“செப்டம்பர் 13–19. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102–105: ‘அநேக உபத்திரவங்களுக்குப் பின் … ஆசீர்வாதம் வருகிறது,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“செப்டம்பர் 13–19. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102–105,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
செப்டம்பர் 13–19
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102–105
“அநேக உபத்திரவங்களுக்குப் பின் … ஆசீர்வாதம் வருகிறது.”
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102–5 லிருந்து என்ன கொள்கைகள் உங்களுக்கு அர்த்தமுள்ளவையாக உள்ளன? இந்த கொள்கைகளைப்பற்றிய உங்கள் சிந்தனைகளையும், எண்ணங்களையும் பதிவு செய்வதைக் கருத்தில் கொள்ளவும்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
மிசௌரியின் ஜாக்சன் கவுண்டியில் உள்ள அவர்களது சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்படுவதைக் கேட்டு கர்த்லாந்தில் உள்ள பரிசுத்தவான்கள் மனம் உடைந்தனர். ஆகவே, “சீயோனின் மீட்பு” “வல்லமையால் வரும்” என்று கர்த்தர் அறிவித்தபோது அது ஊக்கமளித்திருக்க வேண்டும் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103: 15). அவர்களின் இருதயத்தில் அந்த வாக்குறுதியுடன், 200க்கும் மேற்பட்ட ஆண்கள், மேலும் 25 பெண்கள் மற்றும் குழந்தைகள், அவர்கள் இஸ்ரவேல் முகாம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் சீயோன் முகாம் என்று அறியப்பட்டதில் பெயர் சேர்க்கப்பட்டனர். அதன் நோக்கம் மிசௌரிக்கு அணிவகுத்து சென்று சீயோனை மீட்பதாகும்.
முகாமின் உறுப்பினர்களுக்கு, சீயோனை மீட்பது என்பது பரிசுத்தவான்களை தங்கள் நிலத்தில் மறுகுடியமர்த்துவதாகும். ஆனால் முகாம் ஜாக்சன் கவுண்டிக்கு வருவதற்கு சற்று முன்பு, ஜோசப் ஸ்மித்திடம் சீயோனின் முகாமை நிறுத்தி கலைக்கும்படி கர்த்தர் கூறினார். இந்த புதிய அறிவுறுத்தலால் முகாமின் சில உறுப்பினர்கள் குழப்பமடைந்து வருத்தப்பட்டனர்; அவர்களுக்கு, இந்த பயணம் தோல்வியுற்றது மற்றும் கர்த்தரின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதாகும். இருப்பினும், மற்றவர்கள் அதை வித்தியாசமாகப் பார்த்தார்கள். புலம்பெயர்ந்த பரிசுத்தவான்கள் ஒருபோதும் ஜாக்சன் கவுண்டிக்கு திரும்பவில்லை என்றாலும், அந்த அனுபவம் சீயோனுக்கு “மீட்பை” அளித்தது, அது “வல்லமையால் வந்தது”. சீயோனின் முகாமின் விசுவாசமான உறுப்பினர்களில் பலர் பின்னர் சபையின் தலைவர்களாக ஆனார்கள், இந்த அனுபவம் தேவ வல்லமை, ஜோசப் ஸ்மித்தின் தெய்வீக அழைப்பு மற்றும் சீயோன் எனும் இடம் மட்டுமல்ல, சீயோன் தேவனின் ஜனம் என தங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தியது என்று அவர்கள் சாட்சியமளித்தார்கள். தோல்வியுற்ற இந்த பணியின் மதிப்பைக் கேள்விக்குட்படுத்துவதற்குப் பதிலாக, எல்லாவற்றையும் நாம் புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட, இரட்சகரைப் பின்பற்றுவதே உண்மையான பணி என்பதை அவர்கள் அறிந்தார்கள். சீயோன் இப்படித்தான் மீட்கப்படும்.
Saints, 1:194–206; “The Acceptable Offering of Zion’s Camp,” Revelations in Context, 213–18 பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 102:12–23
இந்த வசனங்களில் உள்ள அறிவுரைகளின் நோக்கம் என்ன?
பாகம் 102, ஒஹாயோவின் கர்த்லாந்தில் கூட்டத்தின் தீர்மானங்களைக் கொண்டுள்ளது, அங்கு சபையின் முதல் பிரதான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. வசனங்கள் 12–23 கடுமையான மீறல்களைச் செய்தவர்களுக்கு உறுப்பினர் ஆலோசனைக்குழு நடத்தும்போது பிரதான ஆலோசனைக்குழு பின்பற்றும் நடைமுறைகளை விவரிக்கிறது.
தலைவர் எம். ரசல் பல்லார்ட் கற்பித்தார், “சபை [உறுப்பினர் ] ஆலோசனைக்குழுக்கள் ஏன் நடத்தப்படுகின்றன என்று உறுப்பினர்கள் சில நேரங்களில் கேட்கிறார்கள். நோக்கம் மூன்று மட்டத்திலானது: மீறுபவரின் ஆத்துமாவைக் காப்பாற்றுவது, அப்பாவிகளைப் பாதுகாப்பது, சபையின் தூய்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்ல பெயரைப் பாதுகாத்தல்” (“A Chance to Start Over: Church Disciplinary Councils and the Restoration of Blessings,” Ensign, Sept. 1990,15).
Gospel Topics, “Church Membership Councils,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:1–12, 36; 105:1–19
சீயோனை நீதியின் கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்க முடியும்.
பரிசுத்தவான்கள் மிசௌரியில் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தை ஏன் இழந்தார்கள்? சீயோன் முகாமை தங்கள் நிலங்களுக்கு மீட்டெடுக்க கர்த்தர் ஏன் அனுமதிக்கவில்லை? நிச்சயமாக மிசௌரி கும்பல்களின் வன்முறை நடவடிக்கைகள் ஒரு பங்காற்றின, மிசௌரி ஆளுநர் பரிசுத்தவான்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தார், ஆனால் அதை ஒருபோதும் வழங்கவில்லை. ஆனால் கர்த்தர் சொன்னார், “இது என் ஜனங்களின் மீறல்கள் இல்லாவிட்டால், சீயோன்“ மீட்கப்பட்டிருக்கலாம்”( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 105:2 ). கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103: 1–12, 36 ; 105: 1–19, நீங்கள் வாசிக்கும்போது மிசௌரியில் சீயோன் நிறுவப்படுவதற்குத் தடையாக இருந்த சில விஷயங்களையும், உதவக்கூடிய மற்றவைகளையும் நீங்கள் கவனிக்கலாம். உங்கள் இருதயத்திலும் வீட்டிலும் சீயோனை நிறுவ உங்களுக்கு உதவும் எதைக் கற்றுக்கொள்கிறீர்கள்?
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:12–13; 105:1–6, 13–19
விசுவாசத்தின் துன்பங்கள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு ஆசீர்வாதம் வருகிறது.
பல வழிகளில், சீயோன் முகாமில் பங்கேற்பது விசுவாசத்தின் ஒரு சோதனை. பயணம் நீண்டது, வானிலை வெப்பமாக இருந்தது, உணவு மற்றும் தண்ணீர் சில நேரங்களில் பற்றாக்குறையாக இருந்தது. அவர்கள் அனைத்தையும் சகித்த பிறகும், பரிசுத்தவான்களால் இன்னும் தங்கள் தேசத்திற்கு திரும்ப முடியவில்லை. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103: 12–13 மற்றும் 105: 1–6, 13–19 ஆகியவற்றில் உள்ள கொள்கைகள் முதலாவது அவை உண்மையாகவே தேவனிடமிருந்து வந்திருக்கிறதா என வியந்த, சீயோன் முகாமின் உறுப்பினர்களுக்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் சொந்த விசுவாச சோதனைகளில் இந்த கொள்கைகள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?
இந்த குறிப்பின் முடிவில் “மறுஸ்தாபிதத்தின் குரல்கள்”ல் சீயோனின் முகாமின் உறுப்பினர்களின் அனுபவங்களைப்பற்றியும் படிக்கலாம். அவர்களுடைய பண்புகளில் உங்களைக் கவர்வது என்ன? அவர்களது எடுத்துக்காட்டுகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?
டேவிட் ஏ. பெட்னார், “On the Lord’s Side: Lessons from Zion’s Camp,” Ensign, July 2017, 26–35 ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104:11–18, 78–83
நான் “பூமிக்குரிய ஆசீர்வாதங்களின் ஒரு உக்கிராணக்காரன்”.
மிசௌரியில் நடந்த சோதனைகளுடன், 1834 ம் ஆண்டில் சபை பெரும் கடன்கள் மற்றும் செலவுகள் உள்ளிட்ட நிதி சிக்கல்களை எதிர்கொண்டது. பாகம் 104ல், சபையின் நிதி நிலைமை குறித்து கர்த்தர் ஆலோசனை வழங்கினார். உங்கள் சொந்த நிதி சம்மந்தமான தீர்மானங்களுக்கு வசனங்கள் 11–18மற்றும் 78–83ஆகியவற்றில் உள்ள கொள்கைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்?
அவருடைய பரிசுத்தவான்களுக்கு வழங்க கர்த்தரின் “சொந்த வழி”( வசனத்தைப்பற்றி 16) மேலும் அறிய, நீங்கள் தலைவர் டியட்டர் எப். உக்டர்பின் செய்தி “Providing in the Lord’s Way” (Ensign or Liahona, Nov. 2011, 53–56) படிக்கலாம்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 103:12, 36; 105:9–13.நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் மாறாத ஒன்றைச் செய்ய உங்கள் குடும்பத்தினரிடம் (அல்லது உங்கள் மூதாதையர்களில் ஒருவர்) எப்போதாவது கேட்கப்பட்டிருக்கிறீர்களா? சீயோன் முகாமின் உறுப்பினர்கள் எதிர்பார்த்தபடி பயணம் செய்யாதபோது அவர்களின் எதிர்வினைகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (இந்த குறிப்பின் முடிவில் “மறுஸ்தாபிதத்தின் குரல்கள்” பார்க்கவும்).
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104:13–18.கர்த்தர் நமக்கு என்ன கொடுத்திருக்கிறார்? இந்த காரியங்களைக் கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார்?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 104:23–46.உண்மையுள்ளவர்களுக்கு “ஆசீர்வாதங்களை பெருக்க” (வசனம் 23) கர்த்தர் எத்தனை முறை வாக்குறுதி அளிக்கிறார் என்பதை அறிய உங்கள் குடும்பத்தினர் இந்த வசனங்களைத் தேடலாம். “உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணுவதற்கு” (“Count Your Blessings,” Hymns, no.241) இது ஒரு நல்ல தருணமாக இருக்கலாம், மேலும் கடினமான காலங்களில் அவ்வாறு செய்வது நமக்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதை கலந்துரையாடவும். சிறிய பிள்ளைகள் அவர்கள் குறிப்பாக நன்றி செலுத்தும் ஆசீர்வாதங்களின் படங்களை வரைந்து மகிழலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 105:38–41.மற்றவர்கள் நம்மை இரக்கமின்றி அல்லது நியாயமற்ற முறையில் நடத்தும்போது “சமாதானத்திற்கான முன்மொழிதல்களை”( வசனம் 40) எவ்வாறு செய்யலாம்? நமது வீட்டில் “சமாதானத்தின் அடையாளமாக” ( வசனம் 39)இருக்க நாம் என்ன செய்ய முடியும்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Count Your Blessings,” Hymns, no.241.
மறுஸ்தாபிதத்தின் குரல்கள்
சீயோனின் முகாம்
சீயோனின் முகாம் ஒருபோதும் பரிசுத்தவான்களை ஜாக்சன் கவுண்டியில் உள்ள தங்கள் நிலங்களில் மறுகுடியமர்த்தவில்லை என்பதால், பலர் தங்கள் முயற்சி தோல்வி என்று உணர்ந்தனர். இருப்பினும், சீயோன் முகாமில் பங்கேற்ற பலர் தங்கள் அனுபவத்தைத் திரும்பிப் பார்த்தார்கள், கர்த்தர் தங்கள் வாழ்க்கையிலும் அவருடைய ராஜ்யத்திலும் ஒரு உயர்ந்த நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதைக் கண்டார்கள். அவர்களுடைய சாட்சியங்களில் சில இங்கே.
ஜோசப் ஸ்மித்
சீயோனின் முகாமுக்கு 40 ஆண்டுகளுக்கு பின்பு, முகாமில் உறுப்பினராக இருந்த ஜோசப் யங், ஜோசப் ஸ்மித் பின்வருமாறு கூறினார் என அறிவித்தார்:
“சகோதரரே, மிசௌரியில் நீங்கள் சண்டையிடாததால், உங்களில் சிலர் என்மீது கோபப்படுகிறீர்கள்; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் போராடுவதை தேவன் விரும்பவில்லை. பூமியின் தேசங்களுக்கு சுவிசேஷ கதவைத் திறக்க, அவர்களுடைய பாதையில் செல்லும்படி, பன்னிரண்டு மனிதர்களுடனும், எழுபது மனிதர்களுடனும், தங்களுடைய உயிரைக் கொடுத்த மனிதர் கூட்டத்திலிருந்து அவர்களை எடுக்காவிட்டாலும், ஆபிரகாமைப் போலவே பெரிய தியாகத்தையும் செய்யாவிட்டாலும், அவரால் தனது ராஜ்யத்தை ஒழுங்கமைக்க முடியவில்லை,
“இப்போது, கர்த்தர் தனது பன்னிருவரையும், எழுபதின்மரையும் பெற்றுள்ளார், மேலும் எழுபதின்மரின் பிற குழுமங்கள் அழைக்கப்படும், அவர்கள் தியாகம் செய்வார்கள், இப்போது தியாகங்களையும், காணிக்கைகளையும் செலுத்தாதவர்கள், இனிமேல் அவற்றை செலுத்துவார்கள்.”1
பிரிகாம் யங்
“நாங்கள் மிசௌரிக்கு வந்தபோது, கர்த்தர் தம்முடைய ஊழியரான ஜோசப்பிடம் பேசினார், ‘நான் உன் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டேன்’ என்று சொன்னார், மீண்டும் திரும்புவதற்கான பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. நான் திரும்பி வந்தபோது, பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள், தங்கள் உழைப்பை விட்டுவர ஆண்களை மிசௌரி வரை செல்ல அழைத்து, வெளிப்படையாக எதையும் சாதிக்காமல், பின்னர் திரும்பி வந்ததால் என்ன பயன். ‘அது யாருக்கு பயனளித்தது?’ என்று அவர்கள் கேட்டார்கள். ‘அதைச் செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்டிருந்தால், அவ்வாறு செய்வதில் அவருடைய நோக்கம் என்ன?’… நான் அந்த சகோதரர்களிடம் சொன்னேன், எனக்கு நல்ல லாபம் கிடைத்தது, அதிக வட்டியுடன் சம்பளம் வழங்கப்பட்டது, ஆம், தீர்க்கதரிசி அவர்களுடன் பயணிப்பதன் மூலம் எனக்குக் கிடைத்த அறிவால் என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.2
வில்போர்ட் உட்ரப்
“நான் தேவனின் தீர்க்கதரிசியுடன் சீயோனின் முகாமில் இருந்தேன். அவருடன் தேவனின் நடவடிக்கைகளை நான் கண்டேன். தேவனின் வல்லமையை அவரிடம் பார்த்தேன். அவர் ஒரு தீர்க்கதரிசி என்று கண்டேன். அந்த பணியின்போது தேவ வல்லமை அவருக்கு வெளிப்பட்டது, எனக்கும் அவருடைய அறிவுறுத்தல்களைப் பெற்ற அனைவருக்கும் மிகவும் மதிப்பு வாய்ந்தது. ”3
“சீயோனின் முகாமின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டபோது, எங்களில் பலர் ஒருவருக்கொருவரின் முகங்களைப் பார்த்ததில்லை; நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருந்தோம், பலர் தீர்க்கதரிசியைப் பார்த்ததில்லை. தேசம் முழுவதும் சிதறிக்கிடந்தவர்களை ஒரு சல்லடையால் சலித்ததைப் போல, நாங்கள் முழுவதும் பரவியிருந்தோம். நாங்கள் இளைஞர்களாக இருந்தோம், அந்த ஆரம்ப நாளில் சீயோனை மீட்கும்படி அழைக்கப்பட்டோம், நாங்கள் செய்ய வேண்டியது, விசுவாசத்தினால் செய்யப்பட வேண்டியது. பல்வேறு மாநிலங்களிலிருந்து கர்த்லாந்தில் நாங்கள் ஒன்றுகூடி, தேவன் எங்களுக்குக் கொடுத்த கட்டளையை நிறைவேற்றுவதற்காக, சீயோனை மீட்பதற்குச் சென்றோம். ஆபிரகாமின் கிரியைகளை ஏற்றுக்கொண்டதுபோல தேவன் எங்களுடைய கிரியைகளை ஏற்றுக்கொண்டார். விசுவாச துரோகிகளும் அவிசுவாசிகளும் பல முறை ‘நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என்ற கேள்வியைக் கேட்டாலும் நாங்கள் ஒரு பெரிய காரியத்தைச் செய்தோம். வேறு எந்த வகையிலும் நாம் ஒருபோதும் பெறமுடியாத ஒரு அனுபவத்தைப் பெற்றோம். தீர்க்கதரிசியின் முகத்தைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது, அவருடன் ஆயிரம் மைல்கள் பயணம் செய்வதற்கும், அவருடன் தேவனுடைய ஆவியின் செயல்பாடுகளையும், அவருக்குக் கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடுகளையும், அவை நிறைவேறுவதையும் பார்க்க எங்களுக்கு பாக்கியம் கிடைத்தது. அந்த ஆரம்ப நாளில் அவர் நாடு முழுவதிலுமிருந்து சுமார் இருநூறு மூப்பர்களைக் கூட்டி, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பிரசங்கித்து உலகிற்கு பரப்ப எங்களை அனுப்பினார். நான் சீயோனின் முகாமுடன் செல்லவில்லை என்றால், நான் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன் [சால்ட் லேக் சிட்டியில், பன்னிருவர் குழுமத்தில் பணியாற்றிக் கொண்டு]. … அங்கு சென்றதால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க திராட்சைத் தோட்டத்திற்குள் தள்ளப்பட்டோம், கர்த்தர் எங்கள் பிரயாசங்களை ஏற்றுக்கொண்டார். நம்முடைய எல்லா பிரயாசங்களிலும் துன்புறுத்தல்களிலும், நம் வாழ்க்கையை அடிக்கடி ஆபத்தில் ஆழ்த்தி, விசுவாசத்தினால் வேலை செய்து வாழ வேண்டியிருந்தது.4
“சீயோன் முகாமில் பயணம் செய்வதில் [நாங்கள்] பெற்ற அனுபவம் தங்கத்தை விட மதிப்பு வாய்ந்தது.”5