என்னைப் பின்பற்றி வாருங்கள்
இளம் பிள்ளைகளுக்குப் போதித்தல்


“இளம் பிள்ளைகளுக்குப் போதித்தல்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“இளம் பிள்ளைகளுக்குப் போதித்தல்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2020

இளம் பிள்ளைகளுக்குப் போதித்தல்

உங்கள் குடும்பத்தில் இளம் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் கற்றுக்கொள்ள உதவும் சில செயல்பாடுகள் இங்கே:

  • பாடுங்கள்.பிள்ளைகள் பாடல் புஸ்தகத்திலிருந்து கீர்த்தனைகள் மற்றும் பாடல்கள் கோட்பாட்டை ஆற்றலுள்ளதாகப் போதிக்கிறது. நீங்கள் போதித்துக்கொண்டிருக்கும் சுவிசேஷக் கொள்கைகளுக்கு தொடர்பான பாடல்களைக் கண்டுபிடிக்க பிள்ளைகள் பாடல் புஸ்தகத்தின் பின்புறம் இருக்கும் பாடப்பொருள் அட்டவணையைப் பயன்படுத்தவும். பாடல்களின் செய்திகளை தங்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்த உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். உதாரணமாக, நீங்கள் பாடல் வரிகளிலுள்ள வார்த்தைகளையும் சொற்றொடர்களையும்பற்றி கேள்விகள் கேட்கலாம். பாடுவதோடு, உங்கள் பிள்ளைகள் பாடலோடு இசைந்துபோகிற நடிப்புகளைச் செய்யலாம் அல்லது பிற நடவடிக்கைகளைச் செய்யும்போது பின்னணி இசையாகப் பாடல்களை கேட்கலாம்.

  • ஒரு கதையையைக் கேட்கவும் அல்லது நடிக்கவும். வேதங்களிலிருந்து, உங்கள் வாழ்க்கையிலிருந்து, சபை வரலாற்றிலிருந்து அல்லது சபை பத்திரிகைகளிலிருந்து இளம் பிள்ளைகள் கதைகள் கேட்க விரும்புகிறார்கள். கதை சொல்வதில் அவர்களை ஈடுபடுத்தும் வழிகளைக் கண்டறியுங்கள். அவர்கள் படங்கள் அல்லது பொருட்களைக் கையில் பிடித்துக் கொள்ளலாம், தாங்கள் கேட்பதை அடிப்படையாகக் கொண்டு படங்கள் வரையலாம், கதையை நடித்துக்காட்டலாம் அல்லது கதை சொல்ல உதவவும் செய்யலாம். நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கதைகளிலிருந்து சுவிசேஷ உண்மைகளை உங்கள் பிள்ளைகள் அறிந்துகொள்ள உதவுங்கள்.

  • ஒரு வேதத்தை வாசிக்கவும். இளம் பிள்ளைகளால் அதிகம் வாசிக்க முடியாது, இருந்தாலும் நீங்கள் வேதங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளும்படி அவர்களை ஈடுபடுத்தலாம். ஒரு வசனம், முக்கிய சொற்றொடர், அல்லது வார்த்தையில் நீங்கள் கவனம் செலுத்த அவசியமாயிருக்கலாம். ஒருசில முறைகள் திரும்பத்திரும்ப அவைகளை அவர்கள் கூறினால் வேதங்களிலிருந்து சிறு சொற்றொடர்களை அவர்களால் மனப்பாடம் செய்ய முடியலாம். அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டால், பரிசுத்த ஆவியை அவர்களால் உணருவார்கள்.

  • ஒரு படத்தைப் பார்க்கவும் அல்லது ஒரு காணொலியைக் காணவும். சுவிசேஷக் கொள்கை அல்லது வேதக் கதைக்கு சம்பந்தப்பட்ட ஒரு படத்தையோ அல்லது காணொலியையோ உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் காட்டும்போது அவர்கள் பார்ப்பதிலிருந்து கற்றுக்கொள்ள அவர்களுக்குதவ அவர்களிடம் கேள்விகளைக் கேட்கவும். உதாரணமாக நீங்கள் இப்படி கேட்க முடியும், “இந்தப் படத்தில் அல்லது காணொலியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? இது உங்களை எப்படி உணர வைக்கிறது?” சுவிசேஷ நூலகச் செயலி, medialibrary.ChurchofJesusChrist.org, மற்றும் children.ChurchofJesusChrist.org ஆகியவை படங்களையும் காணொலிகளையும் தேட சிறந்த இடங்கள்.

  • உருவாக்கவும். அவர்கள் கற்றுக்கொண்டிருக்கும் கதை அல்லது கொள்கைக்கு சம்பந்தப்பட்ட ஒன்றை பிள்ளைகளால் உருவாக்க, வரைய அல்லது வண்ணம் தீட்ட முடியும்.

  • பொருள்சார் பாடங்களில் பங்கேற்கவும். புரிந்துகொள்ள கடினமான ஒரு சுவிசேஷக் கொள்கையை உங்கள் பிள்ளைகள் புரிந்து கொள்ள ஒரு எளிய பொருள்சார் பாடம் உதவி செய்யும். பொருள்சார் பாடங்களைப் பயன்படுத்தும்போது, உங்கள் பிள்ளைகளைப் பங்கேற்க வைக்கும் வழிமுறைகளைக் கண்டறியுங்கள். செய்து காட்டுவதை சாதாரணமாக பார்ப்பதைவிட ஒரு ஊடாடும் அனுபவத்திலிருந்து அவர்கள் அதிகம் கற்றுக்கொள்வார்கள்.

  • நாடக நடிப்பு நிஜ வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை பிள்ளைகள் நடிக்கும்போது ஒரு சுவிசேஷக் கொள்கை தங்கள் வாழ்க்கைக்கு எப்படி பொருந்துகிறதென்பதை அவர்களால் சிறந்த முறையில் புரிந்துகொள்ள முடியும்.

  • செயல்பாடுகளை அடிக்கடி செய்யவும். அவைகளைப் புரிந்துகொள்ள, கருத்துக்களை இளம் பிள்ளைகள் பலமுறை கேட்கவேண்டும். கதைகளையும் செயல்பாடுகளையும் அடிக்கடி சொல்லவும் செய்யவும் அஞ்ச வேண்டாம். உதாரணமாக, வேதங்களிலிருந்து வாசித்தல், உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கிச் சொல்லுதல், ஒரு காணொலியைக் காட்டுதல், நீங்கள் கதைகூற பிள்ளைகளை உதவ வைத்தல், கதையை நடித்துக்காட்ட அழைத்தல் போன்று. ஒரு வேதக் கதையை பல தடவை பல வழிகளில் நீங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடும்.

    குடும்பமாகத் தியானித்தல்