“ஜனுவரி 30–பெப்ருவரி 5. மத்தேயு 4; லூக்கா 4–5: ‘கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)
“ஜனுவரி 30–பெப்ருவரி 5. மத்தேயு 4; லூக்கா 4–5,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023
ஜனுவரி 30–பெப்ருவரி 5
மத்தேயு 4; லூக்கா 4–5
“கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்”
இரட்சகர் சாத்தானின் சோதனைகளை எதிர்ப்பதற்கும் அவருடைய சொந்த தெய்வீக ஊழியம்பற்றி சாட்சியமளிப்பதற்கும் வேத வசனங்களைப் பயன்படுத்தினார்(லூக்கா 4:1–21 பார்க்கவும்). உங்கள் விசுவாசத்தையும் சோதனையை எதிர்ப்பதற்கான உங்கள் தீர்மானத்தையும் வேதங்கள் எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்று சிந்தியுங்கள்.
உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்
தனக்கு தனிப்பட்ட பரிசுத்த ஊழியம் உண்டென்று தன் இளம் வயதிலிருந்தே இயேசு அறிந்ததுபோல் தோன்றுகிறது. ஆனால் இயேசு தன் பூலோக ஊழியத்தை தொடங்க ஆயத்தப்பட்டபோது, இரட்சகரின் மனதில் சந்தேகத்தை வைக்க சத்துரு முயன்றான். “நீர் தேவனுடைய குமாரனேயானால்,” சாத்தான் சொன்னான் (லூக்கா 4:3, சாய்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது). ஆனால் இரட்சகர் தன் பரலோக பிதாவுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் வேதங்களை அறிந்திருந்தார், தான் யார் என அவர் அறிந்திருந்தார். அவருக்கு, சாத்தான், “இந்த எல்லா அதிகாரத்தையும் நான் உமக்குத் தருவேன்” (லூக்கா 4:6), என சொன்னது வெறுமை, ஏனெனில் இரட்சகரின் வாழ்நாள் ஆயத்தம் அவரை “ஆவியானவருடைய பலத்தைப்” பெற அனுமதித்தது (லூக்கா 4:14). சோதனைகள், பாடுகள், மறுதலிப்புகள் மத்தியிலும், கிறிஸ்து, தான் நியமிக்கப்பட்ட பணியிலிருந்து மனந்தளரவில்லை: “நான் தேவ இராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும் … இதற்காகவே அனுப்பப்பட்டேன்” (லூக்கா 4:43).
தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்
தேவனோடு தொடர்புகொள்ளுதல் அவருக்கு சேவை செய்ய என்னை ஆயத்தப்படுத்துகிறது.
தன் ஊழியத்துக்காக ஆயத்தம் செய்ய “தேவனோடிருக்கும்படியாக” இயேசு வனாந்தரத்துக்கு சென்றார் (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மத்தேயு 4:1 [ மத்தேயு 4:1ல், அடிக்குறிப்பு b]). தேவனோடு நெருக்கமாய் உணர நீங்கள் என்ன செய்கிறீர்கள் என சிந்தியுங்கள். நீங்கள் செய்ய அவர் விரும்பும் பணிக்கு இது உங்களை எப்படி ஆயத்தப்படுத்துகிறது?
சோதனையை எதிர்த்து இயேசு கிறிஸ்து எனக்கு எடுத்துக்காட்டை ஏற்படுத்தினார்.
பாவம் செய்யும்படி ஜனங்கள் சோதிக்கப்படும்போது, குற்ற உணர்வு பெறுகிறார்கள். ஆனால் “பாவமில்லாமல்”(எபிரெயர் 4:15) வாழ்ந்த இரட்சகர்கூட சோதிக்கப்பட்டார். நாம் எதிர்கொள்ளுகிற சோதனைகள் மற்றும் அவற்றை மேற்கொள்ள நமக்கு எப்படி உதவுவது என இயேசு கிறிஸ்து அறிகிறார் (எபிரெயர் 2:18; ஆல்மா 7:11–12 பார்க்கவும்).
மத்தேயு 4:1–11 மற்றும் லூக்கா 4:1–13 நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் சோதனைகளை எதிர்கொள்ளும்போது உங்களுக்கு உதவக்கூடியது எது என கற்றுக்கொள்ளுகிறீர்கள்? இதுபோன்ற ஒரு அட்டவணையில் உங்கள் எண்ணங்களை நீங்கள் ஒழுங்கமைக்கலாம்:
இயேசு கிறிஸ்து |
நான் |
---|---|
இயேசு கிறிஸ்து கிறிஸ்து என்ன செய்ய வேண்டுமென சாத்தான் சோதித்தான்? | நான் நான் என்ன செய்ய சாத்தான் என்னை சோதிக்கிறான்? |
இயேசு கிறிஸ்து சோதனையை எதிர்க்க கிறிஸ்து ஏன் ஆயத்தப்படுத்தப்பட்டார்? | நான் சோதனையை எதிர்க்க நான் எப்படி ஆயத்தப்பட முடியும்? |
இயேசு கிறிஸ்து | நான் |
மத்தேயு 4ன் ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பிலிருந்து என்ன கூடுதல் உள்ளுணர்வுகளை நீங்கள் பெறுகிறீர்கள்? (மத்தேயு 4 முழுவதிலும் அடிக்குறிப்புகள் பார்க்கவும்).
1 கொரிந்தியர் 10:13; ஆல்மா 13:28; மோசே 1:10–22; “Temptation,” Gospel Topics, topics.ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.
இயேசு கிறிஸ்துதான் தீர்க்கதரிசனமுரைக்கப்பட்ட மேசியா.
இயேசு கிறிஸ்து என்ன செய்ய பூமிக்கு அனுப்பப்பட்டார் என விளக்கும்படி நீங்கள் கேட்கப்பட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்? மேசியாவைப்பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களில் ஒன்றை மேற்கோள் காட்டுவதன் மூலம், மீட்பர் தனது சொந்த ஊழியத்தின் அம்சங்களை விவரித்தார் (லூக்கா 4:18–19; ஏசாயா 61:1–2 பார்க்கவும்). நீங்கள் இந்த வசனங்களை வாசிக்கும்போது, அவரது ஊழியத்தைப்பற்றி என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?
கர்த்தர் தம்முடைய பணியில் பங்கேற்க உங்களை அழைத்த சில வழிகள் யாவை?
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேற யூதர்கள் பல நூற்றாண்டுகள் காத்திருந்தாலும், உங்கள் காதுகள் கேட்க வேத வாக்கியங்கள் இன்று நிறைவேறின (லூக்கா 4:21) என அவர் அறிவித்தபோதும், இயேசுவே மேசியா என அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை. லூக்கா 4:20–30 வாசிக்கும்போது (மாற்கு 6:1–6 ஐயும் பார்க்கவும்) நீங்கள் வாசிக்கும்போது, நாசரேத்தின் ஜனங்கள் இடத்தில் உங்களை வைக்க முயற்சிக்கவும். கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக முற்றிலும் ஏற்றுக்கொள்ளுவதிலிருந்து உங்களைத் தடுக்கிற ஏதாவது உண்டா?
மோசியா 3:5–12; “Jesus Declares He Is the Messiah” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்).
மத்தேயு 4:18–22; லூக்கா 5:1–11
நான் கர்த்தரை நம்பும்போது, என்னுடைய தெய்வீக தகுதியை நான் அடைய அவர் எனக்கு உதவ முடியும்.
தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் போதித்தார், “தேவனிடம் தங்கள் வாழ்க்கையைத் திருப்புகிற ஆண்களும், பெண்களும் அவர்களால் செய்ய முடிகிறதை விட அவர்களின் வாழ்க்கையில் அவர் ஏராளமாக செய்ய முடியும் என கண்டுபிடிப்பார்கள்.”(Teachings of Presidents of the Church: Ezra Taft Benson [2014], 42). சீமோன் பேதுருவுக்கும் அவனது சக மீனவர்களுக்கும் இது எப்படி நடந்தது என்பதைக் கவனிக்கவும் . தங்களுக்குள் கண்டதை விட மேலான ஒன்றை இயேசு கண்டார். அவர் அவர்களை “மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாக்க” விரும்பினார். (மத்தேயு 4:19; லூக்கா 5:10 ஐயும் பார்க்கவும்).
மத்தேயு 4:18–22 மற்றும் லூக்கா 5:1–11 நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் என்னவாக மாற இயேசு கிறிஸ்து உங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் என சிந்திக்கவும். அவரைப் பின்பற்ற இரட்சகர் உங்களை அழைப்பதை நீங்கள் எவ்வாறு உணர்ந்திருக்கிறீர்கள்? அவரைப் பின்பற்ற “எல்லாவற்றையும் விட்டுவிட (லூக்கா 5:11) நீங்கள் விருப்பமுள்ளவராயிருக்கிறீர்கள் என நீங்கள் கர்த்தருக்கு எப்படி காட்ட முடியும்?
குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்
-
மத்தேயு 4:1–2; லூக்கா 4:1–2உபவாசத்தின் வல்லமையைப்பற்றி இந்த விவரத்திலிருந்து என்ன உள்ளுணர்வுகளை நாம் பெற முடியும்? உங்கள் குடும்பம் உபவாசத்தைப்பற்றி அறிய உதவ, “Fasting and Fast Offerings” in Gospel Topics (topics.ChurchofJesusChrist.org) நீங்கள் பயன்படுத்தலாம் . குடும்ப உறுப்பினர்கள் உபவாசத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒன்றாக உபவாசமிருக்க ஒருவேளை ஜெபத்துடன் உங்கள் குடும்பம் திட்டங்கள் தீட்டலாம்.
-
மத்தேயு 4:3–4; லூக்கா 4:3–4.ஒரு கல்லை அப்பமாக்க கிறிஸ்துவை சாத்தான் சோதித்தபோது, “நீர் தேவனுடைய குமாரனேயானால்” (மத்தேயு 4:3, சாய்வெழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன) என்று சொல்லி கிறிஸ்துவின் தெய்வீக அடையாளத்துக்கு அவன் சவால் விட்டான். நமது மற்றும் இரட்சகரின் தெய்வீக அடையாளங்களை நாம் சந்தேகிக்கச் செய்ய சாத்தான் ஏன் முயற்சிக்கிறான்? இதைச் செய்ய அவன் எவ்வாறு முயல்கிறான்? (மோசே 1:10–23 ஐயும் பார்க்கவும்.)
-
ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மத்தேயு 4:11.இயேசு சரீர பிரகாரமாயும், ஆவிக்குரிய பிரகாரமாயும் சோதிக்கப்பட்ட பிறகு, அவரது எண்ணங்கள் சிறையிலிருந்த யோவான் ஸ்நானனின் தேவைகளை நோக்கி திரும்பியது, “இப்போது யோவான் சிறையில் தள்ளப்பட்டான் என இயேசு அறிந்து, அவர் தூதர்களை அனுப்பினார், இதோ, அவர்கள் வந்து அவனுக்கு [யோவான்] ஊழியம் செய்தார்கள்” (ஜோசப் ஸ்மித் மொழிபெயர்ப்பு, மத்தேயு 4:11 [மத்தேயு 4:11ல், footnote a). பிறரைப்பற்றி சிந்திக்கும் கிறிஸ்துவின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்றும்போது, நாம் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகிறோம்?
-
லூக்கா 4:16–21. இருதயம் நொறுங்கிய அல்லது “விடுதலையாக்கப்பட” விரும்புகிற ஒருவரை நீங்கள் அறிவீர்களா? (லூக்கா 4:18). இரட்சகரின் குணமாக்குதலையும் விடுதலையையும் பெற பிறருக்கு நாம் எப்படி உதவ முடியும்? ஆலய நியமங்களை நிறைவேற்றுவது “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை” (லூக்கா 4:18) அளிக்க எப்படி உதவுகிறது என நீங்கள் கலந்துரையாடலாம்.
பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.
ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Come, Follow Me,” Hymns, no. 116.