என்னைப் பின்பற்றி வாருங்கள்
என்னைப் பின்பற்றி வாருங்கள் பயன்படுத்துதல் —தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்


என்னைப் பின்பற்றி வாருங்கள் பயன்படுத்துதல்— —தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

என்னைப் பின்பற்றி வாருங்கள் பயன்படுத்துதல்——தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: என்னைப் பின்பற்றி வாருங்கள்-தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் 2020

என்னைப் பின்பற்றி வாருங்கள் பயன்படுத்துதல்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்

இந்த ஆதார புஸ்தகம் யாருக்காக?

இந்த ஆதார புஸ்தகம் சபையின் ஒவ்வொரு தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்குமானது. தனியாகவோ அல்லது குடும்பத்துடன் சேர்ந்தோ-நீங்கள் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ள உதவ இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னர் நீங்கள் சுவிசேஷத்தை வழக்கமாக தியானித்திருக்கவில்லை என்றால். ஆரம்பிப்பதற்கு இந்த ஆதார புஸ்தகம் உங்களுக்கு உதவும். ஏற்கெனவே உங்களுக்கு சுவிசேஷத்தைத் தியானிக்கும் நல்ல பழக்கம் இருந்தால், நீங்கள் அர்த்தமுள்ள அனுபவங்களைப் பெற இந்த ஆதார புஸ்தகம் உதவ முடியம்.

இந்தப் பாடங்களை நான் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

உங்களுக்கு பயனுள்ளதாயிருக்கிற எந்த வகையிலும் இந்த ஆதார புஸ்தகத்தைப் பயன்படுத்துங்கள். தனிப்பட்ட மற்றும் குடும்ப வேத தியானத்திற்கு ஒரு வழிகாட்டியாக அல்லது துணையாக இதை நீங்கள் காணலாம். குடும்ப இல்ல மாலைக்காகவும் இதை நீங்கள் பயன்படுத்தலாம். மார்மன் புஸ்தகத்தில் காணப்படும் கோடிட்டுக் காட்டியிருக்கும் குறிப்புகளின் முக்கிய கொள்கைகள், தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் தியானிக்கும் ஆலோசனைகளையும் பயிற்சிகளையும் ஆலோசனையளித்து, உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்ய இடமும் அளிக்கிறது.

நீங்களும் உங்கள் குடும்பமும் ஏற்கெனவே சுவிசேஷத்தைத் தொடர்ந்து தியானித்து வரக்கூடும். உதாரணமாக, மார்மன் புஸ்தகத்தைத் தவிர பிற வேதங்களை இறையியல் வகுப்பு அல்லது வேத பாட முதிர் வகுப்புக்காக நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கலாம்.. Cஎன்னைப் பின்பற்றி வாருங்கள், —தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் நீங்கள் செய்துகொண்டிருக்கும் நல்ல விஷயங்களுக்குப் பதிலாகவோ அல்லது அவற்றுடன் போட்டியிடவோ அல்ல. மார்மன் புஸ்தகத்திலிருந்து வழக்கமாக கற்பதற்கான வழிகளிருக்கலாம், இருந்தும் உங்கள் பிற வேத தியான இலக்கை அடையுங்கள். உதாரணமாக, நீங்கள் உங்கள் தனிப்பட்ட வேத தியானத்திற்கு வேதத்தில் இருந்து ஒரு புஸ்தகத்தை தியானிக்கலாம் மேலும் மார்மன் புஸ்தகத்தையும் உங்கள் குடும்பத்துடன் வாசிக்கலாம் (அல்லது நேர்மாறாக). உங்கள் தனிப்பட்ட தேவ வார்த்தை தியானத்தை எவ்வாறு அணுகுவது என்பதற்கு பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும்.

சபையில் என்ன நடக்கிறது என்பதோடு இந்த ஆதார புஸ்தகம் எவ்வாறு தொடர்புடையது?

இந்த ஆதார புஸ்தகத்தின் திட்ட வரைவுகள் வார வாசிப்புத் திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ளன. என்னைப் பின்பற்றி வாருங்கள், -ஆரம்ப வகுப்பும் என்னைப் பின்பற்றி வாருங்கள்-ஞாயிறு பள்ளியும் ஒரே அட்டவணையைப் பின்பற்றுகின்றன. வீட்டில் சுவிசேஷத்தைக் கற்கவும் அதன்படி வாழ்வதற்குமான உங்கள் முயற்சிகளை ஆதரிக்க, சபையில் உள்ள உங்கள் ஆசிரியர்கள் நீங்கள் வீட்டில் தியானித்துக்கொண்டிருக்கும் வேத பகுதிகளைப்பற்றிய உங்கள் அனுபவங்கள், சிந்தனைகள் மற்றும் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் வழங்குவர்.

ஞாயிறு பள்ளி ஒரு மாதத்தில் இருமுறையே போதிக்கப்படுவதால், வாராந்தர அட்டவணையோடு தொடர, ஞாயிறு பள்ளி ஆசிரியர்கள் திட்ட வரைவுகளை தவிர்க்க அல்லது இணைக்க தேர்ந்தெடுக்கலாம். பிணைய மாநாடு அல்லது பிற காரணங்களால் வழக்கமான சபை கூட்டங்கள் நடைபெறாத வாரங்களின்போது இதுவும் அத்தியாவசியமாயிருக்கலாம். இப்படிப்பட்ட வாரங்களில் மார்மன் புஸ்தகத்தை வீட்டில் தொடர்ந்து தியானிக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.

அட்டவணையை நான் பின்பற்ற வேண்டுமா?

ஆண்டுக் கடைசியில் மார்மன் புஸ்தகத்தை நீங்கள் வாசித்து முடிக்க இந்த அட்டவணை உங்களுக்கு உதவியாய் இருக்கும். கூடுதலாக, உங்கள் தொகுதியிலுள்ள மற்றவர்களைப்போல, அதே அட்டவணையைப் பின்பற்றுவது சபையில் ஓர் அர்த்தமுள்ள அனுபவங்களுக்கு வழிநடத்த முடியும். ஆனால் அட்டவணையினால் கட்டிப்போடப்பட்டதாக உணர வேண்டாம்; நீங்கள் தொடர்ந்து செல்லுவதற்குதவ இது ஒரு வெறும் வழிகாட்டியே. முக்கியமான காரியமென்னவென்றால் நீங்கள் சுவிசேஷத்தைத் தனித்தும் குடும்பமாகவும் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.

குடும்பம் வேதங்களைத் தியானித்தல்