப அங்கத்தினர்களைக் கேட்டுக் கொள்வது ஒரு வழியாகும். பின்னர் அதன் அடிமரத்தை அவர்களை அசைக்க விடுவது. அடிமரத்தை அசைப்பது ஏன் கடினமாக இருக்கிறது? “அசைக்கமுடியாத” விசுவாசத்தை எவ்வாறு கட்டுவது என்பதைப்பற்றிய யாக்கோபின் போதனைகளில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

ஒரு பூங்காவில் உள்ள பெரிய மரம்

ஒரு மரத்தின் அடியைப் போல், கிறிஸ்துவின் மேல் உள்ள நமது விசுவாசம் “அசைக்கமுடியாததாக” இருக்கலாம்.

பிள்ளைகளுக்கு போதிப்பதைப்பற்றிய கூடுதல் ஆலோசனைகளுக்கு, என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புல் இந்த வாரத்தின் குறிப்பு.பார்க்கவும்

தனிப்பட்ட தியானத்தை மேம்படுத்தல்

ஆவியானவர் கூறுவதைக் கேளுங்கள். நீங்கள் வாசிக்கிறவற்றிற்குத் தொடர்பு இல்லாததாக இருந்தாலும், (கோ&உ 8:2–3பார்க்கவும்), நீங்கள் தியானிக்கும்போது, உங்கள் சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் கவனம் செலுத்துங்கள். இந்த எண்ணங்களே நீங்கள் கற்றுக்கொண்டு செய்யவேண்டும் என்று பரலோக பிதா விரும்புகின்ற விஷயங்களாகக் கூட இருக்கலாம்.

யாக்கோபு தங்கத் தகடுகளின் மேல் எழுதுகிறான்

நான் அவர்களுடைய வார்த்தைகளை அனுப்புவேன் (போதகர் யாக்கோபு), எல்ஸ்பெத் கெய்ட்லின் யங்