கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
ஆகஸ்டு 30–செப்டம்பர் 5. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94–97: “சீயோனின் இரட்சிப்புக்காக”


“ஆகஸ்டு 30–செப்டம்பர் 5. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94–97: ‘சீயோனின் இரட்சிப்புக்காக,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“ஆகஸ்டு 30–செப்டம்பர் 5. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94–97,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

படம்
கர்த்லாந்து ஆலயம்

கர்த்லாந்து ஆலயம்–அல் ரவுண்ஸ்

ஆகஸ்டு 30–செப்டம்பர் 5

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94–97

“சீயோனின் இரட்சிப்புக்காக”

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94–97 படிக்கும்போது என்ன கொள்கைகளும் கோட்பாடுகளும் உங்களுக்கு முக்கியமாக இருக்கின்றன? உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்வதை உறுதி செய்யவும்

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

ஒரு கூடாரத்தைக் கட்டும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபோது, “மலையில் [அவனுக்கு] காட்டப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையுஞ்செய்” என மோசேயிடம் சொன்னார் ( எபிரெயர் 8: 5 ; யாத்திராகமம் 25 : 8–9 ஐயும் பார்க்கவும்). கூடாரம், இஸ்ரவேலின் வனாந்தர முகாமின் மையமாக இருக்க வேண்டும் (எண்ணாகமம் 2:1–2 பார்க்கவும்). பின்னர், தேவன் சாலொமோனுக்கும் அவனுடைய ஜனத்துக்கும் அவர் வெளிப்படுத்திய ஒரு மாதிரியின்படி ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார் (1 நாளாகமம் 28: 12,19 பார்க்கவும்).

கர்த்தர் சுவிசேஷத்தின் முழுமையை மறுஸ்தாபிதம் செய்தபோது, ஜோசப் ஸ்மித்துக்கு வெளிப்படுத்தப்பட்ட மாதிரியின்படி ஆலயங்களைக் கட்டும்படி கட்டளையிட்டார். “வீடு கட்டப்படுவதாக, உலகத்தின் விதமாக அல்ல” என்று கர்த்தர் அறிவித்தார். “நான் காண்பிக்கும் விதத்தில் அது கட்டப்படுவதாக” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95: 13–14; 97:10 ஐயும் பார்க்கவும்). வனாந்தரத்தில் உள்ள கூடாரத்தைப் போலவே, இந்த ஆலயமும் கர்த்லாந்தில் ஒரு மைய அம்சமாக இருக்க வேண்டும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94: 1 பார்க்கவும்).

இன்று கர்த்தரின் வீடுகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அவை நம் நகரங்களின் மையத்தில் இல்லாவிட்டாலும், அவை நம் வாழ்வின் மையமாக இருக்க முடியும். ஒவ்வொரு ஆலயமும் தோற்றத்தில் வேறுபடுகின்றன என்றாலும், நம்மை மீண்டும் தேவனின் பிரசன்னத்துக்கு கொண்டுவர ஒரு பரலோக திட்டமான, அவற்றுள் நாம் அதே தெய்வீக வடிவத்தைக் கற்றுக்கொள்கிறோம். பரிசுத்தமான, நித்திய நியமங்கள் நம் வாழ்க்கையை கட்டியெழுப்பவும், நம் குடும்பங்களை பலப்படுத்தவும் உதவுகின்றன, “உலக முறைக்கு ஏற்ப அல்ல”, ஆனால் தேவன் நமக்குக் காட்டும் மாதிரியின்படியே.

Saints, 1:169–70; “A House for Our God,” Revelations in Context, 165–73 பார்க்கவும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94:97, 15–17; 97:15–17

என் அன்றாட வாழ்க்கையில் கர்த்தர் என்னுடன் இருக்க முடியும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94ல் மற்றும் 97ல் உள்ள அறிவுரைகள், ஆகஸ்டு 2, 1833ல் ஒரே நாளில் வழங்கப்பட்டன. பாகம் 97 மிசௌரியின் ஜாக்சன் கவுண்டியில் திட்டமிடப்பட்ட ஒரு ஆலயத்தின் ஒரு பகுதியைப்பற்றிக் கூறுகிறது, அதே நேரத்தில் பாகம் 94 ஒஹாயோவின் கர்த்லாந்தில் உள்ள நிர்வாகக் கட்டடங்களைக் குறித்து குறிப்பிடுகிறது. இந்த வகையான கட்டிடங்களைப்பற்றி கர்த்தர் சொல்வதில் சில ஒற்றுமைகள் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம் ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 94: 2–12 ; 97: 10–17 பார்க்கவும்). இந்த வழிமுறைகளை நீங்கள் சிந்திக்கும்போது, சபை கட்டிடங்களுக்குள்ளும் உங்கள் அன்றாட வாழ்க்கையிலும் கர்த்தருடைய மகிமையையும் பிரசன்னத்தையும் அடிக்கடி அனுபவிக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95

கர்த்தர், தான் நேசிப்பவர்களை தண்டிக்கிறார்.

கர்த்தர் கர்த்லாந்தில் உள்ள பரிசுத்தவான்களுக்கு தேவனுடைய வீட்டைக் கட்டியெழுப்பவும், ஒரு தனித்துவமான கூட்டத்தை நடத்தவும் கட்டளையிட்டபோது, 1833 ஜனுவரியில் இருந்து சுமார் ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 88: 117–19 பார்க்கவும்). பாகம் 95 ல் பதிவு செய்யப்பட்ட வெளிப்படுத்தல் ஜூன் 1833 ல் பெறப்பட்டபோது, அவர்கள் இன்னும் அந்தக் கட்டளையின்படி செயல்பட்டிருக்கவில்லை. இந்த வெளிப்படுத்தலில் கர்த்தர் பரிசுத்தவான்களை தண்டித்த விதத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? நீங்கள் இதுவரை செயல்படுத்தாத கட்டளைகள் அல்லது ஆலோசனை வார்த்தைகள் உள்ளதா? நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்?

D.Todd Christofferson, “As Many as I Love, I Rebuke and Chasten,” Ensign or Liahona, May 2011, 97–100 ஐயும் பார்க்கவும்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95:8, 11–17, 97–17; 97:10–17

ஆலயத்தில் தேவன் தம் ஜனங்களை ஆசீர்வதிக்கிறார்.

கர்த்லாந்தில் கர்த்தரின் வீட்டைக் கட்டாததற்காக தண்டிக்கப்பட்ட பின்னர், சபைத் தலைவர்கள் கோதுமை வயலில் அவர்கள் கட்டவிருக்கிற ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். தீர்க்கதரிசியின் சகோதரரான ஹைரம் ஸ்மித் உடனடியாக ஒரு அரிவாளைப் பெற்று வயலை சுத்தப்படுத்த தொடங்கினார். “நாங்கள் கர்த்தருக்காக ஒரு வீட்டைக் கட்டத் தயாராகி வருகிறோம், மேலும் வேலையில் முதன்மையானவராக நான் உறுதியாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார் (in Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 271,273). நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95:8, 11–17; 97:10–17 வாசிக்கும்போது, ஹைரமின் ஆர்வத்தைப்பற்றி சிந்திக்கவும். ஆலயத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு உங்களிடமும் இதேபோன்ற உறுதியைத் தூண்டுகிறது எது என்று நீங்கள் காண்கிறீர்கள்?

படம்
ஹைரம் ஸ்மித் அரிவாள் வைத்திருத்தல்

ஹைரம் ஸ்மித் நிலத்தை சுத்தம் செய்தல்–ஜோசப் ப்ரிக்கி

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 97:18–28

“இருதயத்தில் தூய்மையுள்ளவர்களே” சீயோன்.

தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார், “நமது மாபெரும் நோக்கமாக சீயோனைக் கட்டுவதையே வைத்திருக்க வேண்டும்.” (Teachings: Joseph Smith,186). 1830களில் பரிசுத்தவான்களுக்கு, சீயோன் ஒரு இடம், அதாவது “எங்கள் தேவனின் நகரம்” ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 97:19 ). ஆனால் பாகம் 97 ல் பதிவு செய்யப்பட்டுள்ள வெளிப்படுத்தலில், கர்த்தர் அந்த பார்வையை விரிவுபடுத்தினார். சீயோன் ஒரு ஜனத்தையும் விவரிக்கிறது, “இருதயத்தில் தூய்மையானவர்கள்” ( வசனம் 21 ). நீங்கள் வசனங்கள் 18–28 வாசிக்கும்போது, “சீயோன்” என்ற வார்த்தையைப் படிக்கும்போது இந்த வரையறையைப்பற்றி சிந்தியுங்கள். இருதயத்தில் தூய்மையாக இருப்பது என்றால் என்ன? “சீயோனின் இரட்சிப்பை” நிறைவேற்ற ஆலயம் எவ்வாறு உதவுகிறது? ( வசனம் 12 ).

மோசே 7:18; Gospel Topics, “Zion,” topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95:8.ஆலய உடன்படிக்கைகளை உருவாக்குவதும் காத்துக்கொள்வதும் “உன்னதத்திலிருந்து வல்லமையை” நம் வாழ்வில் கொண்டு வந்திருப்பது எப்படி? ஆலயத்தில் ஆராதிப்பதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் ஆலயத்தைப்பற்றி அவர்கள் எப்படி உணருகிறார்கள் அல்லது ஆலயத்தில் வழிபடுவதன் மூலம் “உன்னதத்திலிருந்து வல்லமையுடன்” ஆசீர்வதிக்கப்பட்டதை அவர்கள் உணர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆலயத்தில் பிரவேசிக்க ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உதவ, temples.ChurchofJesusChrist.org காணப்படும் காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் அறிவுறுத்தல்களை நீங்கள் பரிசீலிக்கலாம். ஆலயத்தைப்பற்றி பிள்ளைகளுக்கு அறிந்துகொள்ள உதவ, “Your Path to the Temple” (in Temples of The Church of Jesus Christ of Latter-day Saints [special issue of the Ensign or Liahona, Oct. 2010], 72–75) நீங்கள் பயன்படுத்தலாம்.

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 95:1–11.இந்த வசனங்களிலிருந்து தண்டித்தலைப்பற்றி நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? கர்த்தரைப்பற்றி நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இந்த உள்ளுணர்வு நாம் தண்டனையைப் பெறும் அல்லது மற்றவர்களை தண்டிக்கும் விதத்தை எவ்வாறு பாதிக்கிறது?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 97:8.இந்த வசனத்தின்படி, நாம் எவ்வாறு கர்த்தரை “ஏற்றுக்கொள்ள முடியும்”? உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது? “[நமது] உடன்படிக்கைகளை தியாகத்தால் கடைப்பிடிப்பது” என்றால் என்ன? இதை நாம் எவ்வாறு செய்துள்ளோம்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 97:10–21.தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார், “பரிசுத்தவான்கள் கூடும் எந்த இடமும் சீயோன், ஒவ்வொரு நீதியுள்ள ஆணும் [அல்லது பெண்ணும்] அவனது [அல்லது அவளுடைய] பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இடத்தைக் கட்டுவார்கள்” நமது வீட்டில் சீயோனை எவ்வாறு கட்ட முடியும்? கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20ல் என்ன கொள்கைகளை நாம் காண்கிறோம்? ஒரு குடும்பமாக, இந்த வாரத்தில் கவனம் செலுத்த ஒரு கொள்கையைத் தேர்ந்தெடுக்கவும்.

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I Love to See the Temple,” Children’s Songbook, 95.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உங்கள் அனுபவங்களைப் பதிவுசெய்யவும். நீங்கள் கற்றுக் கொண்ட கொள்கைகள் மற்றும் கோட்பாட்டுடன் நீங்கள் பெற்ற அனுபவங்களை பதிவு செய்யுங்கள். இந்த அனுபவங்கள் எதிர்கால தலைமுறையினரை ஆசீர்வதிக்கும் தனிப்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியாக மாறக்கூடும்.

படம்
கர்த்லாந்து ஆலய கட்டுமானம்

கர்த்லாந்து ஆலயம் கட்டுதல்–வால்ட்டர் ரானே

அச்சிடவும்