“உங்கள் குடும்ப வேத தியானத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)
“உங்கள் குடும்ப வேத தியானத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020
உங்கள் குடும்ப வேத தியானத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்
உங்கள் குடும்பம் சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுவதற்குதவ வழக்கமான குடும்ப வேத தியானம் ஒரு ஆற்றல்வாய்ந்த வழி. ஒரு குடும்பமாக எவ்வளவு அதிகமாகவும் எவ்வளவு நீண்ட நேரத்துக்கும் நீங்கள் வாசிக்கிறீர்கள் என்பது, உங்கள் முயற்சிகளில் சீராயிருத்தலைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததில்லை. வேத தியானத்தை உங்கள் குடும்ப வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாக்கும்போது, உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் இயேசு கிறிஸ்துவிடம் நெருங்கி வரவும், அவருடைய வார்த்தை என்னும் அஸ்திபாரத்தின்மீது அவர்களுடைய சாட்சிகளை கட்டவும் நீங்கள் உதவி செய்வீர்கள்.
பின்வரும் கேள்விகளை கருத்தில் கொள்ளவும்:
-
உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் தாங்களாகவே வேதங்களை தியானம் செய்ய எவ்வாறு ஊக்குவிப்பீர்கள்?
-
உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் தாங்கள் கற்று வருவதை பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்க உங்களால் என்ன செய்ய முடியும்?
-
மார்மன் புஸ்தகத்தில் நீங்கள் கற்றுக்கொண்டுவரும் கொள்கைகளை அன்றாட போதித்தலின்போது எவ்வாறு நீங்கள் வலியுறுத்துவீர்கள்?
வீடுதான் சுவிசேஷக் கற்றுக்கொள்ளுதலுக்கு சிறந்த இடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சபை வகுப்புகளில் சாத்தியமற்றதான வழிகளில் நீங்கள் சுவிசேஷத்தை வீட்டில் கற்கவும் போதிக்கவும் செய்யலாம். வேதங்களிலிருந்து உங்கள் குடும்பத்தினர் கற்றுக்கொள்ள உதவும் வழிகளை நீங்கள் சிந்திக்கும்போது ஆக்கபூர்வமாயிருங்கள். உங்கள் குடும்ப வேத தியானத்தை மேம்படுத்த பின்வரும் ஆலோசனைகளில் சிலவற்றை கருத்தில் கொள்ளுங்கள்.
இசையைப் பயன்படுத்தவும்
வேதங்களில் போதிக்கப்பட்ட கொள்கைகளை வலுப்படுத்த பாடல்களைப் பாடவும். இந்த ஆதார புஸ்தகத்தின் பிற்சேர்க்கை Dல் ஒவ்வொரு வார எல்லைக்கோட்டிலுமுள்ள கொள்கைக்கு சம்பந்தப்பட்ட இசை அடங்கியிருக்கிறது.
அர்த்தமுள்ள வேதங்களைப் பகிரவும்
தங்கள் தனி தியானத்தில் அர்த்தமுள்ளவை என்று அவர்கள் கண்ட வேத வாக்கியங்களைப் பகிர்வதற்கு குடும்ப அங்கத்தினர்களுக்கு நேரம் வழங்கவும்.
உங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவும்
நீங்கள் தியானிக்கும் வேதங்களிலிருந்து குடும்ப அங்கத்தினர்கள் என்ன கற்கிறார்களோ அவற்றை தங்கள் சொந்த வார்த்தைகளில் தொகுத்துரைக்குமாறு அவர்களை அழைக்கவும்.
வேதங்களை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தவும்
வேதத்தின் ஒரு வசனத்தை வாசித்த பின்னர், அந்த வசனம் அவர்கள் வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்று குடும்ப அங்கத்தினர்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கவும்.
கேள்வி கேட்கவும்
ஒரு சுவிசேஷக் கேள்வியைக் கேட்குமாறு குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும், பின்னர் அந்தக் கேள்விக்குப் பதில் கூற உதவும் வசனங்களைத் தேட நேரம் செலவழிக்கவும்.
ஒரு வேதத்தைக் காட்சிப்படுத்தவும்
நீங்கள் அர்த்தமுள்ளதாகக் காணும் ஒரு வசனத்தை தேர்ந்தெடுத்து அதனைக் குடும்ப அங்கத்தினர்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் காட்சிப்படுத்தவும். தினமும் ஒரு வசனத்தைக் காட்சிப்படுத்த முறைவைத்து குடும்ப அங்கத்தினர்களை தேர்ந்தெடுக்க அழைக்கவும்.
ஒரு வேத பட்டியலை உருவாக்கவும்
வரும் வாரத்தில் நீங்கள் கலந்துரையாட விரும்பும் பல வசனங்களை ஒரு குடும்பமாகத் தேர்ந்தெடுக்கவும்.
வேதங்களை மனப்பாடம் செய்யவும்.
உங்கள் குடும்பத்துக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும் ஒரு வேத பகுதியைத் தேர்ந்தெடுத்து, தினமும் கூறுவதன் மூலம் அல்லது ஒரு மனப்பாட விளையாட்டின் மூலம் குடும்ப அங்கத்தினர்களை அதை மனப்பாடம் செய்யச் சொல்லவும்.
பொருள்சார் பாடங்களைப் பகிரவும்
ஒரு குடும்பமாக நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் அதிகாரங்கள் மற்றும் வசனங்களுக்குத் தொடர்பான பொருள்களை கண்டறியவும். வேதத்தின் போதனைகளுக்கு ஒவ்வொரு பொருளும் எவ்விதம் சம்பந்தப்படுகின்றன என்பது குறித்துப் பேச குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும்.
ஒரு பாடப்பொருளைத் தேர்ந்தெடுக்கவும்
குடும்பம் இணைந்து தியானிக்கும் ஒரு பாடப்பொருளை குடும்ப அங்கத்தினர்கள் முறைவைத்து தேர்ந்தெடுக்கட்டும். பாடப்பொருளைப்பற்றிய வசனங்களைக் கண்டறிய Topical Guide, the Bible Dictionary, or the Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org) பயன்படுத்தவும்.
ஒரு படத்தை வரையவும்
ஒரு குடும்பமாக சில வசனங்களை வாசிக்கவும், பின்னர் நீங்கள் வாசிப்பதற்கு சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றை வரைய குடும்ப அங்கத்தினர்களுக்கு நேரம் அளிக்கவும். ஒவ்வொருவருடைய படங்களைப்பற்றி விவாதிக்க நேரம் செலவழிக்கவும்.
ஒரு கதையை நடிக்கவும்
ஒரு கதையை வாசித்தவுடன், அதை நடிக்குமாறு குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும். பின்னர், தனிப்பட்ட முறையிலும் ஒரு குடும்பமாகவும் நீங்கள் அனுபவித்துக்கொண்டிக்கும் காரியங்களோடு அந்தக் கதை எவ்வாறு சம்பந்தப்படுகிறது என்பதைக் குறித்துப் பேசவும்.
மூப்பர் டேவிட் ஏ. பெட்னர் போதித்தார்: “ஒவ்வொரு குடும்ப ஜெபமும், ஒவ்வொரு குடும்ப வேத தியானமும், மற்றும் ஒவ்வொரு குடும்ப இல்ல மாலையும் நம்முடைய ஆத்துமாக்களின் திரையில் வரைபடம் ஆகும். ஒரு நிகழ்வும் மிக கவரும் வண்ணமாகவும் நினைவுகூரப்படத்தக்கதாகவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மஞ்சள், தங்கம் மற்றும் பழுப்பு நிற வண்ணப்பூச்சுகள் ஒன்றுக்கொன்று நிறைவுசெய்வதாக அமைந்து, ஒரு மனம்கவரும் தலைசிறந்த படைப்பை உருவாக்கும், ஆகவே சிறியதாகத் தோன்றும் விஷயங்களை நாம் சீராகச் செய்வதில் குறிப்பிடத்தக்க ஆவிக்குரிய விளைவுகளுக்கு வழிநடத்தும்” (“More Diligent and Concerned at Home,” Ensign or Liahona, Nov. 2009, 19–20).