என்னைப் பின்பற்றி வாருங்கள்
உங்கள் தனிப்பட்ட வேத தியானத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்


“உங்கள் தனிப்பட்ட வேத தியானத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“உங்கள் தனிப்பட்ட வேத தியானத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020

பெண், வேதங்களை தியானிக்கிறாள்

உங்கள் தனிப்பட்ட வேத தியானத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்

வேதங்களில் தேவ வார்த்தையின் உங்கள் தியானத்தை மேம்படுத்த இங்கே சில எளிய வழிகள்.

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களைத் தேடுங்கள்

சகல காரியங்களும் கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுப்பதாக வேதங்கள் நமக்கு போதிக்கின்றன (2 நேபி 11:4; மோசே 6:63 பார்க்கவும்), ஆகவே, நிகழ்வுகளிலும், கதைகளிலும், மற்றும் மார்மன் புஸ்தகத்தின் போதனைகளிலும் அவரைத் தேடுங்கள். இரட்சகரைப்பற்றியும் அவரை எவ்வாறு பின்பற்றவேண்டும் என்பதைப்பற்றியும் போதிக்கும் வசனங்களைக் குறித்துக்கொள்ள அல்லது அடையாளப்படுத்துவதை கருத்தில் கொள்ளவும்.

எழுச்சியூட்டும் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களைத் தேடுங்கள்

வேதங்களிலுள்ள குறிப்பிட்ட வார்த்தைகளும் சொற்றொடர்களும் குறிப்பாக உங்களுக்காகவே எழுதப்பட்டது போல உங்களை ஈர்ப்பதைக் காண்பீர்கள். அவைகள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு சம்பந்தப்பட்டதாகவும் உங்களுக்கு எழுச்சியூட்டி ஊக்கப்படுத்துவது போலவும் உணர்வீர்கள். அவற்றை உங்கள் வேதங்களில் அடையாளப்படுத்துவது அல்லது ஒரு தியான கையேட்டில் எழுதுவதைப்பற்றி எண்ணுங்கள்.

சுவிசேஷ சத்தியங்களைத் தேடுங்கள்

சில சமயங்களில் சுவிசேஷ சத்தியங்கள் (பெரும்பாலும் கோட்பாடுகள் அல்லது கொள்கைகள் என அழைக்கப்படும்) நேரடியாகக் கூறப்படும், மற்றும் சிலசமயங்களில் அவைகள் ஒரு எடுத்துக்காட்டால் அல்லது கதையால் குறிக்கப்படும். “இந்த வசனங்களில் என்ன நித்திய சத்தியங்கள் போதிக்கப்படுகின்றன?” என உங்களை நீங்களே கேளுங்கள்.

ஆவியானவர் கூறுவதற்கு செவிகொடுங்கள்

நீங்கள் எதை வாசிக்கிறீர்களோ அதற்கு சம்பந்தம் இல்லாததாக இருந்தாலும், உங்கள் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் கவனம் செலுத்துங்கள். அந்த எண்ணங்களே, நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உங்கள் பரலோக பிதா விரும்புகின்ற காரியங்களாகக் கூட இருக்கலாம்.

வேதங்களை உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிடுங்கள்

நீங்கள் வாசிக்கும் கதைகளும் போதனைகளும் எவ்வாறு உங்கள் வாழ்க்கைக்குப் பொருந்துகிறது என்று எண்ணிப் பாருங்கள். உதாரணமாக, “நான் வாசித்துக்கொண்டு இருப்பவைகளுக்கு ஒத்ததாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்ன?” அல்லது “வேதங்களில் வரும் இந்த நபரின் எடுத்துக்காட்டை நான் எவ்வாறு பின்பற்றலாம்?” என நீங்கள் உங்களையே கேட்கலாம்,

தியானிக்கும்போதே கேள்விகள் கேளுங்கள்

வேதங்களை நீங்கள் தியானிக்கும்போது, உங்கள் மனதில் கேள்விகள் எழக்கூடும். இந்தக் கேள்விகள் நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பவற்றோடு அல்லது பொதுவாக உங்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவைகளாக இருக்கலாம். நீங்கள் வேதங்களைத் தொடர்ந்து வாசிக்கும்போது இந்தக் கேள்விகளைக் குறித்து சிந்தித்து பதில்களைத் தேடுங்கள்.

வேதங்கள் தியான உதவிகளைப் பயன்படுத்தவும்

நீங்கள் வாசிக்கும் வசனங்களைப்பற்றிய கூடுதல் உள்நோக்குகளைப் பெற, அடிக்குறிப்புகளைப் பயன்படுத்துங்கள், Topical Guide, the Bible Dictionary, the Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org), மேலும் பிற தியான உதவிகள்.

வேதங்களின் சூழலை எண்ணிப் பார்க்கவும்

சூழ்நிலைகள் அல்லது வேதத்தின் அமைப்பான அதன் சூழலை எண்ணிப் பார்த்தால் ஒரு வேதத்தைப்பற்றிய அர்த்தமுள்ள உள்நோக்குகளை நீங்கள் காணக்கூடும். உதாரணமாக, ஜனங்களின் பின்னணியையும் நம்பிக்கையையும்பற்றி அறிந்திருந்து ஒரு தீர்க்கதரிசி பேசுகிறது, அவனுடைய வார்த்தைகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

உங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் பதிவுசெய்யுங்கள்

நீங்கள் தியானிக்கும்போது எழும் எண்ணங்களைப் பதிவுசெய்ய அநேக வழிகள் உள்ளன. உதாரணமாக, ஓர் அர்த்தமுள்ள வார்த்தை அல்லது சொற்றொடரை அடையாளப்படுத்தி உங்கள் எண்ணங்களை உங்கள் வேதங்களில் ஒரு குறிப்பாக நீங்கள் பதிவுசெய்யலாம். நீங்கள் பெறுகிற உள்நோக்குகள், உணர்வுகள், மற்றும் எண்ணங்களை ஒரு நாளேட்டில் நீங்கள் எழுதிவைக்கலாம்.

பிற்காலத் தீர்க்கதரிசிகளின், அப்போஸ்தலர்களின் வார்த்தைகளைத் தியானிக்கவும்

வேதங்களில் நீங்கள் காணும் கொள்கைகளைப்பற்றி பிற்காலத் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் என்ன போதித்தார்கள் என்பதை வாசிக்கவும் (உதாரணமாக, conference.ChurchofJesusChrist.org மற்றும் சபை பத்திரிகைகள் பார்க்கவும்).

உள்ளுணர்வுகளைப் பகிரவும்

உங்கள் தனி தியானத்திலிருந்து கிடைக்கும் உள்நோக்குகளை விவாதிப்பது மற்றவர்களுக்கு போதிப்பதற்கான சிறந்த முறை மட்டுமன்றி, அது நீங்கள் வாசித்ததைப்பற்றிய உங்கள் புரிந்துகொள்ளுதலையும் பெலப்படுத்த உதவுகிறது.

நீங்கள் கற்றுக்கொண்டபடி வாழுங்கள்

வேத தியானம் நம்மை ஊக்குவிப்பது மட்டுமன்றி நம் வாழும் வழியையும் மாற்ற நம்மை நடத்துகிறதாயிருக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் என்ன செய்யத் தூண்டுகிறாரோ அதற்கு செவிகொடுத்து, அதன் பின் அந்தத் தூண்டுதல்களின்படி செயலாற்ற ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஆண், வேதங்களைத் தியானிக்கிறார்

தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார்: “நாம் ‘முன்னேறிச் சென்று, கிறிஸ்துவின் வார்த்தையை உண்டுகளித்து, முடிவுபரியந்தம் நிலை நின்றால்…[நாம்] நித்திய ஜீவனைப் பெறுவோம்’ [2 நேபி 31:20].

“உண்டுகளித்தல் என்பதற்கு சுவைத்தலைவிட அதிகப்பொருள் உண்டு. உண்டுகளித்தல் என்றால் சுவைத்து அனுபவித்தல் மகிழ்ச்சியான கண்டுபிடிப்பின், உண்மையுள்ள கீழ்படிதலின் ஆவியோடு நாம் வேதங்களைத் தியானிப்பதில் நாம் அவைகளை உண்டுகளிக்கிறோம். நாம் கிறிஸ்துவின் வார்த்தைகளில் உண்டுகளிக்கும்போது, அவை ‘இருதயங்களாகிய சதையான பலகைகளில்’ பதிக்கப்படுகிறது [2 கொரிந்தியர் 3:3]. அவை நமது சுபாவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுகின்றன” (“ஆவிக்குரிய வழிகாட்டுதலில் வாழ்தல்,” Ensign, Nov. 2000, 17).