“செப்டம்பர் 6–12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98-101: ‘நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)
“செப்டம்பர் 6–12. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98–101,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021
செப்டம்பர் 6–12
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98–101
“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்”
நீங்கள் கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98–101 வாசிக்கும்போது, வரும் சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் குறித்து கவனம் செலுத்துங்கள். நீங்கள் தேவன் விரும்பும் நபராக இருக்க அவற்றின்படி செயல்படுவது எவ்வாறு உங்களுக்கு உதவக்கூடும்?
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
1830 களில் பரிசுத்தவான்களைப் பொறுத்தவரை, இண்டிப்பென்டன்ஸ், மிசௌரி, உண்மையில் வாக்குத்தத்தத்தின் தேசம். இது சீயோனின் “மைய இடம்” ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 57:3 பார்க்கவும்), பூமியிலுள்ள தேவனின் நகரம், அவர்கள் அதைக் கட்டியெழுப்ப பெரும் தியாகங்களைச் செய்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பரிசுத்தவான்கள் கூடிச்சேர்தல் இரண்டாவது வருகைக்கு ஒரு அற்புதமான மற்றும் மகிமையான முன்னுரையாக இருந்தது. ஆனால் அப்பகுதியில் உள்ள அவர்களது அக்கம்பக்கத்தார் விஷயங்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள். தேவன் நிலத்தை பரிசுத்தவான்களுக்குக் கொடுத்தார் என்ற உரிமையுடன் அவர்கள் பிரச்சினையை எடுத்துக் கொண்டனர், மேலும் அறிமுகமில்லாத ஒரு மதத்தைச் சேர்ந்த பலர் இவ்வளவு விரைவாக இப்பகுதிக்கு வருவதால் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் சமூக விளைவுகளால் அவர்கள் அசௌகர்யமாக இருந்தனர். விரைவில் அக்கறை அச்சுறுத்தல்களாக மாறியது, அச்சுறுத்தல்கள் துன்புறுத்தல் மற்றும் வன்முறையாக மாறியது. ஜூலை 1833ல், சபையின் அச்சிடும் அலுவலகம் அழிக்கப்பட்டது, நவம்பரில் பரிசுத்தவான்கள் மிசௌரியின் ஜாக்சன் கவுண்டியில் உள்ள வீடுகளை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கர்த்லாந்தில் ஜோசப் ஸ்மித் 800 மைல்களுக்கு அப்பால் இருந்தார், இந்த செய்தி அவரை அடைய வாரங்கள் ஆனது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை கர்த்தர் அறிந்திருந்தார், மேலும் பரிசுத்தவான்களை ஆறுதல்படுத்தும் அமைதி மற்றும் ஊக்கத்தின் கொள்கைகளை தீர்க்கதரிசிக்கு அவர் வெளிப்படுத்தினார், நாம் துன்புறுத்தலை எதிர்கொள்ளும்போது, நம்முடைய நீதியான ஆசைகள் நிறைவேறாமல் போகும்போது, அல்லது நம்முடைய அன்றாட துன்பங்கள் இறுதியில், எப்படியாவது, “[நமது] நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படும்” ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:3).
Saints, 1:171–93; “Waiting for the Word of the Lord,” Revelations in Context, 196–201 பார்க்கவும்.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:1–3, 11–14; 101:1–16
எனது சோதனைகள் எனது நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும்.
வாழ்க்கையில் நம்முடைய சில துன்பங்கள் நம்முடைய சொந்த தேர்ந்தெடுப்புகளால் ஏற்படுகின்றன. மற்றவை மற்றவர்களின் தேர்ந்தெடுப்புகளால் ஏற்படுகின்றன. சில நேரங்களில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது, கெட்ட காரியங்கள் தாமாகவே நடக்கின்றன. காரணத்தைப் பொருட்படுத்தாமல், துன்பம் தெய்வீக நோக்கங்களை நிறைவேற்ற உதவும். கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:1–3, 11–14 மற்றும் 101: 1–16 ஆகியவற்றில் பரிசுத்தவான்களின் கஷ்டங்களைப்பற்றி கர்த்தர் என்ன சொன்னார் என்பதை வாசிக்கும்போது, உங்கள் சோதனைகளுக்கு உதவக்கூடிய எதை நீங்கள் காணலாம்? நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நீங்கள் பார்க்கும் விதத்தில் இந்த வசனங்கள் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்தும்? உங்கள் வாழ்க்கையில் உங்கள் நல்ல மற்றும் நிறைவேற்றப்பட்ட தேவனின் நோக்கங்களுக்காக உங்கள் சோதனைகள் எவ்வாறு ஒன்றாய் கிரியை செய்தன என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
2 நேபி 2:2, கோட்பாடும் உடன்படிக்கைகளும் 90:24ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:23–48
அவருடைய வழியில் நான் அமைதியைத் தேட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98: 23–48 ல் உள்ள அனைத்தும் மற்றவர்களுடனான உங்கள் தனிப்பட்ட தொடர்புகளுக்கு பொருந்தாது என்றாலும், மற்றவர்களால் உங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது உங்களுக்கு வழிகாட்டக்கூடிய எந்தக் கொள்கைகளை நீங்கள் காணலாம்? மிசௌரியில் மோதலை பரிசுத்தவான்கள் எவ்வாறு கையாள வேண்டும் என கர்த்தர் விரும்பினார் என்பதை விவரிக்கும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பது உதவியாக இருக்கும்.
Jeffrey R. Holland, “The Ministry of Reconciliation,” Ensign or Liahona, Nov. 2018, 77–79ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 100
தனக்கு சேவை செய்பவர்களை கர்த்தர் கவனித்துக்கொள்கிறார்.
மிசௌரியில் நடந்த துன்புறுத்தலைப்பற்றி ஜோசப் அறிந்த சில வாரங்களுக்குப் பிறகு, அண்மையில் மனம் மாறியவர் தனது மகன்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள கனடா செல்லுமாறு கேட்டார். குறிப்பாக துன்புறுத்தல் மற்றும் அவரது குடும்பத்திற்கும் சபைக்கும் அச்சுறுத்தல் காரணமாக, குறிப்பாக தனது குடும்பத்தை விட்டு பிரிவதைப்பற்றி கவலைப்பட்டாலும், ஜோசப் ஒப்புக் கொண்டார். கனடாவுக்குச் செல்லும் வழியில், ஜோசப் மற்றும் அவரது தோழர் சிட்னி ரிக்டன் ஆகியோர் ஆறுதலுக்காக ஜெபித்தனர், பாகம் 100 அவர்களுக்கு கர்த்தர் அளித்த பதில். கர்த்தருடைய பதிலில் அவர்களுக்கு என்ன உறுதியளித்திருக்கலாம் மற்றும் உதவியிருக்கலாம் என நீங்கள் காண்கிறீர்கள்?
உங்கள் சபை பொறுப்புகள் மற்றும் உங்கள் குடும்பத்தின் மீதான அக்கறை ஆகியவற்றை சமன் செய்ய வேண்டிய அனுபவங்களும் உங்களுக்கு இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பாகம்100ல் உள்ள கர்த்தரின் வார்த்தைகள் உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும்?
“A Mission to the Lamanites,” Revelations in Context, 202–7 ஐயும் பார்க்கவும்.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:43–65
தேவனின் ஆலோசனையைப் பின்பற்றுவது என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101: 43–62ல் உள்ள உவமை, பரிசுத்தவான்கள் சீயோனிலிருந்து விரட்டியடிக்கப்பட கர்த்தர் ஏன் அனுமதித்தார் என்பதை விளக்க கொடுக்கப்பட்டது. இந்த வசனங்களை வாசிக்கும்போது, உங்களுக்கும் உவமையிலுள்ள ஊழியர்களுக்கும் ஏதேனும் ஒற்றுமைகளைப் பார்க்கிறீர்களா? நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: தேவனின் கட்டளைகளை நான் எப்போதாவது கேள்வி கேட்கிறேனா? விசுவாசம் அல்லது ஒப்புக் கொடுத்தல் குறைபாடு “சத்துரு” என் வாழ்க்கையில் செல்வாக்கை எவ்வாறு அனுமதிக்க முடியும்? நான் “[என்] இரட்சிப்புக்காக சரியான மற்றும் ஏற்ற வழியில் வழிநடத்தப்பட சித்தமாக இருக்கிறேன்” என்று தேவனுக்கு எப்படிக் காட்ட முடியும்? (வசனங்கள் 63–65 பார்க்கவும்).
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 98:16, 39–40.இந்த வசனங்களில் எது நம் குடும்பத்தில் அதிக சமாதானம் பெற உதவ முடியும்? “Truth Reflects upon Our Senses” (Hymns, no.273) போன்ற சமாதானம் அல்லது மன்னிப்பைப்பற்றி நீங்கள் ஒரு பாடலைப் பாடலாம். இளம் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் மன்னிப்பதை நடிக்க விரும்பலாம்.
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 99.“[நித்திய சுவிசேஷத்தை அறிவிக்க” ( வசனம் 1 )ஜான் முர்டாக் தனது வீட்டிலிருந்து செல்ல அழைக்கப்பட்டபோது, அவர் மிசௌரியில் கடினமான, ஒரு ஆண்டு கால ஊழியத்திலிருந்து திரும்பியிருந்தார் (“John Murdock’s Missions to Missouri,” Revelations in Context, 87–89 பார்க்கவும்). பாகம் 99 ல் சகோதரர் முர்டோக்கிற்கு உதவியாகவோ அல்லது ஊக்கமாகவோ இருந்திருக்கக்கூடிய எதை நாம் காண்கிறோம்? இந்த வெளிப்பாட்டில் கர்த்தர் நமக்கு என்ன செய்தி அளிக்கிறார்?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 100:16; 101:3–5,18.இந்த வசனங்களை வாசித்த பிறகு, கொல்லர்கள் எவ்வாறு அசுத்தங்களை அகற்ற உலோகத்தை தீவிரமாக வெப்பப்படுத்த வேண்டும் பின்னர் அதை வடிவமாக்க மீண்டும் மீண்டும் சுத்தியலால் வடிவமைப்பார்கள் என்பதைப்பற்றி ககலந்துரையாடலாம் (the video “The Refiner’s Fire” on ChurchofJesusChrist.org பார்க்கவும்). நீர் அல்லது உப்பு போன்ற பிற பொருட்கள், எவ்வாறு சுத்திகரிக்கப்படுகின்றன என்பதையும் நீங்கள் ஒன்றாகக் கற்றுக்கொள்ளலாம். ஒரு குடும்பமாக நீங்கள் எதையாவது சுத்திகரிக்கலாம் அல்லது சுத்தப்படுத்தலாம். நாம் ஏன் தூய்மையாக மாற விரும்புகிறோம்? “பரிசுத்தமான ஜனங்களாக” மாற நமது சோதனைகள் எவ்வாறு உதவக்கூடும் என்பதைப்பற்றி இந்த எடுத்துக்காட்டுகள் நமக்கு என்ன கற்பிக்கின்றன?
-
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 101:22–36.துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பரிசுத்தவான்களுக்கு இந்த வசனங்கள் எவ்வாறு உதவியிருக்கும்? இன்று நம் உலகின் நிலைமைகளைப்பற்றி பயப்படுபவர்களுக்கு அவை எவ்வாறு உதவக்கூடும்?
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Help Me, Dear Father,” Children’s Songbook, 99.