கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
ஆகஸ்டு 9–15. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88: “தேவனின் வீட்டை ஸ்தாபியுங்கள்”


“ஆகஸ்டு 9–15. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88: ‘தேவனின் வீட்டை ஸ்தாபியுங்கள்,’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“ஆகஸ்டு 9–15. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

படம்
நாற்காலிகளுடனும் பெஞ்சுகளுடனும் அறை

ஆகஸ்டு 9–15

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88

“தேவனின் வீட்டை ஸ்தாபியுங்கள்”

தலைவர் ரசல் எம். நெல்சன் கூறினார், “உங்கள் வீட்டை சுவிசேஷம் கற்றல் மையமாக மாற்றியமைக்க நீங்கள் கருத்தாய் பணியாற்றும்போது, உங்கள் வாழ்க்கையிலும் உங்கள் வீட்டிலும் சத்துருவின் செல்வாக்கு குறையும்” (“Becoming Exemplary Latter-day Saints,” Ensign or Liahona, Nov. 2018, 113).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஒவ்வொரு முறையும், கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு மிகுந்த வெளிப்பாடுகளின் மூலம் தனது எல்லையற்ற “மகத்துவத்திலும் வல்லமையிலும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:47)பற்றிய ஒரு சிறிய காட்சியை நமக்குத் தருகிறார். கோட்பாடும் உடன்படிக்கைகளும் அப்படிப்பட்ட ஒரு வெளிப்படுத்தல், ஒப்பீட்டில் நமது உலகப்பிரகார அக்கறைகளை முக்கியமற்றதாக செய்யக்கூடிய ஒளி மற்றும் மகிமை மற்றும் ராஜ்யங்களைப்பற்றியது. கர்த்தர் நமக்குக் கற்பிக்கும் எல்லாவற்றையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், நாம் இப்போது புரிந்துகொள்வதை விட நித்தியத்திற்கு மிக அதிகம் உள்ளது என்பதையாவது நாம் உணர முடியும். நிச்சயமாக, கர்த்தர் நம்மை மிரட்டவோ அல்லது சிறியவர்களாக உணரச் செய்யவோ இந்த பெரிய இரகசியங்களைப்பற்றி பேசவில்லை. உண்மையாகவே அவர் வாக்களித்தார், “தேவனையும் நீங்கள் அறிகிற நாள் வரும்” (வசனம் 49; சாய்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது). கர்த்லாந்தில் உள்ள தனது பரிசுத்தவான்களை தீர்க்கதரிசிகளின் கூட்டத்தை அந்த உயர்ந்த முடிவுக்காக அமைக்க கர்த்தர் வற்புறுத்தியிருக்கலாம். “உங்களை ஒழுங்குபடுத்துங்கள்,” அவர் சொன்னார். “அவசியமான எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்துங்கள்; தேவனின் வீட்டை ஸ்தாபியுங்கள்” (வசனம் 119). ஏனென்றால், தேவனுடைய பரிசுத்த வீட்டினுள், நம் வீடுகளில், வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, நம்முடைய பார்வையை பூலோகத்திற்கு அப்பால் உயர்த்தி, “ஒரு சிலஸ்டியல் மகிமையில் நிலைத்திருக்க” நம்மை தயார்படுத்த “அவருடைய முகத்தை [நமக்கு] காட்டுவார்” (வசனங்கள் 68, 22).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88

கர்த்தர் நமக்கு நம்பிக்கையையும் சமாதானத்தையும் அளிக்கிறார்.

“சகல தேசங்களின் மேலும், யுத்தம் பொழியும்” என்ற எச்சரிக்கைக்கு சில நாட்கள் கழித்து, (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 87:2), “நமக்கு சமாதானமுண்டாக கர்த்தரின் செய்தியாக பரதீசின் விருட்சத்திலிருந்து பிடுங்கப்பட்ட ‘ஒலிவ இலையைப்போல’” என ஜோசப் ஸ்மித் அழைத்த வெளிப்படுத்தலை கர்த்தர் கொடுத்தார் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88, பாகத் தலைப்பு). இந்த வெளிப்படுத்தல் சமாதானத்தின் பாரம்பரிய சின்னமான ஒலிவ இலை போல எவ்வாறு இருக்கிறது? ஆதியாகமம் 8:11ஐயும் பார்க்கவும்). இந்த பாகத்தில் என்ன உண்மைகள் கிறிஸ்துவில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் உணர உதவுகின்றன?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:6–67

ஒளியும் நியாயப்பிரமாணமும் இயேசு கிறிஸ்துவிடமிருந்து வருகின்றன.

பாகம் 88ல் ஒளி மற்றும் நியாயப்பிரமாணம் எனும் வார்த்தைகள் பல நேரங்கள் திரும்ப வருகின்றன இந்த வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவையும் அவரது சுவிசேஷத்தையும் விவரிக்க பிற வசனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது (உதாரணமாக, ஏசாயா 60:19; யோவான் 1:1–9; 3 நேபி 15:9 பார்க்கவும்). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:6–67 ல் நீங்கள் காணும் வசனங்களை அடையாளமிடவும் அல்லது குறிக்கவும், இரட்சகர், ஒளி மற்றும் நியாயப்பிரமாணத்தைப்பற்றி நீங்கள் கற்றுக்கொண்டவற்றை எழுதுங்கள். இந்த வசனங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை அதிக விசுவாசத்துடன் ஒளியைப் பெறவும், “கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்தின்படி ”வாழவும் உங்களுக்கு உணர்த்தலாம் (வசனம் 21).

Sharon Eubank, “Christ: The Light That Shines in Darkness,” Ensign or Liahona, May 2019, 73–76ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பம் வேதங்களை வாசித்தல்

வேதங்கள் கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்தைக் கொண்டிருக்கின்றன.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:62–126

தேவையான ஒவ்வொன்றையும் ஆயத்தப்படுத்துங்கள்.

சில விதங்களில் “சகல காரியங்களும் குழப்பத்திலிருக்கும்; நிச்சயமாய் மனுஷர்களுடைய இருதயங்கள் தோற்றுப்போகும்” என கர்த்தர் விவரித்த நேரத்தில் நாம் வாழ்கிறோம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:91). நீங்கள் வசனங்கள் 62–126 வாசிக்கும்போது, இரட்சகரின் இரண்டாவது வருகைக்குத் தயாராவதற்கு கர்த்தரின் ஆலோசனை எவ்வாறு உதவும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். கருத்தில் கொள்ள வேண்டிய சில கேள்விகள் இதோ:

வசனங்கள் 62–76.இந்த வசனங்களை நீங்கள் சிந்திக்கும்போது, தேவனிடம் “நெருங்கி” வர நீங்கள் என்ன செய்ய தூண்டப்படுகிறீர்கள்? (வசனம் 63). “உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்” என்ற கர்த்தரின் கட்டளை உங்களுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளவும் (வசனம் 68).

வசனங்கள் 77–80, 118–26.கோட்பாட்டு மற்றும் உலகப்பிரகார காரியங்களை “நீங்கள் புரிந்துகொள்வது ஏன் அவசியம்”? (வசனம் 78 ). “கற்றுக்கொள்ள நாடுங்கள்” என்ற ஆலோசனையை நீங்கள் எவ்வாறு பின்பற்றுகிறீர்கள்? (வசனம் 118 ). “படிப்பினாலும் விசுவாசத்தினாலும்” கற்றுக்கொள்வதன் அர்த்தம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

வசனங்கள் 81–116.இந்த வசனங்களில் இரட்சகரின் இரண்டாவது வருகையைப்பற்றிய தீர்க்கதரிசனங்களைக் கருத்தில் கொள்ளுங்கள். இவற்றைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள கர்த்தர் விரும்புகிறார் என்று ஏன் நினைக்கிறீர்கள்?

வசனங்கள் 117–26.ஆலயத்தை மனதில் கொண்டு இந்த வசனங்களைப் படிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்; கர்த்தருடைய வீட்டிற்குள் பிரவேசிக்கத் தயாராக இருக்கும் உங்களுக்கு இங்கே என்ன காண்கிறீர்கள்?

D. Todd Christofferson, “Preparing for the Lord’s Return,” Ensign or Liahona, May 2019, 81–84; David A. Bednar, “Seek Learning by Faith,” Ensign, Sept. 2007, 61–68; Saints, 1:164–66; “A School and an Endowment,” Revelations in Context, 174–82ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:14–33, 95–101.இந்த வசனங்களிலிருந்து உயிர்த்தெழுதலைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? இந்த சத்தியங்கள் நாம் செய்யும் தேர்ந்தெடுப்புகளை எவ்வாறு பாதிக்கலாம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:33.குடும்ப அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளைப்பற்றி, மகிழ்ச்சியுடன் பெற்றவர்கள் மற்றும் பெறாத மற்றவர்களும் பேசும்படி கேட்டு இந்த வசனத்தைப்பற்றி ஒரு கலந்துரையாடலைத் தொடங்கலாம். கர்த்தர் நமக்கு அளிக்கும் சிலஸ்டியல் மகிமையின் வரத்தில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்ட முடியும்? “வரத்தைக் கொடுப்பவர்” என்பதில் நாம் எவ்வாறு மகிழ்ச்சியடைகிறோம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:63,68.இந்த வசனங்களில் சில வினை சொற்கள் உள்ளன, அவை வசனங்களில் உள்ள செய்திகளை உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கான ஆக்கபூர்வமான வழிகளைப்பற்றி சிந்திக்க உங்களைத் தூண்டும். உதாரணமாக, என்னைக் கருத்தாய்“தேடுங்கள் நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள் எனும் சொற்றொடர்களைக் கலந்துரையாட ஒளித்து வைக்கும் விளையாட்டை நீங்கள் விளையாடலாம். (வசனம் 63; சாய்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது).

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:81.ஒரு குடும்பமாக, உங்கள் வீட்டிலும் அதைச் சுற்றிலும் சில எச்சரிக்கை அறிகுறிகளை அதாவது மருந்துகள் குறித்த எச்சரிக்கை லேபிள்கள் அல்லது ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து அறிகுறிகள் போன்றவற்றை அடையாளம் காணுங்கள். இந்த எச்சரிக்கைகள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன? பரலோக பிதா எதைப்பற்றி “[நம்]அயலாரை எச்சரிக்க வேண்டும்” என்று விரும்புகிறார்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:119.வசனம் 119ல் உள்ள விவரிப்பு போல உங்கள் வீட்டை உருவாக்க உங்கள் குடும்பத்தினரை ஊக்குவிக்க, இதுபோன்ற ஒன்றை முயற்சிக்கவும்: இந்த வசனத்திலிருந்து சொற்றொடர்களை காகித கீற்றுகளில் எழுதுங்கள், ஆலயத்தின் படத்தை மறைக்க அவற்றைப் பயன்படுத்தவும். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88:119ஐ ஒன்றாகப் படியுங்கள், மேலும் வசனத்தில் தொடர்புடைய சொற்றொடரைக் கேட்கும்போது குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொரு காகிதத்தையும் அகற்றட்டும். நமது வீட்டை “தேவனின் வீடு” ஆக்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும்? (வசனம் 119).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Nearer, My God, to Thee,” Hymns, no. 100.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பிள்ளைகள் தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தட்டும். ஒரு சுவிசேஷ கொள்கையுடன் தொடர்புடைய ஒன்றை உருவாக்க உங்கள் பிள்ளைகளை நீங்கள் அழைக்கும்போது, அந்தக் கொள்கையை சிறப்பாகப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்கள் கற்றுக்கொண்டவற்றைப் பார்க்கக் கூடிய நினைவூட்டலையும் அவர்களுக்கு வழங்கவும் (Teaching in the Savior’s Way, 25 பார்க்கவும்).

படம்
சீஷர்களுடன் இயேசு

இயேசு கிறிஸ்து சமாதானம் அருள்கிறார். சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன்–வால்ட்டர் ரானே

அச்சிடவும்