கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
ஆகஸ்டு 16–22. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89–92: “வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கை”


“ஆகஸ்டு 16–22. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89–92: ‘வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கை,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“ஆகஸ்டு 16–22. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89–92,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

ஆணும் பெண்ணும் உணவு சமைத்தல்

ஆகஸ்டு 16–22

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89–92

“வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கை”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89–92 ஜெபத்துடன் படித்து, நீங்கள் பெறும் எந்த ஆவிக்குரிய எண்ணங்களையும் பதிவு செய்யவும். நீங்கள் படிக்கும்போது “ஆவியானவர் உங்களுக்கு எவ்வாறு உண்மையை [தெரிவிக்கிறார்]” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 91:4).

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

தீர்க்கதரிசிகளின் கூட்டத்தில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு தேவ ராஜ்யத்தை பூமியில் கட்டுவதைப்பற்றி கற்பித்தார். அவர்கள் ஆவிக்குரிய சத்தியங்களைப்பற்றி கலந்துரையாடினார்கள், ஒன்றாக ஜெபித்தார்கள், உபவாசம் இருந்தார்கள், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத் தயாரானார்கள். ஆனால் சூழ்நிலைபற்றிய இன்று நமக்கு வித்தியாசமாகத் தோன்றுகிற ஏதோ ஒன்று இருந்தது, அது எம்மா ஸ்மித்துக்கு சரியானதாகத் தோன்றவில்லை. கூட்டங்களின் போது, ஆண்கள் புகைபிடித்து, புகையிலையை மென்று கொண்டிருந்தார்கள், அது அந்த நேரத்தில் அசாதாரணமானது அல்ல, ஆனால் அது மரத் தளங்களை கறுப்பாகக் கறைபடுத்தி காற்றில் ஒரு துர்நாற்றத்தை ஏற்படுத்தியது. எம்மா தனது அக்கறைகளை ஜோசப்புடன் பகிர்ந்து கொண்டார், ஜோசப் கர்த்தரிடம் கேட்டார். இதன் விளைவாக புகை மற்றும் புகையிலை கறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வெளிப்பாடு இருந்தது. இது பரிசுத்தவான்களுக்கு, வரவிருக்கும் தலைமுறைகளுக்கு, “வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கையான” உடல்நலம், “ஞானம்” மற்றும் “அறிவின் பெரும் பொக்கிஷங்களைப்பற்றிய” வாக்குத்தத்தங்கள் கொடுத்தது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:3, 19).

Saints, 1:166–68ஐயும் பார்க்கவும்.

தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89

ஞான வார்த்தை “வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கை.”

ஜோசப் ஸ்மித் ஞான வார்த்தையை வாசித்ததை தீர்க்கதரிசிகளின் கூட்டத்திலிருந்த மூப்பர்கள் முதலில் கேட்டபோது, அவர்கள் உடனடியாக “தங்கள் குழாய்களையும், மெல்லும் புகையிலை செருகிகளையும் நெருப்பில் எறிந்தனர்” (Saints, 1:168). அந்த நேரத்தில், ஞான வார்த்தை ஒரு கட்டளையை விட எச்சரிக்கையாக கருதப்பட்டது, ஆனால் அவர்கள் கீழ்ப்படிய தங்கள் விருப்பத்தைக் காட்ட விரும்பினர். ஞான வார்த்தை எச்சரிக்கும் பொருட்களை, ஒருவேளை நீங்கள் ஏற்கனவே உங்கள் வாழ்க்கையிலிருந்து “தூக்கி எறிந்திருக்கலாம்” ஆனால் இந்த வெளிப்பாட்டிலிருந்து நீங்கள் வேறு என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்த ஆலோசனைகளை கருத்தில் கொள்ளவும்:

  • இதற்கு முன்பு நீங்கள் கவனிக்காத அல்லது அதிகம் சிந்தித்திருக்காத சொற்றொடர்களைத் தேடுங்கள். அவற்றிலிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்?

  • கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89, பல வாக்குறுதிகளை உள்ளடக்கியது (வசனங்கள் 18–21 பார்க்கவும்). இந்த வாக்குறுதிகள் எதைக் குறிக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • இந்த வெளிப்பாடு கர்த்தரைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது?

  • “சதி செய்யும் மனிதர்களின் இருதயங்களில் உள்ள … தீமைகள் மற்றும் நோக்கங்களில்” நீங்கள் என்ன உதாரணங்களைக் கண்டீர்கள்? (வசனம் 4).

  • ஒரு வெளிப்பாட்டை “வாக்குத்தத்தத்துடன் ஒரு கொள்கை” (வசனம் 3) என்று நினைத்துப் பாருங்கள், முடிவெடுக்க வழிநடத்தும் நீடித்த சத்தியங்கள், வெறும் செய்யக்கூடியன மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியல் அல்ல. உங்கள் முடிவுகளை வழிநடத்தும் எந்தக் கொள்கைகளை நீங்கள் காண்கிறீர்கள்?

தற்கால தீர்க்கதரிசிகள் ஞான வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தாண்டி தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் நடத்தைகளைப்பற்றியும் எச்சரித்துள்ளனர் (“Physical and Emotional Health,” For the Strength of Youth, 25–27 பார்க்கவும்). உங்கள் மனதையும் உடலையும் நன்கு கவனிக்க நீங்கள் என்ன செய்யத் தூண்டப்படுகிறீர்கள்?

தானியேல் 1; 1 கொரிந்தியர் 6:19–20; Gospel Topics, “Word of Wisdom,” topics.ChurchofJesusChrist.org; “The Word of Wisdom,” Revelations in Context, 183–91; addictionrecovery.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்.

கடற்கரையில் சிறுவர்கள் ஓடுதல்

ஞான வார்த்தை நம் உடல்களை கவனித்துக்கொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:1–17

பிரதான தலைமை “ராஜ்யத்தின் திறவுகோல்களை” தரித்திருக்கின்றனர்.

பாகம் 90ல், கர்த்தர் (வசனம் 12) நாம் இப்போது பிரதான தலைமை என அழைக்கிற அங்கத்தினர்களாகிய ஜோசப் ஸ்மித், சிட்னி ரிக்டன் மற்றும் ப்ரெடரிக் ஜி.வில்லியம்ஸ் “ஊழியம் மற்றும் தலைமையைப்பற்றி” அறிவுரைகள் கொடுத்தார். வசனங்கள் 1–17லிருந்து மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? பிரதான தலைமை உறுப்பினர்களின் சமீபத்திய செய்திகளை மதிப்பாய்வு செய்யவும். அவர்களுடைய வார்த்தைகள் உங்களுக்கு “ராஜ்யத்தின் ரகசியங்களை எவ்வாறு திறக்கின்றன?” (வசனம் 14). அவர்கள் “இந்த சபை மற்றும் ராஜ்யத்தின் அனைத்து விவகாரங்களையும் எவ்வாறு ஒழுங்குபடுத்துகிறார்கள்”? (வசனம் 16).

Henry B. Eyring, “The Power of Sustaining Faith,” Ensign or Liahona, May 2019, 58–60ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:24

“[என்] நன்மைக்கு ஏதுவாக சகல காரியங்களும் நடக்கும்.”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:24 ல் கர்த்தருடைய வாக்குறுதியின் சாட்சியத்தை நீங்கள் பெற்ற எந்த அனுபவங்களையும் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் அனுபவங்களைப் பதிவுசெய்து, ஒரு குடும்ப அங்கத்தினர் அல்லது ஒருவேளை உறுதியளிப்பு அல்லது ஊக்கம் தேவைப்படும் அன்பானவருடன் பகிர்வதைக் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் இன்னும் காத்திருக்கும் ஆசீர்வாதங்கள் இருந்தால், “உங்கள் நன்மைக்கு ஏதுவாக சகல காரியங்களும் நடக்கும்” என்பதைக் காண நீங்கள் காத்திருக்கும்போது உண்மையுள்ளவர்களாக இருக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:28–31

வியன்னா ஜாக்ஸ் யார்?

வியன்னா ஜாக்ஸ் 1787 ஜூன் 10 அன்று மாசசூசெட்ஸில் பிறந்தார். கணிசமான நிதி வசதிகளைக் கொண்டிருந்த விசுவாசமுள்ள ஒரு பெண், வியன்னா முதன்முதலில் ஊழியக்காரர்களை 1831ல் சந்தித்தார். அவர்களின் செய்தி உண்மை என்று ஆவிக்குரிய சாட்சியம் பெற்ற பிறகு, ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசியைச் சந்திக்க அவர் பயணம் செய்தார், அங்கு அவர் ஞானஸ்நானம் பெற்றார்.

வியன்னா கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90: 28–31லிலுள்ள கர்த்தரின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தார். கர்த்லாந்தில் அவர் முன்னர் கொடுத்த நன்கொடைகள் உட்பட கர்த்தருக்கான அவரது ஒப்புக்கொடுத்தல் தலைவர்கள் கர்த்லாந்து ஆலயம் கட்டப்படும் நிலத்தை வாங்க முயற்சித்தபோது, சபைக்கு ஒரு முக்கியமான நேரத்தில் வந்தது. வியன்னா தனது வாழ்நாள் முழுவதும் “விசுவாசத்துடன் சோம்பலாயில்லாமல்”, இறுதியில் சால்ட் லேக் பள்ளத்தாக்கில் “நிம்மதியாக குடியேற” (வசனம் 31) முடிந்தது, அங்கு அவர் 96 வயதில் மரித்தார்.

குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89ல் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகள் மற்றும் பிற பொருட்களின் படங்களை வரைவது அல்லது கண்டுபிடிப்பதை உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் ரசிக்கலாம். பின்னர் நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடலாம், குடும்ப அங்கத்தினர்கள் சீரற்ற முறையில் படங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் முறை எடுக்கலாம், குப்பை கூடையில் நாம் பயன்படுத்தக்கூடாத விஷயங்களையும், ஒரு தட்டில் நாம் பயன்படுத்த வேண்டியவற்றையும் வைக்கலாம். வசனங்கள் 18–21ல் உள்ள வாக்குறுதிகள் நம் வாழ்வில் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன?

சரீர மற்றும் உணர்வுபூர்வ சுகாதாரம்,” இளைஞர் நலனுக்காக (25–27) வாசிப்பது நம் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான பிற வழிகளைப்பற்றியும், தேவன் வாக்குறுதியளிக்கும் ஆசீர்வாதங்களைப்பற்றியும் விவாதிக்கத் தூண்டலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:5.“தேவனின் உத்தரவுகளை [வெளிப்படுத்தல்கள் அல்லது தீர்க்கதரிசனங்கள்] நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள்” என்பதைப்பற்றி பேசவும். அவை நமக்கு “ஒரு லேசான காரியம்” அல்ல என்பதை நாம் எவ்வாறு காட்ட முடியும்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 91.தள்ளுபடியாகமத்தைப்பற்றிய கர்த்தரின் ஆலோசனையை (வசனங்கள் 1–2 பார்க்கவும்) உங்கள் குடும்பம் இன்று சந்திக்கும் ஊடகங்களுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை நீங்கள் கலந்துரையாடலாம்.(Guide to the Scriptures, “Apocrypha,” scriptures.ChurchofJesusChrist.orgஐயும் பார்க்கவும்). “ஆவியினால் தெளிவு பெற்று” (வசனம் 5) உண்மைக்கும் பிழைக்கும் இடையே பிரித்தறிய உங்களுக்கு உதவும்போது தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 92:2.சபையின் “செயல்படும் அங்கத்தினர்” என்றால் அர்த்தம் என்ன?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில்,என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Lord Gave Me a Temple,” Children’s Songbook, 153.

நமது போதித்தலை மேம்படுத்துதல்

பல்வேறு வகைகளைப் பயன்படுத்தவும். குடும்ப வேதப் படிப்பில் உங்கள் குடும்பத்தை ஈடுபடுத்த பல்வேறு வழிகளைத் தேடுங்கள். எடுத்துக்காட்டாக, குடும்ப அங்கத்தினர்கள் ஒரு வசனத்துடன் தொடர்புடைய பாடல்கள் அல்லது பிள்ளைகளின் பாடல்களைப் பாடலாம், அவர்கள் படித்தவற்றின் படங்களை வரையலாம் அல்லது ஒரு வசனத்தை தங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கலாம்.

கனிகளும் காய்களும்

இந்த சொல்லப்பட்டவைகளை …கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கிற சகல பரிசுத்தவான்களும் அவர்களுடைய நாபிக்கு ஆரோக்கியமும் அவர்களுடைய எலும்புகளுக்கு ஊனும் பெறுவார்கள்;(கோட்பாடும் உடன்படிக்கைகளும் 89:18).