புதிய ஏற்பாடு 2023
பெப்ருவரி 20–26. மத்தேயு 6–7: “அவர் அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார்”


“பெப்ருவரி 20–26. மத்தேயு 6–7: ‘அவர் அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“பெப்ருவரி 20–26. மத்தேயு 6–7,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
இயேசு கடற்கரையில் போதித்தல்

இயேசு கடற்கரையில் ஜனங்களுக்குப் போதித்தல்–ஜேம்ஸ் டிஸ்ஸோ

பெப்ருவரி 20–26

மத்தேயு 6–7

“அவர் அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார்”

மனதில் ஒரு கேள்வியுடனும் பரலோக பிதா நாம் எதை அறிய வேண்டும் என விரும்புகிறார் என புரிந்துகொள்ள உண்மையான வாஞ்சையுடனும் நாம் வேதங்களை வாசிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்கு உணர்த்த நாம் அழைக்கிறோம். மத்தேயு 6–7, நீங்கள் வாசிக்கும்போது, இந்த எண்ணங்களுக்குக் கவனம் செலுத்தவும்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

மலைப் பிரசங்கம் கிறிஸ்தவத்தில் நன்கு அறியப்பட்ட பிரசங்கங்களில் ஒன்று. குன்றின் மேல் உள்ள பட்டணம், வயலிலுள்ள லீலி புஷ்பம், ஆடுகளைப் போல ஏமாற்றும் ஓநாய்கள் போன்ற சிறந்த உருவங்களை வைத்து இரட்சகர் போதித்தார். ஆனால் மலைப்பிரசங்கம் அழகான உரையை விட மிகச் சிறந்தது. தன் சீஷர்களுக்கு இரட்சகரின் போதனைகளின் வல்லமை நமது வாழ்க்கையை மாற்ற முடியும், விசேஷமாக நாம் அவற்றின்படி வாழும்போது. அப்பொழுது அவரது வார்த்தைகள், வார்த்தைகளை விட அதிகமானதாகின்றன. புத்தியுள்ள மனுஷனின் வீட்டைப்போல, உலகத்தின் காற்றையும் வெள்ளங்களையும் தாங்குமளவுக்கு அவைகள் உறுதியான அஸ்திபாரமாகின்றன (மத்தேயு 7:24–25 பார்க்கவும்).

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 6–7

இரட்சகரின் போதனைகள்படி வாழ்வது அவரைப் போல் ஆக எனக்கு உதவலாம்.

மலைப்பிரசங்கம் அநேக சுவிசேஷ கொள்கைகளை கொண்டுள்ளது. நீங்கள் இந்த அதிகாரங்களை படிக்கும்போது, நீங்கள் என்ன கற்க வேண்டும் என அவர் விரும்புகிறார் என கர்த்தரிடம் கேட்கவும்.

உலக காரியங்களுக்கு மேலாக தேவ காரியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதன் தேவை நீங்கள் காணும் ஒரு கொள்கையாக இருக்க முடியும். மத்தேயு 6–7லிலுள்ள இரட்சகரின் போதனைகளில் எது பரலோக காரியங்களில் கவனம் செலுத்த உங்களுக்கு உதவுகிறது? என்ன பிறசிந்தனைகள் அல்லது எண்ணங்கள் உங்களிடமுள்ளன? நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்? உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்வதைக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக:

மத்தேயு 6:1–4

பிறர் என்னைப்பற்றி நினைப்பதைவிட தேவன் என்ன நினைக்கிறார் என்பதைப்பற்றி நான் அதிகம் கவனிக்க வேண்டும்.

மத்தேயு 6–7லிலுள்ள மற்றொரு கொள்கை ஜெபம். உங்கள் ஜெபங்களை மதிப்பிட ஒரு கணம் எடுத்துக்கொள்ளுங்கள். ஜெபத்தின் மூலம் தேவனுக்கு நெருக்கமாக வர உங்கள் முயற்சிகளில் நீங்கள் செய்வதை எவ்வாறு உணர்கிறீர்கள்? மத்தேயு 6–7ல் என்ன போதனைகள், நீங்கள் எப்படி ஜெபிக்கிறீர்கள் என்பதை மேம்படுத்த உணர்த்துகிறது? நீங்கள் பெறும் எண்ணங்களைப் பதிவு செய்யவும். உதாரணமாக:

மத்தேயு 6:9

நான் ஜெபிக்கும்போது, நான் பரலோக பிதாவின் நாமத்தை பயபக்தியோடு கையாள வேண்டும்.

மத்தேயு 6:10

நான் ஜெபிக்கும்போது, கர்த்தரின் சித்தம் செய்யப்படும் என்ற என் வாஞ்சையை நான் தெரிவிக்க வேண்டும்.

உங்களுக்கு விசேஷமாகப் பொருந்துகிற திரும்ப திரும்ப வருகிற மற்றொரு தலைப்பு அல்லது செய்தியைத் தேடி மலைப் பிரசங்கத்தை இன்னொரு முறை வாசிப்பதைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்களுடன் ஒரு படிப்பு இதழில் நீங்கள் கண்டுபிடிப்பதை பதிவு செய்யவும்.

படம்
குடும்பம் ஜெபித்தல்

ஜெபத்தின் மூலம் நாம் தேவனுக்கு நெருக்கமாக வர முடியும்.

மத்தேயு 6:7

ஜெபத்தில் “வீண் வார்த்தைகளைப் பயன்படுத்துதல்” என்றால் என்ன?

ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப மீண்டும் சொல்லுவது என ஜனங்கள் “வீண் வார்த்தைகளை” அடிக்கடி புரிந்துகொள்ளுகிறார்கள். எனினும் வீண் என்ற வார்த்தை மதிப்பற்ற ஒன்றை விவரிக்க முடியும். ஜெபத்தில் வீணான வார்த்தைகளைப் பயன்படுத்துவது உண்மையற்ற, இருதயத்தின் உணர்வுகளின்றி ஜெபிப்பது என பொருள்படும் (ஆல்மா 31:12–23 பார்க்கவும்).

மத்தேயு 7:1–5

நான் நீதியாக தீர்க்க வேண்டும்.

மத்தேயு 7:1ல், நாம் தீர்க்கக்கூடாது என இரட்சகர் சொல்வது போலத் தோன்றலாம், ஆனால் பிற வசனங்களில் (இந்த அதிகாரத்திலுள்ள பிற வசனங்கள் உள்ளிட்டவைகளில்) எப்படி தீர்ப்பதென அவர் நமக்கு அறிவுரைகள் கொடுக்கிறார். இது புதிராகத் தோன்றினால், இந்த வசனத்தின் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, நாம் நியாயந்தீர்க்கப்படாமல், நீதியுள்ள தீர்ப்பை நியாயந்தீர்க்க வேண்டும் என்று அது நமக்குச் சொல்லும் இடத்தை நீங்கள் புரிந்துகொள்ள உதவும் (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு பிற்சோ்க்கை, மத்தேயுவைப் பார்க்கவும்.) (மத்தேயு 7:1ல், அடிக்குறிப்பு a). “நீதியாகத் தீர்ப்பளியுங்கள்” என்பது எப்படி என அறிய உங்களுக்கு உதவுகிற, இந்த அதிகாரத்தின் மீதியானவற்றுடன் மத்தேயு 7:1–5ல் நீங்கள் என்ன காண்கிறீர்கள்?

Gospel Topics, “Judging Others,” topics.ChurchofJesusChrist.org; Lynn G. Robbins, “The Righteous Judge,” Liahona, Nov. 2016, 96–98ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 7:21–23

அவரது சித்தம்போல் செய்து நான் இயேசு கிறிஸ்துவை அறிகிறேன்.

மத்தேயு 7:23லிலுள்ள “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை” என்ற சொற்றொடர், ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பில் “நீங்கள் ஒருக்காலும் என்னை அறியவில்லை” என மாற்றப்பட்டிருக்கிறது (மத்தேயு 7:23, அடிக்குறிப்பு a). (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மத்தேயு 7:23 பார்க்கவும்.) வசனங்கள் 21–22ல் அவரது சித்தப்படி செய்வதைப்பற்றி, கர்த்தர் போதித்ததை நன்கு புரிந்துகொள்ள இந்த மாற்றம் உங்களுக்கு எப்படி உதவுகிறது? நீங்கள் கர்த்தரை அறிகிறீர்கள் என எவ்வளவு நன்றாக உணர்கிறீர்கள்? அவரை அதிகமாக அறிய நீங்கள் என்ன செய்ய முடியும்?

David A. Bednar, “If Ye Had Known Me,” Liahona, Nov. 2016, 102–5 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 7:24–27

இரட்சகரின் போதனைகளுக்குக் கீழ்ப்படிதல் என் வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்குகிறது.

சுவிசேஷத்தின்படி வாழ்வது நம் வாழ்வில் இருந்து துன்பத்தை அகற்றாது. மத்தேயு 7:24–27லிலுள்ள இரட்சகரின் உவமைகளிலுள்ள வீடுகள் இரண்டும் அதே புயலை சந்தித்தன. ஆனால் ஒரு வீடு அதைத் தாங்க முடிந்தது. இரட்சகரின் போதனைகள்படி வாழ்வது எப்படி உங்களுக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது? உங்கள் “கற்பாறையின் மீது வீடு” கட்ட தொடர்ந்து என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்? (வசனம் 24 பார்க்கவும்).

ஏலமன் 5:12ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மத்தேயு 6–7.குடும்பமாக மத்தேயு 6–7லிருந்து கற்றுக்கொள்ள ஒரு வழி “Sermon on the Mount: The Lord’s Prayer” மற்றும் “Sermon on the Mount: Treasures in Heaven” (ChurchofJesusChrist.org) காணொலிகளைப் பார்ப்பதாகும். குடும்பத்தினர் தங்கள் வேதங்களில் கூட பின் தொடரலாம் மற்றும் அவர்கள் கலந்துரையாட விரும்புகிற எதையாவது அவர்கள் கேட்கும்போது, காணொலியை நிறுத்தலாம். தேவைப்பட்டால் இந்த பயிற்சி பல நாட்களுக்கு நீளலாம்.

மத்தேயு 6:5–13.இரட்சகர் ஜெபித்த விதத்திலிருந்து நாம் ஜெபத்தைப்பற்றி என்ன கற்றுக்கொள்ளலாம்? நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப ஜெபங்களை மேம்படுத்த ஒரு மாதிரியாக நாம் அவரது ஜெபத்தை எப்படி பயன்படுத்தலாம்? (லூக்கா 11:1–13 ஐயும் பார்க்கவும்.) உங்களுக்கு இளம் பிள்ளைகள் இருந்தால், நீங்கள் ஒன்றாக ஜெபித்து பயிற்சி செய்யலாம்.

மத்தேயு 6:33.“முதலாவது தேவனுடைய இராஜ்யத்தை … தேடுங்கள்” என்பதன் அர்த்தம் என்ன? தனிப்பட்டவராகவும், ஒரு குடும்பமாகவும் நாம் இதை எப்படிச் செய்கிறோம்?

மத்தேயு 7:1–5.இந்த வசனங்களில் உள்ள போதனைகளை கற்பனை செய்ய, உங்கள் குடும்பம் ஒரு துரும்பு (ஒரு சிறிய மர துண்டு) மற்றும் ஒரு கற்றை (ஒரு பெரிய மர துண்டு) ஆகியவற்றைக் காணலாம். இரண்டையும் ஒப்பிடுவது மற்றவர்களை தீர்ப்பதைப்பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது? நீங்கள் இந்த தலைப்பை மேலும் ஆராய விரும்பினால், “Judging Others” (Gospel Topics, topics.ChurchofJesusChrist.org)ல் நீங்கள் சில ஆதாரங்களைப் பயன்படுத்தலாம்.

மத்தேயு 7:24–27.புத்தியுள்ள மனுஷன் மற்றும் புத்தியற்ற மனுஷனைப்பற்றிய இரட்சகரின் உவமையை உங்கள் குடும்பத்தினர் நன்கு புரிந்துகொள்ள உதவ, மணலிலும், கல் மீதும் தண்ணீர் ஊற்ற அவர்களை நீங்கள் அனுமதிக்கலாம். நாம் எப்படி நமது ஆவிக்குரிய அஸ்திபாரத்தை கற்பாறை மீது கட்டலாம்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “The Wise Man and the Foolish Man,” Children’s Songbook, 281.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

உள்ளுணர்வுகளைப் பகிருங்கள். உங்கள் தனிப்பட்ட படிப்பில் நீங்கள் கற்கும் கொள்கைகளைக் கலந்துரையாடுதல் பிறருக்கு போதிக்க நல்ல வழி மட்டுமல்ல, அது உங்கள் சொந்த புரிந்துகொள்ளுதலையும் பெலப்படுத்த உதவுகிறது. ஒரு குடும்ப அங்கத்தினருடன் அல்லது உங்கள் சபை வகுப்புகளில் இந்த வார வாசிப்பில் நீங்கள் கற்ற ஒரு கொள்கையை பகிர்ந்துகொள்ள முயலவும்.

படம்
இயேசு ஜெபித்தல்

நான் உங்களுக்காக ஜெபித்திருக்கிறேன்–டெல் பார்சன்

அச்சிடவும்