“பெப்ருவரி 6–12. யோவான் 2–4: ‘நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023(2022)
“பெப்ருவரி 6–12. யோவான் 2–4,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
பெப்ருவரி 6–12
யோவான் 2–4
“நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்”
யோவான் 2–4 ஐ நீங்கள் வாசிக்கும்போது உங்களுடைய சொந்த மனமாற்றத்தைப்பற்றி பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் பேசுவார். அவருடைய தூண்டுதல்களைக் குறித்துக்கொள்ளவும். இந்த குறிப்பிலுள்ள படிப்பு ஆலோசனைகளிலிருந்து கூடுதலான ஆவிக்குரிய உள்ளுணர்வுகளை நீங்கள் காணலாம்.
உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்
“முதலாம் அற்புதம்” (யோவான் 2:11) என யோவான் அழைத்த ஒரு சம்பவமான, கானா ஊரில் ஒரு திருமண விருந்தில் தண்ணீரை கிறிஸ்து திராட்சை ரசமாக மாற்றினார். ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களில் இது உண்மையாயிருக்கிறது. இயேசு பகிரங்கமாக நடத்திய முதல் அற்புதமாக இது இருந்தபோது, நமது இரட்சகரைப்போல என்றென்றும் நாம் மாறும்போது, நமது இருதயங்கள் மாறிக்கொண்டிருக்கிற செயல்முறையான இது மற்றொரு அற்புதத்தின் ஆரம்பமாகவும் அடையாளமாகவும் இருக்கலாம். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவும் அவர் மூலமாக மாறவும், ஒரு சிறப்பான வாழ்க்கையை வாழவும் இந்த ஒரு வாழ்நாள் அற்புதம் ஆரம்பமாகிறது. முடிவாக, இதை விவரிக்க சிறந்த வழிகளில் ஒன்றான “மறுபடியும் பிறத்தலால்”(யோவான் 3:7) அந்த நபரின் வாழ்க்கையை மாற்றுவதாக அந்த அற்புதம் இருக்கலாம். ஆனால் மறுபடியும் பிறத்தல் சீஷத்துவத்தின் பாதையின் ஆரம்பமாயிருக்கிறது. இந்த பாதையில் நாம் தொடர்ந்து சென்றால், இறுதியாக, சுவிசேஷம் நமக்குள்ளே இருக்கிற “தண்ணீர்” “நித்திய ஜீவியகாலமாய் ஊறுகிற நீரூற்றாய் மாறும்” (யோவான் 4:14) என்று, கிணற்றடியில் சமாரிய ஸ்திரீயிடம் சொல்லப்பட்ட கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகிறது.
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள் “தம்முடைய மகிமையை வெளிப்படுத்தின.”
இரட்சகர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதை நீங்கள் யோவான் 2:1–11ல் வாசிக்கும்போது, மரியாள், சீஷர்கள் மற்றும் பிறர் போன்ற அங்கிருந்த வெவ்வேறு ஜனங்களின் கண்ணோட்டங்களைக் கருத்தில் கொள்ளுவதால், நீங்கள் கூடுதலான உள்ளுணர்வுகளைப் பெறலாம். இங்கே விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை நீங்கள் பார்த்திருந்தால், இயேசுவைப்பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்? இந்த அற்புதம் அவரைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது?
தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க நான் மறுபடியும் பிறக்கவேண்டும்.
நிக்கொதேமு தனியாக இயேசுவிடம் வந்தபோது அவன் ஒரு எச்சரிக்கையான பார்வையாளனாக இருந்தான். பின்னர், எப்படியாயினும், அவன் இயேசுவை பகிரங்கமாகப் பாதுகாத்தான் (யோவான் 7:45–52 பார்க்கவும்) மேலும், இரட்சகரின் அடக்கத்தில் விசுவாசிகளுடன் சேர்ந்துகொண்டான் (யோவான் 19:38–40 பார்க்கவும்). இயேசுவைப் பின்பற்றவும் மறுபடியும் பிறக்கவும் நிக்கொதேமுவை உணர்த்தியிருக்கக்கூடிய என்ன போதனைகளை யோவான் 3:1–21ல் நீங்கள் காண்கிறீர்கள்?
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார், “நியமங்கள் மூலமாக தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறத்தல் வருகிறது” (Teachings of Presidents of the Church: Joseph Smith [2007], 95). உங்களுடைய மறுபடி பிறத்தலில், “ஜலத்தினாலும் ஆவியினாலும்” பிறத்தல் (யோவான் 3:5), உங்களுடைய ஞானஸ்நானமும் திடப்படுத்தலும் எந்த பங்கு வகிக்கிறது? இந்த மாற்றத்தின் செயல்முறையைத் தொடர நீங்கள் என்ன செய்கிறீர்கள்? (ஆல்மா 5:11–14 பார்க்கவும்).
மோசியா 5:7; 27:25–26; David A. Bednar, “Ye Must Be Born Again,” Liahona, May 2007, 19–22 ஐயும் பார்க்கவும்.
இயேசு கிறிஸ்துவின் மூலமாக என்மீது அவருடைய அன்பை பரலோக பிதா காட்டுகிறார்.
மூப்பர் ஜெப்ரி ஆர்.ஹாலண்ட் போதித்தார், “அவருடைய முழு இருதயத்தோடும், வலிமையோடும், மனதோடும், பெலத்தோடும் தேவன் நம்மை நேசிக்கிறாரென்பது சகல நித்தியத்துக்குமான முதல் மகத்தான சத்தியம்” (“Tomorrow the Lord Will Do Wonders among You,” Liahona, May 2016, 127). அவருடைய குமாரனுடைய வரத்தின் மூலமாக தேவனின் அன்பை நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?
தேவனுடைய அன்பையும் அவருடைய குமாரனின் வரத்தையும் நினைத்துப்பார்க்க திருவிருந்து நேரத்தைக் கொடுக்கிறது. இந்த அன்பை உணர எந்த திருவிருந்து பாடல்கள் உங்களுக்குதவும்? திருவிருந்தை மிகவும் அர்த்தமுள்ளதாக்க உங்களால் என்ன செய்யமுடியும்?
இரட்சகரின் போதனைகள் மற்றும் ஊழியத்தைப்பற்றி நீங்கள் தொடர்ந்து படிக்கும்போது, நீங்கள் படிக்கும் காரியங்கள் தேவனின் அன்பைப் புரிந்துகொள்ளவும் உணரவும் எப்படி உதவுகின்றன என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
தேவன் ஆவியாயிருக்கிறாரா?
தேவன் ஆவியாயிருக்கிறாரென்ற இயேசுவின் கூற்றால் சிலர் குழப்பமடையலாம். “அப்படிப்பட்டவர்களுக்கு அவருடைய ஆவியை அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்” என்ற இந்த வசனத்தின் ஜோசப் ஸ்மித்தின் மொழிபெயர்ப்பு ஒரு முக்கியமான தெளிவைக் கொடுக்கிறது (யோவான் 4:24,ல் அடிக்குறிப்பு a) தற்கால வெளிப்பாடு மாம்சமும் எலும்புமுள்ள ஒரு சரீரம் தேவனுக்கிருக்கிறது எனவும் போதிக்கிறது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 130:22–23 பார்க்கவும்; ஆதியாகமம் 5:1–3; எபிரெயர் 1:1–3 ஐயும் பார்க்கவும்).
அவருடைய ஜீவதண்ணீரை கிறிஸ்து எனக்கு வழங்குகிறார்.
அவர் கொடுக்கிற தண்ணீரைக் குடிக்கிற எவனுக்கும் மறுபடியும் தாகமுண்டாகாது என்று சமாரிய ஸ்திரீயிடம் அவர் கூறியபோது அவர் என்ன அர்த்தத்தில் கூறியிருக்கக்கூடும்? சுவிசேஷம் எவ்வாறு ஜீவ தண்ணீரைப் போலிருக்கிறது?
நாம் எங்கே தொழுதுகொள்கிறோம் என்பதைவிட எவ்வாறு நாம் தொழுதுகொள்கிறோம் என்பது மிகமுக்கியமானதென்பது சமாரிய ஸ்திரீக்கு இரட்சகரின் செய்திகளில் ஒன்று (யோவான் 4:21–24 பார்க்கவும்). “பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ள” நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? யோவான் 4:23.
Guide to the Scriptures, “Worship,” scriptures.ChurchofJesusChrist.org; Dean M. Davies, “The Blessings of Worship,” Liahona, Nov. 2016, 93–95 ஐயும் பார்க்கவும்.
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
யோவான் 2–4.இந்த வாரத்தில் உங்கள் குடும்பம் இந்த அதிகாரங்களை வாசிக்கிறபோது, ஆவிக்குரிய சத்தியங்களைப் போதிக்க, பிறப்பு, காற்று, தண்ணீர், உணவு போன்ற அன்றாட காரியங்களை இரட்சகர் எவ்வாறு பயன்படுத்தினாரென்பதற்கு விசேஷித்த கவனம் செலுத்தவும். ஆவிக்குரிய சத்தியங்களைப் போதிக்க உங்கள் வீட்டிலுள்ள எந்த உருப்படிகளை உங்களால் பயன்படுத்தமுடியும்?
இந்த அத்தியாயங்களை நீங்கள் படிக்கும்போது, இந்த நிகழ்வுகளை சித்தரிக்கும் காணொலிகளை ஒன்றாக பார்க்கவும்: “இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுதல்,” “இயேசு ஆலயத்தை சுத்தம் செய்தல்,” “இயேசு மீண்டும் பிறத்தலைப்பற்றி போதிக்கிறார்” மற்றும் “இயேசு ஒரு சமாரிய பெண்ணுக்கு போதித்தல்” (ChurchofJesusChrist.org).
2:261:346:44:11 -
யோவான் 2:13–17.ஒரு பரிசுத்த இடமாக இருக்க உங்கள் வீட்டைவிட்டு வெளியேற்ற உங்கள் குடும்பத்துக்கு எந்த அசுத்தமான செல்வாக்குகளை வெளியேற்றுவது தேவையாயிருக்கிறது? அந்த காரியங்களை வெளியேற்ற நீங்கள் என்ன செய்வீர்கள்?
-
யோவான் 3:1–6.கர்ப்பம் மற்றும் பிறப்பின் அற்புதம்பற்றி உங்கள் குடும்பத்துடன் பேசவும்—ஒரு உயிருள்ள, அறிவார்ந்த உயிரினத்தை உருவாக்கும் செயல்முறை. தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன் நாம் மறுபடி பிறந்திருக்கவேண்டுமென கிறிஸ்து போதித்தார். தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன் நமக்கு தேவையாயிருக்கிற மாற்றத்திற்கு மறுபிறப்பு ஏன் ஒரு நல்ல உருவகமாக இருக்கிறது? ஆவிக்குரிய மறுபிறப்பின் செயல்முறையை நாம் எவ்வாறு அனுபவிக்க முடியும்?
-
யோவான் 3:16–17.ஒரு நண்பருக்கு அவர்கள் விளக்குவதாக இருந்தால் போல தங்களுடைய சொந்த வார்த்தைகளில் இந்த வசனத்தை மீண்டும் தெரிவிக்க குடும்ப அங்கத்தினர்களை அழைக்கவும். தேவனின் அன்பை உணர இயேசு கிறிஸ்து நமக்கு எப்படி உதவினார்?
-
யோவான் 4:5–15.ஜீவனுள்ள தண்ணீருக்கு அவருடைய சுவிசேஷத்தை அவர் ஒப்பிட்டபோது இரட்சகர் நமக்கு எதைப் போதித்தார்? ஒருவேளை உங்கள் குடும்பத்தினர் ஓடும் நீரைப் பார்த்து நீரின் குணங்களை விவரிக்கலாம். ஒவ்வொரு நாளும் நாம் ஏன் தண்ணீரைக் குடிக்கவேண்டும்? எந்த வழிகளில் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் “நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்று” போலிருக்கிறது? (யோவான் 4:14).
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “God’s Love,” Children’s Songbook, 97.